Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சன் டிவி மற்றும் கலைஞர் டிவி – தொலைக்காட்சி பயங்கரவாதம் : எம்.எஸ்.ஆர்

இனியொரு... by இனியொரு...
10/11/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
24
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக சன் டிவி மற்றும் கலைஞர் டிவி வழங்கும் தொலைக்காட்சி பயங்கரவாதம்

இன்று ஊடகம் என்றாலே வெறும் பொழுது போக்கு சாதனமாக பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.ஒரு சிலரே அதை செய்தி அறிந்து கொள்வதற்கான சாதனமாக மட்டும்புரிந்து கொண்டுள்ளனர்.ஊடகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள புகழ்பெற்ற ஊடக விமர்சர்கரும் மொழியியலின் தந்தையுமானஅறிஞர் நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) கூறுவதிலிருந்து துவங்குவோம்.

எந்த மாதிரி சமூகத்தில் நாம் வாழ விரும்புகிறோம்? எந்த மாதிரி யான அரசியல் அமைப்பில் நாம் வாழ விரும்புகிறோம் என்பதை பொறுத்தே ஊடகத்தின் பங்கு என்ன என்பதை முடிவு செய்ய முடியும். அதாவது சமூகத்தை ஜனநாயகமாகவோ சர்வாதிகாரமாகவோ மாற்றுவதில் ஊடகமானது தீர்மானகரமான பங்காற்றுகிறது .

ஒரு சமூகம் அது ஜனநாயக சமூகமாக இருக்க வேண்டுமானால் மக்கள் தங்களை நிர்வகித்துக்கொள்ளும் வழிமுறைகளில் பங்கேற்பதற்கு அனைத்து வழிமுறைகளும் இருக்க வேண்டும் அதற்கான தகவல்கள் இலவசமாகவும் சுதந்திரமாகவும் கிடைக்க வேண்டும் இதுதான் ஜனநாயகம் ஆகும்.இதற்கு எதிரான நிலை .

மக்கள் தங்களை நிர்வகித்துக் கொள்வதை தடுப்பது.அதற்கான தகவல்களை வெட்டிச் சுருக்கியும் குறுக்கியும் தருவது.முழுமையான தகவல்கள் பெறவிடாமல் கட்டுபடுத்துவது.
இதன் மூலம் மக்களை அதிகாரத்திலுள்ளவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுவது.

ஊடகத்தின் மூலம் மக்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விட முடியும் என்பதற்கு உலக வரலாற்றில் நடந்த இரண்டு உதாரணங்களை இங்கே காண்போம்.

1916ல் முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்காவில் உட்ரோ வில்சனின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.வில்சனின் அரசும் போரில் ஈடுபட்டிருந்தது.ஆனால் அன்றைய மக்களோ போரில் தங்களது நாடு ஈடுபடுவதை விரும்பவில்லை.ஐரோப்பிய நாடுகள் நடத்தும் போரில் சம்பந்தமில்லாமல் நாம் ஏன் ஈடுபட வேண்டும் என நினைத்தனர்.அவர்கள் அமைதியை விரும்புபவர்களாக இருந்தனர்.வில்சன் அரசின் நடைமுறைகள் மூலம் போருக்கு மக்களின் ஆதரவைத்திரட்ட எவ்வளவோ முயற்சித்து பார்த்தார்.மக்கள் கண்டுகொள்ளவே இல்லை.கடைசியில் ஊடக்த்தின் பக்கம் தமது பார்வையைத் திருப்பினார்.கீரில் என்பவரின் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்து மொத்த ஊடக்த்தையும் கட்டுபடுத்தும் அதிகாரத்தையும் அளித்தார்.

அத்தனை ஊடகங்களும் அனைத்து வித பொய்ப் பித்தலாட்டஙகளை கையாண்டு போர் வெறியை மக்களிடம் உருவாக்கின. ஆறே மாதத்தில் மக்கள் போர் வெறியர்களாக மாறினர்.உலகினை காப்பாற்ற வேண்டுமானால் ஜெர்மானிய மக்களை கைகால் வேறாக வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்று வெறியுடன் மாறினர்.

ஊடகம்தான் சமாதானத்தை அமைதியை விரும்பிய மக்களை இரத்த வெறி பிடித்த போர்வெறியர்களாக மாற்றியது .

இரண்டாவது வரலாற்று நிரூபணம் – ரசியாவில் புரட்சி வெற்றி பெற்றது .அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் சிவப்பு வண்ணம் குறித்தும் தீவிரமான பிரச்சாரம் செய்யப்பட்டது.இதன் விளைவாக பல தொழிற்சங்கங்கள் கலைக்கப்பட்டன.ஊடகத்தின் சுதந்திரமும் கருத்துச்சுதந்திரமும் ரத்து செய்யப்பபட்டது. இந்த இரண்டு வரலாற்று சம்பவங்களும் இட்லரின் கோயபல்சின் வெற்றிகரமன ஊடக பிரச்சாரத்திற்கு முன்னரே நடைபெற்றவை.

