உடுமலை அருகே கேரள எல்லைக்குள் நுழைய முயன்ற ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உள்பட 100க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணைக்கட்டும் நடவடிக்கைக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் புதிய அணை கட்டப்படும் இடத்திற்கு கட்சித் தொண்டர்களுடன் இன்று வைகோ திடீர் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, கேளர எல்லை அருகே சோதனைச் சாவடியில் தமிழக காவல்துறையினரால் வைகோ தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதனால் காவல்துறையினருடன் வைகோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ம.தி.மு.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே காவல்துறையினரின் தடுப்பையும் மீறி தொண்டர்களுடன் கேரள எல்லைக்குள் நுழைய முயன்ற வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உள்பட 100க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தியா என்பது ஒரு நாடா?
கேரளத்துக்குப் போக ஒரு இந்தியனுக்குப் பாஸ்போட், விசா எல்லம் தேவையா?
பாஸ்போட், விசா ஒன்றும் இல்லாமல் இங்கு வந்து போன ஒருவருக்குக் கேரளத்துக்குப் போக இவ்வளவு சிரமமா?
ஈழம் பெற்றுத் தராத வாக்குக்களைக் கேரளம் பெற்றுத் தரும் என்ற நப்பாசை வைகோ என்கிற அரசியல் கூத்தாடியை இயக்குவதால் தான் இந்தப் போராட்டமா?
செய்யும் தொழிலே தெய்வம். அரசியலை விட்டால் இவர்களுக்கு வேறு என்ன செய்யமுடியும்?