Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கே.பி தலைமையில் உருவாகும் புலம்பெயர் மாபியா வலைப் பின்னல்?

இனியொரு... by இனியொரு...
07/13/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

சர்வதேச ஆயுதக் கடத்தல் குற்றவாளியான கே.பி என்ற குமரன் பத்மநாதன் மற்றும் இனப்படுகொலைத் திட்டத்தை வகுப்பதில் பிரதான பாத்திரத்தை வகித்த கோதாபய ராஜபக்ச ஆகியோரது இணைவில் புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசின் மாபியா வலைப் பின்னல் ஒன்று உருவாக்கம் பெறுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இலங்கை சென்று கே.பி ஐச் சந்தித்த ஒன்பது புலம் பெயர் தமிழர்கள் கொண்ட குழு தவிர முன்னதாகவே பலர் கே.பி மற்றும் கோதாபய ஆகியோரைச் சந்தித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பில் ஈடுபட்டோரில் கே.பி மலேசியாவிலிருந்து தலை மறைவான வேளையில் அவருடன் தங்கியிருந்த சிலரும் அடங்குவர் என மேலும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசுடன் இணைந்து தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் கே.பி யைச் சந்தித்துத் திரும்பிய ஒன்பது பேர் குழுவில் ஒருவரான விமலதாஸ் என்பவர் மேற்கு லண்டன் எல்லையிலுள்ள நியூமோள்டன் பகுதியில் தமிழ்ப் பாடசாலை ஒன்றை நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது. இப் பாட்டசாலையை விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த நடேசனின் உறவினர்கள் சிலரும் விமலதாஸுடன் இணைந்து நடத்தி வருகின்றனர்,
இன்டர் போல் நிறுவனத்தால் தேடப்படுகின்ற கே.பி யுடன் ஏற்கனவே தொடர்பிலிருந்ததாக குறிப்பிடும் இந்த நபர்கள் பிரித்தானிய அரசின் சட்டச் சிக்கல்களுக்கு உள்ளாவார்களா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.
தவிர, புலி உறுப்பினர்கள் சரண்டைவின் போது இடைத் தரகராகச் செயற்பட்ட சந்திரனேரு, கேபியைச் சந்திக்கச் சென்ற சார்ள்ஸ் அன்டனிதாஸ், மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பாதிரியார்  ஜெகத் கஸ்பர் போன்றோரிடையேயான தொடர்புகள் குறித்தும் பரவலான சந்தேகங்கள் நிலவுகின்றன.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஐநா சீர்திருத்தம் கோரியுள்ளது இந்தியா.

Comments 2

  1. sivaram says:
    16 years ago

    இலங்கைத் தீவினுள்ளே சிங்கள அரசின் எத்தகைய பயங்கரவாத நடவடிக்கையினையும் எதிர்த்து நிற்கும் பலம் ஈழத் தமிழர்களுக்கு இப்போது கிடையாது. இப்போதும் அவர்களுக்கான அரசியல் பலமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி சிங்களத்தை நகர்த்தும் அளவிற்குப் பலமற்றவர்களாகவே நாட்டின் உள்ளேயும் வெளியேயும் அலைய வைக்கப்படுகிறார்கள். ஆதலால், சிங்கள தேசம் தமிழ் மக்கள் குறித்தோ, அவர்களது அரசியல் பலம் குறித்தோ அலட்டிக்கொள்ள வேண்டிய நிலையில் இப்போதும் இல்லை என்பதே யதார்த்தம்.

    முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் சக்தியாகப் புலம்பெயர் தமிழர்களின் பலம் மட்டுமே உள்ளது. அதனைச் சிதைப்பதற்கும், அழிப்பதற்குமான அனைத்து முயற்சிகளையும் சிங்கள தேசம் மேற்கொண்டு வருவதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சி நிரலின்படியான நிகழ்வு ஒன்றே தற்போது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொதி நிலையை உருவாக்கியுள்ளது.

    சிங்கள தேசத்திற்கு இரகசிய பயணத்தை மேற்கொண்டு, மீண்டும் தத்தமது புலம்பெயர் நாடுகளுக்குத் திரும்பிய 9 பேர் கொண்ட குழுவினர் புலம்பெயர் தேசத்துத் தமிழர்களின் கொதி நிலைக்கு எரி சக்தியாக உள்ளனர். இந்தக் குழுவினரின் சிறிலங்காப் பயணம் இன்னொரு உண்மையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இதுவரை காலமும் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள் குறித்து, இந்தப் பயணத்தை மேற்கொண்டு திரும்பியவர்கள் வெளியிடும் மாறுபாடான கருத்துக்கள் அதிர்ச்சிகள் நிறைந்தனவாகவே உள்ளன.

