Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சனல் நான்கு ஆவணப்படத்தை எதிர்க்கிறோம் : எதிர்த்தரப்புப் பேரினவாதிகள்

இனியொரு... by இனியொரு...
06/17/2011
in இன்றைய செய்திகள்
0 0
17
Home இன்றைய செய்திகள்

செனல்-04 தொலைக்காட்சியின் காணொளிகளை ஐ.தே.க. கடுமையாக எதிர்க்கின்ற போதிலும் அரசாங்கம் மௌனம் சாதித்து வருவதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். செனல்-04 காணொளிகள் இலங்கையின் நற்பெயருக்குக் கடும் களங்கம் கற்பிக்கக் கூடிய வகையில் அமைந்திருப்பதால் அதனை ஐ.தே.க. வன்மையாக எதிர்க்கின்றது. ஆயினும் அரசாங்கம் அது குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது குறித்து நாங்கள் கவலையடைகின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான சம்பவங்களின் போது எந்தக் கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அதற்குப் பதிலளித்தாக வேண்டும். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இதுவரையில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன் செனல்-04 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த முதலாவது காணொளியின் போதும் அரசாங்கம் இதே போன்றே மௌனம் சாதித்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட காணொளியின் போது அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுத்திருக்குமாயின் இன்றைய நிலைமையை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது. அரசாங்கம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளின் போது முகம் கொடுக்கும் கிண்டல் மற்றும் வன்முறை கலந்த நடைமுறையானது இவ்வாறான பிரச்சினைகளின் போது கைகொடுக்காது. அதற்குப் பதிலாக புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?

Comments 17

  1. நெருஞ்சி says:
    14 years ago

    “அவுக மௌனம் சாதிப்பாக;

    இவுக கடுமையா எதிர்ப்பாக.”

    இதுதாண்ட அறுவது வருசமா,நாம கண்டது.

    இவுனுகளப் போய் வாலுபிடிச்சு எலுதிக்கிரானுக,

    புளுகிக்கிரானுக

    நம்ம தெமிளு பேமானிக.

  2. அப்பு says:
    14 years ago

    சர்வதேச சட்டங்களுக்கு முரணாக சிறீலங்கா அரசு வைத்தியசாலைகளுக்கு குண்டு வீசித்தகர்த்தது. ஒரு தடவை மட்டுமல்ல பல தடவைகள் குண்டு வீசி காயப்பட்டவர்களை கொன்று தள்ளியது.

    யாதொரு வைத்திய வசதியோ, மருந்தோ, மின்சாரமோ எதுவுமற்ற வன்னி வைத்தியசாலை ஷெல் தாக்குதலால் சின்னாபின்னமாகித் தெறித்துக் கொண்டிருந்தது. பல நூற்றுக்கணக்கான காயப்பட்டவரை உள்ளே வைக்க இடமின்றி வெளியில் வைக்க அங்கும் ஷெல் அடித்து கொன்றார்கள்.

    கொட்டும் மழையில் இரத்த வெள்ளம் வைத்தியசாலையில் வழிந்தோடியது. கேட்கப்பார்க்க நாதியின்றி வெட்கம் கெட்ட உலக சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. வைத்தியசாலை மீது குண்டு வீசப்பட்டது அப்பட்டமான போர்க்குற்றம் என்பதற்கு வாணி குமார் நல்லதோர் சாட்சியமாக இருக்கிறார்.

    முதியவர் ஒருவர் படுகொலை மயமாக இருக்கிறது என்று கூறுகிறார். நாலாவது நாள் அவரே வைத்தியசாலையில் குண்டு வீச்சுக்கு பலியாகி இறந்து கிடக்கிறார். காயத்தில் அவலக்குரல்கள் வானைப் பிளக்கின்றன. வானம் கண்ணீர் விடுகிறது.. கொலை அலறல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

    சனல் 4 வெளிக் கொண்டுவந்திருப்பது சிறிய காணொளியே இதன் உண்மை வடிவங்கள் மேலும் அம்பலமானால் இன்னும் பலரது முகமூடிகள் கிழிந்து சின்னாபின்னமாகும்.

    • thurai says:
      14 years ago

      தமிழரை மட்டுமல்ல உலகினையே எங்களால் ஏமாற்ர முடியுமென் எண்ணும்
      ஈழத்தமிழ் அகதிகள்.  சிலர்.  ஏமாறுவது உலகம்ல்ல  நீங்கள் தான். முள்ளிவாய்க்காலில்
      துடிக்கும்போது உங்களில் இரங்காதவ்ர்கள் இந்த படத்தைப்பார்த்தா இரங்கப்போகின்றார்கள்.-துரை

      • பரதேசி says:
        14 years ago

        இரங்கக் கூடாதென விரும்புகிறீர்களா துரை.

    • chandran.raja says:
      14 years ago

      உங்கள் கதையைப் பார்த்தால் 2009 மே மாதத்திற்கு முதல் இருந்த தேசியத் தலைவர்(குறிப்பாக புலம்பெயர் தமிழர்களுடைய) சர்வதேச சட்டங்களை எல்லாம் மதித்து நடந்தது மாதிரியும் தமிழ்தலைவர்களின் அறிவுரைகளை கேட்டு நடந்தது மாதியும் அல்லவா இருக்கிறது?

      தேசியத்தலைவருக்கே அரசியல்யறிவில்லாத போது அப்பாவிமக்களுக்கு எப்படி அரசியல் அறிவு வரும்? புலிகொடிக்கு கீழ்நின்று பிரபாகரனுமேல் சத்தியம் செய்து
      வந்தவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்? போடுஎன்றால் போட்டுவிட்டு வரவேண்டியது
      தானே! மறுத்து மாற்றுக் கதை கதைத்தால் அவருக்கும் போடுதான். இது தான் புலிச்

      சட்டம். இதற்கும் சர்வதேசிய சட்டத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறா? அப்பு அவர்களே!.

      எண்பதின் கடைசிக்காலப் பகுதியில் இந்தியஇராணுவம் யாழ்ஆஸ்பத்திரியில் ஆடிய நரபலியாட்டத்திற்கு புலிகள் மருத்துவமனையை இளைப்பாறுமிடபாவித்ததும் அல்லாமல் போகும்போது எதிரிலுள்ள இராணுவமுகாமிற்கும் இரண்டுவெடியை தீர்த்துவிட்டே ஓடினார்கள். இதுவே இந்த இராணுவம் மருத்துமனைகுள் புகுவதற்கும்
      காரணமாக இருந்தது. இதுவெல்லாம் புலிகளின் எதிராளிகள் சொன்ன கதையல்ல? மாறாக ஒரு பேராசியர் பலபத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுடன் யாழ்பாணத்தில் திரிந்து அறிந்து “முறிந்தபனை” ஆவணப் புத்தகத்தில் வெளியிடப் பட்ட உண்மைகள். இந்த உண்மையை வெளியிட்ட காரண்திற்காகவே அவரும் மண்
      டையில் போடப்பட்டு……..

      பிரபாகரன்சட்டத்தில் சர்வதேச அங்கீகாரத்தையும் உலக அனுதாபத்தையும் பெறுவதாக இருந்தால் இலங்கையரசை இந்தியராணுவத்தை கொடுமைகார்களாக சித்தரிக்க வேண்டும் அம்பலப்படுத்த வேண்டும். இதற்கு புலம்பெயர் ஊமத்தம் கொட்கைளும் இதற்கு துணையாக இருந்தார்கள்.

