கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மின்சாரம் எங்கே போனது எனக் கேள்வியெழுப்பியுள்ளார். அறிக்கையின் விபரம் கீழே.
2011 டிசம்பர் மற்றும் 2012 மார்ச் என இருமுறை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் விளக்கம் சொல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், தற்போது ரஷ்யாவுக்கு போயிருந்தபோது, கூடங்குளம் வெற்றி செய்தியை புதினுக்கு அளித்து, 3-4 உலைகளுக்கான ஒப்பந்தத்தையும் முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்.
“கூடங்குளத்தில் மின் உற்பத்தி” எனும் நாடகம் அரங்கேற தொடங்கியது. மன்மோகன் சிங் ரஷ்யாவுக்கு சென்ற கடந்த 20-ந்தேதி நள்ளிரவு 12.16மணிக்கு மின் உற்பத்தி செய்ய முயற்சி செய்து தோற்றுப்போன விபரம், தென் பிராந்திய மின் விநியோக மைய இணையதளத்தில் பதிவாகியிருக்கிறது.
கூடங்குளத்தில் வாழ்வா, சாவா என போராடிக்கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி துறை, இந்திய அணுமின் கழகம், பிரதமர் அலுவலகம், மத்தியஅரசு, காங்கிரஸ் கட்சி என அனைவரும் ஒன்றாக சேர்ந்து, பிரதமர் ரஷ்யாவை விட்டு வெளியேறும் நேரத்தில் அக்டோபர் 22-ந்தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் மின்சாரத்தை மின்தொகுப்போடு இணைத்துவிட்டோம் என்று அறிவித்தனர். இரண்டாம் நிலை கோளாறுகளால் அந்த முயற்சியும் அன்றுகாலை 4.34மணிக்கு தோல்வியில் முடிந்தது.
நாட்டுமக்களின், ஊடகங்களின், சர்வதேச சக்திகளின் எதிர்பார்ப்பு ஏறிக் கொண்டிருந்த நிலையில், கூடங்குளம் நிர்வாகத்தினர் நேற்று முன்தினம் (25-ந்தேதி) இரவு 9.43மணிக்கு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கி விட்டதாக அறிவித்தார்கள். ஆனால் தமிழ்நாடு மின்கடத்தல் நிறுவனத்தின் இணையதளத்தில் நேற்று(26-ந்தேதி) காலை 7.50மணிக்கு கூடங்குளம் மின்சாரம் குறிப்பிடப்படவே இல்லை.
மத்திய உற்பத்தி நிலையங்கள் வரிசையில் கல்பாக்கம், காக்ரப்பார் அணுமின் நிலையங்களிலிருந்து வரும் தமிழகத்தின் பங்கான 331, 227 மெகாவாட் மின்சாரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியானால் கூடங்குளம் மின்சாரம் எங்கே போயிற்று? இப்படி ஓர் அரசு தன் மக்களை ஏமாற்றுமா? என்று பலரும் கேட்கிறார்கள்.
இந்த அரசின் பிரதமர் “ஓரிரு வாரங்களில் மின்சாரம் வரும்” என்று 2வருடங்களுக்கு முன்பே சொல்லவில்லையா? இவரின் அமைச்சர்தானே 89 முறை “இன்னும் 15 நாளில் மின்சாரம் வரும்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த அரசுதானே 275 முக்கியமான நிலக்கரி கோப்புக்களை காணவில்லை என்று சொல்கிறது. இந்த அரசுதானே 2ஜி ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல் போன்ற பிரச்சினைகள் பற்றி மக்களிடம் பொய்யும், புரட்டும் பேசிக்கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால், இந்திய அணுசக்தித் துறை எந்த நேரத்திலும் யாரிடமும் எந்த உண்மையையும் சொன்னதாக வரலாறே கிடையாது.
கூடங்குளத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான பூதங்கள் கிளம்பும். ஆக மொத்தத்தில் கூடங்குளத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது பரிசோதனைகள்தானே தவிர, முழு அளவிலான வணிக உற்பத்தி அல்ல. அது நடக்குமா, எப்போது நடக்கும் என்பவையெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள். எனவே தான் கடந்த 25-ந்தேதி தமிழகத்தின் மின்சார நிலைமை பற்றி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், கூடங்குளம் மின்சாரத்தை பற்றி ஒருவார்த்தை கூட குறிப்பிடவில்லை. அது தற்செயலாக நிகழ்ந்த பிழையோ, விடுபடவோ இல்லை. முதல்வருக்கு நன்றாகத் தெரியும். கூடங்குளத்தில் நடப்பது ஒரு நாடகமென்று. இந்த நிலையிலாவது தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
Who is this Uthayakumar?
