சரத் பொன்சேகாவின் கைதானமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் சத்தியாக்கிரகத்தில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் சற்று முன்னர் தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு கண்ணீர்ப் புகை பிரயோகமும். தண்ணீர் பீச்சியடித்தலும் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியும் கம்புகள், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதலும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது.
அதே வேளை, அவ்விடத்தில், ஆயுதங்கள் நிரம்பிய வாகனம் ஒன்று தரித்து நிற்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சரத்பென்சேகாவை கைது செய்து அடைத்துவிட்டுத்தான்> அவ்ரை எவ்வாறு விசாரிக்கலாமென சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கின்றார்கள்! இவ்வளவிற்கும் மகிந்தாவும ஒரு சட்டத்தரணியாம்! அவருக்கு சிந்தனை உருவாக்கத்தைவிட> அழித்தொழிக்கும் கலையே> கைவந்த கலை!