தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துத் தகர்ப் பதற்கு பல்வேறு சுயேச்சைக் குழுக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதிகளை வழங்கியுள்ளார்.
என்னதான் சதித்திட்டங்கள் வகுத்தாலும் கூட்டமைப் பின் பலத்தை எவராலும் உடைக்க முடியாது.
அகில இலங்கை தமிழ்க் காங் கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்றத் தேர்தலின் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ்தேசி யக் கூட்டமைப்பின் வேட்பாளருமான அப்பத்துரை விநாயக மூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்.செயலகத்தில் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தமிழ்தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுயேச்சைக் குழுக்களுக்கு தலா 15 லட்சம் ரூபாவைக் கொடுத்து தேர்தலில் போட்டியிடுமாறு தூண்டிவிட்டுள்ளார்.
ஆனால் எந்தவொரு சதித்திட்டங்களினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உடைத்துவிட முடியாது.சலுகைகளை வழங்கி தமிழ் மக்களை விலை மாந்தர்களாக்க நினைக்கிறார் ஜனாதிபதி; அவருடைய நினைப்பு ஒருபோதும் நடைபெறாது.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்று தமிழ்த் தேசியத்தை சர்வதேசம் எங்கும் பறைசாற்றுவோம்.
எமது அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு நிற்கிறார்.
அவரை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைப்பதற்கான முயற்களில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.
விநாயக மூர்த்தி அய்யா சும்மா மண்டைக்குள்ள பிரச்சனைகலை போட்டுக் குழம்புகிறாரா அல்லது இதுவும் ஒரு அரசியலா தெரியவில்லை.
அவர் இப்ப சம்பந்தர் ஐயாவின்ர கூட்டாளியாப் போயிட்டார் பாருங்கோ.
“மண்டைக்குள்ள பிரச்சனைகலை போட்டுக் குழம்புகிறதாலை” தான் அப்பிடிநடந்திருக்கும்.
சம்பந்தர் ஐயா இந்தியாவிட்டைக் காசு வாங்கியா கட்டளை கேட்டா ஆக்களைக் கலைச்சார்? அல்லது அவருக்கும் மஹிந்த ராஜபக்ஷ உபயமா?