இவர் இந்தியாவின், தமிழ்நாட்டில்,நாகர்கோவிலை பிறப்பிடமாக கொண்டவர், முனைவர் பட்டம் பெற்று எதியோப்பியாவில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் தற்போது கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டக் குழுவின் தலைவராக உள்ளார்
கூடங்குள அணு ஆலைக்கு எதிரான போராட்டம் என்பது 2011 செப்டம்பர் முதல் தமிழ்நாடு கூடன்குளம் மற்றும் அயல் ஊர்களின் மக்கள் அங்கு அணு ஆலை இயக்க வைப்பதற்கு எதிராக நடத்திவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இதை அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம் முன்னெடுத்து வருகின்றது. இப்போராட்டக் குழுவின் தலைவராக முனைவர் உதயகுமார் அவர்கள் இருந்து வருகின்றனர்.
அணு ஆலைக்கு எதிராக பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவையானவை:
மக்கள் நெருங்கி வாழும் இடத்தில் அணு ஆலை இயக்குவது அந்தச் சுற்றாடலில் வாழும் மக்களுக்கு நோய் வாய்ப்புக்களை அதிகரிக்கும்.
அணு ஆலை விபத்து ஏற்படும் பட்சத்தில் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள். முழுத் தமிழகமும், வட இலங்கையும் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
உயர் தொழில்நுட்பம் வாய்த்த சப்பான், யேர்மனி போன்ற நாடுகளே அணு ஆலைகளை கைவிடும் பொழுது, இந்தியா அதை முன்னெடுப்பது சரியான வழிமுறை அல்ல.
கட்டுமானம் சீர்தரத்துக்கு ஏற்ற முறையில் இல்லை.
சுற்றுச்சூழல் பாதிப்படையும்.
கடற்கரைக்கு அருகில் இருப்பதால் சுனாமியால் தாக்கப்படலாம். தீவரவாதிகள் தாக்கலாம்.
போராட்டக் குழுவின் வாதங்கள்…
இது கூடங்குளம், இடிந்தகரை மக்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனை இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் தாண்டி கேரளத்துக் கொல்லம் வரை இதன் பாதிப்புகள் இருக்கும் என்பதால் கேரளத்து மக்களே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்துப் போராடுகிறார்கள்.
வெறும் 450 மெகாவாட் உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ளன. அப்படியானால் 2000 மெகாவாட் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுவுலை இயக்கப்பட்டால் அதிகமான கதிர்வீச்சு ஏற்படும்.
இயங்கும் நிஐயிலேயே இப்படி என்றால் விபத்து நேர்ந்து உலை வெடித்து சிதறினால் என்ன ஆகும்? ஹிரோசிமா, நாகாசாகி, மற்றும் செர்னோபில், ஃபுக்குஷிமா வரிசையில் கூடங்குளம் விபத்து ஏற்பட்டால் தமிழகமே சாம்பல் மேடாகும், பச்சைப் பசுஞ்சோலையான குமரி மாவட்டமும், அதன் நான்கு தினை வளங்கள் சார்ந்த வாழ்வாதாரங்களும் நிரந்தரமாக பட்டுப் போக வாய்ப்பிருக்கிறது.
விபத்து எதுவும் ஏற்படாமல் 40 ஆண்டுகள் ஓடி முடித்து விட்டாலும் எஞ்சியுள்ள அணுக்கழிவுகளை 40 ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பெருத்த பொருட்செலவில் பாதுகாக்க வேண்டும். மட்கா கழிவுகளான நெகிழிகளே வேண்டாம் என்று சொல்லும் மக்கள் அணுக்கழிவுகளை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்.
இந்தியாவில் 97 சதவிகிதம் அணுவுலை தவிர்த்த மின்உற்பத்தி முறையிலேயே உருவாக்கப்படுகின்றது.
