இன்று புளட் அமைப்பின் தலைவராகவிருக்கும் சித்தார்தன் இரு குழுக்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளிலும் சமரச முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார். பிரபாகரன் குழுவோடு பேசிவிட்டு எம்மைத் தேடிவந்த சித்தார்தன் நாம் ஏன் பிரபாகரன் குழுவோடு இணைந்து செயற்படக் கூடாது என கேள்வியெழுப்புகிறார். நாம் எமது கோரிக்கைகள் குறித்துக் கூறுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் வழி தவறானது என்றும் அது அழிவிற்கே வழிவகுக்கும் என்பதை தெளிவுபடுத்த முனைகிறோம். அவர் அதனைப் புரிந்து கொண்டதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. அவர் கூறியதெல்லாம் இரண்டு குழுக்களுமே தமிழ் ஈழத்தை நோக்கியே போராடுகிறீர்கள் பின்னர் ஏன் இணைந்து செயற்படக் கூடாது என்பதே.
சித்தார்த்தன் மட்டுமல்ல எம்மோடு இணைவு குறித்தும் இணக்கப்பட்டு குறித்தும் பேசியவதற்கு முன்வந்த அனைத்துத் தரப்பினரும் இதே வகையான சிந்தனைப் போக்கினைத் தான் கொண்டிருந்தனர்.
இதே வேளையில் குலம் சிறையிலிருந்து விடுதலையாகிறார். விடுதலையான மறுதினமே அவர் எம்மைத் தேடிவருகிறார். எமது பிரிவை அறிந்து விரக்தியடைந்த அவர் எமது இரு பகுதியினருடனும் பல தடவைகள் பேச்சுக்களில் ஈடுபடுகிறார். இதன் பின்னதாக லண்டலிருந்து ராஜா என்பவரும் எம்மிடம் வருகிறார். புலிகளோடு முன்னமே தொடர்பிலிருந்த அவர் எமது இணைவிற்காக தொடர்ந்து உழைக்கிறார். பல தடவைகள் பிரபாகரன் குழுவைச் சார்ந்தோரையும் எம்மையும் மாறி மாறிச் சந்திக்கிறார். இவரின் முயற்சியின் பலனாக பழைய மத்திய குழுவை மறுபடி ஒன்று கூடி பிரிவிற்கான காரணத்தை விவாதிக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம்.
பிரிவிற்கு முன்னதாக மத்திய குழுவில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே அங்கம் வகிக்கிறோம். நான், நாகராஜா, பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்ற நால்வரில் நாகராஜாவும் நானும் புதியபாதைக் குழுவில் செயற்பட்டுகொண்டிருக்க பேபி சுப்பிரமணியம் பிரபாகரன் சார்ந்த குழுவோடு இணைந்திருந்தார்.
இந்த சந்திப்புக் குறித்து சுந்தரம், கண்ணன், நாகராஜா, குமணன் உட்பட எமது குழுவிலிருந்த அத்தனை உறுப்பினர்களோடும் விவாதிக்கிறோம். சுந்தரம்இ கண்ணன் போன்றோரிற்கு ஆரம்பத்தில் சந்திப்பு நடைபெறுவது குறித்து முரண்பட்ட கருத்துக்கள் நிலவினாலும் இறுதியில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருகிறார்கள்.
இறுதியாகச் சந்திப்பு நிகழும் நாள் தீர்மானிக்கப்படுகிறது. ராஜாவின் ஏற்பாட்டின்படி நானும் நாகராஜாவும் இருக்கும் இடத்தை நோக்கி பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் வருகின்றனர். யாழ்ப்பாணப் பகுதியிலிருந்த தொலைக் கிராமம் ஒன்றில் சந்திப்பு நிகழ்கிறது. பிரபாகரன் என்னோடு அதிகமாகப் பேசவில்லை. சில நிமிடங்கள் எங்கிருது ஆரம்பிப்பது என்ற சிந்தனையோடத்திற்கு நடுவே பேச ஆரம்பிக்கிறோம். நடந்து முடிந்த இதயம் கனக்கும் நிகழ்வுகளிலிருந்தே பேச்சுக்களை ஆரம்பிக்கிறோம்.
இன்னும் பசுமை கொழிக்கும் நினைவுகளாக நிறைந்திருக்கும் ஒவ்வொரு போராளிகளும், நடந்தே கடந்த காடுகளும் மலைகளும் அப்போதும் எனது நினைவுகளில் மறுபடி மறுபடி வந்துபோயின. எனக்கு நேரெதிரில் பிரபாகரன் பேபியுடன் தயாராக இருந்தார்.
எம்மில் யாருக்குமே பிரிந்து செல்வது என்பதும் தனியான குழுக்களாகச் செயற்பட வேண்டும் என்பதும் அடிப்படை நோக்கமாக இருந்ததில்லை. நாம் இணைந்து செயற்பட வேண்டும் ஆனால் நமது திசைவழி தவறானது என்பதையே நானும் நாகராஜாவும் மறுபடி மறுபடி கோடிட்டுக் காட்டிக்கொண்டிருந்தோம்.
பேபி எப்போதும் போல மௌனமாகத்தான் இருந்தார். பிரபாகரன் இடைக்கிடை குறுக்கிட்டு ஆட்சேபனை தெரிவிக்கிறார். விவாதங்கள் சில நிமிடங்கள் நீடிக்க, கோரிக்கைகள் குறுக்கப்பட்டுகொண்டே வருகிறது.
செயற்குழு, மக்களமைப்பு, மக்கள் போராட்டம் என்பவற்றிலிருந்து இணைவை ஏற்படுத்தும் நோக்கில் கோரிக்கைகளை குறைத்துக்கொண்டே வருகிறோம். எதிலும் இணக்கம் ஏற்பட்டாகவில்லை. இறுதியில் நான் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாம் கொலைகளுக்கான சுயவிமர்சனம் செய்துகொள்வோம் என்கிறேன்.
இந்த வேளையில் தான் முதல் தடவையாகப் பிரபாகரனிடம் மைக்கல் பற்குணம் கொலைகள் குறித்த எனது விமர்சனத்தை முன்வைக்கிறேன். இதுவரையில் சுந்தரம், குமணன் போன்றோர் கொலை குறித்துப் பேசும் போதெல்லாம் செயற்குழு தெரிவுசெய்யப்பட்டு மக்கள் வேலைகள் முன்னெடுக்கப்படுதலே இப்போதைக்கு பிரதானமானது என்று கூறி அவர்களைத் தடுத்திருந்தேன். இப்போது நான் பிரபாகரனை நோக்கி நேரடியாக அதே கேள்வியை முன்வைக்கிறேன்.
மைக்கலையும் பற்குணத்தையும் வெறும் பயத்தினதும் சந்தேகத்தினதும் அடிப்படையில் கொலைசெய்ததை சுயவிமர்சன அடிப்படையில் தவறு என்று ஏற்றுக்கொண்டு இயக்கவேலைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று கோருகிறேன்.
நாம் ஆரம்பத்தில் தவறிழைத்திருக்கிறோம் அவற்றைத் தவறுகள் என்று ஏற்றுக்கொண்டு என்று ஏற்றுக்கொண்டு அமைப்பு வேலைகளில் இணைந்து செயற்படுவோம் என்பது மட்டும் தான் எனது குறைந்தபட்சக் கோரிக்கையாக அமைந்தது.
தவறுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உள்ளக ஜனநாயகமும் விவாதத்திற்கான வெளியும் உருவாகும் என நானும் நாகராஜாவும் நம்பியிருந்தோம். இவ்வாறான பன்முகத்தன்மையின் அவசியத்தை, விவாதங்களூடாக முடிவுகளை நோக்கி நகரும் தேவையை அனைத்து உறுப்பினர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
நான் கூறிய அனைத்தையும் அவதானமாகக் கேட்டுக்கொண்டிருந்த பிரபாகரன், எனது கோரிக்கையை முற்றாக நிராகரிக்கிறார். பேபி சுப்பிரமணியமும் அதனை ஆமோதிக்கிறார். தான் பற்குணம் மைக்கல் ஆகியோரைக் கொலைசெய்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்தக் கொலைகளை அன்றும் இன்றும் சரியான செயற்பாடாகவே கருத்துவதாகப் பிரபாகரன் வாதிடுகிறார். அதற்கு மேலேயும் சென்று கொலைகள் தவறு என்று தான் கருதினால் தற்கொலைசெய்துகொள்வேண்டும் என்றும் பிரபாகரன் கூறுகிறார். அவை தவறானால் தான் தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்கிறார்.
மைக்கல் வெளியேறி பாதுகாப்புப் படைகளிடம் சிக்கிக் கொண்டால் எமக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதியிருந்தோம். பற்குணம் தனியாகச் சென்று செயற்பட விரும்பிய போதும் இவ்வாறான மனோநிலையிலேயே இருந்திருக்கிறோம். அவர்கள் அரசின் உளவாளிகளாகவோ, ஆதரவாளர்களகவோ, இன்னும் காட்டிக்கொடுப்பாளர்களாகவோ இருந்ததில்லை.
எது எவ்வாறாயினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமையைப் பாதுகாக்க இந்தக் கொலைகள் அவசியமானது தான் எனப் பிரபாகரன் கூறுகிறார்.
பிரபாகரனின் இந்தக் கூற்றானது எமக்கு பேசுவதற்காக இருந்த அனைத்து வழிகளையும் மூடிவிடுகிறது. தனிமனிதப் படுகொலைகளைத தவறு என்று தெரிந்த பின்னரும் நியாயப்படுத்துகின்ற போக்கானது, இணக்கப்பாட்டை நோக்கி நகரமுடியாத இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது.
பேசுவார்த்தை எந்த முடிவையும் எட்டவில்லை. பிரபாகரன் பேபி ஆகியோர் எம்மிடம் முகம் கொடுத்துப் பேசாமலே எழுந்து சென்றுவிடுகின்றனர்.
