விசாரணைக்குப் பின்னராக இலங்கையிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புச் செயலர் ஆத்திரமும் வேதனையும் அடைந்திருப்பதாகத் தெரிவித்ததாகவும் நிக் பட்டன் தெரிவிக்கிறார்.
கோத்தாபய நேரடியாக வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சனல் 4 செய்திச் சேவையின் செய்தி நிறுவனமான ஐ.ரீ.என் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசிடம் வெளியேற்றத்திற்கான விளக்கத்தைக் கோரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓநாய்கள் ஆட்சி செய்யும் நாட்டில் மனிதர்கள் வாழ முடியமா?.இதற்குப் பிறகு சர்வதேசம் மெளனம் காக்குமானால் ரோசம் கெட்ட கோழைத்தனமான அதிகாரிள் என்றுகூட இவர்களைக் குரதலாம் அல்லவா?.கோதபாயா தனக்கு மிக ஆழமாகவே குழி பறிக்கிறார்.உலக வரலாற்றில் பல கொடுங்கோண்மையரசின் சரிவுகளை வாசித்தறிந்திருக்கிறோம்.இப்பொழுது அதனை இலங்கையரசு நிரூபித்து வருகின்றது.ஒரு நியாயமான தமிழீழ விடுதலைப் போரை அழிக்க பேய்த் தாண்டவம் ஆடுகிறது இலங்கையரசு.