மின்சார பற்றாக்குறையால் தமிழகம் இருக்கும் போது கடலுக்கடியில் மனிஇழை போட்டு இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் அவசியம் என்ன?
1974 ல் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய போது தாராப்பூர் அணு உலைக்கான எரிபொருள் தருவதை அமெரிக்கா நிறுத்தியது.மின்சாரம் தேவை என்று மக்களிடம் கூறி அணு ஆயுதத்திற்கான மூலப்பொருட்களை பெறுதல் என்பதே அணுவுலையின் உள்நோக்கம்.
விபத்தே நடக்காது என்றால் அணு விபத்து இழப்பீடு சட்டம் எதற்காக? அணு விபத்து பாதுகாப்பு ஒத்திகை எதற்காக? அணு உலையை ஒட்டியக் கடல்பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடிக்க கூடாது என்று சொல்வது ஏன்? உலக நாடுகள் அணுவுலைகளை மூடிவருவது ஏன்?
இத்தாலி போன்ற நாடுகள் அணு உலைகள் வேண்டாம் என்று பொது வாக்கெடுப்பில் தீர்மானித்துள்ளன.
செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டே கூடங்குளம் அணு உலைத்திட்டத்திற்கு கையெழுத்து இட்டது ரசியா. 1993ம் ஆண்டுக்கு பின் அமெரிக்கா அணு வுலைகள் எதுவும் அமைக்க வில்லை.
ஜப்பான், ஃபுக்குசிமா அணு உலைகள் வெடித்து சிதறிய பின்னர் சுவிட்சர்லாந்து 2020க்குள்ளும், செர்மனி 2022க்குள்ளும் எல்லா அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாக அறிவித்துள்ளன.
இந்திய அரசு போப்பால் இரசாயண ஆலை பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தப்பிறகும் போப்பால் பேரழிவு நடந்து 20 ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர்[1].
செர்னோபில், ஃபுக்குசிமா அணுவுலைகளும் அமைக்கும் போதும் பாதுகாப்பானது என்று கூறப்பட்டது.
1988ம் ஆண்டு முதலே கூடங்குளம் பகுதியில் அணு வுலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
1988 ல் மக்கள் எதிர்ப்பினால் தான் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும் பயணத்தை ரத்து செய்தார். 1989ல் அணுவுலைக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கியது.
இப்போதைய எழுச்சி ஃபுக்குசிமா அணுவுலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வும், சோதனை ஓட்டத்தில் எழும்பிய புகையும், ஓசையும், விபத்து நேர பாதுகாப்பு ஒத்திகையும் காரணமாகும்.
குறைந்த செலவில் அதிக மின்உற்பத்தி செய்ய வேறு வழிகள் இருந்தும் அதிக செலவில் ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் குறைந்த மின்சாரமே தயரிக்கும் அணுவுலைகளைத் தேர்வு செய்வதால் நாட்டுக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது.
அரசுத்தரப்பு வாதங்கள்…
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Thank you for the information Alex Ravi. I am with Prime MInister Dr. Manmohan Singh on this matter all the way.
As long as it is not in your backyard ?
டாக்டர், மன்மோகன் சிங் இப்போராட்டத்திற்கு பின் அமெரிக்க… இஸ்கன்டிநேவிய உள்ளதாகவே குற்றம் சாட்டுகிறார். (On, 24 February 2012, Prime Minister Manmohan Singh blamed American and Scandivanian NGOs for fuelling protests at the power plant. News agencies reported that three of the NGOs had used foreign funds received for social and religious purposes to fuel the protests, violating foreign exchange regulatory rules.The PM also blamed these NGOs for opposing genetically modified foods and the use of biotechnology to increase food production in the country) easy to blame, but hard to find a solution… மன்மோகன் சிங் இதற்கு தகுந்த பதிலோ… தீர்வோ இற்றைவரை கொடுக்கவில்லை.
Anyway, thank u for ur good effort…
அத்துடன் மிக முக்கிய விடயம் இந்த அணு மின் நிலையத்தின் மின்வலு திறன் 2000 ஆகும். அதே நேரம் கன்யாகுமரியின் பகுதியில் அமைந்துள்ள காற்றாடி (wind mills) மின்வலு திறனும் 2000 ஆகும்… ஆனால் wind turbines யினால் இயற்க்கை சூழல் மாசடையாது… செலவும் குறைவு…
இவ்விடத்தை நன்கு … ஓரளவு… அறிந்தபடியினால் இங்கு பதிகிறேன்.