குறைந்தபட்ச இணக்கத்திற்குக் கூட முன்வர மறுத்த பிரபாகரன் குறித்து எமக்கு மிகுந்த விரக்தியும் வெறுப்பும் தான் எஞ்சுகிறது.
எமது அமைப்பின் வருவாய்க்காக நாட்கூலியையும் தோட்டவேலைகளையுமே நம்பியிருந்த துன்பகரமான சூழலில் பிரபாகரன் குழுவை எதிர்த்துக்கொண்டு எம்மோடிருந்த மத்தியதர வர்க்க இளைஞர்கள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். பத்திரிகை ஊடாக மக்கள் மத்தியில் போராட்டத்தை நோக்கிய சிந்னையை விதைக்க வேண்டும் என்றும் மக்களமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் நாம் மிக உறுதியான கொள்கைப்பிடிப்போடிருந்தோம்.
எது எவ்வாறாயினும் நாம் எமது வேலைகளில் எந்தப்பின்னடைவையும் கொண்டிருக்கவில்லை. புதிய பாதை சஞ்சிகைக்கான வேலைகளை தொடர்கிறோம். தவிர, சண்முகதாசனின் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முக்கிய இளம் உறுப்பினர் ஒருவரை அணுகி அவரூடாக அரசியல் வகுப்புக்களையும் ஒழுங்கு படுத்துகிறோம்.
தாம் சார்ந்த சமூகத்தின் விடுதலையை நோக்கி அனைத்தையும் துறந்து முழு நேர உறுப்பினர்களாக இணைந்திருந்த பிரபாகரன் உட்பட அனைத்துப் போராளிகளையும் ஏதாவது ஒரு குறைந்தபட்ச அடிப்படையிலாவது ஒருங்கமைக்க வேண்டும் என்ற உணர்வில் தான் நாம் பேச்சுக்களுக்குச் சம்மத்தம் தெரிவித்திருந்தோம்.
பேச்சுக்களின் தோல்வி எமக்கு மட்டுமல்ல, இணக்கப்பட்டை ஏற்பட முனைந்த ஆதரவாளர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆதரவாளர்கள் தமது முயற்சியை கைவிடவில்லை. லண்டனிலிருந்து வந்திருந்த ராஜா மற்றும் குலம் ஆகியோர் இணைவுக்கான புதிய திட்டங்களோடு எமது உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கின்றனர். பிரபாகரன் குழுவிலிருந்த உறுப்பினர்களையும் பலதடவை தனித்தனியாகச் சந்திக்கின்றனர். இடைவிடாத இவர்களின் முயற்சியின் பலனாக அனைத்து உறுப்பினர்களும் சந்த்தித்து உள்ளக வாக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று முடிவாகிறது. பிரபாகரன், நாகராஜா, பேபிசுப்பிரமணியம், நான் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான திகதியும் குறிக்கப்பட்டுவிட்டது.
(இன்னும்வரும்..)
குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும் சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின் நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி அச்சுப்பதிவாகும் நூலின் பின்னிணைப்பிலும் இனியொருவிலும் சில நாட்களில் பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்.
பாகம் 20 | பாகம் 19 | பாகம் 18 | பாகம் 17 | பாகம்16 | பாகம்15 | பாகம்14 |
பாகம்13 | பாகம்12 | பாகம்11 | பாகம்10 | பாகம்9 | ||
பாகம்8 | பாகம்7 | பாகம்6 | பாகம்5 | பாகம்4 | ||
பாகம்3 | பாகம்2 | பாகம்1 |
ஐயர் பிரபாகரனைப் பற்றிக் கூறும் போது ஒரு பக்கத்தில் உறுதியான போராளியும் மறுபக்கத்தில் உறுதியான மனிதனும் வெளியே வருகிறார்கள். நான் பிரபாகரனின் ஊரைச் சேர்ந்தவள் என்பதால் எனக்கு அவர்களின் உறவினர்களைத் தெரியும். அவர்கள் பிரபாகரன் மென்மையான ஒருவராகவே கூறுவார்கள்.
ஒரு பக்கத்தில் உறுதியான போராளியும் மறுபக்கத்தில் உறுதியான மனிதனும் வெளியே வருகிறார்கள். ”
வந்து முள்ளிவாய்காலில் கவிண்டு போனார். அம்மணி! கொலை செய்வதிலும் அழிப்பதிலும் உறுதியாய் இருந்து எல்லோரையும் மாட்டிவிட்டு போய்விட்டதை இன்னுமா நீங்கள் புரியுவில்லை.
ethayam
நல்லா கண்டு பிடிக்கிறீங்க
நீங்க பேசாம ஏதாவது
உளவுத்துறையில் சேரலாம்
U r exactly right ranjini. Only genuine people can understand his potential. Unfortunately his attempt was utter failure. Attempting failure is better than nothing. he is great.
An attempt ,may be a faileure..we should not fail to attempt!
Suresh
It takes people who are even more genuine to think of the unwanted deaths of tens of thousands that could have been spared, if the people were only given the option to stay with the LTTE or leave if they so wished.
The more one talks of the greatness of individuals the more one seems to lose sight of the cause and even worse the plight of the people for whose liberation struggle was supposed to be.
I do not think that it is fair to vilify Prabakaran for what was the fault of not just the LTTE leadership as a whole and its overseas advisors, but also the narrow Tamil nationalists as a whole who isolated the Tamil people from all other people struggling for justce.
@ Garammasala
yup.
thanks for ur comment. I never said whatever LTTE did was right. Every 1 made mistake. They also made a lot. but they lose their life 4 us is their greatness. I respect that attitude becz they had 1 aim, no alternative. I also lose sum f my relations during those days. very sad to remember those days. I dislike some f us those who involved for their own benefit..
பற்குண்ம் அளவெட்டி பலநோக்குகூட்டுறவு சங்க கொள்ளையில் பிரபாகரன் மாறன் செட்டி இன்பம் போன்றவர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார். 1975 இல் துரையப்பா கொலைக்கு முன்புநடந்தது. புதிய புலிகள் என்ற அமைப்பிற்குநிதி சேர்ப்பதற்கு நடத்த்பட்ட கொள்ளை. இதில் ஈடுபட்டதற்கு பற்குணம் 5 ஆயிரம் சம்பளமாகப் பெற்ற்க்கொண்டார். இவர் ஒரு போராளியாக பிரபாகரனுடன் இணையவில்லை. இவ்ரைபப்ற்றி மிகநன்றாகத்தெரிந்தவர்கள் இவரை போராளியென்று சொல்லமாட்டார்கள்.
சித்தார்தன் – அக்காலத்தில் – கூட்டணியின் முக்கிய எம்.பி ஒருவரின் மகன்! (அவர் அன்று அவ்வாறுதான் நடந்திருக்கவும் முடியும்)
(இன்றைய கால சித்தார்த்தனை ‘விமர்சனமில்லாமல்’ – புளட்டின் தலைவர் – சும்மா செருகவும் முடியாது, இது தர்மமும் அழகுமல்ல!)
இலங்கையில் புலிகள் உடைகிறது, கூட்டணியாலும் இதை ஒட்டமுடியவில்லை. ஆனால் இலங்கைக்கு வெளியே இருந்த அனைத்து தமிழீழத்துக்கான ஆதரவும் எப்படி, வைகுந்தவாசனின் ’82 ஆம் ஆண்டுக்கான தமிழீழத்துக்காக’ இணைந்தது? ஒட்டவைக்கப்பட்டது?? (அரசியல் ரீதியாக)
ரூபன்
100710
நீங்கள் கூற முனைவது புரியவில்லை ரூபன்
கொலைகளுக்கு சுயவிமரிசனம் வைக்காது தற்கொலை உளறல் வெறும் வரட்டு வாதம்.
இந்த வரட்டு கெளரவம்தான் முள்ளிவாய்க்கால் வரை நீண்டது.
நீங்கள் பதில்களை ஒன்றுக்கு இரண்டுமுறை திரும்பிப் பார்பது தவறாகாது!!
ரூபன்
100710
03.35 மு.ப
இது என்ன கேள்வி!
இக்கேள்வி எதற்காக?
”அப்போ சித்தார்த்தன் புலிகள் அமைப்பில் இருந்தாரா?”
இதை உறுதப்படுத்த நான் யார்??
ஐயரின் தொடரின் முதல் வாசகத்தைத் திரும்பவும் படிக்கவும்….
ரூபன்
100710
03.48மு.ப
சண்முகதாசனின் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முக்கிய இளம் உறுப்பினர் ஒருவரை அணுகி அவரூடாக அரசியல் வகுப்புக்களையும் ஒழுங்கு படுத்துகிறோம்.
அந்த இளம் உறுப்பினரின் பெயரை சொல்ல கூடாதோ ஐயரே ?!
சண்முகதாசனின் அரசியல் வகுப்புக்களில் மனோ மாஸ்டரை பல ( பொலிகண்டி ,நெல்லியடி ) முறை பார்த திருக்கிறேன்.அவர் ஒருவித குழப்ப நிலையிலேயே இருப்பார்.கூட்டம் முடிந்ததும் கட்சி தோழர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்.அப்போதெல்லாம் அவர் புலி இயக்கத்தில் இருப்பது தெரிந்திருக்கவில்லை.பண்டிதர் என்றொரு ஆரம்ப கால புலி உறுப்பினர் தமிழீழம் பற்றி விவாதிப்பார்.
Clint Eastwood,Rambo விளையாட்டாலே எல்லாம் நாசமாய் போய் விட்டது.
மேலும் ஒரு பதிவு….
ஆக, மைக்கல் , பற்குணம் போன்றவர்கள் தொடர்பாக மடு்மே , ஐயர் போன்றாரால் பேச முடிந்துள்ளது. ‘கண்ணாடியின் மரணம்’ தொடர்பாக நாம் யாரிடம் நியாயம் கேட்ப்பது?