      பிரபாகரனுக்கு சர்வதேசதிற்கு இலங்கையரசை கொடுமைக்காரராக சித்தரிக்க வேண்டுமென்றால் பள்ளிகூடத்திற்குள் பங்கர் வெட்டவேணும். மருத்துமனையை போராட்டகளமாக மாற்றப்படவேண்டும். சந்தையை தற்கொலை குண்டுதாரிகளை அனுப்பி இரத்தக்களறியாக்கி பொதுமக்களை ஓடவிட பண்ணவேண்டும். விகாரைகளிலும் மசூதிகளிலும் புலிக்காலத்தில் இதைத் தானே! கண்டுகழித்தோம்.

      புலிகளுக்கு வன்னிமுழுவதற்கும் செய்தியனுப்புவதற்கு முப்பது நிடங்கள் போதுமானது. அப்படியிருக்கும் போது… செஞ்சோலையில் ஆயுதப்பயிற்சி நடைபெறுகிறது என்று ஏன் புதினம் இணையத்தில் திகதி நேரம் குறித்து மூன்று தினங்கள் முன்பே அறிவித்தல் கொடுக்க வேண்டும். இதுதான் பொட்டன்.. தேசியதலைவரின் கெறிலா யுத்தமும் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான தமிழீழப் போராட்டமும் நாம் கற்றறிந்த பாடமும் ஆகும்.

      இப்படித்தான் வங்காலை மாட்டின் குடும்பத்தையும் கூரையில் தொங்கவிட்டார்கள்.
      அக்ஷன்பாம் பதினெழுஊழியர்களின் மரணமும் நடந்தேறியது.புலிகள் அழிக்கப்பட்டு இரண்டுவருடங்கள் கழிந்த நிலையில் இப்படிபட்ட அசம்பாவிதங்கள்
      எதுவும் நடக்கவில்லை என்பதே புலிகளின் காட்டுமிராண்டி நடவடிக்கைக்கு ஒரு சாட்சி. இனிமேல்லாகுதல் சிந்தித்து கருத்து சொல்ல முயற்சியுங்கள் திருவாளர் அப்பு அவர்களே!.

      இதெல்லாம் நாம் சிங்களரசுக்கு முழுமையான ஆதரவுகொடுக்கிறது போல் தோற்றம் அளிக்கலாம் என்ன செய்வோம்?. தமிழன். தமிழன் காலைமுறித்து அடுப்புக்கள் வைத்து கஞ்சி வேகவைத்து குடிக்கையில் இந்த நிலை தவிர்கமுடியாததே!.

      • THAMILMARAN says:
        14 years ago

        புலிகள் எப்போதுமே எதிரிக்கு ரெயினிங் கொடுத்தவர்கள்,கஞ்சிக்கு வழியில்லாத சிங்களவனுகு அஸ் கோப்பி தந்தவர்கள். அதுவெல்லாம் உண்மைதான் தல பயந்த ஆள் என்றூம் அவற்ற மண்டைக்க ஒன்றூமில்லை என்பதையும் இந்தியாவும் அறீயும் அதுவல்ல இங் கு நாம் பேசுவது இந்த உலகிற்கு உண்மையை சனல்4 காட்டி இருப்பது தர்மங்கள் மீறப்பட்டிருப்பதாலாயே.எது தர்மம் என்றால் வயதான தன்னை நிர்வாணமாக்கிய சிங்க்ளவனைப் ப்ற்றீக் கூறூவதாகும்..இல்ங் கை இராணூவத்தில் மிருகங் கள் அல்லாத மனிதர்களூம் உண்டு.

      • பரதேசி says:
        14 years ago

        அருமையாக வாதம் செய்கிறீர்கள் சந்திரன். அநியாயமாக அப்பாவித்தமிழர்கள் பலியாக்கப்பட்டதற்கும் உங்களைப்போன்ற புத்திசாலிகள் திசை மாறிப்போனதும் ஒரு காரணம் என்பதை உணர்கிறீர்களா.

