ஈராக்கின் பல பகுதிகளைச் சன்னி பிரிவு அடிப்படைவாதிகள் கையகப்படுத்தியுள்ளனர். இவர்கள் ஈராக்கின் முன்னை நாள் அதிபர் சதாம் ஹுசைனைத் தூக்கிலிடுமாறு தீர்ப்பு வழங்கிய நீதிபதியைப் படுகொலை செய்துள்ளனர். ரவூப் அப்துல் ரஹ்மான் (69) என்ற இந்த நீதிபதி 2006 ம் ஆண்டு சதாம் ஹூசைனுக்கு தூக்குத் தண்டனை வழங்கினார். உலகத்தின் பேட்டை ரவுடியான அமெரிக்க அரசு இந்த உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் அடிப்படை வாதத்தைதையும், பயங்கர வாதத்தையும் தோற்றுவித்து ஆக்கிரமித்து வருகிறது. மனிதர்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற பிரதேசங்களாக உலகின் பல்வேறு பகுதிகளை மாற்றியுள்ளது.
ஈராக்கின் இன்றைய இரத்தக் களரிக்கும் அமெரிக்க அரசே காரணம் என்பதும் மத்திய கிழக்கின் இரத்த ஆற்றிலிருந்து எண்ணையைப் பிரிதெடுப்பதே நோக்கம் என்பதும் வெளிப்படையானவை. சதாம் ஹுசைன் உதவியாளர் இசாத் இப்ராஹிம்-அல்-நூரி என்பவர் தனது பேஸ்புக் வாயிலாக வெளியான செய்தியில், இரசாயன குண்டுகள் பயன்படுத்தியதற்கு கடந்த 2006-ம் ஆண்டு பாக்தாத் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ராவூப் அப்துல் ரஹ்மான், ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்தனர். இவ்வாறு பேஸ்புக் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இத்தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட நீதிபதி ராவூப் அப்துல் ரஹ்மான், குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவர். தீர்ப்பளித்த அடுத்த ஆண்டே தனக்கும் இவரது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து நேரலாம் எனவும் அடைக்கலம் தருமாறு பிரிட்டன் அரசை 2007-ம் ஆண்டு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Good news
Saddam Hussain had an Iraq. Gaddafi had a Libya Said Barre had a Somali. Assad still has a Syria. The West is indeed destroying the Arab World. The Islamic World. Sunni, Shia and Sufi they will find among ground not only among themselves but also with the Christians. Arabic Numerals.