கண்னாடியின் கொலை தொடர்பாக ‘ஐயர்’ பிரபாகரனிடம் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை! – இந்தத் தொடரில்…
(ஐயா கேள்வி கேட்டபோது (பிரபாகரனை) ‘செட்டி’ கொல்லப்படவுமில்லை!!)
இங்கே மறுபுறத்து அதிசயம் என்னவென்றால், கண்னாடி கொல்லப்பட்டது –
சி.ஐ.டி பத்மநாதனின் கொலைக்குப் பின்னான துண்டுப்பிரசுரத்தின் பின், சரணடைந்த 28ப் பேரின் வாக்குமூலத்தின் பின்னரே, அரச புலனாய்வு : கண்ணாடியின் கொலையை உறுதிசெய்திருந்தது!!
ரூபன்
100710
அப்போ சித்தார்த்தன் புலிகள் அமைப்பில் இருந்தாரா?
இன்று எத்தனை கேடுகெட்ட துரோகிகள் உருவாகி சிங்களவனின் காலைநக்கிப்பிழைகிறார்கள். சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்துகொண்டிருகிறார்கள். இன்று பிரபாகரன் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? இன்றைய் ஜேவிபியினர் கூட மாக்சியம் பேசுவர்கள்தான். அய்யர் போன்ற மாக்சிய வாதிகள் கடந்த முப்பது ஆண்டுகள் என்ன செய்தார் இந்த தமிழ் சமுதாயத்திற்கு என்று கூறமுடியுமா?ஏதோ இவர் சொல்வதை கேட்டிருந்தால் பிரபாகரன் தமிழ் ஈழ்ம் அடைந்திருப்பார் என்று சொல்கிறாரா? முத்லில் இவர் ஏன் ஜாதிய பெயரில் ஒளிந்திருக்கிறார். இவர் தான் ஒரு உயர்சாதியினர் என்று சொல்வதற்கு விரும்புகிறாரா? மாக்க்சிய் வாதிகள் ஜாதியவாதத்திற்கு எதிரானவர்கள். பிரபாகரன் களை எடுத்த்து போதாது என்பது மட்டும் தெளிவாகிறது. இன்றைய தமிழீழ நிலை அதனை உணர்த்துகிறது. உமாமகேசுவரனின் புளோட் இல் ட்ம்மிங கந்தசாமி டம்மிங்க் மூர்த்தி என்று இரு பிரபலமான் கொலையாளிகள் கேள்வி கேட்ட தஙகள் சொந்த இயக்கத்தோழர்களையே உமாவின் உத்தரவின்படி கொன்ரார்களே. இதே நாகராஜா கடத்தல் தோழில் செய்துதானே வாழ்ந்தார். ஏன் நாகராஜா பற்றி அய்யருக்கு தெரியாதா? பிரபாகரனை விட்டுப்பிரிந்த கண்ணன் போன்றோர் இருந்த புளொட் அமைப்பு சந்ததியாரை கொனறதற்கு என்ன காரணம். யாரால் உமா கொல்லப்பட்டார். அவரின் சக தோழர்களால்தான் உமா கொல்லப்பட்டார். கண்ணாடி பத்மனாதனைக்கொன்றவர்கள் சிவராசன் ரமேஸ் செட்டி என்ற மூவரே அன்றி பிரபாகfரன் அல்ல. இந்த்கொலைக்கூட பிரபாகரந்தான் ப்தில் சொல்லவேன்டுமா?
இப்போ தமிழ் ஈலமும் போய் எல்லாம் போய்விட்டநிலையில் கே.பி இன் வழி போவது தான் சரி. பிரபா ஒரு வடிகட்டின முட்டால். துரோகி.
சரியாகத் தமிழில் எழுதத் தெரியவில்லை, ஆனா பட்டம் வைக்க மாத்திரம் தெரியுது. கே. பி வழி, அது என்ன வழி? காட்டிக்கொடுக்கிறதா அல்லது கட்டிப்பிடித்து முதுகில் குத்துகிறதா? இல்லை காலில் விழுந்து சுகபோகமாக வாழ்கிறதா?
மானமுள்ள தமிழனுக்கு இன்னும் எத்தனையோ வழி இருக்கு.
ஆமாம் எங்களைப்போல் வெள்ளைக்காரனின் காலைநக்கிக்கொண்டு அதைபெருமையாகதம்மட்டமடிப்பது கெளரவமாகுமா?. பிரான்சிலை போய் டச்சைப்படிக்கினம் கனடாபோய் இங்கலீசு படிக்கினம் ஆனால் தமிழ் மட்டும் வடிவாகக்கதைக்கத்தெரியாது. முதலில் கெளரவமாக மற்றவர்களுடன் கதைக்கப்பழகுங்கோ. பிறகு தமிழ் மக்களுக்காக போராட வெளிக்கிட்டால் நல்லது.
கன்னன், நீங்கள் சிங்களந்தானே?
நிருபன்:
ஐயர் என்ற பேர் அவரோடு ஒட்டிப் போய்விட்டது. வேறூ பேர் சொன்னால் யாருக்குமே அவர் யாரென்று விளஙாது, இலஙையில் ஐயர் என்பது ஆதிக்கச் சாதி அடையாளமுமல்ல. வலிந்து தங்கள் பேரிலும் பிள்ளைகளின் பேர்ப் பதிவிலும் சாதியைக் காட்டுவதைப் பார்ப்பனர்கள் தவிர்க்க வேண்டும். அது பற்றி ஐயர் அதிகம் செய்ய முடியாது. (செட்டி அவரது சாதிப் பேராக இராது என்றே நினைக்கிறேன்).
Kannan
கே.பி இன் வழி போவது பற்றி யோசிக்கலாம், ஆனால் இயக்கம் சேர்த்த காசில் US$ சில கோடியாவது கையில் இருக்க வேன்டாமா?
பிரபாகரன் ஒரு ஈன தமிழன். போராளிகளை காட்டி கொடுத்து தான் மட்டும் தப்பித்துகொள்ள வழி தேடிய துரோகி.
தமிழ்மாறன்,
போர்க் கைதிகளைநடத்தும் விதம், சரணடைந்தோர்க்குப் பாதுகாப்பு என்பன பற்றிய சர்வதேச விதிகள் உள்ளன. அவற்றை மீறல் போர்க் குற்றங்களுள் அடங்கும். சித்திரவதை மனித உரிமை மீறல்களுள் அடங்கும். எனவே பிரச்சனை வெறுமே பிரபாகரன் பற்றியதல்ல; அது ஒரு படையின் நடத்தை பற்றியது. அதற்குப் படைத் தளபதியும் முப்படைகளின் பிரதம ஆணையதிகாரி என்ற வகையில் சனாதிபதியும் பொறுப்பாவர்.
சரணடைந்த பலர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். பிரபாகரன் உட்பட வேறு பலர் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டுள்ளனர். இவற்றை யார் விசாரிப்பார், யார் தண்டிப்பார் என்பன ஒரு விடயம்.
ஆனால் அவை சர்வதேசச் சட்டங்களின் முன், தண்டனைக்குரிய, பாரிய குற்றாங்கள். அவற்றை நியாயப்படுத்துகிறவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்குமா என்பதில் எனக்கு ஐயமுண்டு.
பிரபாகரன் கிளிநொச்சியின் வீழ்ச்சியின் போது அல்லது பின்பேனும் தப்ப வாய்ப்பிருந்த்தது என்றே சொன்னேன். விடயங்களைக் கவனித்து வாசித்து விட்டுக் கருத்துரைப்பது எல்லார்க்கும்நல்லது.த
ஓமோம் 1990களில ரோட்டு ரோசட்டா மற்றஇயக்க உறுப்பினர்களை சுட்டு எரிக்ககேக்கையும் சரணடைந்த மற்றைய உறுப்பினர்களை ரகசியமாக கொன்று போட்டதும் சர்வதேசச்சட்டப்படி நியாயமெண்டு ஏற்றுக்கnhள்ளப்பட்டிருக்கோ. தனக்கு தனக்கு எனும்போது நெஞ்சு பதக்கு பதக்கு என்று இருககுமாம். முதலில உங்களுக்கு மனச்சாட்சி இருக்கோ என்று யோசியுங்கோ!!!
யார் சொன்னது ரஹ்மாதுலாஹ் ? முஸ்லிம்கள் ஆகிய நீங்க இனியும் சிங்களருக்கு வால் பிடித்து இருங்கள் .அவர்கள் தமது நன்றித்தனத்தைக் காட்டுவார்கள் . இப்ப துவக்கம் தான் பொது பல சேனா?
நான் சொல்லுறேன் முஸ்லிம்களாகிய உங்க சமுகம் இனித் தமிழ் பேசக் கூடாது. சிங்களத்தை பேசுங்க.
தயவு செய்து வயில் வந்தபடி பேசாதீர்கள், ரஹ்மாதுலாஹ். சிந்தித்துப் பேசுங்கள்.
நான் பிரபாகரனின் அரசியலை முற்றாக நிராகரிப்பவன், எனினும் இறுதியில் தப்பவோ போராடவோ வழி அற்ற நிலையில் எந்த அறிவுள்ள மனிதனும் செய்திருக்கக் கூடியதையே பிரபாகரன் செய்தார் என்பதை ஏற்கிறேன்.
பிரபாகரன் தப்பி ஓட நினைத்திருந்தால் அதை கிளிநொச்சி விழுந்த போதே செய்திருக்கலாம். பின்பும் வாய்ப்புக்கள் இருந்தன.
தவறான வழிகாட்டல்கள், தவறான மதிப்பீடுகள் எனப் பல முக்கிய விடயங்கள் இருக்கையில் ஒரு தனி மனிதர் மீது முழுப் பழியையும் போடுகிற போக்குப் பயனற்றது.
