கொஸ்லாந்த மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு பூணாகலை தமிழ் மகாவித்தியாலய முகாமில் தஞ்சமடைந்துள்ளோரில் 76 பெண்களுக்கு மாற்றுடை இல்லாமல் அல்லலுறுகின்றனர் என்று அங்கிருந்து மனித அபிவிருத்தித் தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தெரிவித்தார்.
அவர் நேற்று வெள்ளிக்கிழமை அங்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தார். மக்களுடன் அளவளாவினார்.
உடுத்த உடையுடன் முகாமிற்கு வந்த இப்பெண்கள் கடந்த 3 நாட்களாக அதே உடுப்புடன் காலத்தைக் கடத்தி வருகின்றனர்.
மேலும் 10 வயதுக்குட்பட்ட 27 சிறுமிகளுக்கும் மாற்றுடையில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் பெண்களுக்கு தேவையான சுகாதார ரீதியான உடைகள் மற்றும் பொருட்களை பிரதேச செயலகத்திடம் கையளித்துள்ளதாகவும் அவை இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லையென்றும் தெரியவருகிறது.
அவை முகாமிலுள்ள ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
மலசல கூடங்களிருந்தாலும் தண்ணீர் வசதி இல்லையென்றும் கூறப்படுகிறது. பொதுவாக முகாம் நிருவாகம் பாதிக்கப்பட்டவர்கள் நலன்கருதி செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்கிறது.
ஸ்ரீகாந் மேலும் தெரிவிக்கையில், நாம் இங்குள்ள நிலைமைகளை அவதானித்துவிட்டு கிழக்கிற்குச் சென்று தேவையான நிவாரணப் பொருட்களுடன் மீண்டும் இங்கு வந்து வழங்க விருக்கிறோம் என்றார்.
Why do we even bother, how hard is it for a few of the Tamils to pool together and organize change clothes to them. Do it man and don’t complain.
Yes, even a shop in Badullai can donate these or politicians like Thondaman, Mano Ganesan or anyone can purchase these for them… here all politics & try to find mistakes only… hmm..
மனோ , தொண்டமான கரெக்டா நினைவு வைத்து சொல்லியிருக்கும் நீங்கள் வசதியா கூட்டமைப்பை மறந்திட்டீங்க போல.
கூட்டமைப்பு நிவாரண பொருட் களொடு அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதனை வழங்கியிருக்கிறது ,அதனால்தானோ என்னவோ கூட்டமைப்பு நினைவுக்கு வரவில்லை போலும்
என்னதான் தனிநபர்கள் கட்சிகள் உதவி செய்தாலும் அது பெரும் இயற்கை அனர்த்தத்துக்கு முகம் கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் உதவுவது போல் வராது
அரசு என்று ஒன்றிருப்பது அதற்குத்தான் .அதனை சுட்டிக்காட்டினால் , அவர் செய்யாலாமே இவர் செய்யலாமே என இலங்கை அரச சொம்பு தூக்கிகளுக்கு பொத்துக்கொண்டு வந்து விடுமே .
Yes, TNA went with essentials…
& tomorrow loads of essentials leaving from Vavuniya…
This is organized by well wishers…
My question Mano & Thonda represent them… living on them…
& the merchants over there living on these customers…
May I said anything wrong…?
மனோ தொண்டாவை கேல்வி கேட் கும் தாங்கள் இயற்கை அனர்த்தத்துக்கு போர்க்ககால நடவடிக்கை எடுக்க வேண்டிய , முழுநிவாரணம் வழங்க வேண்டிய கடப்பாடுடைய அரசை எதுவும் சொல்லாமல் தடவிக்கொடுத்துக்கொண்டு , ,முழுப்பொறுப்பொறுப்பையும் அரசில் தொங்கி கொண்டிருக்கும் தொண்டா மீதும் எதிர்க்கட்சியில் இருக்கும் மனோ மீதும் போட்டு விட்டு அரச தரப்பினரைநல்ல பிள்ளைக்கு வைத்திருப்பது ஏனோ ?
Friend…
Myself also survival…