போலீசின் வன்முறைத் தாக்குதலை நிறுத்தும் பொருட்டு, கூடங்குளம் காவல் நிலையத்தில் தானும் போராட்டக்குழுவைச் சேர்ந்த முன்னணியாளர்களும் கைதாவது என்று முடிவு செய்திருப்பதாக உதயகுமார் அறிவித்தார்.
அமைதியான முறையில் போராடி வந்த மக்கள் மீது போலீசு நடத்திக் கொண்டிருக்கும் வன்முறைத் தாக்குதலை நிறுத்தும் பொருட்டு, இன்று மாலை கூடங்குளம் காவல் நிலையத்தில் தானும் போராட்டக்குழுவைச் சேர்ந்த முன்னணியாளர்களும் கைதாவது என்று முடிவு செய்திருப்பதாக உதயகுமார் அறிவித்தார்.
இன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் இடிந்தகரை போராட்டப் பந்தலில் மக்கள் மத்தியிலும் ஊடகத்தினர் மத்தியிலும் அவர் இந்த முடிவை அறிவித்தார்.
அந்த அறிவிப்பின் ஒரு பகுதி ஒலிப்பதிவாக இங்கே தரப்படுகிறது.
______________________________________________________
வினவு
மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும்பொருட்டு தான் கைதாகப் போவதாக உதயகுமார் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்ட உதயகுமார், நான் எந்த வெளிநாட்டிலிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். இந்த மாதா மீது சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த வெளிநாட்டிலும் ஒரு காசு கூட வாங்கவில்லை என்று கூறி உணர்ச்சிவயப்பட்டு உடைந்து அழுதார்.
இதைக் கண்டவுடன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும் உணர்ச்சிவயப்பட்டு கதறி அழத்தொடங்கினர். திடீரென்று ஆத்திரம் கொண்டு எழும்பிய ஒரு இளைஞர்கள் குழு, உதயகுமார், புஷ்பராயன் போன்றோரை அப்படியே தூக்கிச் சென்றது. உதயகுமாரை கைது செய்ய விடமாட்டோம். வா, வந்து பார். எங்கள் பிணத்தின் மீதுதான் அவரைக் கைது செய்ய முடியும் என்று மைக்கில் முழக்கமிட்டபடியே அவரைத் தூக்கிச் சென்றனர் இளைஞர்கள்.
மின்னல் வேகத்தில் படகு புறப்பட்டுவிட்டது.
ஒரு கொந்தளிப்பான சூழலை எதிர்நோக்கியிருக்கிறது கூடங்குளம் போராட்டம். நூற்றுக்கணக்கான பிணங்களின் மீது மட்டுமே இந்த அணு உலை இயங்க முடியும் என்பது வெளிச்சமாகி விட்டது.
இந்தப் போர்க்குணமும், மான உணர்ச்சியும் தமிழகத்தை பற்றிக் கொள்ளட்டும்!
பணம் வாங்கினாரா இல்லையா என்பது இருக்கட்டும், உலகத்தை பலமுறை அழிக்கவல்ல அணு ஆயுதத்தைத் தயார்நிலையில் வைத்திருக்கும் அமெரிக்க அணு ஆயுதங்களையும் மற்ற நாட்டின் அணு ஆயுதங்களையும் ஒழிக்கக் கோராமல், இந்திய அமெரிகக அணு சக்தி ஒப்பந்தங்களை எதிர்க்காமல், அதை ஒழிக்கக் கோராமல் ஏன் வெளியிடக் கூடக் கோராமல் பேசுவது யாருக்காக.
ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதென்பது பணம் வாங்கினார இல்லையா என்பதல்ல. எந்த கருத்துக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதுதான். அதில் பணம் வாங்காமல் கூட சேவையாற்றிவிட்டுப் போகட்டும். மக்கள் மதநிலையில் ஆழ்த்திவிடும் மதபோதகர்போல் அங்கு மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்துள்ளார் என்பது தெரிகிறது. அவர்களின் பயத்தினை மூலதனமாக்கி ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வது எவ்வகையில் சரியானது.
