கேரளாவுக்கு நாளை முதல் காய்கறி, சிமெண்ட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கான புக்கிங் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு லாரி புக்கிங் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு லாரி புக்கிங் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜவடிவேல், முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக லாரிகள் தாக்கப்படுவதாகவும் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் வரை புக்கிங் நிறுத்தம் தொடரும் என்றார்.
நாளை காலை முதல் கேரளாவுக்கு சரக்கு புக்கிங் செய்யப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
கேரளாவுக்கு தினமும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் காய்கறி, மஞ்சள், இரும்பு கம்பி, இறைச்சி, சிமெண்ட் ஆகியவை நிறுத்தப்படும் என்றும் இதனால் நாள் ஒன்றுக்கு 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் ராஜவடிவேல் கூறினார்.