இலங்கைத் தலைநகர் கொழும்பில் பல இடங்களை பொலீசாரும் இராணுவத்தினரும் சுற்றி வளைத்து நடாத்திய தேடுதலின் போது பல தமிழர்கள் கைதுசெய்யப்படுள்ளனர். பெர்ம்பாலும் 20 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட தமிழர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவரகள் எனத்தெரியவருகிறது. மலையகப் பகுதியிலிருந்து தலைநகருக்கு வேலை நிமித்தம் வந்து குடியேறிய பலரும் இதில் அடங்குவர் எனத் தெரிய வருகிறது.
இதே வேளை மலையகப் பகுதிகளில் குறிப்பாக பண்டாரவளைப் பகுதிகளில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளின் போதும் பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
தியத்தலாவை இராணுவப்பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்ட இராணுவச் சிப்பாய்களே இத்தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.