இந்திய அரச அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் தண்டக்காரண்யா,ஆதிவாசி காடுகளில் அருந்ததி ரோய் அந்த மக்களோடு சில நாட்கள் வாழ்ந்து திரும்பியிடுக்கிறார். ஆயுதம் தாங்கிய கெரில்லாப் போராளிகளோடும் மக்களோடும் நேருக்கு நேரான தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார். இந்த துணிகரமான செயல் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியல் ஆர்வலகள் மத்தியில் இலங்கைப் இனப்படுகொலைக்கு எதிராகக் குரலெழுப்பியவர்களுள் அருந்ததி ரோய் முக்கியமானவர் என்பது குறித்துக் காட்டத்தக்கது. அவரது ஆங்கிலப் பதிவு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
அருணந்தி ராய் ஆகாயத்தில் கூடு கட்ட ஆசைப்படும் அதிசய பிறவி.அலை கடலில் இரைச்சல்கள் இடையே எந்தச் சத்தமும் எவருக்கும் கேட்பதில்லை கேட்பதாக நினைத்து பேசுவோர் பேச்செல்லாம் அலைகடலில் அமுங்கிப் போய்விடும்.அருணந்தி ராய் யாரென்றே தெரியாதோரெ அதிகம் என்பதால் அவர் மொழியை யார்தான் மொழிபெயர்ப்பார்.
“அருணந்தி ராய் ” பற்றி எழுதியதன் மூலம் தமிழ்மாறன் தான் வாழும் கிணற்றின் வாய் மிக ஒடுக்கமானது என்பதை இன்னொரு முறை உறுதி செய்துள்ளார்.
ராயினுடைய இந்த மேலை குறிப்பிட்டுள்ள உரைநடை ஒன்றும் வாசிப்பதற்கு கஸ்டமானதாக இல்லை, ஆங்கிலத்தில் வாசிக்க பொறுமையில்லை என்பதை தான் ராய் பற்றிய உங்கள் விமர்சனம் கோடி காட்டுகிறது.