தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும், அதன் சர்வதேசப் பிரிவை நடத்திவந்தவரும், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்துடன் இணைந்து செயற்பட்டவருமான குமரன் பத்மனாதன் அல்லது கே.பி என்று அழைக்கப்படுபவர் இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற்றுள்ளார். ராஜித சேனரத்ன இத்தகவலைத் தெரிவித்துள்ளார். இன்று ஆளும் கட்சியில் முக்கிய புள்ளியான ராஜித சேனரத்ன விமான நிலையத்தின் ஊடாகத் தப்பிச்சென்ற கே,பி தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகக் கூறினார்.
கே.பி ஐ போலிஸ் தேடிச் சென்ற போது அவர் தற்கொலை செய்துகொண்டதாக நேற்று கொழும்பு முழுவதும் வதந்திகள் பரவின.
வன்னி இறுதி அழிப்பில் கே.பி அரச உளவாளியாகச் செயற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால், அழிப்பின் இறுதி நாட்களில் பாதுகாப்பு அமைச்சை நடத்திவந்த மைத்திரிபால சிரிசேனவிற்கு கே,பி இன் அறிமுகம் ஏற்கனவே இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாரவர்க்கம் தனக்குத் தேவையான போது மனிதர்களைப் பயன்படுத்துவதும் தேவையற்ற போது தடையங்களின்றி அழித்துவிடுவதும் இயல்பான போதும் கே.பி மேலும் அரசால் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்.
ராஜபக்ச குடும்பத்தால் பயன்படுத்தப்பட்ட கே..பி ஐ புதிய அரசு தேடும் போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரமாயிரம் கைதிகளை தமிழ்த் தேசியயக் கூட்டமைப்பும்,
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் தேடாதது ஏன்?
தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்கும் தன்னுடைய பணியினை செய்து வருவதாகவும் தான் நாட்டை விட்டு ஒருபோது தப்பிச்செல்ல மாட்டேன் எனவும் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.









##ராஜபக்ச குடும்பத்தால் பயன்படுத்தப்பட்ட கே..பி ஐ புதிய அரசு தேடும் போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரமாயிரம் கைதிகளை தமிழ்த் தேசியயக் கூட்டமைப்பும்,
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் தேடாதது ஏன்?##
இலங்கையின் சோஷலிஸ அரசியல்வாதிகளும்தான் தேடவில்லை..
Let him go! Why we have to search for him.
I wish Ananthi Sasitharan also leave Sri Lanka for good. Her husband was a terrrorist and killed Tamils.