    கே.பி. அவரது எதிரிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். கே.பி. சிறிலங்காப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். கே.பி. சிங்களச் சிறையில் சித்திரவதைகளை அனுபவிக்கிறார். போன்ற அவரது விசுவாசிகளின் பரப்புரைகளுக்கும், கே.பி. குறித்து மக்கள் மத்தியில் எழுந்திருந்த பல சந்தேகங்களுக்கும் இந்த 9 பேரது பயணம் பல விடைகளைக் கொடுத்துள்ளது.

    கே.பி. நலமாக இருக்கிறார். கே.பி. வசதியாக இருக்கிறார். கே.பி. சந்தோசமாக இருக்கிறார். கே.பி. சிங்கள அரசின் மரியாதைக்குரிய விருந்தினராக இரக்கிறார். கே.பி. சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வு அதிகாரியான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண அவர்களுடன் 2006 முதலே தொடர்பில் இருந்துள்ளார். கே.பி. அவர்களிடம் இராணுவ அதிகாரிகள் மிகுந்த மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். கே.பி. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும், போர்க் குற்றவாளியுமான கோத்தபாய ராஜபக்ஷவை ஆரத் தழுவ முற்பட்டார் என்ற செய்திகளெல்லாம் ஊடகங்கள் ஊடாக வந்து குவிந்து கொண்டே உள்ளன.

    இவற்றையெல்லாம் வெளியிடுபவர்கள் வேறு யாரும் இல்லை. திரு. கே.பி. அவர்களுடன் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தொலைபேசித் தொடர்பில் இருந்தவர்கள். திரு. கே.பி. அவர்கள் தனக்கு நெருக்கமானவர்களாக, தன்னால் நம்பக்கூடியவர்களாகத் தமது பல நூறு ஆதரவாளர்கள் மத்தியிலிருந்து பொறுக்கி எடுத்து, கொழும்புக்கு அழைத்து, விருந்து வைத்துத் தன் விருப்பங்களை நிறைவேற்ற அழைத்தவர்கள்தான் இந்தக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். ஒருவர் வெளியிடும் கருத்துக்கும், மற்றவர் வெளியிடும் கருத்துக்குமிடையே அதிக வித்தியாசங்கள் இல்லாதிருப்பினும், சிலர் உண்மைகளை மறைத்து, கே.பி.யைக் காப்பாற்ற முயல்கிறாhகள் என்றே புலம்பெயர் தமிழர்கள் நம்புகிறார்கள்.

    நாங்கள் அல்லல்படும் எமது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், சிறையில் இருக்கும் போராளிகளை விடுவிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்றெல்லாம் கதை விடும் இந்தப் புதிய கருணாக்கள், இந்தப் பணியைச் செய்வதாகத்தானே இருபது வருடங்களுக்கும் மேலாக சிங்கள தேசத்திடம் அமைச்சராகக் குப்பை கொட்டும் டக்ளஸ் இன்றுவரை சொல்கிறார். அதற்கும் மேலாக, இவர்கள் எதை வெட்டிக் கிழிக்கப் போனார்கள் என்பது புரியாத புதிரல்ல. ஏற்கனவே, இவர்களது பணியைச் செய்து கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களும், கருணாவும், ஆனந்தசங்கரியும் இதைத்தானே சொல்லி வருகின்றார்கள். இதற்கும் மேலாக இங்கிருந்து சென்றவர்கள் எதைச் சாதிக்க முயன்றார்கள் என்பது எமது மக்களுக்குப் புரியாத விடயமல்ல.