ஆதாரத்திற்கு கீழே பாருங்கள்…
http://en.wikipedia.org/wiki/Koodankulam
நான் சில கட்டுரைகளை வாசித்தது மட்டுமல்லாமல்.. இந்த வருடமும் இவ்விடங்களை நேரில் பார்த்திருக்கிறேன்…
மன்மோகன் சிங்ன் நல்ல பதிலை தங்கள் மூலம் எதிர்பார்ப்போம்…
http://www.firstpost.com/india/govt-being-deceptive-about-kudankulam-says-ex-aerb-chief-452493.html
டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மூடர்களா?
Alex Eravi அவர்களே நீங்கள் கொடுத்த தகவல்கள் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்குப் புரியுதோ இல்லையோ என்போன்ற மூடர்களுக்குப் புரியும்
பிரதமர் டாக்டர் சிங்குக்கு மக்கள் நலனைவிட ஊழலில் கிடைக்கும் கொமிசன்தான் முக்கியம்
இங்கு குறிப்புகளை எழுதும் டாக்டர் மேதாவிகளுக்கு எதற்கு என்ன எழுதுவது என்பது புரிவதில்லை
கூடங்குளத்தில் ஓர் விபத்து ஏற்ப்பட்டால் அது தமிழ் நாட்டை மட்டும் பாதிக்காது… அயல் மாநிலமான தென் கேரளாவையும்… இன்னும் சுற்று வட்டத்தைப் பார்த்தால் இலங்கையின் மேற்கு பகுதியையும் பாதிக்கும்…
நாகர்கோவிலை பிறப்பிடமாகக் கொண்ட உதயகுமாரும் “எனக்கேன் ஊர் வம்பு… நானும் என் குடும்பம்… என் பிழைப்பு…” என்று இருந்திருக்கலாமே…???
அவரோ தன் மக்கள்… நாடு என்று நலம் சார்ந்து… இதனால் தனக்கு வரும் ஆபத்தையும் உணர்ந்து இப்போராட்டத்தை முன்னெடுக்கிறார்…!!!
அத்துடன் கன்யாகுமாரி திருச்செந்தூர் வழியில் உள்ள இக் கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றி பல கிராமங்கள் உள்ளன…
இரண்டு பக்கமும் உள்ள வாதங்களை வாசித்து வாசகர்களே இது சரியா பிழையா என்று முடிவு எடுங்கள்.
click here…
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
சுவிட்சர்லாந்து 2019ம் ஆண்டுடன் தனது அணுமின் உலைகளை மூட உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
விமர்சனங்களை அடுத்து, சுவிட்சர்லாந்தில் உள்ள 4 அணுமின் உலைகளில் ஒன்றான Mühleberg அணு உலை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது.
இந்நிலையில் ஏனைய மூன்று அணுமின் நிலையங்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 200 மில்லியன் பிராங்குகள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவற்றை இயக்கி வரும் பி.கே. டப்ளியூ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீண்டகாலத்திற்கு அணுமின் நிலையங்களை இயக்குவதற்கான முதலீடுகளை செய்ய உத்தேசமில்லை என தெரிவித்துள்ள அந்த நிறுவனம் சுவிட்சர்லாந்து மற்றும் வெளிநாடுகளில் நீர் மற்றும் காற்றலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளன.
அதேவேளை புதிய திட்டங்கள் மற்றும் உற்பத்தி துறைகளிலும் சேவைகளிலும் அதிகளவான முதலீடுகளை செய்ய உள்ளதாகவும் பி.கே. டப்ளியூ தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து மின்சார விநியோகமானது 40 சதவிகிதம் அணுமின் உற்பத்தி நிலையங்களை சார்ந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Castro, took the opportunity to express concern at the large arsenal of nuclear weapons in the world and spoke of his fear that an accident could destroy the world, an accident that was waiting to happen.
http://www.thehindu.com/news/international/world/an-nbomb-accident-is-waiting-to-happen-castro/article5299582.ece
Alex Ravi thank you again for the information.World is becoming a better place. They are serious about nuclear weapons. They will end the chemical weapon menace for good. That is something that will live with the Sri Lankan Tamils for ever.