பிரபகரன் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமா? அல்லது மார்பிலே குண்டு பாய்ந்த்து இறந்திருக்க வேன்டும் என்பது உங்கள் விருப்பமா?
சரணடைந்தவரைக் குரூரமாகக் கொன்றவர்களைப் பற்றி என்றேன் ஒரு சொல் விமர்சித்திருக்கிறீர்களா?
சரணடைந்தவர்கள கொன்றவர்கள விமர்சிக்க முடியாது ஏனென்றால் பிரபாகரன் மீதான வெறூப்பே பலரை குருட்டுத்தனமாக விமர்சிக்க வைக்கின்றது ஆனால் தப்புவதற்கு சந்தர்ப்பங்கள் இருந்தது என்பது தவறானது.புலிகள் மீதான பொறீயானது இறூகி தப்பிப்பதற்கான பாதைகள் அனைத்தும் அடைபட்ட பின்னால் சரணடைவதை தவிர வேறூ வழி பிரபாகரனுக்கு இருக்கவில்லை இருந்திருந்தால் அவர்கள் ஓடித் தப்பி இருப்பார்கள்.புலிகள் எப்போதும் மக்கள காவு கொடுத்தே தம்மை பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.முற்றூ முழுதாக தமது ஆயுதங்கள நம்பி மக்கள பலி கொடுத்து தப்ப நினைப்பவர்கள்.
தமிழ்மாறன் என்ற உம்முடைய பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாதீர்கள்.
தமிழ்மாறன்,
போர்க் கைதிகளைநடத்தும் விதம், சரணடைந்தோர்க்குப் பாதுகாப்பு என்பன பற்றிய சர்வதேச விதிகள் உள்ளன. அவற்றை மீறல் போர்க் குற்றங்களுள் அடங்கும். சித்திரவதை மனித உரிமை மீறல்களுள் அடங்கும். எனவே பிரச்சனை வெறுமே பிரபாகரன் பற்றியதல்ல; அது ஒரு படையின் நடத்தை பற்றியது. அதற்குப் படைத் தளபதியும் முப்படைகளின் பிரதம ஆணையதிகாரி என்ற வகையில் சனாதிபதியும் பொறுப்பாவர்.
சரணடைந்த பலர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். பிரபாகரன் உட்பட வேறு பலர் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டுள்ளனர். இவற்றை யார் விசாரிப்பார், யார் தண்டிப்பார் என்பன ஒரு விடயம்.
ஆனால் அவை சர்வதேசச் சட்டங்களின் முன், தண்டனைக்குரிய, பாரிய குற்றாங்கள். அவற்றை நியாயப்படுத்துகிறவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்குமா என்பதில் எனக்கு ஐயமுண்டு.
பிரபாகரன் கிளிநொச்சியின் வீழ்ச்சியின் போது அல்லது பின்பேனும் தப்ப வாய்ப்பிருந்த்தது என்றே சொன்னேன். விடயங்களைக் கவனித்து வாசித்து விட்டுக் கருத்துரைப்பது எல்லார்க்கும்நல்லது.
பிரபாகரனும்தான் சரணடைந்தவர்களை மிகக்கேவலமான நிலையில் கொன்றார். ஆயுதம் இல்லாதவர்களையும்கூட கொன்றதன் விளைவே இன்று அவரின் நிலையும். பிரபாகரன் தமிழீழம் பெறுவதாக பேக்காட்டினால் பரவாயில்லை. ஆனால் ஆயிரமாயிரம் உயிர்ளையல்லவா பலி எடுத்தும் பலிகொடுத்தும் விட்டார். தமிழ் மக்களுக்காக சேர்த்த காசெல்லாத்தையும் போராடுவதற்கு முதலாகப்போட்டு கடைசியில் மற்றவர்களின் பொக்கட்டுக்குள் நிரம்பத்தான் வழியேற்படுத்திவிட்டார்.
செட்டியைக் கொல்லும்படி பிரபாகரனிடம் சொன்னவர் தங்கத்துரை. குட்டிமணியும் பிரபாகரனும் அவரை சுட்டுக்கொன்றார்கள். சிறி சபாரத்தினம் உடுப்பிட்டி தாசை வஞகமாக விருந்துக்கு வரும்படி அழைத்து கொன்றார். சுதா ரமேஸ் என்ற தன் தோழர்களையே சிறீ சபாராத்தினம் கொல்லவில்லையா? பிரபாகரன் நாகராஜாவை மகாபலிபுரத்தில் வைத்து துப்பாக்கியால் சுட முயற்சித்தபோது நாகராஜா தன் இயக்கதிற்கு துரோகமிழைத்திவிட்டு கள்ளக்கடத்தல் செய்ததற்கு மன்னிப்பு கேட்டபடியால் பிரபாகரனால் மன்னிக்கபப்ட்டார். நாகராஜாவின் கடத்தல் மட்டும் மாக்சிய சிந்தாந்தத்திற்கு எதிரானதில்லையா? பிரபாகரன் மட்டும் இயக்கத்திற்காக கொள்ளையட்டித்தால் மட்டும்நீங்கள் மத்திய குழுவைக்கூட்டி கண்டிப்பீர்களா அய்யfர் அவர்களே முதலில் உஙகள் ஜாதிய அடையாளத்தைவிட்டு வெளியே வாருஙகள். உஙகள் வாழ்கை வரலாற்றை முத்ல்லில் எழுதுங்கள். நாஙகள் அதையும் படிப்போம்.
Niruban , your statement was not true, Suthan is still living in London. Only Ramesh was killed by TELO, he accepted during the investigation he got the pistol from Pirabakaran to kidnap Srisabaratnam
அய்யரே! நீங்கள் எழுதிய இருபதாவது தொடருக்கு ஒன்றுக்கு மேல் யாரும் கருத்தாடல் செய்யக் கூடாது என்றான பின், “உள்ளக ஜனநாயகமும், விவாதத்திற்கான வெளியும் உருவாகும்” என விளாசித் தள்ளுங்கோ.இதெல்லாம் பெரிய கம்யூனிசமப்பா.நல்ல தாடியோட உங்கிட படத்தை இனியொருவில மாட்டுங்கோ.
பிரபாகரன் தன் வழியில் போராடியபோது இந்தியா கூட தன் உளவுகரங்களை வன்னியில் நுழைக்கமுடியாமல் தடுமாறியது. புலம் பெயர் புலி உண்டியல்காரை நம்பி பேச்சுவார்த்தைக்கு சென்றபடியால் தான் பல புதிய பாதைக்காரர்கள் மீதமும் புலிகள் அமைப்பில் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டோம். புதிய புதிய பாதைகார்ளை நம்மித்தான் அவரும் முள்ளிவாய்க்கால்வரை சென்ன்றிருக்க்கிறார். இப்போதுதான் பிரபாகரனும் புலிகளும் இல்லை. இப்போ இவர்கள் மாக்சிய வழியில் மகிந்தவிடம் அனுப்பி விடுதலை காணலாமே/ ஏதோ பிரபாகரனால்தான் எல்லாம நாசம் என்பவர்கள் ஏதாவது தாஙக்ள் செல்லும் பாதையில் விடுதலை காணலாம் என்பதை எழுதலாமே/
முள்ளிவாய்க்கால் முடிவுக்கு புலம்பெயர் புலி உண்டியல் குழுக்கியோர் ஒரு காரணம் என்றால் இனொன்று தாம் அகலக் கால் வைத்தது. ஆர்மி அகலக்கால் வைக்கின்றது என்று குதூகலத்துடன் கூறியோர் தாம் தமது உண்மையான பலத்தை மறந்து, தம் உண்மையான எண்ணிக்கையை மறைத்து சினிமா காட்டியது கிளைமாக்ஸில் வில்லனை ஹீரோ ஆக்கிவிட்டது.
உறுப்பினர் எண்ணிக்கை சிறிதாக இருக்கும்போது இந்தியாவென்ன அமெரிக்க இஸ்ரேலிய புலனாய்வினர் கூட நுழைவது கஷ்டம்தான். அது பெரிய கெட்டித்தனம் இல்லை. எண்ணிக்கை அதிகமாகி குமணை வரை கால் வைத்து, அந்தப் பணிமனை, இந்தப் பணிமனை அரசியல் செயலகம், சமாதானப் பனிமனை. உளவுத்துறை, உளவுத்துறையை உளவு பார்க்கும் துறை, எட்டடுக்கு பாதகாப்பு பிரிவுகள், விளையாட்டுத்துறை, டிவி, வானொலி. பத்திரிகைகள், இணையங்கள் நீதிமன்றம் , போலிசு, வங்கி என்றெல்லாம் உடான்ஸ் காட்டுவதற்கு ஆட்கள் இல்லை. குமரி பெண்களை பள்ளியிலிருந்து பறித்து செஞ்சோலையில் பறி கொடுத்ததையும் , சிறுவர் போராளிகள் என்று குழந்தைகளை வலோத்காரமாய் இணைத்து வெறும் முப்பது நாள் இறுதியில் மூன்று நாள் பயிற்ச்சி என்று போர்களத்துக்கு அனுப்பி பலி கொடுத்ததை பார்க்கும்போது. ஐயர் எழுதும் பண்ணை பயிற்சி, பின்னர் வடிகட்டி எடுத்து போற்பறைப் பயிற்சி, பின்னர் சிறந்தவர்க்கு விசேட பிரிவில் பயிற்சி என்று ஆரம்பத்தில் இருந்ததெல்லாம் காற்றில் பறக்கவிடப் பட்டு நூறு வீத இராணுவ இயக்கம் என்ற கொள்கையும் உடைந்ததை பார்கின்றோம். மதிவதனியை பார்த்ததும் ஊர்மிளா கொள்கை காற்றில் பறந்ததை போல் தனி மனிதக் கொள்கைகள் முப்பதினாயிரம் போராளிகளினதும் எழுபதினாயிரம் பொது மக்களினதும் மரணத்துக்கும், என்பத்தி எட்டாயிரம் விதவைகள் வடக்கு கிழக்கில் உருவாவதற்கும் இரண்டரை இலட்சம் வீடுகள் வன்னியில் மாத்திரம் இடிபடுவதட்கும் காரணமாயிற்று என்பதில் ஐயமில்லை.
