ஆயுத வர்த்தகம் தொடர்பில் 5 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தின் மெரையின் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சுஜி குணபால என்பவரே விடுதலைப்புலிகளுக்கு சிலின் 143 ரக இலகு ரக விமானங்கள் மூன்றை பெற்றுக்கொடுத்துள்ளதாக புலனாய்வுதுறையினருக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு 18 மாதங்களில் பின்னர் கப்பல் ஒன்றின் மூலம் இந்த மூன்று விமானங்களையும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு கொண்டு சென்றததாக குணபால தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஜி குணபாலவின் தந்தை சிங்களவர் என்பதுடன் அவர் காவற்துறை சிப்பாயாக பணியாற்றினார். அவரது தாய் தமிழ் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் விசேட படைப்பிரிவு ஒன்றை ஆரம்பிக்க தேவையான ஸ்லோக் மற்றும் ஹெல்னர் என்டிகோச் கைத்துப்பாக்கி மற்றும் 45 ஆயிரம் தோட்டக்களை கொள்வனவு செய்ய முயன்ற போது சுஜி குணபால கைதுசெய்யப்பட்டார். இவருடன் மேலும் இரண்டு ஆயுத கடத்தல்காரர்களும் கைதுசெய்யப்பட்டனர். தாய்லாந்தில் பல மணிநேரங்கள் குணபாலவிடம் விசாரணைகளை நடத்தியதாகவும் அவர் விடுதலைப்புலிகளுக்கு விமானங்களை கொண்டு சென்றமை குறித்து கூறியதாகவும் புலானாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த காலத்தின் போது குணபாலவுக்கு விமான கடவுச்சீட்டை அப்போதைய அரசின் அரசியல்வாதி ஒருவரே பெற்றுக்கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறும் அந்த செய்தி, இந்த சம்பவம் குறித்து அப்போதைய அரசாங்கத்தின் குறித்த புலனாய்வுதுறை அதிகாரி அறிக்கை ஒன்றையும் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.