இதன் வெற்றியை முன்வைத்தே இட்லர் கோய பல்சை வைத்து வரலாற்று புகழ்மிக்க பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டான் என்பதை சாம்ஸ்கி குறிப்பிடுகிறார்.

இந்த இரண்டு உதாரணங்களையும் இங்கு விரிவாக குறிப்பிட்டதன் நோக்கமே தமிழகம் எத்தகைய அபாயத்தை நோக்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்.மேலும் முக்கியமாக ஊடகமாக அதிலும் காட்சி ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்தது அதன் மூலம் யாரைஸயம் எப்படியும் மாற்றிவிட முடியும் என்பதை உணரவுமே இந்த வரலாற்று உதாரணங்கள்.

இப்போது தமிகத்தின் மிகப்பெரும் ஆதிக்க சக்தியாக வளர்ந்து விட்ட சன் டிவி மற்றும் கலைஞர் டிவி ஊடகங்களை பார்ப்போம்.

முதலாக ,இந்த ஊடகங்கள் எந்த நோக்கத்தோடு யாரால் நடத்தப்படுகின்றன ? அமெரிக்காவில் எம்.பி.ஏ முடித்து விட்டு திரும்பிய பேரன் கலாநிதி மாறனுக்கு பொழுது போக்கிற்கான வேலைவாய்ப்பாக கட்சிப் பணத்தில் பூமாலை வீடியோ இதழ் துவங்க கருணாநிதியால் அனுமதி அளிக்கப்பட்டது.அது தோல்வி அடையவே தனியார் தொலைக்காட்சி அனுமதியளிக்கப்பட்ட காலத்தில் சன் டிவிக்கு அனுமதியளிக்கப்பட்டது.

கட்சிப்பண்த்தில் கட்சி அலுவலகத்தில் சன் டிவி தொடங்கப்பட்டு அதன் அரவணைப்போடு வளர்ந்தது.இது அனைவரும் அறிந்த வரலாறு.அனைவரும் அறியாத ஒன்று சமூக சீர்திருத்தங்களை பரப்புவதற்காகவோ அல்லது சமூக சிந்தனையோடே  சன் டிவி தொடங்கப்படவில்லை.

80 களின் முற்பகுதியில் உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட தொடங்கிய நேரம். உலக சந்தைகளின் ஒருங்கிணைப்பு நடைபெற்று கொண்டிருந்த காலம் . எந்த நாட்டவரும் எந்த நாட்டிலும் தொழில் தொடஙகலாம் அனுமதிகள் சட்டஙகள் மற்றும் உரிமங்கள் தேவையில்லை என் நாடுகளின் கதவுகள் தாராளமாக திறந்து விடப்பட தாராளமயமாக்கல் கொள்கைகள் அநேகமாக அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்பட துவங்கிய காலத்தில் பன்னாட்டுக்கம்பெனிகளுக்கும் தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கும் மிக விரிவான விளம்பரங்களும் தொடர்பு முறைகளும் அந்தந்த நாட்டுக்கு மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ப தேவைப்பட்டன.

பன்னாட்டு கம்பெனிகளின் சரக்குகளுககு விளம்பரங்களுக்கு அந்தந்த மொழியிலேயே தொலைக்காட்சி சேனல்கள் தேவைப்பட்டன.பன்னாட்டுக்ககம்பெனிகளின் ஒரு சரக்கு உலகம் முழுவதும் விற்கப்பட வெறும் பொருளாதார உலகமயமாக்கல் மட்டுமின்றி பண்பாட்டு உலகமயமாக்கலும் அவசியமாகும் .

அதாவது இந்திய அளவில் பல மொழி பேசும் தேசிய இனத்தின் கலாச்சார வேறுபாடுகள் பன்னாட்டுக்கம்பெனிகளின் சரக்குக்ளை விற்பதற்க இடைஞ்சலாக உள்ளன.எனவே வளமான தேசிய இன பண்பாட்டு வேறுபாடுகளை அழித்து ஒரே மாதிரியான மேற்கத்திய பண்பாட்டுடன் ஆங்கிலக்கலப்புடனான் பண்பாட்டு பரப்பல் மேற்கொள்ளப்பட வேண்டும் .இதைத்தான் எல்லா சேனல்களும் செய்கின்றன.

எல்லா சேனல்களிலும் வெள்ளைத்தோல் சிகப்பழகு தொப்புள் தெரியும் ஜீன்ஸ் உடை பீசா உணவு உள்ளிட்ட துரித உணவு, நுனி நாக்கு ஆங்கிலம் கலந்த மொழி பேசுவதுதான் சரக்கு விற்பனைக்கு சௌகரியமான ஒன்று என்பது பன்னாட்டு கம்பெனிகளின் வியாபார யுத்தி.