ஓமோம். கடைசிக்காலத்தில் அதாவது 1990-1995 காலப்பகுதியில் புலிக்குச்சேர்ந்தவர்கள் காதல் தோல்வி
யும் படிப்புகக்கள்ளமும் மற்றவர்களுக்கு பயம் காட்டவேண்டும் என்ற நோக்கங்களில் இருந்தவர்கள் மட்டுமே. ஒருவரும் சுயமாக சிந்தித்து எடுத்த முடிவல்ல. மக்களுக்காக போராடுகின்றோம் என்ற சிறுதுளி உணர்ச்சியுமற்றவர்ளே இவர்கள். இவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சனை என்பது போதிக்கப்பட்டதைவிட பிரபாகரனின் புழுடா மூட்டைகள் தான் திணிக்கப்பட்டன. பிரபாகரனுக்கு ஆயுதமேந்தி போராடவேண்டுமென்பது கனவு. அதற்காக தமிழ்மக்களின் பிரச்சனையை ஒருகருவியாக பாவித்துக்கொண்டார்.
யழவன் . வாய்க்கு வந்த மாதிரி பேசதா.
ஐயரின் பதிவுகளில் அளவுக்கு மீறித் தனி மனிதப் பக்கங்களைப் பார்க்கிறோம்.
முக்கியமான விடயம் ,சிலவாறான தவறுகள் எற்படக் காரணமாயிருந்த சிந்தனைகளும் செயற்பாடுகளையும் அவற்றின் போக்குக்களையும் விளங்கிக் கொள்வது தான்.
இன்னமும் தமிழ் மக்கள் விடுதலைப் போரட்டத்தைப் புலிகள் என்று அடையாளப் படுத்திக் கொண்டு வரலாறைப் பார்க்கப் போகிறோமா? அதிலும் மோசமாக, எல்லாவற்றையும் பிரபாகரன் என்ற (அதி உத்தம / அதி கொடிய ) மனிதனைப் பற்றீய விவாதங்களாகவே தொடரப் போகிறோமா?
அடுத்த கட்ட நடவடிகைகளுக்கு பெரிய முட்டு கட்டையாகவிருப்பது இந்த மனித துதி பாடல். அதுவும் பிழையான மனிதனின் துதிபாடல் என்றால் பரவாயில்லை மெளனித்து போன ஒரு மனிதனை பற்றியது. இறந்தும் போராட்டத்தை மழுங்கடிப்பது எவ்வளவு அநியாயம் எவ்வளவு தூரம் மக்களை ஏமாற்றியிருக்கிறது இந்த தனி மனிதநம்பிக்கை.. கோத்தபாய கூறுவதுபோல் இந்த சிந்தனை வளர்ச்சியடைந்த புலம் பெயர் தமிழர் எழுச்சியை எவ்வளவு தூரம் கட்டுபடுத்தி வைத்திருக்கிறது இந்த மனிதன் இறந்து விட்டானா? இல்லையா என்ற கேள்வி? இதற்கு விடை கிடைக்கும் வரை தமிழன் ஓரணி சேருவது சிரமம். இதற்கு தடையாகவிருப்பது
1.உண்டியல் பொறுக்கிகள்,
2.சிங்கள அரச இயந்திரம்
இதுஒரு நல்லகருத்து. “இன்னமும் தமிழ் மக்கள் விடுதலைப் போரட்டத்தைப் புலிகள் என்று அடையாளப் படுத்திக் கொண்டு வரலாறைப் பார்க்கப் போகிறோமா? ” இப்போது தமிழ் மக்களின் பிரச்சனையைவிட இந்தப்புலியை பலியெடுத்த பிரச்சனைதான் பெரிதாக கதைபடுது. எல்லோரும் புலிக்காகத்தான் போராடினார்கள். மக்களுக்காகவில்லை என்பது சற்று புலனாகிறது.
இனியெல்லாம் ரூ…. லேட்
நல்லா கண்டு பிடிக்கிறீங்க
நீங்க பேசாம ஏதாவது
உளவுத்துறையில் சேரலாம்”
தலைவரை நம்பி சென்ற ஆயிரக்கணக்கான இயைஞர்கள் சிங்களச்சிறையில். பெண்பிள்ளைகளின் நிலையை நினைத்தாலோ உயிர் போய் விடுகிறது. இலட்சக் கணக்கில் மக்கள் எல்லாம் இழந்து விட்டார்கள். சிங்கள அரசோ நாளாந்தம் கொக்கரிக்கிறது. நிறுத்த வேண்டிய நேரத்தில் சண்டையை நிறுத்தி இருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? இதையெல்லாம் தெரிந்து கொள்ள எந்த உளவுத் துறையில் சேர வேண்டும் என சொல்லுறியள்!! தலைவருக்கு ஒளிவட்டம் கட்டி மேலும் எம்மை முட்டாளாக்க வேண்டாம். தலையில ஏற்கனவே கோடலி வெட்டு இருக்கிறது.
ஓமோம், செத்தாப்பிறகு கோடலி வெட்டு என்ன, மண் வெட்டி, அலவாஙுகு வெட்டு கூட போடலாம் .நீர் தானோ ” விளக்கு பிடிச்சனீர் தலைவரை வெட்டும் போது. காட்டிக்கொடுத்து, உசிரோடு பிடிபட்ட, பண்டாரவன்னியனை வீரன் எண்டு சொல்லுஙோ..ஆனால் இறுதி வரைப்போராடி அந்த மக்களுக்காவே உசிர் விட்ட பின்பு , சரணடைந்து, சித்திரவதை செய்து கொல்லப்பட்டாராம் எண்ட கதையை மட்டும் தூக்கித் திரியுங்கோ….கைப்பந்து விளையாட்டில் ,நடுவர் ஒருவர் நடுவில நெற்றின் உயரத்திக்கு கதிரை ஒண்டைப் போட்டுட்டு, ரெண்டு பக்கவும் பாப்பார் அல்லவோ.அதுமாதிரி நீரும் புலிகள் கட்டின அணையின் மேல ,நடுவில கதிரையப் போட்டுட்டு இருந்து பாத்தனீர் ஆக்கும் ,விஜயபாகு படையணி தலைவரையும், தளபதிகளையும் வெட்டும்போது….
கைப் பந்து எனும் தங்கள் தமிழுக்கு நன்றீ . தார்மீகநோக்கிலும் உலக விதிகளீலும் நோக்கினால் பிரபாகரனது மனைவியும் , மகளூம் கொல்லப்பட்டது சிங்கள அரசின் இனவெறீயை,வெறீத்தனத்தையே காட்டுகிறது.இது எந்த நோக்கிலும் சரியானது அல்ல.
வன்னியன் உளறாதீர் கோடலி வெட்டு எப்படி ஆதாரம் இல்லாமல் சொல்லப்படுகிறதோ அதே மாதிரிதானே அதை இல்ல்லையென்று மறுக்கும் உமது கருத்தும். மரண பயம் பலரை கோழையாக்கியிருக்கிறது.
,83 பிந்திய வரலாறு ஐயர் எழுத தேவையில்லை.
நிருபன் கூறுவது நியாயமானதே.ஆனால் எல்லோருமே ஒரே குட்டியில் ஊறிய மட்டைகளாகிவிட்டார்கள்.இவர்களெல்லோருக்கும் வழிகாட்டியும் பிரபா தான்.
தொடர்ந்து பதிவுகளை வாசித்து வந்துள்ளேன்.
பிரபாகரனின் தியாகம் குறித்து ஐயர் அதிகம் பேசிவருகிறார். ஆனால் கடந்த முப்பாதாண்டு காலத்தில் பல போராளிகளும் – மக்களும் புரிந்த தியாகங்கள் பல.
ஐயரின் பதிவுகள் – மற்றும் நமது வரலாறும் அரசியலற்ற ஒரு இராணுவ இயக்கத்தின் பலவீனங்களை தெளிவாகவே எடுத்துக்காட்டியுள்ளன. பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் புலிகளுக்கு வழங்கப்பட்ட விமர்சனமற்ற ஆதரவு இப் பின்னடைவுகளுக்கு முக்கிய காரணமாக கொள்ளப்படலாம். மக்களின் அரசியல் விழிப்புணர்வு – அரசியல் உரிமைகளுக்கான பற்றுறுதியான போராட்டங்களே ஒடுக்குமுறையாளனுக்கெதிரான போராட்டத்திற்கு மட்டுமன்றி விடுதலைக்காகப் போராடுகின்ற அமைப்புக்களையும் சிரியான திசைவழியில் அதாவது மக்கள் விடுதலையின் பால் செயற்பட வைக்கும்.
விஜய்
பிரபாகரன் ஒரு இனமானத்தமிழன்.
சொல்வது சரி, இதனால் தான் உலக்முழுவது ஈழத்தமிழரை அகதிகளாக்
ஏற்றுமதி செய்துள்ளார். தமிழரின் பிரதேசங்களில் இராணுவத்தை நிரப்பியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் புலியை நம்பி போனவர்களை பலி கொடுத்தார்.
உலக்முழுவதும் புலியின் பெயரால் த்மிழரை மிரட்டி செல்வந்தர் ஆவதற்கு
தமிழர்களிற்கே வ்ழிகாட்டினார். அரசாங்க் பண்த்தை வாங்கி தமிழர்களிற்கு
உதவி செய்த துரையப்பாவை துரோகியெனெ கொலை செய்தார்.
