தமிழீழ வைப்பகத்தின் தலைமையதிகாரியான கொலின் ரூபன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
புதுக்குடியிருப்பைச் சொந்த இடமாகக் கொண்ட இவர், இறுதிக்கட்ட போரின்போது மக்களோடு மக்களாக வவுனியா தடுப்புமுகாமை வந்தடைந்ததாகவும், அதன்பின்னர் அங்கிருந்து வெளியேறி கொழும்பு விடுதியொன்றில் இருந்தபோது கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடமாடும் சுதந்திரமில்லாத வவுனியா முகாமிலிருந்த சிலர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டதாக கடந்த சில காலமாகவே செய்திகள் வெளிவருகின்றன.
வவுனியா முகாமிலிருந்து சிலர் மாத்திரம் எவ்வாறு வெளியேறி, கொழும்பு விடுதிகள் வரை வருகின்றனர் என்பது தொடர்பாக நாம் தகவல்களை சேகரித்துவருகின்றோம்.
இந்தச் சம்பவங்களின் பின்னணி என்ன, யார் செயற்பாடுகின்றார்கள் என்பது தொடர்பாக ஆதாரபுர்வமாக வெளிகொண்டுவர எதிர்பார்க்கின்றோம்.