தனியார் ஓய்வூதியத்திற்கான இலங்கை அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் பொலீசாரிற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதன் போது பலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே பலர் தாக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து உருவாகும் வெறுப்பையும் போராட்டங்களையும் எதிர்கொள்ள இலங்கை அரசு தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான பேரினவாதத்தைக் சிங்கள மக்கள் மத்தியில் தீவிரப்படுத்தி வருகிறது. எதிர்வரும் காலங்களில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்தான போராட்டங்கள் அதிகரிக்கும் எனத் இலங்கை அரசியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கிழர்ந்து ஆர்ப்பாட்டம் பண்ணாமல்,தேவையில்லாமல் தனியார் துறை ஓய்வூதியத்துக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களோ?நீங்கள் “தனியார்” என்று நிரூபித்து விட்டீர்கள்!////////