இன்று
தமிழரின் பண்த்தை சுருட்டி இலங்கை அர்சிடம் கொடுக்கும் கே.பி யை
யும்
அவரே உருவாக்கினார். இதில் துரையப்பா துரோகியா அல்ல்து கே.பியா?
அல்லது
பிரபாவா? துரை
அரசியல் இன்றி ஓர் அசைவும் இல்லை!…
ஐயாவின் இன்றைய வரலாறு காலத்துக்குப் பிந்தியலை. பலர் இதற்கு முன்னரே பல வரலாற்றுப் பதிவைச் செய்துள்ளனர். பிரபாகரனின் மரணம் பலரைப் பாதித்துள்ளது. வெளிப்படையாகச் சொல்வதானால் பிரபாகரனின் மரணம், இவ்வாறு நிகழும் என்று இவர்கள் ‘கனவிலும் நினைக்கவில்லை!’ இந்த அரசியல் பலவீனமே, இன்றைய வரலாறு!!…
பிரபாகரனின் மரணம் ஒரு தனிமனிதனின் மரணமல்ல! அது ஒரு வர்க்கத்தின் பலவீனமான மரணம் என்பதை ஏற்க மறுக்கும் வரை, இவர்களால் எதையும் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது!!!
மறுபுறத்தே, இந்த வர்க்கத்துக்கான பிரபாகரனின் போராட்ட வரலாறுப்பாத்திரம்,வரலாற்றில் முக்கியமானது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது…
இத் தொடரில் கூட நீங்கள் ஒர் உண்மையைக் காணலாம்…
”நாம் ஆரம்பத்தில் தவறிழைத்திருக்கிறோம் அவற்றைத் தவறுகள் என்று ஏற்றுக்கொண்டு என்று ஏற்றுக்கொண்டு அமைப்பு வேலைகளில் இணைந்து செயற்படுவோம் என்பது மட்டும் தான் எனது குறைந்தபட்சக் கோரிக்கையாக அமைந்தது.
தவறுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உள்ளக ஜனநாயகமும் விவாதத்திற்கான வெளியும் உருவாகும் என நானும் நாகராஜாவும் நம்பியிருந்தோம். இவ்வாறான பன்முகத்தன்மையின் அவசியத்தை, விவாதங்களூடாக முடிவுகளை நோக்கி நகரும் தேவையை அனைத்து உறுப்பினர்களும் எதிர்பார்த்திருந்தனர்.
நான் கூறிய அனைத்தையும் அவதானமாகக்கேட்டுக்கொண்டிருந்த பிரபாகரன், எனது கோரிக்கையை முற்றாக நிராகரிக்கிறார். பேபி சுப்பிரமணியமும் அதனை ஆமோதிக்கிறார். தான் பற்குணம் மைக்கல் ஆகியோரைக் கொலைசெய்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்தக் கொலைகளை அன்றும் இன்றும் சரியான செயற்பாடாகவே கருத்துவதாகப் பிரபாகரன் வாதிடுகிறார். அதற்கு மேலேயும் சென்று கொலைகள் தவறு என்று தான் கருதினால் தற்கொலைசெய்துகொள்வேண்டும் என்றும் பிரபாகரன் கூறுகிறார். அவை தவறானால் தான் தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்கிறார்.
மைக்கல் வெளியேறி பாதுகாப்புப் படைகளிடம் சிக்கிக் கொண்டால் எமக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதியிருந்தோம். பற்குணம் தனியாகச் சென்று செயற்பட விரும்பிய போதும் இவ்வாறான மனோநிலையிலேயே இருந்திருக்கிறோம். அவர்கள் அரசின் உளவாளிகளாகவோ, ஆதரவாளர்களகவோ, இன்னும் காட்டிக்கொடுப்பாளர்களாகவோ இருந்ததில்லை.
எது எவ்வாறாயினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமையைப் பாதுகாக்க இந்தக் கொலைகள் அவசியமானது தான் எனப் பிரபாகரன் கூறுகிறார்.
பிரபாகரனின் இந்தக் கூற்றானது எமக்கு பேசுவதற்காக இருந்த அனைத்து வழிகளையும் மூடிவிடுகிறது. தனிமனிதப் படுகொலைகளைத தவறு என்று தெரிந்த பின்னரும் நியாயப்படுத்துகின்ற போக்கானது, இணக்கப்பாட்டை நோக்கி நகரமுடியாத இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது”
மீண்டும் மீண்டும் கூறுகிறோம் இவைகள் ‘தனிமனிதப் படுகொலைகளல்ல!!!!!!’:
அரசியற் படுகொலைகளே!!!……
ரூபன்
10 07 10
புலிகளில் அரசியல் இருந்ததா அரசியல் கொலைகள் செய்வதற்கு.
பிரபாகரன்
தன் உயிரைகாக்கவும அச்சத்திலும் செய்யததொடங்கிய கொலகள். பின்பு
புலிகள் தம்து
இயக்கத்தை காக்க செய்த பேரழிவுகள் இவைகளை அரசியல் என்று சொல்லலாமா?
இவைகளெல்லாம் அரசியலென்றால் புலம் பெயர்நாடுகளில்
புலிகள்
என்ன் அரசியல் செய்தார்கள்.
கொலைகள் செய்தார்கள்,
மாற்றுக்கருத்துக் காரர்களை தேடி அடித்து உதைத்தார்கள், மக்களை மிரட்டி பண்ம் பறித்தார்கள், அரசுகளிற்க்கெதிரான் சட்ட விரோதநாடவ்டிக்கைகளில் எல்லாம் ஈடுப்ட்டார்கள்.
இதனால் ஈழ்த்தமிழர் கண்டது முள்ளிவாய்க்கால் பேரழிவு.
புலிகள் கண்டவை: சர்வதேச வர்த்தகம், தனிப்பட்டவர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும், முதலீடுகள், மீதியுள்ளோர் புலம் பெய்ர்நாடுகளில் சொத்துக்கள்.
புலிகளின் அரசிய்ல் இதுதான். உலக்த்திற்கு இது பயங்கரவாதம். ஈழ்த்தமிழர்களிற்கு விடுதலைப் போராட்டம். இதனைச் சொல்வோர் துரோகிகள்
துரை
ரூபன்,
தனிமனிதப் படுகொலைகள் அரசியல் படுகொலைகள் தான். தெருவில் போகிற தனிமனிதர்களைப் பற்றியா ஐயர் கூறுகிறார்? அரசியல் மனிதர்களைப் பற்றித்தான். அவை அரசியல் படுகொலைகள் தான். ஒருவனது கருத்தை எதிர்கொள்ள துணிவற்ற லும்பன்கள் மேற்கொள்கின்ற அரசியற் படுகொலைகளை இன்று இணையங்கள் வரை விரிவடந்துள்ளன. பிரபாகரனின் மரணம் ஒரு வர்க்கத்தின் மரணம் ? எந்த வர்க்கம மரணித்துப் போனதாகக் கருதுகிறீகள் ரூபன்? கண்ணாயின் கொலைபற்றி ஐயர் பேசவில்லை எனக் குறைபட்டுக்கொள்கிறீர்கள் ரூபன். ஐயர் கூறுவது தமிழீழ விடுத்லைப் புலிகள் என்ற இயக்கதிற்குள்ளே நடந்த உட்கட்சிப் போராட்டம் பற்றி மட்டும் தான். அதுவும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில்.
‘அருவனுக்கான’ அரு மருந்து!
”ஒருவனது கருத்தை எதிர்கொள்ள துணிவற்ற லும்பன்கள் மேற்கொள்கின்ற அரசியற் படுகொலைகளை இன்று இணையங்கள் வரை விரிவடந்துள்ளன. பிரபாகரனின் மரணம் ஒரு வர்க்கத்தின் மரணம் ? எந்த வர்க்கம மரணித்துப் போனதாகக் கருதுகிறீகள் ரூபன்? ”
இது ‘அருவனின்’ ஒரு பக்க நியாயம்!
”கண்ணாயின் கொலைபற்றி ஐயர் பேசவில்லை எனக் குறைபட்டுக்கொள்கிறீர்கள் ரூபன். ஐயர் கூறுவது தமிழீழ விடுத்லைப் புலிகள் என்ற இயக்கதிற்குள்ளே நடந்த உட்கட்சிப் போராட்டம் பற்றி மட்டும் தான். அதுவும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில்.¨”
நல்லது…
‘கண்ணாடி’ கூட்டணியின் போராட்டத்துக்கு வெளியில் எதிலும் பங்குபற்றியதற்றகாக ‘சிறைவாசத்தை’ அனுபவிக்கவில்லை!’
மேலதிகமாக…
‘புலிகள் இயக்கம்’ என்று ஐயர் பங்குபற்ற முன்னம்… ( புத்தூர் கொளளைக்கு முதல்…அவரின் பதிவுகளில் இருந்து…)
அதன் முதல் காலங்களையும் தொட்டு (துரையப்பாவின் வரலாற்றுக்கு முன்னாகவும்), அவரது பதிவு பேசியுள்ளதே , ஏன்?
இதற்கு ‘அருவனால்’ பதில் தர முடியுமா?
இருக்கவும்…
இவருக்குப் பரியாத புதிருக்கான…
”எந்த வர்க்கம் மரணித்துப் போனதாகக் கருதுகிறீகள் ரூபன்? கண்ணாயின் கொலைபற்றி ஐயர் பேசவில்லை எனக் குறைபட்டுக்கொள்கிறீர்கள் ரூபன்”
வர்கங்கள் மரணித்து விடுவதாக ரூபன் என்றும் கருதவில்லை!
வரலாற்றில் உட்கட்சிப் போராட்டம் என்ற ஒன்று புலிகளுக்குள் நடந்ததா?
இது ‘ஐயாவின்’ வரலாற்றுக் குறிப்பையே ‘கேலி’ செய்கிறது..
அதே வர்க்கங்கங்கள் தான் இன்றும் ‘வரலாறு’ என்று பேசுகின்றன ….
