புலிகளின் முன்னாள் சிரேஷ்ட செயற்பாட்டாளர்களான கே.பி. மற்றும் தயா மாஸ்டர் ஆகியோருக்கு காட்டும் அன்பை சிறையில் உள்ள அப்பாவித் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அரசாங்கம் ஏன் காட்டமுடியாது என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். புலம்பபெயர் தமிழர்களைக் குறிவைத்து கே.பி, தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் மீது அரசு அன்பை பொழிந்து வருகிறது. இவர்களுக்கு எதிராக எதுவித வழக்கும் தொடரவில்லை.
அவர்கள் தடுப்புக் காவலிலும் வைக்கப்படவில்லை. தடுப்புக் காவலில் உள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்களை உடனடியாக விசாரணை செய்து அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.
கே பி யும் , தயா மாஸ்டரும் முப்பது வெள்ளீக் காசுக்காக காட்டிக் கொடுத்தவர்கள் ஆனால் தமிழ் இளஞர் அப்பாவிகள் அவர்கள வெள்ளீக்காசுகளீல் விற்க முடியுமா? யூதாஸ் இனமும் இஜேசு பரம்பரையும் ஒன்றா?