12.01.2009.
ஜனவரி 8ல் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையைக் கண்டிக்கும் போராட்டம் பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபுர்வமான அலுவலகத்திற்கு முன்பாக ஜனவரி 15 அன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மதியம் 2 மணி முதல் 4 மணி வரை இந்த போராட்டம் 10 டவுனிங் ஸ் ரீற் முன்பாக நடைபெறும். எக்ஸைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேக் ஏற்பாடு செய்யும் இந்தப் போராட்டத்திற்கு சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு என்பன தங்ளுடைய ஆதரவை வழங்கி உள்ளன.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்காவின் படுகொலையைக் கண்டிக்கும் இந்தப் போராட்டத்திற்கு தேசம்நெற் தனது முழுமையான ஆதரவை வழங்கி உள்ளது. தேசம்நெற் கட்டுரையாளர்கள் செய்தியாளர்கள் கருத்தாளர்கள் வாசகர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு இலங்கை அரசின் ஊடக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் என தேசம்நெற் தெரிவித்து உள்ளது.