தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று மாலை(21.06.2014) புது டெல்லி நோக்கிப் பயணமானார்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் நோக்கில் பயணமான குழுவில் சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் ஆகியோர் அடங்குவர். வன்னிப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து நாடுகளுக்குப் பயணம் செய்வதை வழமையாகக் கொண்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் நரேந்திர மோடியிடம் 13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருவோம் என்கிறார்.
வீதிகளைப் புனரமைப்ப்தையும் ரயில் சேவையையும் அபிவிருத்தி எனக் கூறும் இலங்கை அரசு உரிமை கோருவதைப் பயங்கரவாதம் என்கிறது.
அழிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களில் கூட்டமைப்பின் கண் முன்னாலேயே சிங்கள பௌத்த மயமாதல் தொடர்கிறது. புதிய தொழிற்சாலைகளும்ன் கட்டடங்களும் முளைக்கும் மறுபக்கத்தில் சத்தமின்றி சிங்களக் குடியேற்றங்களும் இராணுவக் குடியேற்றங்களும் நிகழ்த்தப்படுகின்றன.
இந்தியாவும் அமெரிக்காவும் இதற்கெல்லாம் பாடம் கற்பிக்கும் என்ற போலி நம்பிக்கையோடு மக்கள் அமைதியாக்கப்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்களிக்கின்றது. இறுதியாக வலிகாமம் பகுதியில் இராணுவக் குடியிருப்புக்களை இலங்கை அரசு அமைத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்ட அதே நாடுகளை நம்பக்கோரும் கூட்டமைப்பும் புலம்பெயர் அமைப்புக்களும் இனச்சுத்திகரிப்பிற்கு மறைமுகமாகத் துணை செல்கின்றன.
In TNA…
From ITAK, Sampanthar & Sumaththiran…
From EPRLF, Suresh…
From TELO, Selvam…
From PLOTE…?
From TULF…?
Today they met Sushmsa Swaraj…
May be tomorrow they’ll meet Narendra Modi…
Seems like also Mava (1942) in this meeting..
And Congress Gnadesikan clarifying the Govt. about Swamy (1939) recent visit to SL.
ஓயாத அலைகள் இப்போது பயணங்கள் முடிவதில்லை என்றாகிவிட்டது.