ரூபன்
1107100 2.05 மு.ப
சுய விமரிசனம் செய்ய சொன்னால் தற்கொலை செய்வேன் என்று சொல்வது சிறுபிள்ளை தனமல்லவா?
மே 16 வரை பிரபாகரன் இனமான தமிழனாகத்தான் அடையாளம் காணப்பட்டான். ஆனால் அவன் கை எப்போ தலைக்கு மேல் உயர்ந்ததோ? அன்று அவன் அனைத்து தமிழரையும் தலைகுனிய வைத்து விட்டான்.
In 1981 after Kuttimani and Thangadurai were arrested, prabakaran and Srisabaratnam came to their supporter’s house. A member of the household told them there is an unknown person going on the street. prabakaran suggested to srisabaratnam that they both go and kill the unknown. Srisabaratnam refused, saying we don’t have to kill them but it’s better if we leave from here. In this incident, even a little child can understand the mind of prabakaran. I don’t know why iyer and the other people let him live. If I were in that situation, I would get rid of prabakaran first. I don’t know why they let this cancer develop. In iyer’s article, he said that he and nagarajah met with prabakaran and baby subramaniam. It’s a surprise that prabakaran didn’t shoot you at the time, you are lucky. After shooting you he would have changed the story and said, you picked up a gun and that’s why he killed you. After Kuttimani’s arrest, prabakaran spread false propaganda that kuttimani was a womanizer. After kuttimani’s death, he tried to use kuttimani’s name for his own propaganda but srisabaratnam told him: you are not allowed to use our leader’s name. Earlier, Thangadurai said that prabakaran was a male prostitute.
I absolutely agree with you Siv. We see a severe lack of progressive politics in all these leaders, and also in people like Iyer. Everyone of that time must answer a very important question: WHY WASN’T PRABHAKARAN ELIMINATED IN THE FIRST PLACE ???? To be honest, how many assassination attempts were made on him? Answer is NONE..
People like Iyer who moan about the situation now are none but nagging old ladies. We also see a considerable amount of hypocrisy in them…..
Reading through Iyerm, I can at least see how intelligent/sensible Suntharam had been…Pehaps the only sensible person in this tragi-comedy of an armed struggled. To his disadvantage he was surrounded by idiots like Iyer….
I hope Iyer’s book doesn’t come out…It is going to be a shit load of blabber…..
Even knowing how Prabaharan kills people out of fear for his own life, Suntharam carelessly moved around and prabaharan killed him easily. Like that, Oberoi Thevan told Prabaharan that he did not know politics and only knew how to use arms. Prabaharan then told Oberoi Thevan that he would kill him. After the Welikada massacre, the ltte pretended to cooperate with everyone. Oberoi Thevan trusted this and went to talk to ltte without any security. This time also, they were able to kill him easily. In 1985, prabaharan caught some people in TELO and told them to put chloroform on srisabaratnam and bring him back unconscious. This attempt failed. Even after this, srisabaratnam was careless and that’s why he was also killed. Totally, everyone had chances to stay alert and increase their guard but they didn’t. Everyone failed, and that’s why they were killed. prabaharan is not intelligent, but other people are fools.
http://www.youtube.com/watch?v=3zqKhqMoQsw
Please see this website and read the comments below the video
He was proud about the 13 armies, and their guns. He never worried about the 3000 people who were killed because of his actions. This happened in 1983. In 2009 around the end of the war, he used the public as human shields and surrendered, which is also an important point after watching this video. HE NEVER WORRIED ABOUT THE PUBLIC
“..செயற்குழு, மக்களமைப்பு, மக்கள் போராட்டம் என்பவற்றிலிருந்து இணைவை ஏற்படுத்தும் நோக்கில் கோரிக்கைகளை குறைத்துக்கொண்டே வருகிறோம்…”
உங்கள் மொழியில் ‘பிரபாகரன் குழுவின்’ உணர்வு பத்திரிகை,புதிய பாதையின் முன்னே வெளிவந்திருக்கிறது.
உங்கள் தொடரில் விடுதலைப்புலிகளின் தற்காலிகச் செயற்குழுவின் அறிக்கையாக சிவனடி,அய்யர் என்கிற மத்திய குழு உறுப்பினர்கள் நடத்தை விபரிக்கப்பட்டிருக்கிறது.
தற்காலிகச் செயற்குழு,பத்திரிகை வெளியீட்டுடன் மக்களமைப்பை முதன்மைப் படுத்திய,அன்றைய புலிகள் அமைப்புடன்,எப்படி அய்யா கோரிக்கைகளை குறைத்துக்கொண்டே போனீர்கள்?
நீங்கள் கதை எழுதுகிறீர்களா அல்லது கதை விடுகிறீர்களா?
இதுஅவர்காளல் அப்போதிருந்த மனநிலைமையிலும் களநிமையிலும் எடுக்கப்பட்ட முடிவுகள்தான். அப்போது அவர்களுக்கு முன்நோக்கிய சிந்தனைகள் இருக்கவில்லை. இந்தப்போராட்டம் அனுபவப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்படவில்லை. விடலைப்பருவத்தில் தாங்க்கள் கீரோவாகவேண்டம் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுபோல் தோன்றுகின்றது. அதனால்தான் துலைவரின் பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடினார்கள் கடைசிவரைக்கும். அதுவும் யாழ்ப்பாணத்தில் பிச்சைக்காரர்கள் அதிகமாகஇருந்தபோது. இன்று செத்தவீட்டைக் கொண்டாடுவதற்குக்கூட ஆளில்லை. நும்மாவாசொன்னார்கள் ஒருவனுடைய செத்தவீட்டில் கலந்துகொள்ளும் அனிதர்களை வைத்துத்தான் அவனுடைய மதிப்பு தெரியவரும்என்று. இல்லோரும் கொள்ளையடித்தகாசை வெள்ளையடிப்பதிலல்லவா குறியாக இருந்தார்கள்.
வளர்ச்சியடைந்த காலமாக கருதபட்ட 2002-2006 கால கட்டங்களிலேயே பிரபாகரன் எவ்வாறு பேச்சுவார்த்தைகளிலில் ஆர்வம் காட்டினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
Hi,
Every one initially got involved in arm struggle with good intention. But none has kept that momentum forever. Selfless sacrifice was needed if freedom fighting. Whenever ego (‘I’ -self) take over one’s mind then selfless would be lost. That has happened to our Thamil leaders. After some point, freedom fighting has become ‘power’, ‘popularity’, ‘Authority’ etc- these were the main reason for our failure. Hope our future leaders will take are of their ego.
Nada Manivannan
எந்த அறிவுள்ள மனிதனும் செய்த வேலைகளுக்கு புலி சூட்டிய பெயர்தான் துரோகி. அதுவே புலித்தலைமை நோக்கி இன்னொருவன் கூறும் போது ஏற்க சிரமமான விடயம்தான். மாத்தையாவை துரோகி என்று கூறுபவர்கள் பிரபாகரனை மாதுரோகி என்பதை ஏற்றுதான் ஆக வேண்டும். பிரபாகரன் தற்கொலை செய்திருந்தால் கொள்கைக்காக செத்தான் எனலாம். தப்பியோடும்போது குண்டுபட்டு செத்திருந்தால் மீண்டும் போராட முனைந்தான் என சாட்டு கூறலாம். ஆனால் சரணடைந்தது எதற்கு உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு நீ என்ன செய்தாயோ அதை விட சிங்கள இராணுவ இந்திய புலனாய்வு உன்னை மேலாக நடத்தும் என்ற நப்பாசையா? சரணடைந்தது 100% உண்மையானால் பிரபாகரன் துரோகிதான்.
சரணடையாவிட்டாலும் துரோகிதான் மாமணி. தான்அழிந்தாலும் போராட்டம் தொடர வழிசமைத்துவிட்டுப்போபவன் தான் உண்மையான தலைவனாகஇருக்கமுடியும். இந்த அடிப்படையறிவுகூடவா இல்லை?.
………..அப்போது இயக்கத்திலிருந்து விலகிச் சென்று புதிய இயக்கம் உருவாக்கினால் மரண தண்டனை என்பதை பற்குணம் மறந்துவிட்டுப் பேசுகிறார் என்றும்இ இவருக்கு மரண தண்டனை தான் தீர்வு என்றும் எல்லோரிடமும் கூறுகிறார். இந்த விடையம் பற்குணத்திற்குத் தெரியாது. அவர் தவிர்ந்தஇ நான் உள்பட்ட அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும்ன் அவர் கூறுயதை ஆமோதிக்கிறார்கள்…..(பாகம் 5)
….செயற்குழுஇ மக்களமைப்புஇ மக்கள் போராட்டம் என்பவற்றிலிருந்து இணைவை ஏற்படுத்தும் நோக்கில் கோரிக்கைகளை குறைத்துக்கொண்டே வருகிறோம். எதிலும் இணக்கம் ஏற்பட்டாகவில்லை. இறுதியில் நான் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாம் கொலைகளுக்கான சுயவிமர்சனம் செய்துகொள்வோம் என்கிறேன்…..(பாகம் 21)
1)எப்படி உங்களால் “மக்கள் போராட்டம்” என்ற மூலகருத்தை குறைக்க முடிந்தது?
2) எல்லோரும் ஆமோதிக்கிறார்கள்…..(பாகம் 5) > பின்னர் எப்படி தனிமனிதனிடம் கேள்வி கேட்க முடியும்? சேர்ந்து ஆமாப் போடுவது பின்னர் தனியொருவனின் தலையில் கட்டுவது. இதற்கு பெயர் மத்திய குழு
ஆதலால்> குறைத்துக்கொண்டே வருகிறோம் என்பதை குழப்பிக்கொண்டே வருகிறோம் என்று தான் வாசிக்க முடிகிறது.
