துனிசியாவில் ஆரம்பித்த மக்கள் எழுச்சி அரபு நாடுகளை ஏற்பட்ட புதிய அரசியல் சுனாமி போன்றது. அரபு நாடுகளில் மிகவும் உறுதியான வளர்ச்சியைக் கொண்ட நாடு என மேற்கின் அதிகார அமைப்புக்கள் வர்ணணித்துக்கொண்டிருந்த துனிசிய மக்களின் போராட்டம் அரபுலகம் முழுவதும் காட்டுத் தீ போன்று பரவிய நிகழ்வென்பது உலகெங்கிலும் நம்பிக்கை வித்துக்களை விதைத்திருக்கிறது. மக்கள் எழுச்சி அரபுலகைகின் மையான அமைதியக் கிழித்து கிழக்கைரோப்பிய மற்றும் சீனா வரைக்கும் சென்று தட்டிப்பார்த்திருக்கிறது. மக்களின் பாசிச சர்வதிகாரங்களுக்கு எதிரான உணர்வலைகள் புதிய போராட்டங்களாக முகிழ்த்துக் கொண்டிருக்கின்றன.
இப்போது ஸ்பானியா, பிரான்ஸ், பெல்ஜியம், கிரேக்கம் போன்ற நாடுகள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சுகின்றன. இஸ்லாமையும், குடியேற்றங்களையும் சுட்டிக்காட்டி அரசியல் நடத்தமுடியாத காலம் ஐரோப்பாவில் உருவாகலாம் என எதிர்வு கூறுகின்றனர்.
உறுதியான அரசியல் தலைமையற்ற இப் போராட்டங்கள் பெரும்பான்மை மக்களின் அதிகாரத்தை நிறுவிக்கொள்ளப் போதுமானதில்லை என்றாலும் உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஜனநாயக் முற்போக்கு சக்திகளுக்கும் புதிய உத்வேகத்தை வழங்கியிருக்கிறது. அர்ப்ணங்களுக்கு மத்தியில் போராடியவர்கள் தமக்கு இறுதியில் என்னவெல்லம் தேவை எனத் தெளிவின்றி இருந்தாலும் என்னவெல்லாம் தேவையற்றது என மிகத் தெளிவாக தெரிந்துவைத்திருந்தார்கள்.
இதுவரை அரபுலகச் சர்வாதிகாரிகளுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கிய மேற்கு நாடுகள் மக்களுக்கு அரசியல் கற்பித்திருக்கிறது. அரசியல் மேடைகளும், ஆயிரம் பக்க நூல்களுமின்றி ஏகாதிபத்தியங்கள் சுதாகரித்துக் கொள்ளும் முன்பே போர் முரசோடு முன்னெழுந்த மக்கள் கூட்டத்தை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என அவர்கள் புதிய திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஈழப் போராட்டத்தின் ஆரம்பக்காலங்களில் இந்திய மேலாதிக்கம் குறித்தும், அமரிக்க ஏகாதிபத்தியம் குறித்தும் விடுதலை இயக்கங்களின் முகாம்களில் அரசியல் வகுப்புக்களை நடத்தியிருக்கிறார்கள். பக்கங்களாக எழுத்தி முடித்திருக்கிறார்கள். இவை அனைத்தும் செய்து முடிக்காத ஒன்றை முள்ளிவாய்க்கால் மூலையில் இந்திய அரசு ஈழ மக்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. தமிழ் நாட்டுத் தமிழர்களுக்குக் பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறது. ஆயிரமாயிரமாய் அப்பாவிகளைக் கொன்று போட எப்போதும் தயார் நிலையில்ருப்பதாக இந்திய அரசு எஞ்சியிருக்கும் ஒவ்வொருவரதும் முகத்திலறைந்து எக்காளமிட்டிருக்கிறது.
இந்திய அரசை மட்டுமல்ல, சிவப்புச் சீனத்தையும், ஐரோப்பாவையும், ஐக்கிய நாடுகளையும், அமரிக்காவையும் அம்பலப்படுத்த வீட்டுக்கதவுகளைத் தட்டி விளக்கம் கூறவேண்டிய அவசியமில்லை.
மக்களுக்கு நண்பர்கள் யார், எதிரிகள் யார் என இனிமேல் கூட்டம் போட்டுக் கூக்குரலிடத் தேவையில்லை. அவர்களுக்கு இரண்டு முக்கிய விடயங்கள் தான் இன்றைய தேவை. முதலில் ஒன்றிணைந்து கொள்வதற்கான அடிப்படை . ஜனநாயக இடைவெளி ஒன்று உருவாகும் போது மட்டும்தான் அந்த இணைவு உருவாகும். இரண்டாவதாக உறுதியான அரசியல் தலைமை.
மக்கள் மீது இலங்கைப் பேரினவாத அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அழிப்பு யுத்ததிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அவர்கள் முனைவார்கள். இது வரலாற்று நியதி. குறைந்தபட்சம் அதற்கான முன்நகர்வுகளைக் கூட நிராகரிக்கும் இலங்கை – இந்திய நீட்சிகள், அழிக்கப்படும் போது சரணடைய வேண்டும் என்கிறார்கள்.
போராட்டங்களையும், “அரசியலையும்” ஒத்திவைத்துவிட்டு மறுசீரமைப்பும் அபிவிருத்தியும் செயற்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள்.
13.10.11 இல் ஈ.என்டி.எலெப் என்ற கட்சியினால் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இந்திய ஆதரவுக் கூட்டத்தில் பிரித்தானியத் தொழிற்கட்சியின் நாகரசபை உறுப்பினர் போல் சத்தியனேசன் ஐந்து ஆண்டுகளுக்கு சரணடைவை முன் மொழிகிறார்.
“இனப்படுகொலை நிகழந்து இரண்டு வருடங்களைக் கடந்து செல்லும் காலப்பகுதியில் மறுவாழ்வும் அபிவிருத்தியும் தான் பிரதானமானது. ஐந்து வருடங்களுக்கு போர்க்குற்றங்கள் குறித்துக் கூடப் பேச வேண்டாம்” என்று புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்புவிடுக்கிறார்.
கொல்லப்படும் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் எங்காவது எழுச்சி பெற்றுவிடலாம் என்ற பய உணர்வு இலங்கை இந்திய அரசுகளுக்கு மட்டுமல்ல அவர்களின் அடிமைகளுக்கும் காணப்படுகிறது என்பதை ஈ.என்.டி.எல்.எப் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய பலரின் குரலாய் ஒலித்தது.
பிரதேசங்கள் சூறையாடப்படுவதிலிருந்தும், பட்டினி போடப்பட்டுக் கொல்லப்படுவதிலிருந்தும், அழிக்கப்படுவதிலிருந்தும் மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். இதற்கான ஜனநாயக இடைவெளியை உருவாக்க புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட வலுவுண்டு. அதிகாரத்திற்கு எதிராகப் போராடும் மக்களுடன் எம்மை இணைத்துக்கொள்வதற்கான அரசியல் குடையின் கீழ் எம்மை இணைத்துக்கொள்ளலாம். புலியெதிர்ப்பாளர்கள், ஆதவாளர்கள் என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து மக்கள் பற்றுள்ள அரசியல் குடையின் கீழ் எம்மை இணைத்துக்கொள்ளலாம்.
இதைவிடுத்து, இனப்படுகொலை நிகழ்த்த ராஜபக்ச அரசின் பின்புலத்தில் செயலாற்றிய இந்திய அரசிடம் சரணடையக் கோரிக்கைவிடுவது கோழைத்தனமும் பிழைப்புவதமுமே.
இந்திய அரசின் இனப்படுகொலைகளை எதிர்த்து தமிழ் நாட்டின் ஒவ்வோரு முலையிலிருந்தும் உருவாகும் சிந்தனை மாற்றத்தின் இயங்கியலை நிராகரித்து, அதற்கு எதிரான சரணடையும் கோழைத்தனமாக ஈ.என்.டி.எல்.எப் நடத்தும் டில்லி வரையான “பாதயாத்திரை” இன்னொரு அரசியல் அபாயத்திற்கான சமிக்ஞை.
இன்றைய அரசுகள் யாரையும் அழிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளன என்பது இயங்கியல் என்றும் அதனால் அவர்களிடம் சரணடைந்துவிடலாம் என்ற கருத்துப்பட ரவி சுந்தரலிங்கம் ஈ,என்.டி.எல்.எப் மேடையில் “போர்குணத்தோடு” கூறினார். இனிவரும் பதினைந்து ஆண்டுகள் போராட்டங்களுக்கான காலம் என்ற இயங்கியலை அமரிக்க உளவுத்துறை கூட ஒத்துக்கொண்டிருக்கின்றது.
இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மட்டுமல்ல அவர்களின் தற்காப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக சிங்கள மக்களும் ஏனைய தேசிய இனங்களும் போராடுவதற்கான புறச் சூழலே காணப்படுகிறது. இலங்கையில் ஜனநாயகச் சூழலை உருவாக்க இலங்கை அரசிற்கும் அதனை ஆதரிக்கும் இந்திய அரசிற்கும் அழுத்தம் வழங்கும் எதிர்ப்புப் போராடங்களை இலங்கைக்கு வெளியிலிருந்து உருவாக்குவதனூடாகவே மக்கள் தமது தற்காப்பு யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான இடைவெளியை உருவாக்க முடியும்.
80களின் ஆரம்பத்திலிருந்து இந்திய அரசு இலங்கையில் ஏற்படுத்திய அழிவுகளை சமூக அக்கறையுள்ள எந்த மனிதனும் மறந்துவிடவில்லை. சென்னையிலிருந்து டில்லிவரை சென்று இனப்படுகொலை நிழக்த்திய இந்திய அரசின் காலடியில் மண்டியிடுவது அழிவைத் தேடி நாம் யாத்திரை செய்வது போன்றதாகும். தவிர, வன்னியில் இலங்கை அரச பாசிசம் ஏற்படுத்திய அழிவுகளைத் தொடர்ந்து தமிழ் நாட்டில் உருவான இந்திய அரசிற்கு எதிரான போராட்டங்களைக்கூடக் கொச்சைப்படுத்தும் இவ்வாறான நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டும்.
கோழைத்தனமாக ஈ.என்.டி.எல்.எப் நடத்தும் டில்லி வரையான யாத்திரை
இந்திய ஆதரவுக் கூட்டம் எல்லாம் இந்திய அரசின் காலடியில் மண்டியிடுவது போன்றதாகும்..ஈ.என்.டி.எல்.எப் சமூகஅக்கறையுள்ள மக்கள் கட்சியாக தமிழகத்திலுள்ள அகதிகளுக்கு ஏதாவது மனிதநேயப்பணியை செய்து காட்டட்டும்
//போராட்டங்களையும், “அரசியலையும்” ஒத்திவைத்துவிட்டு மறுசீரமைப்பும் அபிவிருத்தியும் செயற்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள்.
/
/
சந்தர்ப்பவாதம் சேடம் இழுக்கிறது
இந்திய உளவுத் துறையின் நாட்கூலிகள் இவர்கள். புலிகளாலும் இலங்கை புலனாய்வுத் துறையாலும் ஏன் கருணாவாலும் தேடி தேடி வேட்டையாடப் படும் நிலையில் இந்திய உளவுத்துறையால் தோல்விகண்ட புலனாய்வு வேலைகளுக்கு பலிகொடுக்கப் படும் விட்டில் பூச்சிகள். புலிகளின் நாமத்தில் இலங்கை புலனாய்வுத் துறையால் தேடி தேடி இன்றுவரை வேட்டையாடப்படும் விட்டில் பூச்சிகள். பிளாட் என்ற அமைப்பை சுக்கு நூறாக உடைத்து புளகாங்கித மடைந்த இவர்கள், இந்திய புலனாய்வுத் துறையின் விசுவாசமான அடிமைகள்.
சபாநாவலன்
மீண்டும் ஒரு ஆணித்தரமான கட்டுரையை அற்புதமாக எPதியிருக்கிறீர்கள். நிலைமைகள் நீங்கள் இனங்காண்பது சரியென்பதை வெகுவிரைவில் நிருபிக்கும். விஜய்
லிபியத்தலைவா் கடாபியின் நிலைப்பு தொடா்வதற்கேற்ற முடிவுகள் மிகவும் உறுதியாக எடுக்கப்பட்டு விட்டன அதற்கு ருஸ்ஷியா,சீனா,இந்தியா மட்டுமல்ல ஐோ்மனியும் கூட பச்சைக்கொடி காட்டிவிட்டது,ஐரோப்பிய ஒன்றியம் மூக்குடைபட்ட நிலையில் எதுவும் செய்யமுடியாது நிற்கின்றது.
புரட்சி புரட்சி என்று நம்மவா்கள் புலம்பிக்கொண்டே இருக்கின்றார்கள் எந்தப்புரட்சி எங்கு வந்தாலும் அதன் பின்பு அங்கு எதை நிறுவுவதென்று முடிவெடுப்பது வல்லரசுகள் என்பதை இன்னுமா புரியவில்லை. E.N.D.L.F ஒரு தவறான உதாரணம் எனக்கும் உடன்பாடு கிடையாது, இருந்தாலும் எதுவுமே அசையாது இருக்கின்ற வேளையில் அவா்கள் இதைச்செய்வதால் என்ன நட்டம் ஏற்பட்டுவிடப்போகின்றது. இந்தியாவின் நிலைப்பாட்டை நாம் யாருமே விரும்பவில்லை ஆனால் இந்தியா ஒரு முக்கியமான இடத்தில் இன்று இருக்கின்றது அதை தாண்டி நாம் நமது காய்களை நகா்த்தலாம் என்று எண்ணுவது பலன் தரக்கூடியதல்ல என்பது எனது எண்ணம், அவமானம்,கேவலம் என்று எண்ணுவதால் கிடைக்கப்போவதுதான் என்ன?
மக்களின் எதிரிகள் சர்வாதிகாரிகளைத் தொடர்ந்து பாதுகாக்க முற்படுவது ஆச்சிரியப்படத்தக்க ஒன்றல்ல. துனிசியாவிலும், எகிப்திலும் சர்வாதிகாரிகள் அழிக்கப்பட்டது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கான போராட்டத்தை மக்கள் தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
//புரட்சி புரட்சி என்று நம்மவா்கள் புலம்பிக்கொண்டே இருக்கின்றார்கள் எந்தப்புரட்சி எங்கு வந்தாலும் அதன் பின்பு அங்கு எதை நிறுவுவதென்று முடிவெடுப்பது வல்லரசுகள் என்பதை இன்னுமா புரியவில்லை// அவ நம்பிக்கைகள் விளைவு தான் இது. வல்லரசுகளே தமது கட்டுப்பாடினுள் உலகம் இல்லை என்பத்தை வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள். இது புதிய காலம். நேபாளம், துனிசியா என்று ஆரம்பிக்கின்ற பட்டியல் இன்னும் நீட்சியடையும்.
நாவலன்,
நேபாளம் என்ற நாட்டின் பின்னேயும் சீனா என்கின்ற ஒரு வல்லரசு நிற்பதாக அறியமுடிகிறது.
Shiver me timbers, them’s some great infomarotin.
இந்தியாவைச் சுற்றீத்தான் உலகமே சுழல்கிறது இதை நாம் உணர்ந்து செயறபட வேண்டும் கால் இறூதியில் இந்தியாவை நாம் தவிர்த்தால் மட்டுமே செமி பைனலுக்கு வர முடியும் என்பது இன்றய உலகப் போட்டிக் கிரிக்கெட்டில் விதியாகவே இருக்கும் போது அரசியல் சதுரங்கத்தில் இந்தியா நாம் யோசித்து ஆடவேண்டிய குதிரை இதையே குடும்பி ரவியும் பேசினார் ஆனால் நம்மில் சிலர் அவரை உளவாளீயாகவே பார்த்தோம்.