      • a voter says:
        14 years ago

        1971ல் ஜேவிபி போராட்டத்தின்போது கதிர்காமத்தில் மனம்பேரி என்ற இளம் பெண் படையினரால் வல்லுறவுக்காளாக்கப்பட்டு தெருத்தெருவாக நிர்வாணமாக “அழைத்து” வரப்பட்டு பின்னர் கொல்லப்பட்டாள்.  இது போன்ற சம்பவங்கள் பின்னர் நீண்ட காலம் தெற்கில் நடைபெற வில்லை. ஏனென்றால் அதன்பின் நீண்ட காலம் அங்கு ஆயுதப்போராட்டம் நடைபெறவில்லை.
        வன்னியில் நடைபெற்றதும் இதுதான் யுத்த நேரத்தில் இராணுவம் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு எதுவித வெறிச்செயலுக்கும் தயாராக இருக்கும். பின்னர் அது கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.  இங்கு நாம் பேசுவது போர் நேரத்தில் நடைபெற்ற குற்றங்கள் பற்றி.  புலிகளின் செயல்களிற்கு அவர்க்ளே பொறுப்பாளிகள். புலிகளின் பாசிசச்செயல்களால் இலங்கை அரசின் செயல்களை நியாயப்படுத்திவிட முடியாது.

        • chandran.raja says:
          14 years ago

          புலிகளின் பாசிசசெயல்களை யார்தான் கட்டுப்படுத்த வேண்டுமென்று கருதுகிறீர்கள்?

          ஒருமாலைதீவு இராணுவம்? இந்திய இராணுவம்?
          ஐக்கியநாடுகளின் சமாதானப்படை? நாட்டோப் படை?
          ஒரு சக்திவாய்த மந்திரக்கோல் கொண்ட மந்திரவாதி? யார் என்பதை முன்மொழியுங்கள்.
          இல்லை…

          இருந்த மூன்றுலட்சம் மக்களும் பாசிசத்துக்குள் வாடிவதங்கி நெக்கிஉக்கி உழுத்தப் போக விட்டுயிருக்க வேண்டுமென்கிறீர்களா? வெறும் தரையில் நீச்சல்லடிக்காமல் பதிலைச் சொல்லுங்கள்.

  3. நிர்மலன் says:
    14 years ago

    சந்திரன் ராசா! முதலில் பேசப்படும் கருப்பொருள் சனல்4 காட்டிய தமிழ்மக்களின் படுகொலைபற்றியது! குற்றச்சாட்டு சிறிலங்கா அரசு மீதும் புலிகள் மீதும். நோக்கம் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்கு நீதி கிடைக்கணும். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழாது தடுப்பது. இதிலிருந்து விலகி சிங்கள அரச பயங்கர வாதமும் இந்திய பயங்கரவாதமும் கக்கிய பொய் செய்திகளை இங்கு மீள்பதிவு செய்யும் நீங்கள் யாரென்பதை தெளிவாக காட்டுகிறது. அவர்களே தமது குற்றச்சாட்டு பொய்யென்பதை புரிந்து அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கும் போது. நீங்கள் அவர்களை நியாயப்படுவது எதற்கு?உண்மைநிலையை தெளிவுபடுத்துங்கள் இந்தவகை செயற்பாடு உங்கள் வருமானம் சம்பந்தப்பட்டது என்றால் மேற்கொண்டு உங்கள் லங்காபுவத் செய்திகளை கணக்கில் எடுக்காது விடலாம். .

    • chandran.raja says:
      14 years ago

      என்னா உங்கள் பண்டித தன்மை நிர்மலன்?. கருப்பொருள் இடைப் பொருள் கடைப்பொருள் கண்டுபிடிக்க தெரிந்த உங்களுக்கு அப்புவுக்கு சொன்ன
      பொருள் கண்டு பிடிக்க உங்கள் பண்டிதஞாணம் இடம் கொடுக்கவில்லையோ…..?

