2020-செப்டம்பர் மாதம் மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சடங்களையும் ரத்து செய்வதாக மோடி அறிவித்துள்ள நிலையில். நாடாளுமன்ற முற்றுகைக்காக டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகள் சட்டம் முழுமையாக ரத்தாகும் வரை போராட்டங்களை விலக்கிக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். குளிர்,பனி, மழை, கோடை என சுமார் 600 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள். 20 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் தனி.
இப்போது ஓராண்டிற்குப் பிறகு வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்த போதும் அதை விவசாயிகள் முழுமையாக நம்பவில்லை.
பிரதமரின் அறிவிப்பு வெளியான பின்னர் விவாயிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். பல விவசாய கூட்டமைப்புகளின் தலைவர் ராகேஷ் திகாயத் இது தொடர்பாக பேசிய போது,”பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் ரத்து என அறிவித்திருக்கிறார். ஆனால் எழுத்தின் மூலம் எப்படி நாடாளுமன்றத்தில் வைத்து அதை சட்டமாக்கினர்களோ அதே போன்று நாடாளுமன்றத்தில் வைத்து அச்சட்டத்தை ஜனாதிபதி ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” என அறிவித்துள்ளார்கள்.