    புலம்பெயர் தேசங்கள் எங்கும் புதிய கருணாக்கள் உருவாக வேண்டும். அதன் மூலம், புலம்பெயர் தமிழர்களது பலம் சிதைக்கப்பட வேண்டும் என்ற சிங்களத்தின் நிகழ்ச்சி நிரல் ஒன்றும் எதிர்பார்க்கப்படாத அதிசயயமல்ல. அதனை உருவாக்காமல் விட்டுவிட்டால்தான் ஆச்சரியப்பட வேண்டும். ஒரு கெட்டதிலும், ஒரு நல்லது நடக்கும் என்பார்கள். இவர்கள் இப்போது போய் வந்தார்கள், அடையாளம் கண்டு கொண்டோம். இன்னமும் போவார்கள். அதனையும் கண்டு கொள்வோம். அதுவொன்றும் ஆச்சர்யமான விடயம் அல்ல. எங்கள் சூரியதேவனுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்னக் கருணாவை உருவாக்க முடிந்த சிங்கள தேசத்தால் இதுவொன்றும் சாத்தியமே அல்லாத சந்தனக் குளம் அல்ல. இங்கும் சாக்கடைகள் ஓடுகின்றன.

    எமது மக்களை அழித்தவர்களிடமே எங்கள் வளங்களைக் கொடுத்து அந்த மக்களைக் காப்பாற்ற ஆலோசனை வழங்குகிறார்கள். எங்கள் தேசத்துப் புயல்களைச் சிதைத்தவர்களிடமே யாசகம் செய்து போராளிகளைச் சிறை மீட்கத் திட்டங்கள் போட்டுத் தருகிறார்கள். சிங்கள தேசத்தால் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகளை வீழ்த்திய பின்னர், அவர்கள் யுத்த கேடயங்களாகப் பாவித்ததாக உலகிற்கு அறிவித்த சிங்கள தேசம் தப்பி வந்த தமிழர்களுக்குப் புகலிடம் வழங்கி, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருந்தால் இந்தக் கருணாக்கள் சொல்வதில் கொஞ்சமாவது நியாயம் இருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்க முடியும்.

    வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்களைப் பலிகள் என்பதால், யுத்த தர்மத்தையும் மீறிச் சுட்டுக் கொன்ற சிங்கள அரசு, பிடிபட்ட விடுதலைப் புலிகளை என்ன செய்தது என்பது ஆதாரங்களுடன் வெளி வராமல் விட்டிருந்தால், அப்போதும் இந்தக் கருணாக்கள் சொல்வதில் கொஞ்சமாவது நியாயம் இருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்க முடியும்.

    கொடூரமான பேரழிவு ஆயுதங்கள் கொண்டு, தமிழீழ மக்களை அவர்களது அரசியல் அபிலாசைகளுடன் ஆயிரம் ஆயிரமாய்… இரண்டு இலட்சம் மக்களைக் கொன்று குவித்து, அவர்களை மௌனமாக்கிய பின்னராவது, ஈழத் தமிழர்கள் கள முனையில் தோற்றுப் போனதை வெற்றி விழாவாகக் கொண்டாடாமல் தவிர்த்திருந்தால், இந்தக் கருணாக்கள் சொல்வதில் கொஞ்சமாவது நியாயம் இருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்க முடியும்.

    முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் முகம் புதைத்து, மௌனமாகிப் போன தமிழர்கள் வாழ்விடங்கள் எல்லாம் பேய்களாக சிங்கள வெறியர்களை அனுப்பி, அவர்களது காவல் தெய்வங்களின் கல்லறைகளையாவது விட்டுவிட்டிருந்தால், இந்தக் கருணாக்கள் சொல்வதில் கொஞ்சமாவது நியாயம் இருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்க முடியும்.

    ஆனால், எதுவும் நடக்கவில்லையே! சிங்கள இனவெறிச் சிந்தனையில் எந்த மாற்றமும் நிகழவில்லையே! எதற்காக இந்தச் சரணாகதி? ஒரு மாதத்தில் சாகப் போகின்ற தமிழர்களின் விதியை ஒரு வருடம் தள்ளி வைக்கும் இரக்கத்தினால் வந்த முடிவா? முள்ளிவாய்க்காலில் தப்பி வந்து முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த எம் உறவுகள் ”இங்கே வந்து இத்தனை சீரழிவு படுவோம் என்று தெரிந்திருந்தால், அங்கேயே செத்துத் தொலைத்திருப்போமே” என்றல்லவா அலறினார்கள். அந்த அவலத்திற்குள் அத்தனையும் பறிக்கப்பட்டவர்கள் இப்போதும் வாழ்கிறார்கள் என்ற அர்த்தத்தினாலா இந்த முடிவு?