13.10 .11 வர இன்னும் ஏழுமாதங்கள் இருக்கின்றன. இந்த தவறை முதலில் திருத்திக்கொள்ளுங்கள். இந்தியாவென்பது பல்லினமக்களை கொண்ட இரண்டாவது சனத்தொகையில் கூடியநாடு உலகில். இந்தநாடு எப்பொழுதும் மற்றைய நாடு உழைப்பாளிமக்களுக்கு தொழிலாளிவர்க்கத்திற்கு பகைமை பாராட்டாது. உறவுகளுக்காக காத்துநிற்கிறது. இந்தியாவை அமெரிக்க ஐரோப்பிய வெறிக்கு தீனியாக்குவதை-தீனியாக்க முயல்வதை நிறுத்துங்கள். இந்தியாவின் விடுதலை இந்தியா தொழிலாளிவர்கத்தாலேயே நிரூபிக்கப்படும். அமெரிக்க விடுதலையும் அமெரிக்க தொழிலாளிவர்கத்தாலேயே நடைமுறை படுத்தப்படும். ஐரோப்பிய விடுதலையும் ஐரோப்பியதொழிலாளிவர்கத்தாலேயே சாத்தியப்படப் போகிறது. அதைபோல்தான் இலங்கைவிடுதலையும் இலங்கைதொழிலாளிவர்கத்தாலே மட்டுமே நடைமுறைப்படுத்தக்கூடியது ஒன்று. ஆகமொத்தத்தில் முதாலித்துவத்திற்கெதிரான போராட்டம் தொழிலாளிவர்கத்தால்-இந்த வர்க்கத்தின் ஐக்கியத்தால் மட்டுமே நிறைவுகொள்ள முடியும். அதைவிட்டு ஏதோ ஒரு ஏகாதிபத்திய சக்திகளில் நிழல் ஒதுங்கி உதவி பெறுவதினால் அல்ல. ஒவ்வொருநாட்டு நாட்´டுவிடுதலையும் மற்றயநாட்டு மற்றைய கண்டத்தின் தொழிலாளவர்கத்தின் உதவியையே வேண்டிநிற்கிறது. இனப்போராட்டமும் மதப்போராட்டமும் ஏன் தனிநாட்டிக்கான போராட்டத்தின் சூத்திரதாரிகள் முதாலித்துவமே! ஏகாதிபத்திய ஆலோசனைகள் மானியங்களுடன் நடந்தேறுகின்றன். இன்று இதன்வழியேதான் நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறது ஈ.என்.டி எல் எப். குட்டைக்குள் விழுந்து தம்மை அழுக்காக்கியிருக்கிறார்கள்.இதில் பலர் தம்மை தூய்மைப்படுத்திக் கொண்டு திரும்பி வருவார்கள். புதியநம்பிக்கையுடன். இதில் சபாநாவலன் இந்தியா என்பதைவிடுத்து இந்தியதேசிய முதாலித்துவம் என்று உச்சரிக்க எழுதக் கற்றுக்கொள்ளவேண்டும். இருந்தால் மட்டுமே வருங்காலத்தில் ஆக்கபூர்வமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். இல்லையேல் புறக்குடத்து தண்ணீர்மட்டுமல்ல இறுதியில் குடத்தையையும் உடைப்பது போல் ஆகும்.
//இந்தியாவென்பது பல்லினமக்களை கொண்ட இரண்டாவது சனத்தொகையில் கூடியநாடு உலகில். இந்தநாடு எப்பொழுதும் மற்றைய நாடு உழைப்பாளிமக்களுக்கு தொழிலாளிவர்க்கத்திற்கு பகைமை பாராட்டாது. உறவுகளுக்காக காத்துநிற்கிறது. இந்தியாவை அமெரிக்க ஐரோப்பிய வெறிக்கு தீனியாக்குவதை-தீனியாக்க முயல்வதை நிறுத்துங்கள்// நான் உங்களோடு அடிப்படையில் முரண்படும் அபாயகரமான கருத்து. தனது நாட்டு உழைப்பாளிகளை மட்டுமல்ல அயல் நாட்டு உழைப்பாளிகளையும் இந்திய அதிகாரவர்க்கம் சுரண்டி வாழ்வதையும் தேசிய இனங்களை தனது எல்லைகுள்ளேய அடக்குவதையும் இதற்கு முன்னர் பலர் எழுதியுள்ளனர். அமரிக்க ஐரோப்பிய இந்திய சீன முரண் என்பது உலக மயமாதலுக்கும் முன்பிருந்தது போன்ற ஒன்றல்ல. துருவ வல்லரசுகள் அவற்றிடையான முரண்பாடுகள் உடன்பாடுகள் போன்றனவும் புதிய உலக ஒழுங்கில் பகுத்தாராயப்பட்டிருக்கின்றன. இத்துருவ வல்லரசுகளுக்குத் தீனியாகிக் கொண்டிருப்பது இந்திய உழைகும் வர்க்கமும், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் தாம்.// இந்தியா என்பதைவிடுத்து இந்தியதேசிய முதாலித்துவம் என்று உச்சரிக்க எழுதக் கற்றுக்கொள்ளவேண்டும். //
கற்பித்தலுக்கு நன்றி. இந்தியத் தேசிய முதலாளித்துவ வர்க்கம் என்ற ஒன்று இப்போது இந்தியாவில் இல்லை. தரகு முதலாளிகள் கூட ஏகாதிபத்தியத்தின் பங்காளர்களாக வளர்ந்துவிட்டார்கள். இங்கு 90களின் நிலைமைகளிலிருந்து இன்றைய உலகத்தைக் கணிக்க முற்படுவது அபத்தமானது. நீங்கள் பழைய புத்தகங்களில் படித்து மகிழும் தேசிய முதலாளித்துவ வர்க்கமும் அதன் பண்புகளும் இன்று உலகில் எங்கும் இல்லை. புதிய உலக சூழலை புத்தகங்களை பிரதியெடுக்காமல் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்வீர்களானால், அதன் இயக்கத்தையும் புரிந்து கொள்வீர்கள்.
இந்தியாவில் முதாலித்துவம் இல்லை.தரகுமுதாலித்துவம் தான் இருக்கிறது என்பதை நாவலன் அடித்துச் சொல்லுகிறார். இந்தியாவில் இருக்கிற அம்பானிபோன்ற வகையாறாக்கள். ஏகாதிபத்தின் தரகுவேலை பார்ப்பதையே தமது உழைப்பாக கொண்டிருக்கிறார்கள்? ஆகவே தரகுமுதாலித்தவற்கு எதிரான போராட்டடத்தை தான் இந்திய உழைப்பாளிமக்கள் பின்பற்றவேண்டும்.
இன்னுமொரு படிமுன்னோக்கி சென்றால் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் இருந்தஇடம் இல்லாது போகும் காலங்களில் இந்தியாவிலும் முதாலித்துவம் அதாவது உங்கள் விளக்கத்தில் தரகுமுதாலிதுவமும் இல்லாது போகும் அப்படித்தானே! அப்படித்தான் என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது நாவலன். முதாலித்துவம் இல்லாது போனால் அதற்கு அடுத்தது என்ன? சோசலிசம் தானே? அங்கு லாபநோக்கிற்கான உற்பத்தியும் இல்லை
கூலிஉழைப்பும் இல்லை. நாமேதேசம். நாமேமக்கள். சரிஇந்த தரகுமுதாலித்துவதை எதிர்ப்பதற்கு யாரை அணிதிரட்ட வேண்டும் என்பதையும் சொல்லித்தாருங்கள்.தரகுவிவசாயிகளையும் தரகுதொழிலாளிகளையுமா? என்ன?நாவலன் கூய்யோ மாயோ குழப்பமாக இருக்கிறதே!. வேலையில்லாத திண்டாட்டம். இனமதபோராட்டம். ஒருசில பணமுதலைகளின் பரம்பரையை பாதுகாப்பதற்காக நாளாந்தம் மாறிவருகிற பணவீக்கம் என்பதற்கு முடிவுகாண புறப்பட… நீங்கள் செவ்வாய்கிரகத்தில் போய் குடியமருங்கள் பிரச்சனை தீரும் என்பது போல் அல்வா இருக்கிறது…!?
இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பது சமூகவிஞ்யாணத்திற்காக பாவிக்கப்பட்டது. மானிடம் வளர்ச்சியை துரிதப்படுத்த எம்மைகடந்து போன வரலாற்றை புரிந்துகொள்ளவும் வரப்போகும் காலங்களை செப்பனிடவும். கம்யூனிஸ்கட்சிஅறிக்கையும் கூலிஉழைப்பு மூலதனத்தையும் 150 வருடங்களுக்கு மேலான பழைமைகள் என்றுதூக்கி எறிந்தால் மிஞ்சியிருப்பது மனிதகுலத்திற்கு புண்ணாக்குகள் மட்டுமே!. இந்த புண்ணாக்கு தத்துவங்கள் வேண்டுமானால் தண்ணிகரைத்து மிருகங்களுக்கு கரைத்துவைக்காலாம் இல்லையேல் நேபாளத்திற்கும் முள்ளிவாய்காலுக்கும் ஒருபாலம் போட்டு கயிறு இழுப்பு போட்டிவைத்து முழங்கால் பல்லுடைவதைபார்த்து தூரத்தில் இருந்து கைதட்டிமகிழமுடியும். இதைவிட மனிதகுலத்தற்கு வெறுறொன்றுமே செய்யமுடியாது திருநாவலன்.
