புலம் பெயர் நாடுகளில் ஊடகங்கள் மக்களின் தலையில் மிளகாய் மட்டுமல்ல நவ தானியங்கள் அத்தனையையும் அரைத்து முட்டாள்களாக்குகின்றன. அதிக எண்ணிக்கையானவர்கள் பார்வையிட வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் அடிப்படை நோக்கம். அவ்வாறு பார்வையிடுவோரின் எண்ணிக்கையைக் மூலதனமாக்கி வியாபார நிறுவனங்களிடம் விளம்பரங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
புலம் பெயர் ஊடகம் ஒன்று அண்மையில் வெளியான செய்தி ஒன்றில் புலிகள் இயக்கத்தைச் மீளமைத்தவர்கள் என்று கூறப்பட்ட மூவரும் பயன்படுத்திய வாகனம் ஒன்றை இலங்கை அரசு கையகப்படுத்தியதாகப் பரபப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இச் செய்தியில் இலங்கை அரசு கையகப்படுத்தியதாகக் கூறும் அவர்களின் வாகனத்தின் படமும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் படம் 2009 ஆம் ஆண்டு சோமாலியாவில் எடுக்கப்பட்டது. இப் படத்தை ரஷ்ய இணையம் ஒன்று வெளியிட்டிருந்தது.
இனவெறிக்கும் இனவாதத்திற்கும் எல்லைகள் கிடையாது. அடிப்படையில் தமிழனாக இருப்பதால் கொலையாளியும், கொள்ளைக்காரனும், இனக்கொலையாளியும் கூட தமிழினவாதிகளின் வட்டத்துக்குள் வந்து சேரலாம். வியாபாரத்தில் மட்டுமே குறியாகவிருக்கும் பல்தேசிய பெரு முதலாளி கூட இவர்களின் எதிரிகள் அல்ல. பல்தேசிய முதலாளிகள் ராஜபக்ச போன்றோடு அவர்களது வியாபாரத்திற்காகத் தொடர்பு வைத்துக்கொள்வார்கள். அவர்கள் தமிழர்கள் என்பதால் புனிதப்படலாம். ஏகாதிபத்தியத்திற்கும் பல்தேசிய மூலதனத்திற்கும் எதிரான தேசியவாதத்தை இனவாதமாக மாற்றி அதனூடாக அருவருக்கத் தக்க வியாபாரம் நடைபெறுகிறது. இன்று புலம்பெயர் நாடுகளின் பிரதான தமிழ்ப் பல்தேசிய நிறுவனங்களான லைக்காவும், லிபாராவும் வழங்கும் பிச்சைப் பணத்திற்காக இந்த இனவாதம் பயன்படுத்தப்படுகின்றது.
இச் செய்தி அதிர்வு இணையத்தில் வெளியிடப்படுவதற்கு முன்பதாகவே சிறீலங்கன் -நியூஸ் என்ற இலங்கை இணையத்தில் மேற்குறித்த படத்துடன் வெளியாகியுள்ளது. ஆக, அதிர்வு இணையம் அந்தப் படத்தையே வெளியிட்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு. தவறுக்கு வருந்த்துகிறோம்: http://www.srilankanews.lk/index.php/news/general-news/3346-van-used-by-ltte-revivalists-found-in-jaffna- inioru.com
குழப்ப வாதிகள் இனையத்தளம் நடத்தினால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இனையத்தளம் நல்ல உதாரணம். இந்த புகைப்படங்கள் வன்னி இறுதிக்கட்ட போரில் பிடிக்கப்பட்டு இலங்கை இரானுவத்தளங்களில் வெளியாகியிருந்தது. தயவு செய்து உங்கள் இணைய தளத்தை மூடிவிட்டு வேறு வேலை தேடவும்
சிறிலங்கன் இணையம் என்ன போட்டாலும் அதிர்வு வெளியிட்டு விடுமா? உண்மை பொய்யை ஆராய்வதில்லையா?
10.2.2009 இல் defence.lk இணையதளத்தில் இந்தப் படம் பிரசுரமாகியுள்ளது. பின்னர் 26.02.2009 இல் steer.ru இணையதளத்தில் பிரசுரமாகியுள்ளது. (http://steer.ru/archives/2009/02/26/008273.php) இதில் இப்படம் சோமாலியாவில் எடுக்கப்பட்டதாக (தவறாகக்) குறிப்பிடப்பட்டுள்ளது.
srilankanews.lk இணையதளம் அண்மைய தனது செய்திக்கு 5 வருடத்திற்கு முந்தைய படத்தினை உபயோகித்துள்ளது.
http://www.defence.lk/picturegallery/picc.asp?tfile=20090210_PrabhasVan&cat=ACHI
.
.Terror leader Prabha’s personal van recovered
.
.
Terror leader Prabha’s personal van recovered
10th February 2009