கரப்பொத்தான் பூச்சியைப்பார்த்து பயப்படும் பெண்களைவிட ஒரு கொள்கையாளனைப்பார்த்து பயப்படும் வீரன் ஒரு கடைகெட்ட முட்டாள் பயந்தாங்கொள்ளி.
தற்கொலை செய்வேன் தற்கொலை செய்வேன் என்று அடிக்கடி கூறிய பிரபாகரன் சின்னம் பொன்னனையெல்லாம் நஞ்சடித்துக் கொன்றபின்பும் தான் நஞ்சடிக்காது போனது ஏன்? கடசிக்கணம் வரை வாழவேண்டும் என்ற ஆசை இருந்தது அல்லவா? இவனைப்போன்றே புலிகளால் தற்கொலை: கொலை செய்யப்பட்டு பிள்ளைகளுக்கும் இருந்திருக்குமல்லவா
Well said, Anpu.
Now you are talking.
குருமண்வெளி சீர்பாதம் ?
ஆம். முன்பு போராட்டங்களுக்காக கொள்ளையடித்தார்கள். பின்பு தங்களுக்காகவே கொள்ளையடிக்கத்தொடங்கிவிட்டார்கள். இன்னும் அந்த கொள்ளை நிற்கவில்லைபாருங்கள். அன்றும்கணக்கில்லை இன்றும்கணக்கில்லை. இன்று கொள்ளையடிப்பதையே முழுநேரப்போராட்டமாக்கிவிட்டார்கள். வெளிநாட்டிலிருந்து பியர்அடித்துவிட்டு கதைப்பதைவிடத்து தமிழ்பிரசேதங்களிலுள் தமிழ்மக்களுடன் கதைத்து அவர்களுக்கு என்னதீர்வுவேண்டும் என்று கேளுங்கள்.
இவ்வளவு கருத்துகளையும் கட்டுரைகளையும் படிக்கும் பொழுது எனக்கு ஒரு உண்மை புரிந்தது. கடந்த 50 ஆண்டுகளாக நாம் எதுவுமெ செய்யாது ஏதாவது எழுதிக் கொண்டிருந்தால் கத்தி இன்றி ரத்தமின்றி:அல்லது துப்பாக்கியும் கண்டும் இன்றி எமது இனத்தை இன்றிருக்கும் நிலைக்கே சத்த மின்றி கொண்டுவந்திருக்க முடியும்? நாடும் மக்களும் என்னவாகப் போனாலும் இதுபோல யாரையாவது திட்டி எழுதுங்கள் அப்போது தான் நீங்கள் இன்னும் சாகவில்லை என்பதைப் பிறர் தெரிந்து கொள்ள முடியும்.
போராட்டம் என்ற பெருமரத்தின் ஆணிவேரில் நானும் ஒரு மூல வேர் என்று தங்களை தாங்களே பீத்திக்கொள்ளும் கனவான்களே . இன்று வரை நீங்கள் சாதித்ததுதான் என்ன . ஐயர் குமணன் மனோ சுந்தரம் சித்தார்த்தன் உமாமகேசவரன் பற்குணம் செட்டி இப்படி பலரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டி அவர்களுடன் பழகி சில காலங்கள் வாழ்ந்தவன் நான் . இவர்கள் அனைவருமே ஒரு நிலையில் இருந்ததில்லை குழப்பவாதிகள், மாறி மாறி எதையாவது உளறி கொண்டே இருப்பார்கள். ஒரு மனிதன் ஒரு இலட் ச்சியத்தில் பற்றுகொண்டால் நேர்வழி செல்ல கூடியவனாக இருக்க வேண்டும் . அன்று தொடங்கி இன்றும் இன்னும் பிரபா கரனை அவர் நேர்மையை மதித்து அந்த வழியில் அசையாது நம்பிக்கை கொண்டு பயணிப்பவர்களில் நானும் ஒருவன். உங்கள் ஒவ்வொருவருடைய நேர்மை இன்மையும் செயலுமே உங்களை நிலையான பாதையில் செல்ல வைக்கும் . சந்தர்ப்பவாதங்களும் சறுக்கும் எண்ணங்களும் உங்களை பித்தலாட்ட காரர்களாக மாற்றிவிடும், அனாலும் நாங்கள் யோகியர்கள் என்று சொல்லும் ஆசை மட்டும் மாறது எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கும் இந்த அயோக்கியர்கள் எமது விடுதலை போராட்ட த்தை பலவழிகளில் பின் இழுத்து செய்த குளறுபடிகள் கொஞ்சமா . உங்களால பிரபாகரன் ஒருவனை மட்டுமே விமர்சிக்க முடியும் . காரணம் அவன் ஒருவனே இறுதிவரை அன்று நாம் கொண்டா இலட்சிய பாதையில் நேர்மையாக சென்றான்,
தனிமனித கொலைகள் பற்றி பேசும் உத்தம சீலர்களே உங்கள் கரங்களால் வீழ்ந்த ஆயிரம் அப்பாவிகளை நாங்கள் பட்டியல் இட்டால் எங்கே போகும் உங்கள் நியாடங்கள். உங்கள் ஈன செயல் பாடுகள் இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் உதவியாக நின்றதே அன்றி உங்களால் மக்கள் விடுதலை , ஈழ விடுதலை நோக்கி நகர முடியவில்லை/ இந்தியா ஈழம் அமைவதை எவ்வளியிலும் தடுக்கும் என்று தெரிந்தும் நீங்கள் ஆடிய ஆட்டங்கள் போட்ட வேசங்கள் உலகம் அறிந்ததே . ஈழம் அமைய வேண்டும் என்று உறுதியுடன் போர்போராடிய பலர் மனதில் மாற்று கருத்துக்களை விதைத்து அந்த பாதையை குலைத்து தமிழின துரோகிகளை உருவாக் கிய பெருமை இந்த பாவிகளையே சேரும்.
உங்களை போன்று பிரபாகரன் சிங்களவனிடம் இந்தியனிடம் பிச்சை கேட்டு கைகட்டி நிற்கவில்லை மாறாக உறுதியுடன் போராடினார். உலக சக்தியின் முன் இன்றைய வியாபார நலன்கள் பெரிதுபடுத்த படுகின்றது . ஈழம் 1995 இல் அமைந்தது. 2008 வரை அதன் நிழல் அரசு இயங்கியது. ஐக்கிய நாடுகளின் அயோக்கிய தனமும் இந்தியாவின் கபடமுமே ஈழத்தை வீழ்த்தியது. பிரபாகரன் தனது இலட்சியா பாதையில் தன இலக்கை அடிந்து விட்டார் . ஈழம் அமைத்து பலநாடுகளின் பிரதிநிதிகளை தன இருப்பிடம் வர வைத்து பேசிய மா மனிதன். உங்களைப் போன்று வேதாந்தம் பேசிக்கொண்டு வீணான கற்பனையில் இன்று கோவனம் கூட சிங்களவன் கையால் தந்தாலே உடுத்த முடியும் என்னும் ஈன அரசியல் நடத்துபவர்கள் ஆகிவிட்ட நீங்கள் , ஈழம் அடையவில்லை என்று குருட்டு வாதம் பேசும் துரோகிகளாக இருப்பதை உலக தமிழ் இனமே அறிந்த படியால், இன்றும் பிரபாகரனை தலைவனாக மனதில் ஏற்று அணி வகுத்து நிற்கின்றது உலக தமிழ் இனம். ஒரு சில ஓநாய்கள் வேட்டையாடும் திறன் இல்லாது சிங்கங்கள் வேட்டையாடி உண்ட விலங்குகளில் அழுகிய எச்சங்களை நக்கி புலியின் வரல்லற்றை பேசுகின்றன….வேடிக்கை …. இந்த ஐயர் யார் விடுதலை புலிகள் அமைப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக இருந்து பின்னர் அந்த அமைப்பிற்குள் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளில் ஜீவிக்க முடியாது சுயநல பாலியல் தேவை மறுப்புக்களால், பிரிந்து சென்ற உமா மகேஸ்வரனுடன் புளொட் அமைப்பில் இணைந்து அங்கேயும் தனது வக்கிரகங்கள் விலைபோகாது அதேநிலை தொடர பின்னர் என்.எல்.எவ்.ரி அமைப்புடன் இணைந்தபோதும் அங்கேயும் அவர் தோல்வி கண்டார். என்ன நோக்கத்திற்காக விடுதலை என்று புறப்பாடார்களோ தெரியவில்லை ஆரம்ப காலங்களில் மக்களின் ஆதரவு இன்றி தவித்து படிப்படியாக மக்களின் ஆதரவை பெற புலிகள் கொண்ட பண்புகளை இவர்கள் கொண்டிருக்கவில்லை . ஆயுத கவர்ச்சி என்று பேசியபடியே ஆயுதங்களை காட்டி விலாசமாக திரிந்தவர்கள், விடுதல் என்னும் அனலில் வெந்து சாக் முடியாது சொகுசாக விடுதலி பெற்று விடலாம் வாரீர் என்று இந்தியாவின் வர்கைக்காக தவம் கிடந்த வெள்ளை வெட்டி கொக்குகள். விடுதலை பாதையை விட்டு வெளியேறி சமூக கொலருபடிகளில் சிக்கி ஓரத்தநாடு என்னும் கோல களத்தில் காணமல் போன பல் அப்பாவி இளைஜர்கள் போன்று காணாமல் போன மனிதர் எங்கோ மன்னர் காடுகளில் உமாமகேஸ்வரன் மகிமையால் மண்ணாகி மக்கிபோயிருகின்றார் என்று அறிந்தோம் . தோல்வியையே தொடர்ந்தும் சந்தித்து தனது இலக்கினை அடையமுடியாது ஜயர் எழுதிய புலம்பல் தன்னை நியாய படுத்த எழுதியவையே .. இது ஒரு தோல்வியை தழுவிவான் புலம்பல்.