பன்னாட்டு மூலதனத்தின் இந்த தேவைகளை அமெரிக்க வார்ப்பும் இயல்பிலேயே தீவிர கம்யூனிச எதிப்பாளருமான கலாநிதி சரியாக புரிந்து கொண்டார்.(அத்துடன் அவர் முதல் முதலாக சன் டிவியை தொடங்கியதால் பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பரசந்தையை கைப்பற்றுவதும் எளிமையாகிற்று. தனியார் தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் அடிப்படை ஆதாரங்கள் ஆகும் .விளம்பரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயுடன் ஒப்பிடும்போது கேபிள் சந்தாவிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைவானது.(அதையும் சன் டிவி விட்டு வைக்க வில்லை என்பது வேறு விட்யம்)கேபிள் சந்தாவை மட்டும் நம்பி யாரும் தொலைக்காட்சி சேனல்கள் துவங்குவதில்லை என்பதை வலியுறுத்தவே இதைக் குறிப்பிடுகிறோம். .

தொலைக்காட்சியின் உயிர்நாடியாக இருப்பது விளம்பரங்கள்தான்.எனவே விளம்பரங்களுக்கு எதிரான விடயங்களோ கம்பெனிகளுக்கு எதிரான விடயங்களோ எதுவுமே தொலைக்காட்சி சேனல்களில் இடம் பெற வாய்ப்பே இல்லை.இங்கு விளம்பரங்களுக்குத்தான் நிகழ்ச்சிகளே அன்றி நிகழ்ச்சிகளுக்காக விளம்பரங்கள் அல்ல.நாட்டின் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தையையும்(பெருந்தன்மையுடன்தான்) வழங்குவது பெப்சியாகவோ அல்லது யூனிநாராக இருக்கும்.எனவே அதிகமான சந்தையைக்கொண்ட(பார்வையாளர்களைக்கொண்ட)ஒரு நிகழ்ச்சிக்குத்தான் கம்பெனிகள் விளம்பரதாரர்களாக இருப்பர்.

எனவே முழுமையாக செய்தி உட்பட விளம்பரதாரர்களுக்கு ஏற்பவே வடிவமைக்கப்படும்.என்வே சமூக சிந்தனையாவது பெரியார் மொழியில் சொன்னால் வெங்காயாமாவது,இங்கு எப்போதும் இலாப நோக்கம்தான்,விளம்பரத்திற்குத்தான்.

விளம்பரங்களுக்கான கட்டணம் வினாடிக்கு இவ்வளவு எனவும் ஒரு நாளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையையொட்டி பிரைம் டைம் பாதி பிரைம் டைம் கால் பிரைம் டைம் (மாலைநேரம்,பிற்பகல் மற்றும் காலை நேரம் ) என பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

வலிமையான அரசியல் அதிகார பலத்துடன் முதன்முதலாக தனியார் தொலைக்காட்சியாக களமிறங்கிய சன் டிவியின் இலாபம் பத்தாண்டுகளுக்கு முன்னதாக சில நுறு கோடிகளாக இருந்தது, இப்போது பல ஆயிரம் கோடிகளைத்தாண்டி விட்டது என்பது அனைவருமே அறிந்த ஒன்று.இன்று சன் டிவி நெட்வொர்க்கில் 95 மில்லியன் குடும்பங்களை(ஒன்பதரைக்கோடி) சென்றடையும் 20 சேனல்கள்உள்ளன.

வெளிநாடுகளில் வாழும் தென்னிந்தியர்களைக் அதிகம் கொண்டஅமெரிக்கா,கனடா,சிங்கப்பூர், மற்றும் மலேசியாஇலங்கை,தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து போன்ற 27 நாடுகளிலும் சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பு எட்டுகிறது. 45 எஃஎம் வானொலி நிலையங்களை வைத்துள்ளனர்.கூட்டாக 1.2 மில்லியன் விற்பனை கொண்ட 2 நாளிதழ்கள்,4 பருவ இதழ்கள்,5.5 மில்லியன் சந்தாதாரர்களை எட்டும் சன் டைரக்ட் டி.டி.எச் சேவை,கேபிள் சந்தையில் மூன்றில் இரண்டு பங்கை கையில் வைத்திருக்கும் 90 கோடி ரூபாய் புரளும் சுமங்கிலி கேபிள் விஷன் என்ற கிளை நிறுவனம்.இவ்வளவு நிறுவனங்களோடு 2007 முதல் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத் தொழிலும் இறங்கியுள்ளது. (திரைப்படத்துறையிலுள்ள ஆதிக்கம் குறித்து பின்னர் விரிவாகக் காண்போம்)சன் நெட் வொர்க்கின் மொத்த மதிப்பு ரூ 1000 கோடி.
மும்பை பங்குச் சந்தை இணையதளம் அளித்துள்ள தகவலின்படி

சன் நெட் வொர்க்கின் மொத்த பங்குகளின் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 18 ஆயிரத்து 307 கோடி.சன் குழுமத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூபாய் 464 ஆகும்.சமீபத்தில் விமானப் போக்குவரத்து துறையிலும் நுழைந்திருக்கிறது.ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சுமார் 37.7 விழுக்காடு பங்குகளை வாங்கி இருக்கிறது.இன்று இந்திய அளவில் அதிலும் தனியார் துறையில் அதிக சம்பளம் ஈட்டும் மூத்த நிர்வாகி கலாநிதி மாறன்தான்.அவரது சம்பளம் ரூ 37 கோடிரூபாய் ஆகும்.

