இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலையில் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மறைமுகமாக தொடர்புபட்டு உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குற்றம் சுமத்தியுள்ளார்.
இவர் மேலும் கூறியபோது இக்குற்றச்சாட்டை அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் மிக நீண்ட காலமாக முன்வைத்து வந்திருக்கின்றது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் திராவிட முன்னேற்ற கழகம் இருந்தது என நாம் கூறி வந்திருக்கின்றோம் என்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்புக்கள் கொலைகாரர்களோடும், சமூக விரோதிகளோடும், மக்களின் எதிரிகளோடும் கூட்டுச் சேர்ந்து அவர்கள் மக்களை காட்டிக்கொடுத்த வரலாறு எமது கண்முன்னே நீண்டு கிடக்கிறது. ஜெயலலிதாவின் சிறப்பம்சமோ தனியானது, தேர்தலில் வெற்றியடைந்து ஒரு வாரத்திற்கு உள்ளாகவே ஈழத் தமிழர்களுக்கு விரோதமான அரசியலை முன்வைக்க ஆரம்பித்துவிட்டார்.
தமிழ் நாட்டின் சீர்திருத சிந்தனை முறைமையான திராவிடத்தை கே.பி இலங்கையிலிருந்து காட்டிக்கொடுக்க, அதனை தி.மு,கவில் ஆரம்பித்து ஜெயலலிதா வழிமொழிந்திருக்கிறார்.
I knew about Crocodile tears, we dont need any dumb support from any dumb politicians!