மக்கள் பிரச்சினையை ஏகாதிபத்தியத்தின் நலனிற்காக செயல்படுத்துவது என்பது எதிர்க்கப்படவேண்டும். மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள், பாதுகாப்புப் பிரச்சினைகள் அனைவரையும் பிரதிநித்துவப்படுத்தக் கூடிய மக்கள் கமிட்டி, அரசியல் பிரதிநிதிகளின் கமிட்டி, விஞ்ஞானிகளின் கமிட்டி ஆகியவற்றின் கூட்டுக் கமிட்டிகளினை அமைத்து தீர்க்க முயல்வதற்கு கோரவேண்டும். அவர் உறவு வைத்திருக்கும் அனைத்து கிறித்துவ நிறுவனங்களும் வாங்கிக் கொடுத்தால் என்ன அவர் பெயரில் வாங்கினால் என்ன. அரசியல்வாதிப் போல் நான் வாங்கவில்லை என்று கூறுவதுபோல் இருக்கிறது. எல்லாவற்றையும் விட ஒரு ஏகாதிபத்தியத்தின் சார்பாக நின்று அதற்கு சாதகமாக இன்னொரு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சேவை செய்வது.
மக்களை சரியான பிரச்சினையை நோக்கித் திரட்ட வேண்டும். அணு உலையை மக்களுக்கு ஆபத்து என்ற பொய்யான கருத்தின் அடிப்படையில் திரட்டுவது மிகவும் சதித்தனமானது. மக்களின் அறியாமையினை ஏகாதிபத்தியத்தின் சேவைக்காக அணிதிரட்டிக்கொள்வது முறியடிக்க வேண்டும்.
உலகம் முழுவதுமுள்ள உயர்ந்த பாதுகப்பின் அளவுக்கு உத்தரவாதப் படுத்துவதக் கோருவதும், அணு உலையைத் திறக்க அதற்கு தேவையானதை செய்யவேண்டும் என்று கோருவதும் அவசியம்.
தீர்ப்புகள் எழுதப்பட்டாயிற்று…
N G O க்களின் வேலை முடிந்தாயிற்று…
இடிந்தகரையின் கதை முடிந்தாயிற்று….
இந்தியா நாட்டிற்கு அத்திய வாசதேவை மின்சாரம். அங்குள்ள மக்களுக்கு வேறு ஊரில் குடியமர்தம் செய்யலாம். இலங்கையில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்தியாவில் புனர்வாழ்வு அளிக்கவில்லையா. அணுமின் திட்டத்ததை எதிர்பது தேசதுரேகம்.
யப்பா சீக்கிரம் உள்ளே போ,வெளியே வந்த பின்பு, சுவிஸ் பேஙகில் பணத்தோடு சொகுசாக வாழ்
சுவிஸ் பேங்க் என்ன உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிறமாதிரி ஒரு மக்கள் வங்கி எண்டநெனைப்போ ?
இல்லங்க்நான் இவ்வளவுநாள் அப்படிதான்நினச்சனுங்க இப்பதான் தெரியும் உங்கள் போன்ற இடிச்ச புலி செல்வராஜ் தான் அங்கு மனேஜர் என்று
ஏன் புலம் பெயர் தமிழர் அமைப்புகள் இந்த கூடங்குளம் போராட்டதிற்கு ஆக குறைந்தது ஒரு ஆதரவு அறிக்கை தன்னும் வெளியிடவில்லை?.
என்ன தடுக்கிறது?நாம் உண்மையிலேயே மக்களிற்காக சிந்திப்பவர்களா?ஏன் இனிஒரு வாசகர்களே ஒருமித்து ஒரு ஆதரவு குரலை கொடுக்க
முடியாதா(நடை முறை சிக்கல்கள் எனக்கு தெரியாது ) ?
உணர்வுத் தோழமை இரண்டு பக்கத்தில் இருந்தும் வர வேண்டும். ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு ஆதரவாக, தமிழகத் தமிழர்கள் போராடினால் மட்டும் போதாது. ஈழத் தமிழரும், தமிழகத் தமிழரின் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தால் நீயும் என் தோழனே!
மனனர் யாழ்ப்பாண பருத்தித்துறை மீனவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுகள்
Thevan any accident at Koddankulam like the Chernobyl in1986 will have serious effects in the Northern Province of Sri Lanka – Shri Lanka. The damage that the Indian Army did here because of a flawed foreign policy.