சந்தேகம் : புலிகளின் விமானமோட்டிகள் வெளிநாட்டவர்களா?

வவுனியா படைத்தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானத்தை செலுத்திச் சென்றவர்கள் வெளிநாட்டு விமானிகளாகவிருக்கலாம் எனும் சந்தேகம் பாதுகாப்புத் தரப்பினருக்கு எழுந்துள்ளதாக டெய்லி மிறர் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசிறி தெரிவித்துள்ளார்.  விமானப் படை விமானங்கள், புலிகளின் விமானத்தைப் பின்தொடர்ந்து சென்று தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானங்கள், கடல் மட்டத்திற்கு தாழப்பறந்து சென்றதாகவும், சுப்பர் சொனிக் விமானத்தினைச் செலுத்தக்கூடியவர்களாலன்றி அவ்வாறு தாழப்பறந்து சிறிய ரக விமானங்களை செலுத்த முடியாது எனவும், புலிகளின் விமானங்களைப் பின்தொடர்ந்து சென்ற எப்-7 விமானத்தின் விமானி விமானப்படைத் தலைமையகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்காரணமாக, நன்கு இராணுவப் பயிற்சியும், அனுபவமும் கொண்ட வெளிநாட்டைச் சேர்ந்த விமானமோட்டிகள் எவராவது புலிகளின் விமானத்தைச் செலுத்திவந்திருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிப்பதாகவும் அவர் தனது பாதுகாப்பு ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

புலிகளின் ஒரு விமானம் தாக்கியழிக்கப்பட்டது

வவுனியா படைத்தலைமையகம் மீது தாக்குதல் நடாத்திவிட்டு புலிகளின் இரு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பினை ஏற்படுத்தியவாறே கிளிநொச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், ஆனால் திடீரென்று ஒரு விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, உடனடியாக, புலிகளின் மற்றொரு விமானத்தின் விமானி சக விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக கிளிநொச்சிக்குத் தெரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், விடுதலைப் புலிகள் தமது வானொலி தொடர்பாடல் வலையமைப்பின் மூலம், தமது விமானம் ஒன்று எங்காவது வீழ்ந்துள்ளதா என்பது பற்றி கண்டறியுமாறு தகவல் பரிமாறியதை படையினர் ஊடறுத்துக் கேட்டதாகவும் அவர் தனது பாதுகாப்பு ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.முல்லைத்தீவு வான்பரப்பிலிருந்து தெற்கு நோக்கி புலிகளின் விமானங்கள் வந்துகொண்டிருப்பது அதிகாலை 3.26 மணிக்கு இந்திரா-2 எனும் ரேடாரில் தென்பட்டதாகவும், உடனடியாக கொழும்பிலுள்ள விமானப்படைத்தலைமையகத்துக்கு வவுனியா விமானப் படைத்தளத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்டதாகவும் சுனில் ஜயசிறி குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முதலாவது விமானம் ரேடாரில் இனங்காணப்பட்டு, 8 நிமிடங்களின் பின்னர், அவற்றைத் தேடியழிக்கும் பொருட்டு கட்டுநாயக்க விமானப்படைத்தளத்திலிருந்து எப்-7 சுப்பர் சொனிக் விமானங்கள் புறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 6 நிமிடங்கள் வவுனியா வான்பரப்பில் வட்டமிட்ட புலிகளின் இரு விமானங்களில் ஒன்று முல்லைத்தீவை நோக்கியும், மற்றொன்று கிளிநொச்சியை நோக்கியும் பறந்துசென்றதாகவும், இதேசமயம், இரணைமடுவிலும், புதுக்குடியிருப்பிலும் அமைந்துள்ள புலிகளின் விமான ஓடுபாதையை எப்-7 விமானங்கள் குண்டுவீசித் தாக்கியழித்ததாகவும் சுனில் ஜயசிறி தனது பாதுகாப்புப் பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அதிகாலை 3.50 மணியளவில் முல்லைத்தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த புலிகளின் ஒரு விமானத்தைப் பின்தொடர்ந்து சென்ற எப்-7 விமானம், அந்த விமானத்தின் மீது தாக்குதல் நடாத்தியதாகவும், இதனையடுத்து சில விநாடிகளில் புலிகளின் விமானம் தீப்பற்றிக்கொண்டு காட்டினுள் வீழ்ந்ததாக, விமானப்படை விமானி அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் விமானம் ஒன்றினை வெற்றிகரமாக தாக்கியழித்துவிட்டதாக விமானப்படை விமானி, விமானப்படைத் தலைமையகத்துக்கு உடனடியாக அறிவித்ததாகவம் அவர் தனது பாதுகாப்பு ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் மறுப்பு

இதற்கிடையில், தமது இரு விமானங்களும் தாக்குதல் நடாத்திவிட்டு பாதுகாப்பாகத் திரும்பிவந்துவிட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தததையும் அவர் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

– ஐஎன்லங்கா இணையம்

3 thoughts on “சந்தேகம் : புலிகளின் விமானமோட்டிகள் வெளிநாட்டவர்களா?”