ஆக,ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சன் நெட் வொர்க் இன்று ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டுக்கம்பெனியாக வளர்ந்துள்ளது என்பது வெளிப்படையானது. சன் டிவி நெட்வொர்க் பன்னாட்டு மூலதனத்தின் உறுதியான கூட்டாளியாக அதன் பண்பாட்டு ஆன்மாவாகவும் செயல்படுகிறது.அது மக்களின் பார்வையில் அவர்களுக்கு சாதகமாக அதிலும் தமிழர்களுக்காக நிகழ்ச்சிகள் தயாரிக்கும் என்று நினைப்பதும் எதிர்பார்ப்பதும் எவ்வளவு பாமரத்தனமானது?

கோடிக்கணக்கான பணத்தை இலாபமாக ஈட்டும் சன் டிவி நெட்வொர்க் என்ற பன்னாட்டுக் கம்பெனியின் உண்மை முகத்தை அதாவது அதன் பண்பாட்டு முகத்தை காண்போம்.

உலகமயமாக்கலின் கொள்கைகளின் உருட்டு திரட்டு வடிவமாகவும் பன்னாட்டுக்கம்பெனிகளின் தேவைகளுக்காகவே பிறப்பெடுத்ததுமான சன் டிவியின் பண்பாட்டு கருத்தியல் மிகவும் கொடூரமானது.அதன் மொழியிலேயே கூற வேண்டுமானால் உலக தொலைக்காட்சி வரலாற்றில் தமிழகத்தில் முதன் முறையாக நிறவெறியையும் மறைமுகமாக நுட்பமான சாதியத்தையும் மேட்டுக்குடித்தன திமிரையும் முன்வைத்தது.

சன் டிவி நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுமையான பொழுது போக்கு சார்ந்த நிகழ்ச்சிகளாக உள்ளன.அதில் 80 விழுக்காடு சினிமா சார்ந்தவை. மீதி யுள்ளவை நகரஞ்சார்ந்த மேட்டுக்குடி மக்களினால் தயாரிக்கப்பட்டு அவர்களின் பார்வையில் முன் வைக்கப்பட்டன. 20 ஆண்டுகளுக்கு முன்னதாக ஊடகம் என்பது வெறும் பொழுது போக்கிற்கான விடயம் அல்ல .ஊடகத்தின் மூலமாக நல்ல கருத்துகளை கூறி சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மிக சொற்பமான அளவில் அரசல் புரசலாக வாதங்கள் நடந்து வந்தன.சன் டிவி வந்த பின்னர் அந்த பார்வையையே முற்றிலுமாக ஒழித்து கட்டி ஊடகம் என்பதை மாற்றுக்கேள்விக்கே இடமில்லாத ஒரு பொழுது போக்கு தொழிற்சாலையாக மாற்றியது.

இங்கு பெரும்பான்மையான மக்களுக்கு நிகழ்ச்சிகளும் இல்லை ,நிகழ்ச்சிகளில் இடமுமில்லை.இங்கு சிகப்பழகும் வெள்ளைத்தோலும் கவர்ச்சியும்தான் இடம்பெறுவதற்கான தகுதி என்ற நிறவெறி இனவெறி மற்றும் சாதியம் கலந்த பார்வையே உள்ளது .வெயிலில் உழைத்து கருத்துப்போன முகங்களுக்கு இங்கு இடமில்லை.

கிராமங்களில் மிகப்பெரிய அளவில் மரணங்கள் நிகழ்ந்தால் அல்லது விசித்திரமான மூட நம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டாலோதான் கிராமப்புற மனிதர்கள் சின்னத்திரை வெளிச்சத்திற்கு வருவார்கள். கருப்பு நிறத்தை உடையவர்கள் சாதாரண தோற்றம் உடையவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களால் சாதனைகளை படைத்த பெரிய திரை உலகில் நடைபெற்ற எந்த மாற்றங்கள் சின்னத்திரை உலகில் நுழையக்கூட முடியவில்லை.

நிறத்தில் அப்படி ஒரு பாகுபாடு காட்டப்படும்போது சாதி யப்பாகுபாடு என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.துப்புரவுத் தொழிலாளி நிலைக்கு மேல் எந்த தலித் மக்களுக்கும் இடம் இருந்ததில்லை.அவர்கள் நிகழ்ச்சி தயாரிப்பில் இடம் பெறுவது நினைத்து பார்க்க முடியாதது.

