இன்று கொழும்பின் சிங்கள ஊடகங்கள் முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவிற்குச் சொந்தமான வீட்டில் சுறா மீன்கள் வளர்க்கப்படுவது தொடர்பாகவும் சஜின் வாஸ் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட யானைக் குட்டி தொடர்பாகவும் தகவல்களை வெளியிட்டன. கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கோட்டாபய அமெரிக்காவிலிருக்கும் தனது மகனுக்காக வாங்கிய வீடு ஒன்றின் அருகில் வசித்தவர் என்று தகவல்கள் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்.
கோட்டாபய தனக்குச் சொந்தமான வீடு ஒன்றில் சுறா வளர்த்த கதை இணையங்களையும், UPFA இன் சமூக வலைத் தளங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டது. சஜின் வாஸ் குணவர்த்தனாவின் வீட்டில் யானைக்குட்டி வளர்க்கப்பட்டு தீனி போடப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து யானைக்கு அனுமதிப்பத்திரம் பெற்றே வளர்க்கிறேன் என சஜின் மறுப்புத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்.
கோட்டாபயவின் தெகிவளை மவுன்ட் வீடு அமெரிக்காவிலிருக்கும் தனது மகனுக்காகக் கட்டப்பட்டது என வெளியான தகவல்கள் மட்டுமல்ல அங்கு சுறா மீன்கள் வளர்க்கப்படுகிறது என வெளியான தகவல்கள் குறித்தும் கசௌன என்ற பத்திரிகையாளர் மூன்று வருடங்களின் முன்னரே தனக்கு தெரியும் என்றார்.
தனது வீட்டுக்கு அருகில் பல மில்லியன்கள் பெறுமதியில் கட்டப்பட்ட வீட்டில் கோட்டாபய சுறா மீன்களை வளர்த்தது மட்டுமல்ல, பெருந்தொகையான மீன்களை அவற்றிற்கு உணவாக வழங்கினார் என்றும் அவர் தெரிவித்தார். இராணுவ வாகனங்களில் கொண்டுவரப்படும் உயிர் மீன்களை சுறாக்கள் உண்பதைப் பார்த்து மகிழ்வது கோட்டாபயவின் பொழுதுபோக்கு என்கிறார் அவர்.
சஜின் வாஸ் இன் யானை உறுதிப்படுத்தப்பட்டதைப் போன்று கோட்டாவின் சுறா உறுதிப்படுத்தப்படவில்லை.
புலி வருகிறது எனப் பயமுறுத்தியே இலங்கையைச் சூறையாடிய சர்வாதிகாரிகளான ராஜபக்ச குடும்பத்திடம் குவிந்திருந்த அளவு கடந்த பணம் சிறிய மீன்களை சுறாக்கள் உண்பதைப் பார்த்து மகிழும் மனோநிலையை வரவளத்திருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
கோட்டாபாய சுறாவிற்கு குட்டி மீன்களை வழங்கி கொலையை அனுபவித்தது போன்றே வன்னியில் தமிழர்களைக் கொன்று மகிழ்ந்தார் என்றும் கோட்டாபய மனநோயாளி என்றும் சிங்கள இணையங்கள் கூற ஆரம்பித்திருப்பது இனப்படுகொலையின் வலியை அவர்கள் உணர ஆரம்பித்திருப்பதற்கான அறிகுறி. சுறாக்களைவிட கோட்டாபய என்ற இனக்கொலை மிருகம் கொடுமையானது என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் ஆறு வருடங்களின் முன்னரே அனுபவரீதியாகப் புரிந்து கொண்டனர்.
ராஜபக்ச பாசிஸ்டுக்கள் இலங்கையின் ஒரு பகுதியைச் சூறையாடினார்கள் என்றால் அதன் மற்றைய பெரும் பகுதியை இன்றும் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தொடர்பாக யாரும் பேசுவதில்லை.
யாழ்ப்பாணத்தில் நீரையும் நிலத்தையும் மாசுபடுத்தி வரலாற்றின் ஒரு கட்டத்தையே மாற்றும் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனம் இன்றும் இயங்க்கொண்டிருக்கிறது. வெலிவேரியாவில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஹேலிஸ் நிறுவனம் தனது கிளைகளை சலனமின்றி நடத்துகின்றது.
இந்த இரண்டு நிறுவனங்களதும் இயக்குனர்களில் ஒருவரான் பிரித்தானிய கன்சர்வெட்டிவ் கட்சியின் பிரமுகர் நிர்ஜ் தேவா, அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
சுறாக்களும் யானைகளும் பாம்புகளும் மேலே படங்களாக ஓடிக்கொண்டிருக்க மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிக் கொழுக்கும் பல்தேசிய நிறுவனங்களில் ஊழல் புற்று நோய் போல நாட்டை அரித்துச் செல்வதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கையில் ஜனநாயகம் மீட்கப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவிப்பதிலிருந்தே பல்தேசிய நிறுவனங்கள் இலங்கையை ஒட்டச் சுரண்டவதற்குத் தயாராகிவிட்டதை ஊகித்துக்கொள்ளலாம்.
இலங்கை முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் அரச மானியங்களையும், இலவசக் கல்வியையும், இலவச மருத்துவத்தையும் அழிக்கக் கோரிய அதே உலக நாணய நிதியமும் உலக வங்கியும் இலங்கையில் ஜனநாயமக் மலர்ந்ததாக மகிழ்ச்சியடைகின்றன. இவர்கள் தாம் சுதந்திரமாகச் சுரண்டுவதற்கான ஜனநாயகத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதே இந்த மகிழ்ச்சியின் மறுபக்கம்.
தலைவர் புலி வளர்த்தார். கிட்டு குரங்கு வளர்த்தார். கோட்டபாய சுறா வளர்த்தார்.
புலிகளை ஆதரித்தார்கள் கோட்டா சுறா வளர்த்ததை சொல்ல கூடாது . கோட்டாவை ஆதரித்தவர்கள் கிட்டு குரங்கு வளர்த்ததை நக்கலடிக்க கூடாது .
மொத்தத்தில் அவரவர் தங்கள் உறவுகளை வளர்த்தார்கள்
I like it…
இந்த நக்கல் தானே கூடாது என்கிறது!
மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு.
கோத்தா சுறா வளர்த்ததைப்ப்பற்றி தென்னிலங்கை ஊடகங்களே பரபரப்பாக செய்தி வெளியிட்டதாக கட்டுரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது..