2005 ஆம் ஆண்டு சமாதான காலத்தில் மத்தியஸ்தம் வகித்த நோர்வே அரசு பிரபாகரங்க்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றை இலங்கை சன்டே ரைம்ஸ் இணையம் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் புதினப் பலகை இணையத்தில் வெளியாகியுள்ளது.
வெளிவிவகார அமைச்சு,
ஒஸ்லோ
16 ஓகஸ்ட் 2005
திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்,
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
அன்புடன் பிரபாகரனுக்கு,
அமைதி முயற்சிகள் மிகவும் இக்கட்டானதொரு நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையான விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் பதில் கொலைகள் என்பவற்றை நோர்வேயும் அனைத்துலக சமூகமும் அதியுச்ச கரிசனையுடன் அவதானித்து வருகிறது.
விடுதலைப் புலிகளமைப்பு சிறுவர்களைத் தொடர்ந்தும் படையில் இணைந்து வருகிறது. அமைதி முயற்சிகள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நோக்கம்தான் என்ன என்ற அவநம்பிக்கையினை ஏற்படுத்துவதாக இவை அமைகின்றன.
சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமையானது நிலைமையினை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
இவ்வாறு தொடராக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இடம்பெற்றுவரும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டிய தேவை நோர்வேக்கு இல்லை.
எவ்வாறிருந்தாலும், இந்தக் கொலைகளுக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என சிறிலங்காவிலும் அனைத்துலகிலும் மக்கள் கருதுகிறார்கள். மக்களின் இந்த எண்ணம்தான் அரசியல் யதார்த்தமாக உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பானது அமைதி முயற்சிகளில் தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடனேயே இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் புலிகளமைப்புச் செயற்படவேண்டியது அவசியமானது.
தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ள அரசியல் தெரிவுகள் தொடர்பாக எடுத்துவிளக்குவது எனது கடப்பாடு என நான் கருதுகிறேன். இக்கட்டான இந்தத் தருணத்தில் விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்.
இந்தப் புறநிலையில் கீழ்க்காடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் விரைந்து செயற்படவேண்டும் என நான் கோருகிறேன்.
01. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையான ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிகளைக் கண்டறிவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மீளாய்வுக்கு நோர்வே விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்றுக்கொள்ளுதல்.
02. பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
03. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் போக்குவரத்துக்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை காலதாமதம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுதல்.
04. வடக்குக் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திற்கும் மீள்கட்டுமான முனைப்புக்களை வேகப்படுத்தும் வகையில் நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிவகைகள் ஊடாக ஒத்துழைப்பினை வழங்குதல். இதற்கு பி-ரொம்ஸ் எனப்படும் ஆழிப்பேரலை நிவாரணத்திற்கான உடன்பாடு தொடர்பில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவது அவசியமானது.
05. கொலைகளையும் சிறுவர் ஆட்சேர்ப்பினையும் உடனடியாக நிறுத்தும் வகையில் வினைத்திறன்கொண்ட முனைப்புக்களை மேற்கொள்ளுதல்.
தற்போது நிலவுகின்ற மோசமான நிலைமையின் தன்மையினை நீங்கள் முழுமையாக விளங்கிக்கொண்டிருப்பதோடு அமைதி முயற்சிகள் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறது என்பதை அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் வகையிலான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என நான் வெகுவாக நம்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
ஜான் பீற்றசன்
தமிழாக்கம்: புதினப்பலகைக்காக தி.வண்ணமதி.
இக்கட்டான இந்தத் தருணத்தில் விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்.”
இந்த மிரட்டலை அல்லது எச்சரிக்கையை புரிந்து கொள்ளுமளவிற்கு புலி தலமைக்கோ அதை வழிநடத்தியவர்களுக்கோ தலைக்குள் ஒன்றும் இருக்கவில்லை. தலைக்குள் இருந்ததெல்லாம் வெறும் களிமண்ணே. முழு உலகும் புலியை முடிப்பதென முடிவெடுத்து விட்டுத் தான் சமாதான காரியங்களில் இறங்கினார்கள்.
சரியாகச் சொன்னீர்கள்.
. ”முழு உலகும் புலியை முடிப்பதென முடிவெடுத்து விட்டுத் தான் சமாதான காரியங்களில் இறங்கினார்கள்.”
அப்படியென்றால் புலிகள் இதைத் தெரிந்து கொண்டதினால்தான் நோர்வே, அமெரிக்கா, இந்தியா கூட்டணியின் ஆட்டத்திற்கு ஆடவில்லை. முடிப்பதென முடிவெடுத்தனவனோடு இனி என்ன கதை என்று மூளையில் களிமண் இல்லாதவர்கள் கதைக்கெட்டுமென விட்டுவிட்டர்கள் புலிகள். இப்போதும் இவர்கள் கதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த மிரட்டலை அல்லது எச்சரிக்கையை புரிந்து கொள்ளுமளவிற்கு புலி தலமைக்கோ அதை வழிநடத்தியவர்களுக்கோ தலைக்குள் ஒன்றும் இருக்கவில்லை. தலைக்குள் இருந்ததெல்லாம் வெறும் களிமண் சரியாகச் சொன்னீர்கள்.ணே
புலிகள் இந்தியாவால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டவர்கள் என்று அந்தநாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அரசியல் பற்றி சிந்திக்காத ஒரு வரை வைத்து தமிழர்களை அழித்தது இந்தியா. இப்போது ம் விடவில்லை.
பாலாண்ணை இவன் நோர்வேகாரன் என்னவாம்?
களுத்தறுக்க வாறான் காட்டிக்கொடுப்போரோடு கூட்டணி போட்டு.