25 ஆண்டுகளுக்கு முன்னதாக வார இதழ்களிலும் மாத இதழ்களிலும் அட்டைபடங்களில் ஆபாசப்படங்கள் போட்டதற்கு எதிர்ப்பு போராட்டஙகள் நடத்தப்பட்டு அப்பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.ஆனால் உலகமயமாக்கல் அமல்படுத்தப்பட்ட பின்னர் அப்போராட்டங்கள் இல்லை .இந்த சூழ்நிலையில் அந்த ஆபாசங்களை விட 100 மடங்கு ஆபாசங்களை காட்சி படங்களாக காண்பித்தது.சில ஆண்டுகளுக்கு முன்னதாக துணிச்சலாக மிட் நைட் மசாலா என்ற பெயரில் ஆபாசங்களை அரங்கேற்றியது.

இன்று அதை விட பல மடங்கில் ஆபாச நடனங்களுடன் திரைப்பட விழாக்களை ஒளிபரப்பி வருகிறது.பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் சன் டிவியின் கொள்கை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் மாறியதே இல்லை. எப்படியும் வாரம் ஒரு திரைவிழாவோ பாராட்டு விழா அல்லது முதல்வருக்கு பாராட்டு விழா நடந்தால் அதன் ஒளிபரப்பு உரிமையை பெறுவதில் கலைஞர் டிவிற்கும் சன் டிவிக்கும் கடும்போட்டியே நடைபெறுகிறது.

கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆடவரெல்லாம் ஆட வரலாம் என்ற வெளிப்படையான ஆடை அவிழ்ப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி கடும் கண்டனத்திற்குள்ளாகி அந்நிகழ்ச்சியை கைவிட்டது நினைவுக்கு வரலாம். சன் டிவியின் ஆபாசக் கலாச்சாரத் தொழிற்சாலையின் உற்பத்தியை பற்றி மக்களுக்கு இன்னும் விரிவாக கூற வேண்டிய அவசியமே இல்லை.நித்யானந்த விவகாரம் குறித்த அதன் நீலப்பட ஒளிபரப்பு ஒன்றே போதும்.

சரி,பெரும்பான்மையான மக்களான விவசாயிகள் ,தொழிலாளர்கள் தலித் மக்கள் ஆகியோருக்கு சன் டிவியில் இடம் பெறுவதில்லை என்றால் யார் தான் அதில் இடம் பெறுகிறார்கள் ? வேறு யார் .நடிக நடிகைகள்தான்அதில் சந்தேகமே வேண்டாம்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏறக்குறைய சன் டிவியின் தொடக்க நாளிலிருந்தே எனலாம்,அது தீபாவளி,பொங்கல் கிருத்துமஸ்(ரமலானுக்கும் பக்ரீத்திற்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது வேறுவிடயம்)சுதந்திர நாளாக இருக்கட்டும் அல்லது எந்த நாளாக இருந்தாலும் காலையில் எழுந்தவுடன் தமிழ் மக்கள் தரிசனம் செய்வது ஏதாவது சினிமாக்காராக இருப்பார்கள்.ஒரு நாடு என்றோ மக்கள் என்றோ சினிமாக்காரர்களைத்தான் சன் டிவி கருதுகிறது.ஆதாரம் வேண்டுமென்றால் நீங்களே சோதித்து பாருங்கள். குடியரசு தினத்தன்று குடியரசு நாளின் பெருமை குறித்து அசினோ நயன்தாரவோ பேட்டி அளித்து கொண்டிருப்பார்கள்அதே போல தமிழர் திருநாளன்று தமிழ் மொழியின் சிறப்பு குறித்து தமன்னா கலந்துரையாடிக் கொண்டிருப்பார். இந்த பண்பாட்டு ஆதிக்கமும் சீரழிவும் இத்தோடு சன்டிவி நிறுத்திக்கொள்கிறதா?மற்ற பரிமாணங்களை வரும் இதழ்களில் காண்போம்…..,

இன்று நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ள நமது பரீசிலினையை 20 ஆணடுகளுக்கு முன் செல்வோம்
(தொடரும்)

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

காமவெல்த் விளையாட்டு நிறைவு விழாவைத் தலைமை தாங்கும் ராஜபக்ச

Comments 24

  1. THAMILMARAN says:
    15 years ago

    படைப்பாளீ தன்னை தன் படைப்புக்களீல் இழக்கிறான் இதனால்தான் அவன் படைப்புக்கள் உயிர்வாழ்கின்றன.கலைஜர் கருணாநிதி கண்டுபிடித்த மாறன் மகன் போபர்ஸ்ஸால் புகழப்படுவது அவரது உழைப்பின் வெற்றீ.தன்னம்பிக்கை மனிதன் கலாநிதி மாறன்.