உங்கள் கற்பனை அபாரம் சந்திரன் ராஜா. இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் தேசிய மூலதனத்தில் மட்டுமே தங்கியிருக்கும் தேசிய முதலாளித்துவம் இல்லை என்பது எனது கருத்து. தரகு முதலாளித்துவம் அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் பங்காளர்களுக்கு மத்தியில் தேசிய மூலதனம் அழிக்கப்பட்டுவிட்டது. எனினும் தேசிய முலதனத்தில் தங்கியிருக்கும் தேசியம் முதலாளிகள் என்ற வரையறைக்குள் உட்படுத்த முடியாத ஒரு பகுதியினரின் முற்போக்குப் பாத்திரத்தை நிராகரிக்க முடியாது.
நீங்கள் குறிப்பிடுவது மிகச் சரி, மக்கள் போராடுவார்கள். அதற்கான எல்லா அறிகுறிகளும் உண்டு.
கோஷங்களை எறிந்து விட்டு,ஏதாகிலும் செய்யுங்கள் என்ற நிலைதான் கடந்த இரண்டு வருட கால எம் ஏக்கம்.
வெறுமனே இணையத்தில் எழுதி,எதுவும் செய்ய முடியாது.
இங்கே கருத்தாடல்கார்கள்,புறணி பேசும் மார்க்கத்தைத் தவிர,போர்குணமோ மற்றும் மக்களணி திரட்டும் நேரிய பணி பற்றிய சிந்தனையற்றவர்களாக இருக்கிறார்கள்.
அமெரிக்கா பின்னாடுகின்ற நா.க.வும்,இந்தியாவின் காங்கிரசைத் தொடர்கின்றவர்களும் கூத்தாடுகிறார்கள்.
இவற்றையேனும் பார்த்தாடத் தெரியாதவர்கள்,பரிகசிப்பதில் என்ன இருக்கிறது?
பிரச்சினை என்ன ?அதற்கான தீர்வு என்ன ?காரணிகள் என்னென்ன? காரணிகளை கையாளும் வழிமுறைகள் என்னென்ன?
என்பனவற்றை முன்னுரிமை வரிசையில் நிரல்ப்படுத்தி அனுபவ அறிவுனூடு ஆராய்ந்து உடனடி,குறுகிய, நீண்ட கால செயல்திட்டங்களை முன்னுரிமை வரிசை படுத்தி செயல்படுவதே நன்று.
பிரட்சினைகள் ,தீர்வுகள் , காரணிகளையும் கையாளும் வழிமுறைகளையும் உடனடி,குறுகிய, நீண்ட கால செயல்திட்டங்களையும் முன்னுரிமை வரிசையையும் குழப்பியடித்து பார்ப்பதினால் எது வித பலனும் தராது.
i think the timing is good to write this article .. well done navalan.. impressed by the structured presentation of it too.
இந்தியா எமது தாய்நிலம் அவர்கள் அடித்தால் தாங்கிக் கொள்வோம். சிங்களவன் அடித்தால் திருப்பி அடிப்போம்.
நாங்கள் வெளியில் இருந்து என்னவும் எழுதலாம் எதுவும் பேசலாம். எல்லோரும் தங்கள் தங்கள் திசையில் முயன்று வழியைக் கண்டு பிடிக்கவேணும் என்றுதான் நாட்டில் உள்ள மக்கள் விரும்புகிறார்கள். புதைகுழியால் எழ முனையும் மக்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள். அதுதான் மக்களுக்கு இப்ப முக்கியம்
கடந்த காலங்களில் இந்தியா புலிகள் இரு தரப்பிலும் நிறைய தவறுகள் நிகழ்த்தப் பட்டு விட்டது. அந்த பாதையில் தொடர முடியாது.
ஐயா ஆடுகளத்தில் நிற்பவர்கள் பேச வேண்டுமென்றால் எங்கள் ஆதரவில்லாமல் இப்போதைக்கு முடியுமா?
அய்யா கவிஞன்,நடிகன் என்றேல்லாம் திரியும் நீங்கள் இந்த திசையைக் கண்டுபிடிக்கலாமே? அட்வைஸ் செய்ய ஆயிரம் பேர் இருக்கினம் ஆராய்ச்சி செய்யத்தான் ஆளீல்லை நீங்கள் செய்யலாமெ?நானும் இருக்கிறன் எண்டு நடிக்க வேண்டாம்.
அடிபடுவது நானாயின் இந்தியா அடித்தால் என்ன இலங்கை அடித்தால் என்ன
யாரோ ஒருவா் எண்ணுவதையும் நம்புவதையும் நாம் இங்கே நியமாகவே நடக்கப்போவது போன்று எழுதிக்கொள்ளலாம் ஆனால் யதார்த்தம் என்பது மிக மிக வித்தியாசமானது.
40 வருடங்களுக்கு மேலாக சா்வாதிகாரியாக இருந்து கொண்டிருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் கிளா்ந்தெழுவதையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ராயபக்சவிற்கு எதிராக அதே மக்கள் கிளா்ந்தெழுவார்கள் என்று நம்புவதும் வேடிக்கைதான்.
பல ஆயிரம் மைல்களுக்கப்பாலிருந்து ஒரு இணையத்தளத்தை ஆரம்பித்து அதில் மக்கள் புரட்சியைப்பற்றி அற்புதமாக எழுதுவதற்கு யாரால்தான் முடியாது.
//40 வருடங்களுக்கு மேலாக சா்வாதிகாரியாக இருந்து கொண்டிருக்கும் கடாபிக்கு எதிராக மக்கள் கிளா்ந்தெழுவதையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ராயபக்சவிற்கு எதிராக அதே மக்கள் கிளா்ந்தெழுவார்கள் என்று நம்புவதும் வேடிக்கைதான்//.
எப்போதும் எதிர் மறை உதாரணங்களையே முன்வைக்கும் நம்பிக்கையீனம் நம் அனைவரையும் ஆட்கொண்டிருப்பது துயரமானது. 2010 ஆரம்பத்தில் துனிசியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் துனிசிய அதிபர் செல்வாக்கு உச்சத்திலிருந்ததாகக் கணிக்கப்பட்டது மட்டுமல்ல அரபிய நாடுகளில் மிகவும் உறுதியான அரசியல் பொருளதாரச் சமநிலை கொண்ட அரசாக ஐ.எம்.எப் கணிப்பிட்டிருந்தது. அங்கு தான் முதல் மக்கள் எழுச்சி உருவானது. தவிர, இலங்கை ஏற்கனவே திட்டமிடப்படாத ஆயுத எழுச்சிகளையும் மக்கள் போராட்டங்களையும் சந்தித்த அனுபவம் கொண்ட நாடு.
இன்றைய பின் – உலகமயமாக்கல் சூழல் தான் போராட்டங்களை உத்வேகமடையச் செய்கிறது என்பதை பொதுவாக எல்லா ஆய்வாளர்களும் ஒத்துக்கொள்கிறாகள். இதனால் தான் தன்னார்வ நிறுவனங்களூடாக போராட்டங்களைத் தணிக்க வேண்டும் என அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையம் கூறுகிறது.
இலங்கையில் இதை ஒத்த சூழலைக் காணக் கூடியதாக அமைந்தாலும், ராஜபக்ச சர்வாதிகாரம் பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனை வளர்பதற்குப் பிற்போக்குத் தமிழ்த் தேசியவாதம் அல்லது தமிழ் இனவாதமும் துணை செல்கிறது. தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் பிரிந்துபோகும் உரிமைக்கான போராட்டமும் அதற்கான சிந்தனை அடிப்படைகளும் சரியானதிசையில் கட்டியெழுப்பப்படுமாயின் பேரினவாதம் நிலைக்க முடியாததாகிவிடும். நாளாந்தம் தற்கொலை செய்துகொள்ளும் சிங்கள மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காகப் போராடுவது தவிர்க்க முடியாதது.
ஆக, மூன்று பிரதான தடைகள் எம் மத்தியில் உள்ளன.
1. தமிழ் இனவாதம்.
2. தன்னார்வ நிறுவனங்கள்.
3. ஜே.வி.பி போன்ற சந்தர்ப்பவாத அமைப்புக்கள்.
இவற்றை எதிர்கொள்வதற்கான குறைந்தபடம் சிந்தனைத் தளத்தில் நாம் செயற்பட்டால் நாளைய சமூகத்தின் விடுதலைக்குப் பெரும் பங்காற்ற முடியும்.
