யுத்தம் முடிவடைந்த கையோடு அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தனக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் எதிராக செயற்பட்டு ஆட்சியை கைப்பற்றத் தயாராகியிருந்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரைச் சந்தித்த ஊடக உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்த தகவல்கள் தெரிந்துகொண்டதும் இராணுவத் தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியதால் இராணுவப் புரட்சி ஏற்படக்கூடிய வாய்ப்புகளை தான் தவிர்த்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றிக்காக சரத் பொன்சேகா மேற்கொண்ட அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பிற்காக அவரையும் அவரது குடும்பத்தினரையும் தான் நன்றாக பராமரிப்புவந்ததாகவும் கோடிக் கணக்கான வாகனங்களைப் பெற்றுக்கொடுத்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதிக்குப் பின்னர் சரத் பொன்சேகாவிற்கு பதவி நீடிப்பை வழங்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன், பொன்சேகாவிற்கு சாதகமான எவ்வித செய்திகளையும் வெளியிட வேண்டாம் என ஊடக உரிமையாளர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.