டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த சிறி டெலோ அமைப்பினர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்தல், காணிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வன்னி தகவல்கள் மூலம் எமது இணையத்தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அரசாங்கத்தின் அனுசரனையில் சிறி டெலோ அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போலியான கச்சேரி மூலம் இந்த மோசடிகள் அரங்கேற்றுப்பட்டு வருவதுடன் இவர்கள் அறவிடும் தொகையில் குறிப்பிடதக்களவு பங்கு அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் பங்கிட்டு கொள்ளப்படுகிறது எனவும் மேலும் தெரியவருகிறது. சிறிடெலோ அமைப்பின் பொறுப்பாளராக உதயன் என்பவர் செயற்பட்டு வருகிறார். இவர் நோர்வே நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்று அந்நாட்டு குடியுரிமை பெற்றவராவார்.
இவரை தவிர ஜெர்மனியில் குடிரிமை பெற்ற நிமோ இந்த அமைப்பில் செயற்பட்டு வருகிறார். இதேவேளை இந்த மோசடியில் பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற கீரன் என்பவரும் சம்பந்தப்பட்டுள்ளார்.
அரசாங்கம் மன்னார் கர்பக் வீதியில் இடம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக வழங்கிய காணிகளுக்கே இவர்கள் பணத்தை அறவிட்டு, அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் இந்த காணிகளில் பெரும் பகுதியை இவர்கள் தமது உறவினர்களுக்கு பங்கிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் அந்தத் தகவல்களின் மூலம் தெரியவருகிறது.
லங்காநியூஸ்வெப் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சி தரும் தகவலை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
நன்றி : லங்கா நியூஸ் வெப் (lankanewsweb.com)
இப்படியும் ஓர் செய்தி:
தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்கள்
So, what is the next move?
இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் மீண்டும் கொழும்பில் ஒன்றுகூடி தமிழ் மக்களின் அரசியல் நிலவரம் தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்……??
சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி தந்தை செல்வாவின் புதல்வரும் ஒவ்பர் அமைப்பின் இயக்குனருமாகிய திரு. செல்வநாயகம் சந்திரகாசன் மற்றும் பேரின்பநாயகம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் அதன் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான திரு.சந்திரகாந்தன் மற்றும் ஊடகச் செயலாளர் ஆசாத் மௌலானா நாபா ஈபிஆர்எல்எப் சார்பில் அதன் செயலாளர் திரு.தி.சிறிதரன் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சதானந்தம் மற்றும் ஆர்.ராகவன் தமிழ் தேசிய விடுதலை முன்னணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம்
‘
சிறி ரெலோ அமைப்பின் தலைவர் திரு உதயன் திரு. ஜீ.சுரேந்திரன் ‘
ஜனநாயக மக்கள் முன்னணி செயலாளர் திரு.நல்லையா குமரகுருபரன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜீ.ராஜ்குமார் மற்றும் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக ஒன்றுகூடிய அரங்கத்தினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு பொதுக்களத்தில் பேசி ஒருமித்த கருத்தையும் நிலைப்பாட்டையும் தமிழ் கட்சிகளுக்குள் உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடினர். இதன் முக்கிய அம்சமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இதுதொடர்பாக அழைப்பு விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. கூடிய ஒன்பது பிரதான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு அழைப்பினை விடுவதாக ஏகமனதாக முடிவுமேற்கொள்ளப்பட்டது. மேலும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்த சந்திப்பினை கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு.சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பில் நடாத்துவதெனவும் இதற்குரிய திகதி ஓகஸ்ட் மாதம் 14ம் திகதி எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அப்படியானால் கொல்லப்படுவதிலிருந்து தப்பியோடிய அகதிகளிடம் கொள்ளையடிக்கும் இவ்புலம்பெயர் தமிழர்கள் என்பவர்களையும் சேர்த்து உருவாகும் இப்புதிய கூட்டணியினர் தம் கூட்டில் அங்கம் வகிக்கும் அமைப்புகளிடையே சுய விமர்சனம் ஒன்றும் வைக்காமல் என்னத்தைதான் கூடி கூட்டிக் கதைக்கிறார்கள். ஒருபக்கத்தில் இக்கூட்டில் உள்ளவர்களைப் பற்றி செய்திகள் இப்படி வந்துகொண்டிருக்கின்றன. திரையின் பின் கூட்டில் உள்ள சிலரைப் பற்றி மனித உரிமை அமைப்புகள், நாடறிந்த விடயம்.
இப்புதிய கூட்டணியில் தம்மிடையே தொடர்ந்து விடும் மக்கள் விரோத செயல்களைக் கைவிடாமல், விமர்சிக்காமல் எல்லோரும் கதிரையைப் போட்டு நல்லபிள்ளைக்கு வடையும், மிக்சரும் சாப்பிட்டு முகச்சுதிக்கு கதைத்து அப்பாவி மக்களுக்கு என்ன விடிவு வரப்போகிறது.
இந்த அரங்கத்தினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு பொதுக்களத்தில் பேசி ஒருமித்த கருத்தையும் நிலைப்பாட்டையும் தமிழ் கட்சிகளுக்குள் உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடினர் என்பது எந்த தமிழ் மக்களின் எந்தப் பிரச்சனையைக் கதைத்தார்கள் என்று தெரியவில்லை.
ஒன்றுமட்டும் தெரிகிறது, தமிழ் மக்களின் நாமத்தில் இவர்கள் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்று தெரிகிறது.