இலங்கை ஏற்கனவே திட்டமிடப்படாத ஆயுத எழுச்சிகளையும் மக்கள் போராட்டங்களையும் சந்தித்த அனுபவம் கொண்ட நாடு.
இன்றைய பின் – உலகமயமாக்கல் சூழல் தான் போராட்டங்களை உத்வேகமடையச் செய்கிறது என்பதை பொதுவாக எல்லா ஆய்வாளர்களும் ஒத்துக்கொள்கிறாகள் சரியான விடயமும் முக்கியமாகப் பூpந்து கொள்ளப்பட வேண்டிய விடயமும். இருக்கிற பிரச்சினை சமூகத்தைப்பூpந்து கொள்ள மற்படுவதே. சரியான பாதையினை தேடியறிதலே.
கண்ணை மூடிக்கொண்டு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்கு பின் செல்வது எவ்வளவு தூரம்
பிற்போக்கானதோ அதே அளவு பிற்போக்கானது இந்திய இலங்கை மக்களை அணி திரட்டாமல் கண்ணை மூடிக்கொண்டு இந்தியாவை எதிர்ப்பதுமாகும்.
//மக்களை அணி திரட்டாமல் கண்ணை மூடிக்கொண்டு இந்தியாவை எதிர்ப்பதுமாகும்.
//
தேவன் இரண்டு,
மக்களை அணிதிரட்டுதலும் கட்சி அரசியலும் இரண்டு வேறுபட்ட அரசியல் சமூகச் செயற்பாடுகளாகும். வெகுஜன அமைப்புக்கள் என்றதும் இயக்கங்களின் வால்களாக உருவாக்கப்பட்ட ரெசோ, கெஸ்.கைஸ் போன்ற அமைப்புக்கள் தான் எமது கண்முன்னால் வருகின்றன. மக்கள் அமைப்புக்கள் என்பது கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படாத மக்களின் நாளாந்தப் பிரச்சனைகளை முன்வைத்து உருவாகும் சிவில் சொசைட்டி அமைப்புக்கள் போன்றன. கட்சிக்கும் இவ்வமைப்புக்களுக்கும் இடையேயான உறவு அவைகளை அரசியல் மயப்படுத்தல் போன்றன என்பவை எல்லாம் வேறுபட்ட பிரச்சனை. இப்போது கட்சியின் அரசியல் குறித்த பிரச்சனை விவாதிக்கப்படும் போது, இந்தியா குறித்தும் சர்வதேச அரசியல் குறித்தும் வெளிப்படையான கருத்துக்கள் முன்வைக்கப்ட வேண்டும்.. குறைந்தபட்சம் முன்னணிச் சக்திகள் மத்தியில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.
பாருங்கள் நீங்கள் நீண்ட காலத்தின் பின்னர் விவாத அரங்கிற்கு வருவதே ஒரு மாற்றம்தானே?
Thank you for the valuable articles. The last one on the above caption is very valuable. I wish some of them could be made available in English. Then I could forward them to my contacts with members of the other communities and organisations around the world.
சிங்கள பௌத்த பேரினவாதம் தன் பொதி சுமக்க,கம்யுனிசம் பேசுவோரை, நலமடித்த நாம்பன்களாகவே நகர்த்துகிறது.
இந்தக் கம்யுனிசம் பேசுகிற நலமடித்த நாம்பன்கள்,தம் கழுத்து மணி கேட்பதற்காகவே,கண்டபாட்டுக்கு,நன்றாகத் தலையசைக்கிறார்கள்.
இரத்த வெறியில், சிவந்த பூமியில் சிவப்புக் கொடியேற, அஞ்சாவது அகிலம் தோன்றவேண்டும்.
நாவலனின் கருத்துக்கள் பாராட்டுக்குரியவை. நெருஞ்சியின் வருத்தங்களும் நியாயமானவை. ஈ.என்.டி.எல்.எப் இப்போது நடத்தும் “பாதயாத்திரை” மூலம்தான் இந்திய அரசிடம் சரணடைகின்றார்கள் என்றில்லை. இந்த நாட்டுக்கூத்துக்கும் அண்ணாவிமார் இந்திய உளவுத்துறையே. கொழுக்கட்டையை மோதகமாக்கும் முயற்சி ஆனாலும், உள்ளடக்கம் ஒன்றுதான்.
S.G.Raghavan, இலங்கை புலனாய்வுத் துறையாலும் ஏன் கருணாவாலும் இவர்கள் (ஈ.என்.டி.எல்.எப்) தேடி தேடி வேட்டையாடப்பட்டார்களா? பங்காளிகளான இவர்களுக்குள் இந்தப் புதினம் எப்போது நடந்தது?
இலங்கை புலனாய்வு அமைப்பாலும் தேடித் தேடி வேட்டையாடப் பட்டது வேறு ஒன்றுக்கும் அல்ல இந்திய புலனாய்வு ஆதிக்கத்தை இல்லாது ஒழிக்க ENDLF ஐ வேட்டையாடினார்கள். பல வேட்டையாடல்கள் புலிகளின் பெயரில் போட்டார்கள். பொலநறுவை தீவுச்சேனை புத்தளம் பகுதிகளில் இருந்த பல ENDLF காரர்கள் வேட்டையாடப் பட்டார்கள்.
வரலாற்றை திரும்பவும் அதேபுள்ளிக்கு கொண்டுசெல்லுகின்ற இந்த தொடர்முயற்சிகள் தொடர்பாக புலிஆதரவு அமைப்புக்கள் மதில்மேல் பூனையாக மவுனம் சாதித்துவரும் நிலையில் துணிச்சலாக எழுதப்பட்டுள்ள கட்டுரை.”இலுப்பை பழுத்தால் வவ்வால் வரும” என்று தமிழ் தரகுமுதலாளிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்மூடித்தனமான இந்திய மேலாதிக்க ஆதரவு கடந்தமுப்பதாண்டுகாலமாக எமதுமக்களின் பேரழிவுக்கு காரணமானது என்பது கண்கூடு. எமது மக்களை புதைகுழிக்கு அனுப்பியவர்களையே அதிலிருந்து மீண்டுவர வழிகோருவது வ.ஐ.ச. போன்றவர்களுக்கு உவப்பானதாக இருக்கலாம். ஆனால் மீண்டும் அதே அழிவுப்பாதையை மக்களுக்கு காட்டுபவர்களை வரலாறு மன்னிக்காது. இன்று உலகில் மிக மோசமான இராணுவமயமாக்கலுகுள்ளான பூமி காஸ்மீரே. ஐந்து லட்சம் இந்திய துருப்பினர் காஸ்மீரில் நிலைகொண்டுள்ளனர். ஈராக்கிய ஆக்கிரமிப்பின் உச்சக்கட்டத்தில் ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகளை விட மூன்று மடங்கிற்கும் அதிகமானதாகும். காஸ்மீரை தனது கிடுக்குப்பிடியில் வைத்து ராணுவ வன்முறைமூலம் தேசிய இனத்தை ஒடுக்கிவரும் இந்தியாவை ந்ம்பச்சொல்வது ஏமாற்றுவேலை. அது ஏமாற்றுவேலை என்று தெரிந்தே செய்கின்றார்கள் என்றே ந்ம்புகின்றேன். உலகில் மிக வறுமையான மக்கள் வாழுகின்ற பகுதி ஆபிரிக்கா அல்ல இந்தியாவே. பல தேசிய இனங்களையும், ஒடுக்கி, உழைக்கும்மக்களை விளிம்புநிலைக்கு தள்ளி தரகுமுதலாளிகளை கொழுக்க வைக்கின்ற இந்திய அரசுக்கு மனிதாபின முகத்தை வழ்ங்குகின்ற முயற்சி என்பது வெள்ளிடைமலை. இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்கியவிடயமே இதுவாகும். இதன் மூலம் சிங்கள உழைக்கும்மக்களை தமிழர்கள் என்றுமே இந்திய மேலாதிக்கத்தின் ஆதரவாளர்கள் என்ற பேரினவாத பிரச்சாரத்தின் மூலம் பிரித்துவைப்பதும், இன்னொரு நோக்கமாகும். தமிழர்களின் அரசியலுரிமை, வாழ்வாதாரம், சிங்கள உழைக்கும் மக்களின் புரிந்துணர்வுடனும், போராட்டத்தினுடனும் இன்றியமையாத தொடர்புள்ளவை. கூடவே இந்தியாவில் போராடுகின்ற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுடனும் ஒன்றிணைவதன் மூலமே அது சாத்தியமாகும். தரகுமுதலாளிகளுக்கு சேவை செய்து அல்ல.
