திட்டமிட்ட இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு, சிங்கள உழைக்கும் மக்கள் மீதான திட்டமிட்ட ஒடுக்குமுறை ஆகியவற்றின் மொத்த வடிவமாகத் திகழும் இலங்கை அரசை நேரடியாக நியாயப்படுத்தும் செல்வராஜா குமரன் பத்மநாதன் அல்லது கே.பி புனர்வாழ்வு என்ற முகமூடிக்குள் ஒளிந்து கொள்ளும் பேரினவாத ஆதரவாளர்களின் முன்னோடி. புலிகளின் தவறான அரசியல் வழிமுறைகளைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தும் அரச தந்திரோபாயத்தின் தமிழ் முகங்கள் இவர்கள். கே.பி என்ற விதைக்கும் விச விதைகள் வளரும் முன்னமே எதிர்கொள்ளப்பட வேண்டும்.கே.பி உருவாக்கும் மனிதாபிமான முகம் கோரமானது!
இலங்கையில் முல்லைத்தீவில் அன்பு இல்லம் என்ற அனாதைகள் இல்லம் ஒன்றை இன்று ஆரம்பித்து வைத்த கே.பி அங்கிருந்து பிபிசி தமிழோசையிடம் பேசினார்.
”வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் நிதியை போரின் பின்னர் பலர் தம்வசம் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலனவர்களை எனக்கு தெரியும். அவர்களிடம் இருந்து அந்தப் பணத்தைப் பெறுவது கடினமான காரியம். ஆனால் அதனைப் பெற்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்த நான் முயற்சி எடுப்பேன்” என்று அவர் கூறினார்.
”என்னுடைய சக பெண் போராளி தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, அவளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத எனக்கு, அவளது உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது” என்றார் கேபி.
வன்னியல் அநாதைகளாக்கப்பட் குழந்தைகளை பிரபாகரன் செஞ்சோலை என்ற பெயரில் தன் கரும்புலிகளாம மாற்றிய போ இந்த வீரம் எங்கு போனது? இன்று கேபி அந்த குழந்தைகளிற்கு கல்வி கொடுப்பது கோர முகம் என்றால் இந்த விணான இணையம் அந்த மக்களிற்கு என்ன முகம்? என்ன பிரிஎப் பா உங்களிற்கும் அள்ளி வழங்ககுகிறார்கள்? அவர்களின் மடியில் கைவைத்தால் உங்களிற்கு ஏன் பொத்துக்கொண்டு வருகிறது!
“தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்”,ஒரு கைதியின் கருத்து,ஆளும் அரசாங்கத்தினது எனச் சந்தேகப்படல் வேண்டுமா?
நீங்கள் அரசியல் தற்கொலை செய்கிறீர்கள்! இந்தை இணைப்பை பார்வையிடவும்! மக்கள் மத்தியில் வேலை செய்யும் ஒரு நபர் மக்கள் மனங்களை வென்றெடுக்க முடியும்! நீங்கள் இணையத்தில் செய்யும் புரட்சி கீபோட் மார்க்ஸி
ஸ்டுகளிற்கு ஒரு பஞ்சாமிருதம். யாதார்த்ததில் ….
http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/23720-2011-06-26-03-57-55.html
நாம் வன்னியில் அநாதைகளாக்கப்பட்ட மக்களை முடிந்தால் நேரில் சந்தித்து அங்குள்ளநிலைமையை அறிந்து சரியான
மனச்சாட்சியுள்ள மானமுள்ள மனிதநேயமுள்ள மனிதர்களாக வாழ்ந்தால் நமது இனஅழிப்பைதடுக்க அல்லது ஓரளவு கட்டுப்படுத்த முடியும் முடிந்தால் நல்ல அறிவுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்ப முயற்சியுங்கள் நானும் உங்களுடன் இணைகிறேன்