மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து கோரியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தொடர்ந்தும் பிரிவினைவாத கொள்கைகளையும் கோட்பாடுகளையுமே பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
உரிமைகான போராட்டத்தை இனவாதம் என்று அழிக்கும் போக்கு தம்பிமுத்து போன்ற அரச ஒட்டுண்ணிகளாலும் சிங்கள பேரினவாதக் கட்சிகளாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. திட்டமிட்ட இந்த நிகழ்ச்சி நிரலின் பிரதான நோக்கமாக இடதுசாரி எழுச்சிகளையும் கருத்துக்களையும் சுய நிர்ணைய உரிமை சார்ந்து முன்வைப்பதை அழித்தொழிப்பதாகவே காணப்படுகிறது. தலித் குழுக்கள், அரச துணை இராணுவக்குழுக்கள், இடதுசாரி முகமூடி போட்ட பேரினவாதக் கட்சிகளான் முன்னிலை சோசலிசக் கட்சி, ஜேவிபி, அவற்றின் புலம்பெயர் ஏஜண்டுகள், கிழக்குப் பிரிவினைக் குழுக்கள், பின் நவீனத்துவ அடையாளக் குழுக்கள் போன்றன இந்த நோக்கத்திற்காக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சுய நிர்ணய உரிமைக்காகக் குரலெழுப்பும் இடதுசாரிகளை இனவாதிகள் என அடையாளப்படுத்துவதும் அழிப்பதும் இவர்களின் பிரதான நோக்கமாகக் காணப்படுகிறது. இதனூடாக பேரினவாததின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துகின்றனர்.
இதன் மறு புறத்தில் புலி சார் ஏகாதிபத்திய ஆதரவுக்குழுக்கள் சுய நிர்ணயம் என்றால் இனவாதம் தான் என்று அடித்துக் கூறுன்றனர்.
பேரினவாத ஒட்டுண்ணிகளும் புலிசார் குழுக்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்து இனச் சுத்திகரிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.