எல்லோருமே விபரம் தெரிந்தவா்களாகவும் கற்றுக்குட்டிகளாகவும் இடதுசாரி சாயம் பூசிக்கொண்டவா்களாகவும் தம்மை காட்டிக்கொள்ள முயல்கின்றார்களேயன்றி உழைக்கும் மக்களையும்,ஒடுக்கப்பட்ட மக்களையும் யார், எப்படி ஒன்றிணைப்பது என்ற வழியை கூறாது அல்லது அப்படி எதையும் தொடங்காது கருத்தை மட்டும் சொல்லி ஒதுங்கிவிடுவதேன்.
சி ல கேள்விகள்…
இலங்கையில் முஸ்லீம் மக்களும் இந்திய வம்சா வழி மக்களும் ஏன் இந்தியாவில் ஊர்வலம் போகவில்லை?
இலங்கையில் தமிழர்கள் என்று மார்தட்டும் யாழ் வேளாள சமூக அரசியல் வாதிகள் மற்றும் ஊடகங்கள் கூறும் தமிழ் மக்களின் பிரச்சனை என்ன?
இலங்கையின் தென் பகுதி இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள சேரிகள் போன்ற குடிமனைகள் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ளதா?
வடக்கு கிழக்கு தமிழரை விட மிக மேசமாக அடக்கப்படும் சிங்கள மக்களை பற்றி இங்கு பின்னோட்டாம் விடும் எவருக்காவது தெரியுமா?
முதலில் மனிதமாக உலகம் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பாருங்கள்! பின்னர் இலங்கையராக சுரண்டப்படும் அனைவரையும் பாருங்கள்.
இலங்கையில் முஸ்லீம் மக்களும் இந்திய வம்சா வழி மக்களும் ஏன் இந்தியாவில் ஊர்வலம் போகவில்லை?
1. இலங்கையில் முஸ்லீம் மக்களையும் மலையக மக்களையும் கூட விட்டுத்தள்ளுங்கள் துரை! கொங்கோவில் கொசுக்கள் போல நாளாந்தம் சாகடிக்கப்படும் மக்களுக்காக ஏன் நீங்கள் ஊர்வலம் போலவில்லை? எப்போதாவது அவர்களைப்பற்றிச் சிந்த்திருக்கிறீர்களா? துரை, அப்படி நீங்கள் தப்பித்தவறி உங்கள் வீட்டுத்தோட்டத்தில் ஊர்வலம் போனாலும், ஏன் ரூமேனியர்களுக்காக ஊர்வலம் போகவில்லை என கேட்க உங்களைப் போல சிலர் வருவார்கள். பிரச்சனை இதுதான் : சமூகத்தின் அடித்தட்டில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சிந்தனை மாற்றங்களும், பண்பாட்டுத் விழுமியங்களும் தொடர்புகளும் உருவாகின்றன. இவ்வாறு முதலாளித்துவ வரலாற்றுக் கட்டத்தில் உருவானவை தான் தேசிய இனங்கள். இது உழைக்கும் வர்கத்திற்கானதல்ல எனினும் தேசிய இன ஒடுக்குமுறை தீவிரமடையும் போது, அதன் உட் கூறுகளிடையே இறுக்கமான தொடர்புகளும் இணைவும் ஏற்படும். அது சிந்தனை மாற்றம் ஒன்றைத் தோற்றுவிக்கும்.
இதன் தாக்கம் மொழி பண்பாடு போன்ற தொடர்புகளைக் கொண்ட ஏனைய தேசிய இனங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறை 60 வருடங்களுகு மேற்பட்ட தொடர்ச்சியான துயர வரலாற்றைக் கொண்டது. இதன் தாக்கம் தமிழ் நாட்டில் எதிரொலிகாமல் இருந்தால் தான் வியப்புகுரியது. பின்னதாக உருவாகின்ற சிந்தனை மாற்றத்தினை உழைக்கும் மக்களின் தலைமை தவறாகக் கையாளுமாயின் அது தரகு முதலாளித்துவத் தலைமையிடம் சென்ற்டையும்.
2. இலங்கையில் தமிழர்கள் என்று மார்தட்டும் யாழ் வேளாள சமூக அரசியல் வாதிகள் மற்றும் ஊடகங்கள் கூறும் தமிழ் மக்களின் பிரச்சனை என்ன?
இது கூடவா தெரியவில்லை? தேசிய இன ஒடுக்கு முறை.
இலங்கையின் தென் பகுதி இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள சேரிகள் போன்ற குடிமனைகள் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ளதா?
வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சேரிகள் உள்ளன. சரி சேரிகள் இல்லை என்பதால் கோரமாக நாளாந்தம் கொல்லும் பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடக் கூடாது என்றா சொல்ல வருகிறீர்கள். பங்களாதேஷில் 60 வீதமான பகுதிகள் சேரிகள் தான். நோய் கிருமிகளற்ற குடி நீரைத் தலை நகரத்தில் கூடக் காண முடியாது. அதற்காக எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு பங்களாதேஷுக்கா போகச் சொல்கிறீர்கள். வேடிக்கையாக இருக்கிறத்ய் உங்கள் வாதம். இந்தியாவோடு ஒப்பிட்டால் துனிசியாவில் சேரிகளே இல்லை எனலாம். அப்போ அங்கு போராடிய மக்கள் உங்கள் பார்வையில் துரோகிகளோ?
4. வடக்கு கிழக்கு தமிழரை விட மிக மேசமாக அடக்கப்படும் சிங்கள மக்களை பற்றி இங்கு பின்னோட்டாம் விடும் எவருக்காவது தெரியுமா?
பகைமை ஏற்படுத்தும் முரண்பாடுகளை உருவாக்கும்அடக்கு முறை இரண்டு வகையானது ஒன்று தேசிய இன அடக்கு முறை மற்றது வர்க்க ரீதியானது. பெருந்தேசிய வாதம் சிங்கள் மக்கள் முகம் கொள்ளும் வர்க்க அடக்குமுறையை மறைக்கிறது. அதே வேளை தேசிய இன அடக்குமுறை என்ற முரண்பாட்டைக் கையாள மறுக்கும் இடதுசாரிகளின் சந்தர்ப்ப வாதமும் கூட ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் முகம் கொள்ளும் வர்க்க அடக்கு முறையை மறைக்கிறது. இதோ பாருங்கள், தேசிய இனம் ஒடுக்கப்படும் போது மக்கள் அதற்கெதிராகக் எழுச்சி கொள்வார்கள். அதை கண்டுகொள்ளாமல், முன்னே சென்று வர்க்க ஒடுக்குமுறை தான் பேசப்பட வேண்டும் என்று கூறுவதை இடது சாரிச் சந்தர்ப்பாவதன் என விஞ்ஞான அரசியலில் அழைப்பார்கள். அதே வேளை, மக்கள் வர்க்க அடக்கு முறைக்கு முகம் கொடுப்பதை நிராகரித்து மக்களின் பின்னே செல்வதை வலது சாரிச் சந்தர்ப்பவாதம் என்றும் அழைப்பர். நீங்கள் அப்பட்டமான இடதுசாரிச் சந்தர்ப்பவாதி. இணையங்களில் உலாவரும் சந்திரன் ராஜா என்பவர் இடது சாரி சந்தர்ப்பவாததிற்கு மிகச் சிறந்த உதாரணம்.
//முதலில் மனிதமாக உலகம் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பாருங்கள்! பின்னர் இலங்கையராக சுரண்டப்படும் அனைவரையும் பாருங்கள்//
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு முன்வைக்க வேண்டிய கருத்தும் ஆலோசனையும். அவர்கள் அப்படித்தான் பார்க்கவேண்டும். அதிலிலிருந்து முரண்பாடுகளைக் கையாள்வது குறித்த திட்ட வரைவுகளை முன்வைக்க வேண்டும். இயக்கம் என்றால் மக்கள் மக்கள் என்றா இயக்கம் என்ற 80களில் உருவான இயக்கங்களின் சிந்தனையிலிருந்து நீங்கள் விடுபடவில்லைப் போலும். துரை, இவை குறித்து உங்களோடு மட்டுமல்ல நீங்கள் சார்ந்த யாரோடும் பகிரங்க விவாதத்திற்கு நான் தயார். தொடருங்கள்..