    • Rishi says:
      15 years ago

      கலாநிதி மாறன் தன்னம்பிக்கை மனிதர் என்பதில் சந்தேகமில்லை. அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. வெற்றியை நேர்மறை வெற்றி எனவும், எதிர்மறை வெற்றி எனவும் பகுக்கலாம். கலாநிதி பெற்றிருப்பது எதிர்மறை வெற்றி. “ஆபரேஷன் சக்ஸஸ்.. பேஷண்ட் ஃபெயிலியர்” என்பார்கள். அது போன்றது இந்த வெற்றி. அவரது கார்ப்பரெட் மூளையை செயலாக்குவதில் சிறந்த முறையில் வெற்றி பெற்றிருக்கிறார். அதற்கு வாழ்த்துக்கள்! ஆனால் அவர் படைத்த ஊடகம் நம் மண்ணின் பாரம்பரியத்தை மழுங்கடிக்கச் செய்வதையும், நமக்கான நிகழ்ச்சிகளை உருவாக்கவில்லை என்பதையும் தான் இக்கட்டுரை சுட்டுகிறது.

      இதைப் புரிந்து கொள்ளுங்கள் தமிழ்மாறன்! மிக்க நன்றி!

  2. Thiyagini says:
    15 years ago

    //மொழியியலின் தந்தையுமானஅறிஞர் நோம் சாம்ஸ்கி (ழேயஅ ஊhழஅளமல) கூறுவதிலிருந்து துவங்குவோம்.//

    நோம் சோம்ஸ்கி மொழியியலின் தந்தை? இக்கட்டுரையாளருக்கு மொழியியல் அறிவு இல்லை.மொழியியலாளர்களது பேரன்தான் இந்த நோம் சோம்ஸ்கி என்பதை எவர் புரியவைப்பார்?தமிழ் மூளைக்கு …

    • venkattan says:
      15 years ago

      pls google Noam Chomsky and find

  3. விடுதலை says:
    15 years ago

    சிந்திக்வைக்கும் பதிவு அதைவிட கலைஞர் குடும்ப கம்பனிகள் குறித்த சரியான பார்வை பாராட்டுகள் தொடர்ந்து  எழுதுங்கள் . 

  4. Pingback: சன் டிவி மற்றும் கலைஞர் டிவி – தொலைக்காட்சி பயங
  5. Dr. V. Pandian says:
    15 years ago

    இந்தியர், குறிப்பாகத் தமிழர்கள் கறுத்தவர்கள் தான். விளம்பரம் முதற்கொண்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் வெள்ளையினம தான்.

    மன்னின் மக்களுக்கு தமது கறுத்த நிறம் பற்றிய மனவூனம் உள்ளது. அந்த மன ஊனத்தை திட்டமிட்டு உருவாக்குவது இந்த வந்தேறி வெள்ளையினம் தான்.

    உளவியல் ரீதியாக நாம் தினமும் வீழ்த்தப்படுகிறோம். வாய்ப்புகளும் வருமானமும் வெள்ளை இனத்துக்கு, செலவு, இளித்த வாய்க் கறுப்பனுக்கு.

    செந்திலும், வடிவேலும் வித, விதமாக அடிவாங்கி நம்மைச் சிறிக்க வைத்தனர், வைக்கின்றனர். அதன் சமூக உளவியல் தாக்கத்தைக் கவனிக்கிறோமா.

    தொலைக்காட்சி நன்மைகளை விட தீமைகளையே மிகையாகச் செய்கிறது.

    உலகமயம் தமிழனை மட்டுமல்ல, ஒட்டமொத்த உலகத்தையே வீழ்த்தும்.

  6. Dr. V. Pandian says:
    15 years ago

    இணைக்கப்பட்ட வீடியோ காட்சிக்கு நன்றிகள். மக்கள் தொகைக் குறைப்பும், அனைவர்க்குமான உறுதி படுத்தப்பட்ட வேலை வாய்ப்பும், அறம் சார்ந்த வாழ்வியலும், முறையான பொதுஉடைமைக் கருத்தியலுமே உலகைக் காக்கும்.

  7. malan says:
    15 years ago

    அருமையான ஆக்கம் சன் ரீவி மட்டுமல்ல உலகைக் கட்டமைக்கும் இன்றைய சிந்தனை வடிவம் அதற்கு உருவம் கொடுக்கும் ஊடகங்கள் எல்லாம் குறித்துப் பேசப்பட வேண்டும்.

