Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கோத்தாபய வளர்த்த சுறாவின் பின்னால் ஒளிந்து கொள்ளும் பல்தேசியச் சூறையாடல்!

இனியொரு... by இனியொரு...
01/13/2015
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

gotasharkஇன்று கொழும்பின் சிங்கள ஊடகங்கள் முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவிற்குச் சொந்தமான வீட்டில் சுறா மீன்கள் வளர்க்கப்படுவது தொடர்பாகவும் சஜின் வாஸ் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட யானைக் குட்டி தொடர்பாகவும் தகவல்களை வெளியிட்டன. கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கோட்டாபய அமெரிக்காவிலிருக்கும் தனது மகனுக்காக வாங்கிய வீடு ஒன்றின் அருகில் வசித்தவர் என்று தகவல்கள் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்.
கோட்டாபய தனக்குச் சொந்தமான வீடு ஒன்றில் சுறா வளர்த்த கதை இணையங்களையும், UPFA இன் சமூக வலைத் தளங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டது. சஜின் வாஸ் குணவர்த்தனாவின் வீட்டில் யானைக்குட்டி வளர்க்கப்பட்டு தீனி போடப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து யானைக்கு அனுமதிப்பத்திரம் பெற்றே வளர்க்கிறேன் என சஜின் மறுப்புத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்.

கோட்டாபயவின் தெகிவளை மவுன்ட் வீடு அமெரிக்காவிலிருக்கும் தனது மகனுக்காகக் கட்டப்பட்டது என வெளியான தகவல்கள் மட்டுமல்ல அங்கு சுறா மீன்கள் வளர்க்கப்படுகிறது என வெளியான தகவல்கள் குறித்தும் கசௌன என்ற பத்திரிகையாளர் மூன்று வருடங்களின் முன்னரே தனக்கு தெரியும் என்றார்.

தனது வீட்டுக்கு அருகில் பல மில்லியன்கள் பெறுமதியில் கட்டப்பட்ட வீட்டில் கோட்டாபய சுறா மீன்களை வளர்த்தது மட்டுமல்ல, பெருந்தொகையான மீன்களை அவற்றிற்கு உணவாக வழங்கினார் என்றும் அவர் தெரிவித்தார். இராணுவ வாகனங்களில் கொண்டுவரப்படும் உயிர் மீன்களை சுறாக்கள் உண்பதைப் பார்த்து மகிழ்வது கோட்டாபயவின் பொழுதுபோக்கு என்கிறார் அவர்.

சஜின் வாஸ் இன் யானை உறுதிப்படுத்தப்பட்டதைப் போன்று கோட்டாவின் சுறா உறுதிப்படுத்தப்படவில்லை.

புலி வருகிறது எனப் பயமுறுத்தியே இலங்கையைச் சூறையாடிய சர்வாதிகாரிகளான ராஜபக்ச குடும்பத்திடம் குவிந்திருந்த அளவு கடந்த பணம் சிறிய மீன்களை சுறாக்கள் உண்பதைப் பார்த்து மகிழும் மனோநிலையை வரவளத்திருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

கோட்டாபாய சுறாவிற்கு குட்டி மீன்களை வழங்கி கொலையை அனுபவித்தது போன்றே வன்னியில் தமிழர்களைக் கொன்று மகிழ்ந்தார் என்றும் கோட்டாபய மனநோயாளி என்றும் சிங்கள இணையங்கள் கூற ஆரம்பித்திருப்பது இனப்படுகொலையின் வலியை அவர்கள் உணர ஆரம்பித்திருப்பதற்கான அறிகுறி. சுறாக்களைவிட  கோட்டாபய என்ற இனக்கொலை மிருகம் கொடுமையானது என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் ஆறு வருடங்களின் முன்னரே அனுபவரீதியாகப் புரிந்து கொண்டனர்.

ராஜபக்ச பாசிஸ்டுக்கள் இலங்கையின் ஒரு பகுதியைச் சூறையாடினார்கள் என்றால் அதன் மற்றைய பெரும் பகுதியை இன்றும் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தொடர்பாக யாரும் பேசுவதில்லை.

யாழ்ப்பாணத்தில் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்தி வரலாற்றின் ஒரு கட்டத்தையே மாற்றும் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனம் இன்றும் இயங்க்கொண்டிருக்கிறது. வெலிவேரியாவில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஹேலிஸ் நிறுவனம் தனது கிளைகளை சலனமின்றி நடத்துகின்றது.

இந்த இரண்டு நிறுவனங்களதும் இயக்குனர்களில் ஒருவரான் பிரித்தானிய கன்சர்வெட்டிவ் கட்சியின் பிரமுகர் நிர்ஜ் தேவா, அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.

சுறாக்களும் யானைகளும் பாம்புகளும் மேலே படங்களாக ஓடிக்கொண்டிருக்க மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிக் கொழுக்கும் பல்தேசிய நிறுவனங்களில் ஊழல் புற்று நோய் போல நாட்டை அரித்துச் செல்வதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கையில் ஜனநாயகம் மீட்கப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவிப்பதிலிருந்தே பல்தேசிய நிறுவனங்கள் இலங்கையை ஒட்டச் சுரண்டவதற்குத் தயாராகிவிட்டதை ஊகித்துக்கொள்ளலாம்.

இலங்கை முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் அரச மானியங்களையும், இலவசக் கல்வியையும், இலவச மருத்துவத்தையும் அழிக்கக் கோரிய அதே உலக நாணய நிதியமும் உலக வங்கியும் இலங்கையில் ஜனநாயமக் மலர்ந்ததாக மகிழ்ச்சியடைகின்றன. இவர்கள் தாம் சுதந்திரமாகச் சுரண்டுவதற்கான ஜனநாயகத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதே இந்த மகிழ்ச்சியின் மறுபக்கம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அமெரிக்காவிற்கு நிரந்தரமாகத் திரும்பிய கொலையாளி பசில்: போர்க்குற்ற விசாரணை எங்கே?

அமெரிக்காவிற்கு நிரந்தரமாகத் திரும்பிய கொலையாளி பசில்: போர்க்குற்ற விசாரணை எங்கே?

Comments 5

  1. Sakivara says:
    11 years ago

    தலைவர் புலி வளர்த்தார். கிட்டு குரங்கு வளர்த்தார். கோட்டபாய சுறா வளர்த்தார். 

    • வடக்கான்ஆதாம் says:
      11 years ago

      புலிகளை ஆதரித்தார்கள் கோட்டா சுறா வளர்த்ததை சொல்ல கூடாது . கோட்டாவை ஆதரித்தவர்கள் கிட்டு குரங்கு வளர்த்ததை நக்கலடிக்க கூடாது .
      மொத்தத்தில் அவரவர் தங்கள் உறவுகளை வளர்த்தார்கள் 

      • Alex Eravi says:
        11 years ago

        I like it…

      • Arun Vincent says:
        11 years ago

        இந்த நக்கல் தானே கூடாது என்கிறது!

      • lala says:
        11 years ago

        மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு.
        கோத்தா சுறா வளர்த்ததைப்ப்பற்றி தென்னிலங்கை ஊடகங்களே பரபரப்பாக செய்தி வெளியிட்டதாக கட்டுரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...