கொலம்பியாவுடன் இயல்பான உறவு சாவேஸ் உறுதி

பன்டோபிஜோ, (வெனிசுலா), ஜூலை 13-

கொலம்பியாவுடன் புதிய அத்தியாயம் துவங்கு கிறது என வெனிசுலா ஜனா திபதி ஹியூகோ சாவேஸ் கூறினார்.

வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேசும் கொலம் பியா ஜனாதிபதி அல்வரோ உரைபும் கடந்த வெள்ளி யன்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு வெனிசுலா வில் நடைபெற்றது. இரு நாடுகளின் உறவு கடந்த சில மாதங்களாக கவலையளிப் பதாக இருந்தது. இரு நாட்டு உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் விதமாக இருதலைவர்களும் வெனிசு லாவில் சந்தித்துப் பேசினர். இதற்கு முன்னர் கடந்த 2007ம் ஆண்டு இறுதியில் இவ்விரு தலைவர்களும் சந்தித்தனர்.

கடந்த மார்ச் மாதம் கொலம்பியப் படைகள் எல்லையைக் கடந்து ஈக்கு வடாரில் தாக்குதல் நடத் தின. ஈக்குவடார், வெனி சுலாவின் கூட்டணி நாடா கும். எனவே, வெனிசுலா வுக்கு கொலம்பியா மீது கோபம் ஏற்பட்டது. பார்க் அமைப்பு தலைவர் ரவுல் ரேயஸை கொல்வதற்காக கொலம்பியா இந்த ஊடுரு வலை நடத்தியது.

நட்பு நாடு ஈக்குவடார் மீது தாக்குதல் நடந்ததை தொடர்ந்து வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் கொல ம்பியா – வெனிசுலா எல் லைப் பகுதியில் தனது படைகளை அனுப்பினார். கொலம்பியா நடத்திய ஊடு ருவலில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர்களில் பார்க் அமைப்பிற்கு சாவேஸ் நிதி யுதவி மற்றும் படை உதவி அளித்தது தெரியவந்தது.

இந்த நிலையில் பதட்ட மான சூழ்நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சாவேஸ் மற்றும் கொலம் பியா ஜனாதிபதி அல்வரோ உரைப் 2 மணி நேரம் வெனி சுலாவின் பன்டோ பிஜோ நகரில் பேச்சுவார்த்தை நடத் தினர்.