“கூடங்குளத்தில் ஓர் விபத்து ஏற்ப்பட்டால் அது தமிழ் நாட்டை மட்டும் பாதிக்காது… அயல் மாநிலமான தென் கேரளாவையும்… இன்னும் சுற்று வட்டத்தைப் பார்த்தால் இலங்கையின் மேற்கு பகுதியையும் பாதிக்கும்”
Alex Eravi அவர்களே நீங்கள் விபத்தால் பாதிக்கப்படும் நிலத்தைத்தான் கவனத்தில் எடுத்துள்ளீர்கள் ஆனால் கூடங்குளத்தை சுற்றிஉள்ள கடலைக் கவனத்தில் எடுக்கவில்லை
நிலத்தில் ஏற்ப்படும் அணுமின்நிலைய விபத்து அந்த நிலத்தையும் அதில் வாழும் மக்களையும் பாதிக்கும் ஆனால் கடலுக்குள் செல்லும் கூடங்குளம் அ ணுக் கழிவுகள் இலங்கை இந்தியாவுக்கு இடையிலுள்ள கடலையும் கடல் வாழ் உயிரினங்களை மாத்திரமல்ல இந்து சமுத்திரத்தையே மாசடையச் செய்துவிடும்
Yes, I know about this. Actually my first concern is the sea. I like to write in detail, but can’t go to India. hahaa…
If u go to that area, u’ll know the police posts in surrounding area & all. Even I don’t like to take any photos (previous experiences… hahaaa)
\Alex Ravi. Bangladesh could not do anything about the barrage that India built on Genges. Sri Lanka could not do anything about Sethu Samuthiram Channel. This also something like that in my view. Then There is IAEA. The International Atomic Energy Authority.
“I am with Prime MInister Dr. Manmohan Singh on this matter all the way”
டாக்டரே, தாங்கள் இந்த விடயம் பற்றி பிரதமர் மன்மோகன் சிங்குடன் எந்தளவிற்கு நிற்கிறீர்கள் என்று அறியலாமா…???
மேலும் இதற்கு ” The International Atomic Energy Authority (IAEA)” உள்ளதாக கூறுகிறீர்கள்… அதே நேரம் உலகம் பூரா உள்ள அணுமின் நிலையங்களின் எதிர்காலம் பற்றியும்… அவ் அவ் நாடுகளின் நிலைகள் பற்றியும் எனது பதிவின் இணைப்பில் பாருங்கள்.
ஓர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி இல்லாவிடின் இந்தியாவின் விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று இருக்குமா…??? (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF)
தாங்கள் இங்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என்று அறியலாமா…???
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைத்தது சரி என்கிறீர்களா…???
அல்லது… எமக்கென் மற்றொரு நாட்டின் பிரச்சனை என்கிறீர்களா…???
இல்லாவிடின் இதையெல்லாம் பார்க்க “The International Atomic Energy Authority (IAEA)” என்று ஓர் அமைப்பு இருக்கிறது என்கிறீர்களா…???
இதை நான் தர்க்கத்திர்க்காகவோ… தங்களை மடக்கவோ எழுதுவதாக என்ன வேண்டாம்… நானும் நான் அறியாததை அறிய விரும்புகிறேன்.
நன்றி!
Alex Ravi, you know that Dr. El Baradei the Egyptian being the Chief of the IAEA is the starting point for the democratization of Egypt. Only Pakistan can have the Islamic Bomb.
Good try and good luck to you mate.
Sutharsan, the Third and the Final World War is on.
கூடங்குளம் அணு மின் உற்பத்தி இடை நிறுத்தம்…
கூடங்குளத்தில் அணு மின் உற்பத்தி தொடக்கி… 57 நாட்களின் பின் இன்று… சில பரிசோதனைகளிற்க்காக ஓர் அணு உலை (400 MWe) நிறுத்தப்பட்டதாக அறியப்படுகிறது…
கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கத் தொடங்கிய நாளில் இருந்து எத்தனை தடவை நிற்ப்பாட்டப்பட்டது என்பதைப் பார்க்க…
http://www.thehindu.com/business/Industry/kudankulam-reactor-turbine-stopped-for-tests/article5414688.ece