      வன்னியில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க வேண்டுமென்றால்
      புலிகளையும் புலிகளின்கொலைவெறிக்கு-அஜராகபோக்கிற்கு நெய்விட்டு வளர்த்து

      விட்ட புலம்பெயர் ஆதரவாளர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். ஆயிரம் ஏழை சிங்களராணுவத்தை பலிகொடுத்து புலிகளின் செல்லடிக்கும் பீரங்கிகளையும்
      அத்தோடு ஒத்தகொலைகருவிகளையும் பறிமுதல் செய்து கிடங்கில் போட்டுவிட்ட இலங்கையரசுக்கு பாராட்டுபத்திரமும் வழங்கவேண்டும். இதுவே! நீதியின் குரல் நிர்மலன்.

      • நிர்மலன் says:
        14 years ago

        ஐநா நிபுணர் குழுவின் குற்றச்சாட்டில் சிங்கள பயங்கரவாத அரசு ,புலிகள், புலிகளிற்கு எந்த கேள்வியுமின்றி ஆதரவளித்த புலம்பெயர்தமிழர், பொதுமக்களை காக்க தவறிய ஐநா சபையென குற்றச்சாட்டிற்குள்ளாகி 2 மாதங்கள் கழிந்து விட்டது. எனி விசாரணைதான் தேவையே ஒழிய லங்காபுவத் செய்திகள் அல்ல!
        உலகமே பார்த்து அதிர்ந்து உறைந்து போயுள்ள படுகொலைகளையும், வல்லுறவுகளையும், பிணத்தைக் கூட புணர்ர்ந்த சைக்கோ படைக்கு “பாராட்டுபத்திரமும் வழங்கவேண்டும்.” எனும் பரிந்துரை செய்கிறீர்கள் என்றால் உங்களை என்னவென்று சொல்வது.!
        படுகொலை குற்றவாளிகளிற்கு பாராட்டுபத்திரமும் வழங்கும் ஒருவர் நீதியின் குரலென்பது அப்பட்டமான ஏமாற்றுத்தனமின்றி வேறில்லை.

        • chandran.raja says:
          14 years ago

          ஐக்கியநாடுகளின் சபையின் மேல்லுள்ள உங்கள் மதிப்பீடுகளை முதலில் பரிசீலனை செய்யுங்கள் நிர்மலன்.

          ஐக்கியநாடுகள் சபை உலகமக்களின் நலன்களுக்காக தோற்றிவிக்கப்பட்டதா? உலகமுதலாளிகளுக்காக தோற்றிவிக்க பட்டதா?

          நீங்கள் சொன்னமுறையில் கணக்கிட்டால் ஆப்கானிஸ்தான் ஈராக் இன்று நடக்கிற லிபியாவுடனான போர்களும் நாளை நடக்கயிருக்கிற யுத்தங்களும் சரியானவையாக ஆகிவிடும்…….?

          நீங்கள் நினைப்பது போல் இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்ததிற்கு காரியவாதிகளே இவர்களும்
          இவர்களின் ஆளும்வர்க்கமும் தான். இவர்களிடம் நீதிக்கு இரந்துநின்றால் கிழக்காசியசந்தையை மேற்குலககத்திற்காக திறந்துவிட வேண்டியது தான்.இறுதியில் விட்டுக்கொடுக்க மனம் இல்லாத
          இரண்டு பூணைகள் தமது அப்பத்தை கொண்டு சென்று குரங்கிடம் நீதிகேட்ட கதை போல் தான் முடியும்.

          பணபட்டுவாடா உள்ள இன்றைய உலகநிலையில்
          மனிதநேயமோ மதமோ ஒருயினமோ நீதி வழங்க முடியாது. இது சர்வதேச தொழிலாளிவர்ககத்தால் மட்டுமே சாத்தியப் படக்கூடியதொன்று.