  8. ramu says:
    15 years ago

    புலம்பெயர் தமிழர்களில் பலர் வன்னிப்படுகொலையின் போது கருணாநிதி குடும்பத்து ஊடகங்கள் அமைதிகாத்தது குறித்து ஆவேசம் கொண்டார்கள். காலம்செல்ல மானாட மயிலாட வை குறித்த நேரத்தில் பார்வையிட தவறுவதும் இல்லை. இதுதான் இன்றைய நுகர்வோர் கலாச்சாரம். பெருமுதலாளியத்தினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள நுகர்வோர் கலாச்சாரம்,பாலியல் உணர்வுகளை முதன்மைபடுத்தி அதற்கு தூபமிடும் நிகழ்சிகள் விளம்பரங்கள், சமூகபொறுப்பற்ற, சமூக உணர்வற்ற தலைமுறையை உருவாக்குவதற்குரிய கேளிக்கைநிகழ்ச்சிகள், பிரமாண்டங்கள், வேடிக்கை என்ற பெயரில் விசமத்தை விதைத்தல், என்பன உலகம் முழுவதும் ஊடகபெருமுதலாளிகளால் மிகச்சிறந்த முறையில் திட்டமிட்டு செயல்படுத்தபடுபவையாகும். மேலைத்தேசங்களில் கருத்துக்களை இவர்களே உற்பத்திசெய்கின்றனர். ஊடக நிறுவனங்களை போன்றே விளம்பரநிறுவனங்களின் செயல்பாடுகளையும் பார்க்கலாம். ரஸ்யா ஜோர்ஜியாவின் மீது போர்தொடுத்த போது பெல்ஜியத்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் பெரிய விளம்பரநிறுவனத்தை பல மில்லியன் டொலர் செலவில் ரஸ்யா கூலிக்கமர்த்தியது. அந்த நிறுவத்தின் மூலமே ரஸ்யா தனதுதரப்பு செய்திகளை மேலைதேச ஊடகங்களில் விதைத்தது. பிரித்தானியாவில் ரொபேட் மேடோக் கின் நியூஸ் இன்ரநசினல் க்கு எதிராக கேள்விஎழுப்புவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பயப்படுகின்றார்கள் என்ற உண்மை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அம்பலமாகியது. கேள்விஎழுப்பினால் தமது அரசியல் எதிர்காலம் அஸ்தமித்துவிடும்.என்பது குறித்த பயம் உண்மையானது. இந்த ஊடகங்களினால் திட்டமிட்டு அவதூறு பரப்பி தனிமனிதர்களின் எதிர்காலத்தையோ, சமூக அமைப்புகளின் செயல்பாடுகளையோ சிதைத்துவிடும் அசூரபலம் இந்த உடகங்களிற்கு இருப்பது உண்மை.

  9. அங்ககுமார் says:
    15 years ago

    எல்லோரும் தெரிந்து தெளிவு பெறவேண்டிய அருமையான எழுத்து… தொடரட்டும் உமது எழுத்து.. விடியட்டும் நமது வாழ்க்கை.

  10. ssr.sukumar says:
    15 years ago

    தஙகளுடைய கருத்துக்கள் யாவும் உண்மையே. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். தீர்வு என்ன???

    • THAMILMARAN says:
      15 years ago

      இப்பிடியே நேரே போய்த் திரும்பினால் சந்தி வரும் அதில போனால் ஒழுங்க வரும் அந்த ஒழுங்கையால் போய் பிறகு நேர திரும்புங்கோ அங்க தீர்வு வரும்.

      • Rishi says:
        15 years ago

        கேட்பவர்களுக்கு நேரிடையான பதில் அளிக்கத் திராணியற்றவர்கள் குதர்க்கமாகப் பேசுவார்கள். நீங்கள் பேசுவது அப்படித்தானிருக்கிறது திரு.தமிழ்மாறன்!

        பத்திரிக்கையாளர்கள் கேட்டார்களே “கனிமொழியும் நீராராடியாவும் பேசியிருக்கிறார்களே” என்று. “இரு பெண்மணிகள் பேசிக்கொண்டார்கள். அதனால் உங்களுக்கென்ன வந்தது” என்று ஒரு “அற்புதமான” பதிலை எடுத்துரைத்தார் முதல்வர் கருணாநிதி. அதுபோன்றிருக்கிறது உங்கள் பதில்.

        பேசத் திராணியற்றவர்கள் ஒதுங்கி நில்லுங்கள்!! வெற்றுக் கூச்சல் போடாதீர்கள்

        • THAMILMARAN says:
          15 years ago

          இரண்டு பெண்கள்தான் பேசினார்கள் நான் கு ஆண்களா பேசினார்கள்? தமிழனைத் தட்டி வைக்க இந்திக்காரன் சதியை தமிழரும் உணர்வதாக இல்லை ஜாலி மூடில் கொண்டாடுகிறார்கள்.தமிழனது இந்தக் குணம்தான் அவனைக் குட்டிக் கொண்டிருக்கிறது.

          • Rishi says:
            15 years ago

            ஹா..ஹா… உண்மைதான்! இரண்டு பெண்கள்தான் பேசினார்கள்! நான்கு ஆண்கள் இல்லை. ஆனால் என்ன பேசினார்கள்? அவர் என்ன வடநாட்டு தந்தூரி சிக்கன் சமையலா கற்றுத்தந்தார்? இவர் என்ன தென்னாட்டு செட்டிநாட்டு சமையலையா சிலாகித்துக் கொண்டிருந்தார்????

