தெற்கசியாவிலேயெ மலேரியாவை ஒழித்த நாடு இலங்கை என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து கிடைக்கும் இலாபத்தில் அமரிக்கா தலைமையிலான நாடுகளின் ஆக்கிரமிப்பிற்குத் துணை செல்லும் ஐ.எம்.எப் நிறுவனத்தின் சிறப்புச் சந்திப்பு ஒன்றிலேயே பில் கேட்ஸ் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் சுகாதாரச் சேவைப் பணிப்பாளர் பாலித மஹிபால அமரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பில் கேட்ஸ் உட்பட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். மலேரியா அழிக்கப்பட்டதாக புழகாங்கிதமடையும் பில்கேட்ஸ் கொசுக்கள் போல மக்கள் கொல்லப்படபோது எங்கே சென்றார்.
உலகம் முழுவதும் அமரிக்க அரசின் பொருளாதர வன்முறையின் குறியீடாகத் திகழும் பில்கேட்ஸ் மலேரியாவைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு அப்பாவி மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவில்லை.