      • a voter says:
        14 years ago

        இலங்கை அரசு எப்போது மக்கள் காவலனாக மாறியது என்று விளக்கமுடியுதா சந்திரன் ராஜா? தமிழ் மக்களின் போராட்டம் உண்மையில் அரசுக்கு எதிரான தன்மை கொண்டது. அதனைப்புலிகளும் மற்றைய குறுந்தேசிய வாதிகளும் தவறாக வழிநடத்தினார்கள். அரசு தன்னைப்பாதுகாத்துக் கொள்ள ஏழை சிங்களராணுவத்தை பலிகொடுத்து புலிகளைக் கொன்றுவிட்டு அதனிடத்தில் தான் உட்கார்ந்திருக்கிறது. ஆக ஆட்கள்தான் மாறியிருக்கிறார்களே தவிர தமிழ் மக்கள்நிலை அதே நிலை தான். 
        அரசு புலியின் இடத்தில் உட்கார்ந்திருக்கிறது என்பதற்கான சமீபத்திய உதாரணத்தை கட்டுநாயக்கவில் சிங்கள மக்கள் கண்டார்கள். இந்த இலங்கையரசுக்கு பாராட்டுபத்திரமும் வழங்கவேண்டும் என்கிறீர்களா?

        • chandran.raja says:
          14 years ago

          திரு.வோட்டர் படிப்பது ஒன்று கற்பனைசெய்வது

          வேறு ஒரு பக்கமா? மக்கள்காவலனாக மாறியது என்று இங்கு எங்கேயும் சொல்லியிருக்கிறேனா? இது உங்கள் கற்பனையில் விளைந்தது அல்லவா? வார்த்தைகள்
          புரிய கஷ்ரமாக இருந்தால் அதை மூன்று நான்கு தடை படித்து புரிந்து கொள்ளுங்கள்.

          திரும்பவும் மேல்லேறி படித்துப்பாருங்கள் எப்படி
          எழுதப்பட்டிருக்கிறது என்பதை.

          புலிகள் தொழில்சங்களை புலிச்சங்களாக வைத்திருந்தார்கள் என்கிற உண்மையாவது உங்களுக்கு தெரியுமா? அல்லது தொழில்சங்கத்தின் பலமாவது உங்களுக்கு புரியுமா? சுகந்திரவர்த்தக வலயத்தின் தொழிலாளர்களின் போராட்டத்தின் வெற்றியே புலிகளின் சமாதியில்லிருந்து தான் உருவெடுத்தது
          என்பதையாவது புரிந்துகொள்ள முடியுமா?

          இலங்கை- தொழிலாளர்ஐக்கியத்தில் தான் ..ஒன்று படுபதுமூலம் தான் இனமத முரண்பாடுகள் நீங்கிய
          ஒரு இலங்கையை உருவாக்க முடியும்.

          திரும்பவும் சொல்லுகிறேன் இலங்கையரசுக்கு பாராட்டு பத்திரம் கொடுத்தே! தீரவேண்டும். எதற்கு
          என்பது உங்கள் விளக்கத்தை பொறுத்தே அமைந்திருக்கிறது. விளக்கத்துடன் திரும்பவும் வாருங்கள் வோட்டர்.

  4. நிர்மலன் says:
    14 years ago

    ஐநா மீது ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் குற்றச்சாட்டுக்களை தனழமனழமர்களேப நாடுகளோ குற்றம் சாட்டலாம். அது பல வேளைகளில் உண்மையானதாகவும் இருக்கலாம். ஆனபல் இன்றுவரை அதனுடன் ஒத்துழைக்காத எந்த நாடும் சுமுகமாக இயங்க முடியாது. இந்நிலையில் “ஐக்கியநாடுகளின் சபையின் மேல்லுள்ள மதிப்பீடுகளை முதலில் பரிசீலனை ” எதுவும் ஆகப்போவதில்லை.