தாம் தமிழர் அல்ல என்று சொல்லும் இலங்கை முஸ்லிம்கள் எதற்காக ஊர்வலம் போகவேண்டும்? ஊர்வலம் டெல்லிக்குத் தானே இல்லை மெக்காவுக்கா? இந்திய வம்சாவளிகள் உங்களுக்கு என்ன செய்தார்கள், அவர்களையும் இழுத்துப்போட்டு உதைக்கவா? டெல்லியில் போய்க் கேட்டாலென்ன இல்லை சொர்கத்தில் போய்க்கேட்டாலென்ன இலங்கைத் தமிழனுக்கு இந்திய கொலைகாரர் கொடுக்கப்போவது ஒன்று மட்டும்தான், சரணாகதி இல்லையென்றால் சவக்கிடங்குகள் மட்டுமே. மார்தட்டுவது யாழ் வெள்ளாள சமுகம் மாத்திரமல்ல மற்ற சமுகங்களும்தான். அவர்களின் பிரச்சினை, இரவில் உறங்கப் போகும்போது பட்டினியுடன் போகாமலும் பகலில் எழும்பும்போது உடம்பில் தலையும் இருக்கவேண்டும் என்பதுதான். சேரிகள் முன்பு இல்லைதான், ஆனால் ஜெயவர்தன முதல் சந்திரிகா, ராஜபக்சே வரை வடகிழக்குத் தமிழருக்கு சேரிகள் கட்டிக் கொடுத்துள்ளார்களே, அதுதான் அகதி முகாம்கள். மிக மோசமாக சிங்கள மக்கள் அடக்கபடுகிறார்கள்? யாரால்? தமிழ் நிலங்களில் “பலவந்தமாக” கட்டாயப் பணம், பொருள், பாதுகாப்புடன் கொண்டுவந்து குடியிருத்தப்படுகிறார்களே அதை சொல்கிறீர்களா? ஏழை சிங்கள மக்களின் பிரச்சினை வயிற்றுப் பிரச்சினை. அவர்களுக்கு ஒரு காணித் துண்டு கொடுத்து விட்டால் அவர்கள் சுற்றுவர மதில் கட்டி அதனுள் மாளிகை கட்டிவிடுவார்கள். மனிதருக்கும் இலங்கையருக்கும் இம்மட்டு வித்தியாசமா? உலகம் எதிர்நோக்கும் பிரச்சினையே சுரண்டல்தானே. இலங்கையன் மனிதனாக இருந்துவிட்டால் சுரண்டலும் இருக்காது, பிரச்சினையும் இருக்காது. நீங்கள் முதலில் யார் என்று உங்களையே கேளுங்கள், பதிலை வைத்து முடிவெடுக்கலாம்.
சில மோசமான கோரமான விடயங்களை சிலர் நாசூக்காக மறைத்து விட்டு உழைக்கும் மக்கள் பிற்படுத்தப் பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மேட்டுக்குடி என்று புலம்புகிறார்கள் (வெட்டி துண்டாடப்பட்ட கால்களுக்கு வைத்தியம் பாற்பதைவிட்டுவிட்டு உரஞ்சல் காயங்களுக்கு மருந்து போடநிக்கிறார்கள் – உங்கள் சமூக அக்கறைக்கு ஒரு ஓ..!! போடு ) இவர்களுடைய நோக்கம் ஒருபோதும் சமத்துவமான சமூக உட்கட்டமைப்பை உருவாக்க பாடுபடுவதில்லை சமூக உட் ௬றுகளுக்குள் இருக்கும் சில நுண்ணிய விடயங்களை கையாண்டு எமதினத்தை சிதிலமடைய வைப்பதே… இனி இலங்கை திரு நாட்டில் தமிழர்கள் ஓர்மமாக இருக்கக்௬டாது என்பது இவர்களின் திண்ணம். உங்களுக்கு தாற Assignmentக்கு ஏற்ற வாறு வேலை செய்யுங்கோ நன்றி.
உழைக்கும்மக்கள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்படுத்தமக்கள் என ஆண்டாண்டு காலமா பட்டயம் குத்திக்வைப்பட்டவர்களின் கேள்வி நியாயங்கள் எழுச்சிகள் உங்களுக்கு உரசல்காயங்களாக தெரிகிறதோ? இதைதான் மேட்டுகுடி சிந்தனை என்பது கிறுக்கா. தொடர்ந்து வாருங்கள். உங்களுக்குள்ள அசிங்கங்களை திறந்துவிடுங்கள். விவாதங்தங்களில் அடிபட்டு ஊத்தைகள் கழுவுப்படட்டும்.
துரைமுருகு என்ற பெயரில் பின்னூடம் எழுதியவருக்கான பதில்உங்களுக்குமானது தான்
துரைமுருகன்
சில கேள்விகள்…
விடைகள்……..
ஊர்வலம் போனது யாழ் வேளாளரா என்பது தெரியவில்லை! வேளாளரா? நோலாலரா என்பதை எப்படி கண்டு பிடித்தீர்கள்?
தமிழ் மக்களால் வெறுக்கப் பட்டவர்கள் , அல்லது தமிழ் மக்களை விட்டு தாமாகவே ஒதுங்கியவர்கள் ஊர்வலம் போனார்கள்
ஊர்வலத்திற்கு இந்திய அரசு ஸ்பொன்சர் செய்தது அதனால் போகிறார்கள்
முஸ்லிம்களும் இந்திய வம்சாவழி தமிழர்களும் தமிழ் நாட்டில் இருக்கிறார்காளா? ஒரிசாவில் இருக்கிறார்களா?
இது இந்தியாவில் ஒரிசா மாநிலம் வரை ஓடிப்போன ENDLF இன் கதை நீங்கள் கதை தெரியாமல் பின்னூட்டம் விட்டு விட்டீர்கள்.
பரந்தன் ராஜன் அவர் சார் பரிவாரங்களுடன் பல இந்திய வம்சாவழி (கிளிநொச்சி வவுனியா மாவட்டத்தில் 1977 இல் குடியமர்த்தப் பட்ட) தமிழ் இளையர்கள் இருக்கின்றனர் சிலவேளை அவர்கள் தமது பிரச்சினைக்கும் சேர்த்து தான் ஊர்வலம் போகிறார்களோ தெரியாது கேட்டுப் பாருங்கள்.
எங்களது குடிசைகள் நிலங்கள் பிள்ளைகள் உறவுகள் இரவுகள் பகல்கள் உரிமைகள் உணர்வுகள் எல்லாவற்றையும் மனிதம் இழந்த மிருகங்களிடம் இழந்ததனால் அவற்றை கேட்கிறோம் அதற்கும் ஊர்வலத்திற்கும் சம்மந்தமில்லை பாருங்கோ துரைமுருகா!
ராகவனின் விடைகளுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.
வடக்கு கிழக்கு தமிழா் குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழரின் முன்னேற்றத்திற்கு காரணம் படிப்பு,கடின உழைப்பு,விடாமுயற்சி ஆதலால்தான் சேரிகள் அங்கு இல்லை.சேரிகளிற்கும் சுதந்திரத்திற்கும் என்ன சம்பந்தமோ??
சில கேள்விகளும் பதில்களும்.
கேள்வி – இலங்கையில் முஸ்லீம் மக்களும் இந்திய வம்சா வழி மக்களும் ஏன் இந்தியாவில் ஊர்வலம் போகவில்லை?
பதில் – சும்மா கிடந்து தின்டு பெருத்த ஊழைச்சதையை குறைப்பதற்கு இந்திய உளவுத்துறை அவர்களுக்கு எவ்வித ஏற்பாடுகளையும் செய்து தரவில்லையாதலால்..
கேள்வி – இலங்கையில் தமிழர்கள் என்று மார்தட்டும் யாழ் வேளாள சமூக அரசியல் வாதிகள் மற்றும் ஊடகங்கள் கூறும் தமிழ் மக்களின் பிரச்சனை என்ன?
பதில் – இதற்கு; நீங்கள் யாராக மார்தட்டுகின்றீர்கள்? என்று கூறினால்தான் பதில் தரமுடியும்.
கேள்வி – வடக்கு கிழக்கு தமிழரை விட மிக மேசமாக அடக்கப்படும் சிங்கள மக்களை பற்றி இங்கு பின்னோட்டாம் விடும் எவருக்காவது தெரியுமா?
