முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று-திங்கட்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்துககுப்பின் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கூடங்குளம் பிரச்சினை குறித்து ஆராயவென மத்திய, மாநில அரசுகள் அமைத்த வல்லுநர் குழுக்களின் அறிக்கைகள், அணுமின்நிலையத்திற்கு எதிரானவர்களின் மனு இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்த பிறகு அணுமின் நிலையம் செயல்படவேண்டும், அது பாதுகாப்பானதே என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“கூடங்குளம் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கமோ, சுனாமியோ ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை” என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்த மறு கணமே பரமக்குடி தலித்துக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய ஜெயலலிதா அரசை ஆதரித்து புலம்பெயர் குறுந்தேசிய அரசியல் வாதிகள் போராடும் தமிழக மக்களின் எதிர்ப்பைத் தேடிக்கொண்டனர். தமிழகத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் நண்பர்களை எதிரிகளாக்கும் இவர்களின் செயற்பாடுகள் இன்று கூடங்களத்தில் போராடும் நட்பு சக்திகளையும் எதிரிகளாக்கும் நிலை தோன்றியுள்ளது.
அணு மின் உற்பத்தியால் உருவாக வல்ல அழிவுகள் குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில் பன்நாட்டு நிறுவனங்களின் அடியாட்களாகத் தொழிற்படும் இந்திய அரசியல் வாதிகள் இந்திய தேசிய நலனுக்கு எதிராக அணு மின் நிலையத்தை ஆதரிக்கின்றனர். கூடங்குழத்தில் போராடும் மக்கள் தமது நலன் சார்ந்த அரசியல் போராட்டமாக அதனை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் கூடங்குளத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தேச துரோகிகள் என அப்துல் ஜாபார் என்பவர் ஐ.எல் சி தமிழ் என்ற தாசீசியஸ் நடாத்தும் ரேடியோவில் இழிவு படுத்தினார்.இதை யாரும் கண்டித்ததாகத் தெரியவில்லை.போராடும் மக்கள் தேச துரோகிகள் என்றால் ஈழத் தமிழ் மக்களும் துரோகிகளே என்பது மறைமுகமான அற்த்தம்.ஜபாரின் உளறல்களுக்கு நாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும்.?
இப்படி த்தான் அணுமின் நிலையத்திற்கு சார்பான கருத்துக்கள் மக்கள் மத்தியில் அவர்கள் அறியாமலேயே கட்டமைக்கப்படுகின்றன.
ஐ.எல்.பி.சி என்ற இந்த ரேடியோ கோமாளிகளின் கும்மாளம். தமிழ வர்த்தகர்களின் உயர்வு தமிழர்களின் உயர்வு என அம்மணமாக அதில் கூறுவார்கள். ஐ.எல்.பிசி பொன்ற தமிழ் குப்பைகளை தான் 30 வருடப் போராட்டம் விட்டு வைத்திருக்கிறது. இவைகளை வேற்று மொழிகளில் மாற்றம் செய்து கேட்கவிட்டால் 8ம்நூற்றாண்டின்நாகரீகம் அடையாதவர்களின் வானொலி என்பார்கள்.
கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பாகப் போராடிவருபவர்களைக் கொச்சைப்படுத்துவதாக தாசீயஸின் வானொலி இருக்குமானால் உண்மையில் அது அறிவிலிகளின் கும்மாளம் என்றே பொருள்படும்.வயிற்றுப்பிழைப்பிற்காக வானொலிகள்,பத்திரிகைகள்,தொலைக்கட்சிகள் வைத்து தமிழர்களைச் சந்தைமாடாக்குகின்ற பலரை நானறிவேன். முற்போக்குச் சிந்தனை என்ற முக்காட்டின் கீழ் மானிடத்தை முட்டாளாக்குகின்ற இவ்வாறான ஊடகங்களுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்.கூடங்குள மக்களின் கருத்துக்களைப் புறந்தள்ளி செல்வி ஜெயலலிதா,அவர்கள் அரசிற்கும் அப்துல்கலாமிற்கும் பச்சைகொடிகாட்டியதில் அவருக்கு லாபம்தான். ஆனாலும் வர்த்தகரை நம்பிக் கண்விழிக்கிற இந்த வானொலிக்கு அதனால் என்ன வந்தது?????/