 1. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைகள், ஊடக செய்திகள்,ஆய்வுகள் இவையெல்லாம் எந்தளவிற்கு உண்மையான செய்திகளை வெளிக்கொணர்ந்தன என்பதுபற்றி,அன்றிலிருந்து இன்றுவரை அலசி அராய்ந்தால் புரியும்.அறிக்கை விடும் நபர் 1+1=2 என்ற அடிப்படை அறிவில்லாமலா செய்திகளை வெளியிடுவது. 6நிமிடம் மட்டுமே வவுனியா வான்பரப்பில் வட்டமிட்ட புலிகளின் விமானத்தை, கொழும்பில் இருந்து வெளிக்கிட்ட விமானம் துரத்திவந்து அடிப்பதென்றால்,இதை கேட்பதற்கு நாம் ஒன்றும் மாங்காய் மடையர் அல்ல.

  அடுத்து புலிகளின் விமானிகள் வெளிநாட்டு விமானிகளாய் இருக்க வாய்ப்பேதும் இல்லை.ஏனென்றால் தாழப்பறப்பதற்கு அனுபவமுள்ள விமானிகள் தேவை என்று அறிக்கை கூறுகிறது. எவ்வளவோ கஸ்டத்துக்கு மத்தியில் விமானம் ஓட்டுவதில் அதிக அனுபவத்தை பெறுக்கொண்ட ஒருவர்,”கரணம் தப்பினால் மரணம்”என்றநிலைக்கு வரமாட்டார்.அந்நபர் ஏதாவது ஒரு விமானசேவையில் சேர்ந்து தனது வாழ்வை மேம்படுத்துவாரேயொழிய வன்னியால் புதிதுபுதிதாக உருவாக்கிக் கொடுக்கப்படும் பட்டங்களுக்காக தமதுயிரை மாய்ப்பதற்கு வெளிநாட்டு விமானிகள், அதிலும் அனுபவமுள்ள விமானிகள் எவரும் மாபேதைகள் அல்ல.

  இதைக் குறிப்பிடக் காரணம்,
  கடந்த காலங்களில் புலி இயக்க உறுப்பினர் பலர் விமானப்பயிற்சிக்காக ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளுக்கும்,குறிப்பாக நியூசிலாந்து நாட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.உண்மையாகவே நாட்டை நேசித்த புலி இயக்க உறுப்பினர்கள் விமானப்பயிற்சியை முடித்துக்கொண்டு நாட்டுக்குத் திரும்பிவிட்டார்கள்.கணிசமான புலி இயக்க உறுப்பினர்களோ விமானப்பயிற்சியை நிறைவு செய்துவிட்டு புலிக்கே கம்பி நீட்டி விட்டார்கள்.

  அவர்கள் மக்களுடைய காசில் புலி மூலமாக இலவச வெளிநாடு, விமானப்பயிற்சிப்படிப்பு இவைஎல்லாம் முடிந்தவுடன் விசா, வேலை, கார், வீடு என்று தமது வாழ்க்கையை மேம்படுத்தும் போது வெளிநாட்டு விமானி என்ன இலிச்ச வாயனா?

  கடைசியில் ஒரு உண்மை மாத்திரம் புரிகிறது.புலியிடம் சுப்பர்சொனிக் இருக்கோ இல்லையோஅனுபவம் வாய்ந்த விமானிகள் உள்ளனர்.அவர்கள் தமிழராய் உள்ளனர் என்பதற்காக உலகத்தமிழரெல்லாம் மார்தட்டிக்கொள்ள வேண்டாம்.காரணம் இன்று உலகளவில் பலநாடுகளால் புலிகள் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.எனவே அனுபவமிக்க ஒரு தமிழ் விமானி புலி என்றபோர்வைக்குள் ஒரு பயங்கரவாதியாய் இருப்பதால்,உலகளவில் தமிழனுக்கு இதுவொரு அவப்பெயரே.

 2. சாகத் துணிஞ்சவன் எப்படியும் விமானம் ஓட்டுவான். பிறகெதுக்கு இப்பிடிப் புலம்பல். தன்னிலும் நல்லா ஓட்டுறான் எண்டா? இல்லை தப்பீற்றான் எண்ட கவலையா?

 3. சாகத்துணிந்தவன் சாகவேண்டியதுதானே!
  பிறகு ஏன்? மக்கள்தொண்டு பணி தாயகப்பணி
  போராடப்பணி போராட்டகளம் நன்கொடை
  தமிழ்ஈழம்
  அஜரவாகதத்தின் புதியபோக்கா?
  ஆட்காட்டி அவர்களே!!!
  தமிழ்மக்களை மரணப்பொறிக்குள் உட்படுத்தி விட்டவர்கள் நீங்கள் தான்
  உங்கள் அரைவோக்காடு தனத்தை போக்கடித்தான்
  துணிந்து நிற்கின்றோம்
  புலிகளை தோற்கடிக்கடிக்கும் வரை
  தமிழ்மக்ககளின் நின்மதி முற்றுபெறாது

Comments are closed.