பதில் – தெரியும் ஆனாலும், முதலில் நமது வண்டியின் உளைச்சலைப் போக்கும் வழியைப்பார்ப்போம் பேந்து அடுத்தவன் குண்டியின் அரிப்பை பற்றி நோக்குவோம்.
கேள்வி – இலங்கையின் தென் பகுதி இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள சேரிகள் போன்ற குடிமனைகள் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ளதா?
பதில் – ஆம், இலங்கையின் வடக்கும் கிழக்குமே சேரிதான்
கேள்வி – முதலில் மனிதமாக உலகம் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பாருங்கள்! பின்னர் இலங்கையராக சுரண்டப்படும் அனைவரையும் பாருங்கள்.
பதில் – நல்லதுதான் இருந்தும், முதலில் நமது பொண்டாட்டி புள்ளைகளுக்கு சோறு போடுற வழியைப்பற்றி யோசிப்போம் மறுகா மத்தவனின் பெண்டில் பிள்ளைகளைப் பற்றி யாசிப்போம்.
பத்திரிகைச் செய்தி
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினராகிய நாங்கள் கடந்த அறுபத்தேழு (67) நாட்களாக மேற்கொண்ட நடைபயணம் 2500 கி.மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று டெல்கி வந்தடைந்துள்ளது. இந்திய ஜனாதிபதி, பிரதம மந்திரி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியாகாந்தி, எதிர்க்கட்சித் தலைவர் திருமதி. சுஸ்மா சிவராஜ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிறநாட்டுத் தூதராலயங்களுக்கு எங்களது இனப் பிரச்சினை தொடர்பாக அறிக்கைகள் கையளித்துள்ளோம்.
“இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்,
1948க்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் அத்துமீறி குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளை வெளியேற்ற வேண்டும்.
என்ற இரு கோரிக்கைகளையும் முன்வைத்து நாங்கள் இந்த நடைபயணத்தை சென்னையிலிருந்து ஜனவரி 16ம் தேதி ஆரம்பித்தோம்.
தமிழ் இனப் பிரச்சினைகள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தின் நிர்வாக அம்சங்களை சிறிலங்கா அரசு தனக்குச் சாதகமானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ் மக்களுக்குச் சாதகமானவற்றை நிராகரித்ததுடன் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது. அத்துடன் பயங்கரவாதம் என்று கூறி தமிழ் மக்களைப் படுகொலை செய்ததுடன் இப்போது தமிழர் பகுதிகளில் சிங்கள இனத்தவரைக் குடியமர்த்தி தமிழர்களை இன அழிப்புச் செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது சிங்களப் பேரினவாதம்.
இந்தியா எங்கள் இனத்தின் சார்பாக கையெழுத்திட்ட நாடு, சிறிலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் இணைந்து இந்தியா ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தை முறியடித்தனர். அந்த ஒப்பந்தம் காலாவதியாகிப் போனதோ அல்லது ரத்துச் செய்யப்பட்டதோ அல்ல.
எனவேதான் 1987ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றித் தரும்படியும், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்(1948ஆம் ஆண்டு) சிங்கள அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழர் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட மற்றும் குடியமர்த்தப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றவாசிகளை வெளியேற்ற வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்.
இன்றைய நிலையில் இவ்விரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் எங்கள் இனம் அழிவிலிருந்து ஓரளவுக்குப் பாதுகாக்கப்படும் என்பது எங்களது நம்பிக்கையாகும்.
இந்த நடைபயணத்தில் 130 அங்கத்தவர்கள் கலந்து கொண்டார்கள். ஏழு மாநிலங்களைக் கடந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நெடும்பயணத்தில் செல்வன். சுதர்சன் என்பவர் விபத்து ஒன்றினால் உயிரிழந்துள்ளார், இருவர் வாகன விபத்தில் சிக்குண்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். பதினைந்து பேர்வரை மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டனர், ஆறுபேர் வரை டைபோயிட் நோயினால் பாதிக்கப்பட்டார்கள்.
கடுமையான குளிர், கொடுமையான வெய்யில், ராஜஸ்தானின் பாலைவனப் புழுதியையும் தாக்குப்பிடித்து தளராமல் முன்னேறினர். சம்பல் பள்ளத்தாக்கில் குடிநீர் கிடைக்காமல் நாவறட்சியினால் பெரும் சிரமத்தைச் சந்தித்தார்கள். அத்துடன் இந்த நடைபயணத்தில் கடுமையான பருவநிலை மாற்றங்களையும் தாக்குப்பிடித்து எங்கள் இளைஞர்கள் இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்து, மன உறுதியுடன் தங்களது இலட்சிய நடைபயணத்தை நிறைவு செய்துள்ளனர்.
இந்த நடைபயணத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண்களும், மாணவிகளும் கலந்துகொண்டு, நடந்து வந்தார்கள். ஆக்ராவிலிருந்து டெல்லிவரை சுமார் இருநூறு கிலோ மீற்றர் தூரத்துக்கு அவர்கள் நடந்து வந்தார்கள். பலருக்கு காலணிகள் காயப்படுத்தியிருந்தாலும் தொடர்ந்து அவர்கள் மனவுறுதியுடன் இறுதிவரை நடந்து வந்தார்கள்.
இலங்கையில் சிங்கள அரசு செய்து வரும் அநீதியான செயல்கள் எவற்றையும் எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாத நிலை உள்ளது. தமிழர்களை இரகசியமாகப் படுகொலை செய்து வருகின்றனர்.
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அரச மரங்கள் காணப்படும் இடங்களில் எல்லாம் புத்த விகாரரைகள் கட்டி வருகின்றனர். இலங்கை முழுவதும் ஓர் பௌத்த நாடு என்று காண்பிக்க இதுபோன்ற விகாரைகளை தமிழ்மக்களின் விருப்புக்கு மாறாக அவர்களது பகுதிகளில் கட்டி வருகின்றனர் சிங்கள ஆட்சியாளர்கள்.
10,000 (பத்தாயிரம்)க்கும் அதிகமான தமிழர்களை சிறைகளில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களது விபரங்கள்கூட யாருக்கும் தெரியாது. ஈழத்தில் வாழும் தமிழர்களால் அப்படித் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் இந்தியா எங்களது இனப்பிரச்சினையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று கோருகிறோம்.
இந்த நடைபயணத்தின் மூலம் இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களின் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளோம். நாங்கள் கடந்து வந்த ஏழு மாநிலங்களிலும் மக்களையும் ஊடகங்களையும் நேரடியாகவே சந்தித்தோம். அவர்களது மொழியில் பிரசுரங்களும், புத்தகங்களும் வெளியிட்டு வினியோகித்து அவற்றினை பத்திரிகைகளில் பிரசுரிக்கவும் செய்தோம்.
சிங்கள அரசினால் இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளை புகைப்படங்கள் மூலமாகத் தெரியப்படுத்தினோம். தங்களது வாழ்நாளில் இப்படியான படுகொலைப் படங்களைப் பார்த்தது கிடையாது என்று அம்மக்கள் தெரிவித்தனர். பௌத்த பயங்கரவாதம் எப்படிப்பட்டது என்பதையும் தாங்கள் தெரிந்துகொண்டதாகத் தெரிவித்தனர்.
தமிழ் மக்கள், சிங்கள இனத்தவருடன் ஒன்றுபட்டு வாழ முடியாது என்பதை தாங்களும் உணருவதாகப் பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் தெரிவித்தனர். இது எங்களது கோரிக்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.
எங்களது கோரிக்கைகள் இரண்டும் சாத்தியமானவைதான். இவற்றை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். எனவேதான் நாங்கள் இந்த நடைபயணத்தை மேற்கொண்டு இந்திய அரசையும் இந்திய மக்களையும் நேரில் சந்தித்துள்ளோம். எங்கள் இனத்துக்கு நியாயமான தீர்வு ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்க அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஈழத் தமிழர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் கடந்து வந்த ஏழு மாநிலங்களிலும் எங்களுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கிய மக்களுக்கும், காவல்துறையினருக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!
இவ்வண்ணம்,
ஞா.ஞானசேகரன்
தலைவர்,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
24-03-2011
நல்லதை வரவேற்க இனியாவது பழகுவோம் .
ENDLF காரர்கள் அவர்கள் வழியில் தமிழர் பிரச்னைக்கு தீர்வை தேட முயற்சி செய்கிறார்கள் .மற்றவர்களும் தமக்கு தெரிந்த வழிகலீல் செய்யலாம்.ஆடுஅறுக்க முன் பு… அறுக்க கூடாது.