    அதைவிட நீங்கள் பாராட்டுபத்திரம் வழங்கிய இலங்கையரசும் அதன் அங்கம். தான் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கு இலங்கையரசு கட்டுப்பட்டே ஆகணும். சிறிலங்காஅரச பயங்கரவாத முகம் சனல்4ல் அப்பட்டமாக்கப்பட்ட பின்னரும் இதற்கு பாராட்டுபத்திரம் வழங்கிக்கு கொண்டு “உலகமுதலாளி” “மனிதநேயம்” “சர்வதேச தொழிலாளிவர்க்கம் என கதையளப்பது வெறும் ஏமாற்றுத்தனமே. முதலில் மனிதத்தை மதிப்பவரவராக மனித உயிர்களை உரிமைகளை மதிக்கும் மனிதராக இருக்கப் பாருங்கள். அதன் பின் உந்த கதையாடல்களை விடலாம்.
    இந்த தலைப்பிற்கும் நீங்களிட்ட பின்னூட்டங்களிற்கும் ஏதாவது தொடர்பிருக்கா. மீண்டும் மீண்டும் தலைப்பிலிருந்து விலகி பேசுவது சிந்தனைவரட்சியின் இயலாமையின் வெளிப்பாடு.

  5. chandran.raja says:
    14 years ago

    உங்களை திருத்தியல்லவா? மற்றவர்களை திருத்த முற்படவேண்டும். மீண்டும் தங்களது அரைகுறை பண்டிதத்தனத்தையல்லவா? காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

    நீங்கள் தலைப்புக்கா? இங்கு பின்னோட்டம் இட்டுக்கொண்டிருக்கிறீர்கள். சந்திரன.ராஜாவுக்கு அல்லவா? கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கேட்கும் கேள்வியை திருப்பி உங்களையே கேட்டுப்பாருங்கள். அந்த கேள்வி புலிகள்
    மட்டுமே ஈழப்போராட்டத்தை நடத்துவதற்கு உரிமையுள்ளவர்கள் போன்ற முட்டாள்
    தனம் உங்கள் கேள்வியிலும் முழுமையாக இழையோடி இருப்பதை கண்டு கொள்ளுவீர்கள்.
    சிங்களயரசை குறைகூறுவதற்கும் விமர்சிப்பதற்கும் நிறையவே இடமுண்டு. உங்கள் விமர்சனங்கள் முப்பதுவருட புலிப்போராட்டத்தை சரியானது நிரூபிபதற்கு முயல்வாதாகவே நான் கருதுகிறேன். உங்களுக்கு விவாதங்கள் சரிவருமா? என்பதே சந்தேகத்திற்கு உரியது.

    இலங்கையரசை குற்றவாளிகூண்டில் தாங்களும் தங்கள்சகபாடிகளும் முயல்வதில்
    நானும் பங்குகொள்ள வெண்டுமென்று நினைகிறீர்கள். இலங்கையரசு குற்றவாளியாக இருந்தால் புலிகள் செய்தது சரியானதாக இருக்கவேண்டும். அப்படியா? உங்கள் கனவுகள் பலிக்க போவதில்லை. அதற்கேற்ற உலகநிலைமைகளும் சாதகமாகயில்லை. பகல்கனவு பொய்யுரைகளை பிரச்சாரப் படுத்துவதில் புலிகள் வல்லவராக இருந்தார்கள். அந்த வல்லமையை திரும்ப அடையமுயல்வது இலவுகாத்த கிளியே.

    இதற்கும் உங்களிடம் ஒருபதில் கைவசம் வைத்திருப்பீர்கள். “நான் புலிகளைப் பற்றி
    கதைக்கவில்லை. வன்னியில் மாண்டதமிழரைப் பற்றியே கதைக்கிறேன்” என்பீர்கள்.
    வன்னியில் புலிகள்நடந்து கொண்டமுறைகளை உண்மையான முறையில் விமர்சிக்க
    தயங்குபன் எவனோ அவன் தமிழ்மக்களை வைத்து பம்மாத்து செய்கிறான் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In