            எப்பாடிபட்டாவது தொலைதொடர்புத்துறையை “வாங்க” வேண்டும் என்றல்லவா பேசிக் கொண்டிருந்தார்கள்!! தமிழன் தரந்தாழ்ந்து போனால் இப்படித்தான் குட்டுவோம். இந்திக்காரன் சதி செய்றானாக்கும்! பேஷ்! உங்கள் வாதம்! உங்கள் பதில்களில் இருந்தே புரிந்து விட்டது.. குதர்க்கமாய் மட்டுமே உங்களுக்கு பேசத் தெரியும் என்று! வாழ்க வளமுடன்!

          • THAMILMARAN says:
            15 years ago

            குடியிருப்பை போல வீடு கட்டிய அம்பானிக்காகவும்,ஏழைக்கு கார் என ஏழையை பிச்சைக்காரன் ஆக்கிய டாட்டாவுக்காகவும் நீராடியா ராசாவுக்கு பொறீ வைத்தார் அதில் விழுந்தவர் தலித் என்பதால் இந்த இந்திக்காரரோடு அதிகார வர்க்கமும் இணந்து ஆடுகிற ஆட்டமே தலைப்புச் செய்திகள்.முக்கியமாக தமிழன் அன் இம்போர்டன் ஆக வேண்டும்.

  11. yohi says:
    15 years ago

    I love Tamilmaran’s comments

  12. nivey says:
    15 years ago

    awe some presentation… sun or star in the name of reality shows they are crossing their limits …. things become worser in hindi channels.

    • THAMILMARAN says:
      15 years ago

      நன்றீ அய்யா. இந்த நாய்க் குணம் தான் நம் குணம் சில தமிழர் குணம்.

  13. elagnairu says:
    15 years ago

    அருமையான பதிவு நண்பரே… காந்தியுடன் உப்புக்காய்ச்சப்போன விஜய்யும்.. அஜீத்தும்… பட்டேலுடன் விடுதலைக்காக போராடிய சூரியாவும்.. விக்ரமும்.. பேசாமல் சன் டிவியில் யார் பேச முடியும்… சரோஜினிதேவியுடன் பாடுபட்ட நயந்தாராவும் தமன்னாவும் இதர விபச்சாரிகளும் வாழ்த்தாமல் பண்டிகை நாளீல் நம்மை வாழ்த்த யாருக்கு தகுதி உண்டு நண்பரே…. இந்திய விடுதலை என்பது பார்ப்பண பனியா கும்பலுக்கானது.. இப்போது அதில் கலாநிதிமாறன் உள்ளிட்ட கருணாநிதி குடும்பம் நுழைந்துள்ளது… தமிழனுக்கான எதிரிகளில் ஒரு துரோக குடும்பம் இணைந்துள்ள்து…. திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் 2100 மதிப்புள்ள டிவியை இலவசமாக கொடுத்துவிட்டு… திமுக தலைவரின் குடும்பம் மாதம் 150 ரூபாயை கேபிள் கட்டணமாக வசூலிக்கிறது… ந்ண்பர்களே இணையம் மூலமாக புலம்பி பயணில்லை.. தமிழர்கள் மத்தியிளே பிரச்சனையை கொண்டு செல்ல முன் வாருங்கள்….

    • sivasampu says:
      15 years ago

      அப்போ இணயம் மக்கள் ஊடகம் இல்லையா?

  14. S.Manimaran says:
    15 years ago

    ஜெயா டிவி மாதிரி கலாச்சாரத்தை காப்பாற்றவேண்டாமா? கேப்டன் டிவி மாதிரி இலக்கிய நயத்துடன் நடத்தப்படவேண்டாமா?விஜய்டிவி மாதிரி பண்பாட்டினை காப்பற்ற வேண்டாமா?தமிழிலில் உல்ல அத்தனை டிவிகளும் மிக சிறப்பாக நிகழ்ச்சிகளை தந்து கொண்டிருக்கும்போது கலைஞர் குடும்ப டிவிக்கள் மட்டும் நாட்டை சீரழிக்கின்றன. அப்படித்தானே? சினிமா நடிகைகளை அட்டையில் தாங்காத தமிழ் வார இதழ்கள் எதாவது வருகிறதா?ஒட்டு மொத்த ஊடகங்களே கெட்டு திரிகின்றபோது ஒரு சிலரை மட்டும் குறை சொல்வது ஏன்?

    • THAMILMARAN says:
      15 years ago

      சைவத்தை முன்னேற்றச் ச்ங்கம் அமைத்து தம்மை மட்டும் முன்னேற்றீய பெருமக்கள் போல கலாச்சாரத்தைக் காப்பாற்ற டி வி வேண்டும் என் கிறீர்கள்? கோயில்கள் சில கடைக்ளாக மாறீ விட்டன.சிவன் கோயிலில் பிள்ளயாரும், கிருஸ்ணர் கோயிலில் முருகனும் என்றூ இங்கே இப்போது வியாபாரமே ந்டக்கிறது.டி வி வேண்டாமென்றால் நிறூத்தி விடலாம் ஆனால் ஆகம விதிகள் மீறீக் கட்ட்ப்படும் கோயில்கள் நமக்கு பயன் தருமா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...