    கொல்லப்பட வேண்டியவர்கள் என்று சிங்களம் தீர்மானித்த அத்தனை புலிகளும் விதம் விதமாய்க் கொல்லப்பட்ட பின்னர், உலக நாடுகளுக்குக் கணக்குக் காட்டுவதற்காய் இறுதியாகக் காட்டப்பட்ட பத்தாயிரம் போராளிகளுக்காகவா எங்கள் மாவீரர்களும், மக்களும் கல்லறைகளை நிறைத்தார்கள்? அவர்கள் கனவுகளுக்குப் பதில் என்ன? எப்படியும் வாழலாம் என்று உங்களைப்போல் வாழ்ந்தவர்களா அவர்கள்? எதற்காகவும் எதனையும் விற்கலாம் என்ற மானமிழந்தவர்களா அவர்கள்? இறுதிப் போர்க் களத்திலும், தன் உயிர் உள்ளவரை போராடிய மாவீரர்கள் இதற்காகவா அநாதைப் பிணமானார்கள்? இருக்கின்ற இரண்டு விமானங்களும் பயனற்று எதிரியிடம் சென்றுவிடக் கூடாது என்று கொழும்புவரை பறந்து, அதிரவைத்து அழிந்தார்களே அந்த வான் புலிகள், அவர்கள் எதை நம்பி இந்த முடிவை எடுத்தார்கள்? இத்தனைக்குப் பின்னரும் சரணடைதல் என்பது, ஈனத்தனத்தின் அதி உச்சம். சரணடைதல் ஊடாக சிங்களத்திடம் மாற்றம் உருவாகும் என்பது பைத்தியங்களின் கற்பனை.

    நீதி, நேர்மை, மனிதாபிமானம் ஊடாகவே மாற்றங்கள் உருவாக வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அத்தனை காரணங்களும், பொறுப்பும் சிங்களத்திடமே உள்ளது. அதனைச் சீர் செய்ய இத்தனை வருடங்களின் பின்னரும் அதனிடம் எதுவுமே இல்லை என்பதே, இந்தப் போராட்டத்தை அன்னமும் தொடர வைக்கின்றது. சின்னதாக, சிறிதாக எந்த மாற்றத்தையும் அனுமதிக்காத சிங்களத்திடம் புலம்பெயர் தமிழர்களது பலத்தையும் இழப்பதற்கு நீங்கள் எதனைப் பெற்றீர்கள்? எவ்வளவு பெற்றீர்கள்? என்பதே இப்போது விடை தெரிய வேண்டிய கேள்வியாக உள்ளது.

    சி. பாலச்சந்திரன்

  2. Garammasala says:
    16 years ago

    சி. பாலச்சந்திரன்/சிவராம்: “முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் சக்தியாகப் புலம்பெயர் தமிழர்களின் பலம் மட்டுமே உள்ளது. அதனைச் சிதைப்பதற்கும், அழிப்பதற்குமான அனைத்து முயற்சிகளையும் சிங்கள தேசம் மேற்கொண்டு வருவதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.”

    “சிங்களப் பேரினவாதத்தை அச்சுறுத்தும் புலம்பெயர் தமிழர்களின்” பேரால் அவர்களைக் கலந்தாலோசிக்காமல் எத்தனையோ வேலைகள் நடக்கின்றன. அவற்றைச் செய்வோரிற் பலர் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பங்களித்தோராவர்.
    அவர்களில் “நாடு கடந்த தமிழீழம்” பேசுவோர் சாதாரணமான, நியாயமான கேள்விகளையே தவிர்க்கிறார்கள்.

    கே.பி. பற்றறிய சிங்களப் பேரினவாதப் பிரசாரத்தை விடுவோம்.
    கே.பி. எங்கே? கே.பி.க்கு என்னநடக்கிறது? தெளிவாக மழுப்பாமல் ஆதாரத்துடன் சொல்லுங்கள்.
    நம்பகமான தகவல்களை ஆதாரங்களுடன் தராமல் கருணா, ஆனந்த சங்கரி என்று புலம்பித் தூற்றி ஒன்றும் ஆகாது. மேற்குலகை நம்பச் சொல்லி எமாற்றியோர் கருணவையோ ஆனந்தசங்கரியையோ விட யோக்கியர்களல்ல.

    நீங்கள் பெற்றுத்தரப் போகிற தமிழீழம் பற்றி அதில் வாழக்கூடிய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஒரு கணம் சிந்தித்திருக்கிறீர்களா?

    ஒரு வேளை அவர்களுக்காக நீங்களாக இருக்கலாம்.
    நிச்சயமாக உங்களுக்காக அவர்களாக இருக்கலாகாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...