வடக்கு கிழக்கில்; புதிதாக தமது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறக்கவுள்ளதாக இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது உள்ளன. மேலும் 300 நிலையங்களை புதிதாகத் திறப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி ஒவ்வொரு நிலையத்துக்கும் 20 மில்லியன் ரூபா வீதம் இத்திட்டத்துக்கு 6 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








இதற்காகத்தான்> சாட்சியமில்லாத மனிதப் படுகொலைகளை கூட்டாக செய்தீர்களோ?