தூத்துக்குடியில் பெண் டாக்டர் சேதுலட்சுமி படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி இஎஸ்ஐ தலைமை டாக்டர் சேதுலட்சுமி. கிளினிக்கும் நடத்தி வந்தார். கடந்த திங்கள் இரவு கிளினிக்கில் இருந்த சேதுலட்சுமியை மகேஷ் (28) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். சேதுலட்சுமியின் கிளினிக்கில் கர்ப்பிணி நித்யா (24) சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நித்யா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கு சேதுலட்சுமிதான் காரணம் என கருதிய மகேஷ், அவரை வெட்டிக் கொன்றார்.
வியாபார மயமான மருத்துவம் ஏழைகளை மனித உயிர்களாகவே மதிப்பதில்லை என்ற கருத்து பரவவலாக நிலவுகிறது.
தமிழக மருத்துவர்கள் போராட்டத்திற்கு புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநில மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனது ஆழ்ந்த அனுதாபஙகல்… Those Basterds must be Punished Severely…
மயக்க மருந்து நிபுணரான சேதுலட்சுமி மருத்துவர் என்னும் போர்வையில் மகேஷின் மனைவி நித்தியாவைக் கொலை செய்துள்ளார். பதிலுக்கு மகேஷ் சேது லட்சுமியைக் கொன்றுள்ளார். உயிரை பணையம் வைத்து பேரம் பேசும் மருத்துவர்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும்.
மனைவி குழந்தை இறந்தது தவறில்லை என்றால் மனைவி மீது பாசமுள்ள மகேஸ் செய்ததும் சரிதான்…இ.எஸ்.ஐ மருத்துவர் தனியாக மருத்துவமனை வைக்கலாமா சட்டப்படி கேளுங்கள்…பிரசவத்திற்கு துடிக்கும போது ஹாயாக வீட்டு செடிகளுக்கு தண்ணீர் விட்டவரட தான் மருத்துவ அம்மணி
அதோடு கொடுமை இறந்ததையே அவளது கணவன் கதவை உடைத்து கண்டுபிடித்தது
இறந்த பிறகு மட்டும் சுமார் 5 ஆயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கி கொடுத்தது