அதுமட்டுமல்ல கூடிக் கூட்டிக் கதைப்பவர்கள் நேரில் எல்லோருக்கும் நல்ல பிள்ளைக்கு கதைக்கிறார்கள், ஆனால் அவர்கள் சார்பானவர்கள் தனிப்பட்ட நிலையில் மற்றவர்களை பிழை பிடித்து தாம் தான் யோக்கியமான அமைப்பு என்று மார்தட்டுவது மல்லாமல் தம் இணையதளங்களிலும் ‘மரத்திலிருந்து விழுந்த தமிழ் மக்களை “சிறி டெலோ” மாடு முட்டியது!
இப்படியும் எழுதுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் விமர்சனங்கள் இல்லாமல், தம்மைத் திருத்தாமல், உண்மையான ஒற்றுமையிலாமல் எத்தனை நாட்களிட்க்குத்தான் கூடிக் கூட்டிக் கதைத்து அப்பாவி மக்களின் முதுகில் பயணம் செய்யப் போகிறார்கள்?
SRI TELA is the most dangerous group in Vavuniya during the war time….,..they tried to overtake EPDP and PLOTE . There was a competition among these group who help Army..
இந்த நாயள் எப்பத்தான் திருந்தப் போகிறாங்க? கொழும்பில ஒன்றாக இருந்து பேசிறாங்க, அறிக்கை வேறு விடறாங்க. இவன்களுக்கை ஒற்றுமையில்லை, அப்புறம் நம்ம நாட்டு அரசியல்வாதிகள்கிட்டை என்ன எதிர்பார்க்கிறாங்க?
தலைவர் பிரபாகரன் இருக்கும் போது தங்களிற்கு பாதுகாப்பு இல்லையென்று அவரை வைத்து ஈனன்க்கேட்ட அரசியல் செய்தாங்க. இப்ப இவங்க திருந்துகிற மாதிரி இல்லை. தொடர்ந்து அதே நிலையென்றால் நிர்க்கதியாக்கப்பட்ட எம் ஈழ அகதிகள் யாரிடம் தாம் சென்று ஆறுதல் அடைவார்கள். இந்த முன்னால் போராளி தலைவர்கட்கு பணத்தாசையா, பதவி ஆசையா? இவங்கள் எல்லாம் ஏன் மக்கள் விடுதலை என்று புறப்பட்டாங்க? இதிலே தலைவர் பிரபாகரனை வேறு பிழை பிடிக்கிறவங்க இப்ப இந்தப் பிழைப்பு பிழைக்கிறாங்க என்று படிக்கும்போது மனம் ரொம்ப வேதனைப் படுகிறது. மனுஷங்க நல்ல விடயத்திற்கு போட்டி போடுவாங்க என்று படித்திருக்கோம், அறிஞ்சிருக்கோம், பாத்திருக்கோம், பார்க்கிறோம். இவங்க என்னாண்டா அழிவுக்கு போட்டி போடுறாங்க, துணை போறாங்க.
இதுல சொல்லங்க, “சிறிடெலோ அமைப்பின் பொறுப்பாளராக உதயன் என்பவர் செயற்பட்டு வருகிறார். இவர் நோர்வே நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்று அந்நாட்டு குடியுரிமை பெற்றவராவார்.
இவரை தவிர ஜெர்மனியில் குடிரிமை பெற்ற நிமோ இந்த அமைப்பில் செயற்பட்டு வருகிறார். இதேவேளை இந்த மோசடியில் பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற கீரன் என்பவரும் சம்பந்தப்பட்டுள்ளார்.
அரசாங்கம் மன்னார் கர்பக் வீதியில் இடம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக வழங்கிய காணிகளுக்கே இவர்கள் பணத்தை அறவிட்டு, அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் இந்த காணிகளில் பெரும் பகுதியை இவர்கள் தமது உறவினர்களுக்கு பங்கிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் அந்தத் தகவல்களின் மூலம் தெரியவருகிறது.”
சிலோனில பாதுகாப்பு இல்லைஎன்றுதானே இவங்க வெளிநாட்டில அகதி தஞ்சம் கோரினாங்க, அங்கே நல்லாவும் சம்பாதிப்பாங்க, அப்புறம் ஏன் இவங்க அரசாங்கம் இடம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக வழங்கிய காணிகளுக்கு பணத்தை அறவிடுறாங்க? அதுமட்டுமா இங்கு அரசியல்வாதிங்க புறம்போக்கு நிலத்தை வளைத்து போட்டு தங்க உறவினர் பேர்ல பத்திரம் எழுதுற மாதிரி, அதை விட மோசமா அகதியாக்கப்பட்டவங்களுக்கு அரசாங்கம் மனை கட்ட கொடுத்த காணிகளை வளைத்துப் போடுறாங்க. இவங்களைத் தட்டிக் கேட்க ஒருவரும் இல்லையா?
இது ரொம்ப கொடுமைங்க, மீடியாக்காரங்க இதை மக்கள் மத்தியில வெளிச்சத்திற்கு கொண்டுவாங்க. நீங்கதான் மக்களை காப்பாற்றவேண்டும்.
நாயளுக்கு நன்றி இருக்கும், இவங்க மாமிசம் தின்னும் மிருகத்தைவிட கேவலமானவங்க.
Hi there,
It is very good that Thamils paties get-to-gather at this level. They should come to a common ground and put faith on the chosen common ground. Unity in diversity is a wonderful concept at this moments. TNA should positively consider to join with the union. Ego-less, visonary, self-less company will achieve its’ goal.
Let we all pray for Thamils
You certainly should pray when this bunch gets together.
As SJVC said once, for a less valid reason, only GOD can save the Tamils now from these rogues.