கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம் ஆரம்பிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டில் இருந்தே இதற்கு எதிராக கூடங்குள மக்களும், தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கட்டுமான வேலைகள்தொடங்குவதும் மக்கள் போராட்டம் நடப்பதும் என 24 வருடங்களாக இப்போராட்டம் தொடர்கிறது. இடிந்தகரை மக்களின் இப்போராட்டத்திற்கு எமது ஒருமித்த ஆதரவை வழங்குவோம்.
தமிழ் நாட்டில் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது என்பது உண்மைதான், ஆனால் அதை தீர்ப்பதற்கு அணுமின் நிலையம் தான் தீர்வா என்பதே இன்று அப்பகுதி மக்களின் கேள்வியாக இருக்கிறது.உலகெங்கிலும் அணு உலைகளுக்கெதிரான மக்களின் கருதுக்களும், போராட்டங்களும் வலுப்பெற்று வருகின்றன. உக்ரேனில் ஏற்பட்ட மிக அழிவுமிக்க விபத்து தொடக்கம் சமீபத்தைய ஜப்பானிய விபத்து வரை என்னதான் வளர்ச்சியடைந்த நாடாகவோ அல்லது நிறுவனமயப்பட்ட நாடாகவோ இருந்தாலும்கூட, அணுஉலை விபத்தென்பது கட்டுப்படுத்த முடியாததும் ஆபத்து நிறைந்ததும் என்பதை உலகம் கண்டிருக்கிறது.
உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயகநாடு, மிகவேகமாக வளர்ந்து வரும் வல்லரசு நாடுகளில் ஒன்று என்று பீத்திக்கொள்ளும் இந்திய அரசு
; தனது சொந்த பழங்குடிமக்களின் வாழ்வுரிமையை வெளிநாட்டு நிறுவனங்களின் நலன்களுக்காக பறிப்பதும், உரிமைக்காக போராடும் தேசிய இனங்களை இரும்பு கரங்கொண்டு ஒடுக்குவதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவதை ஒருபொருட்டாகூட எடுத்துகொள்ளாமல் இருப்பதென்பதும், அடிப்படையில் ஜனநாயமற்ற ஒரு மக்கள் விரோத அரசு என்பதை தெளிவாக காட்டி நிற்கிறது.
போபாலில் ஜுனியன் காபைட் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் நிகழ்ந்த நச்சு வாயு விபத்தில்16 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு, 5.6 இலட்சம் மக்கள் காயமுற்றார்கள். மக்களை கடவுளின் பிள்ளைகளாக மதிக்கும் இந்திய அரசு செய்தது என்ன? தொழிற்சாலை நிர்வாகத்தையும், வெளிநாட்டவர்களையும் முழுக்கவனதுடன் காப்பாற்றியது. பல ஆண்டுகால போராட்டத்தின் பின் மக்களுக்கு சிறு மானியங்களை வழங்கியது, விபத்தில் தொடர்புள்ள நிர்வாகிகள் சிலர் இயற்கையாக இறந்தபின் அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டது.
மக்களின் நலனில் சிறிதும் அக்கறையற்ற, ஊழலை நிர்வாகத்தின் அடிப்படையாக கொண்ட இந்திய அரசு கூடங்குளம் அணுநிலயத்தை மட்டும் விதிவிலக்காக நடத்திவிடப்போவதில்லை. இடிந்தகரை மக்கள் இதை நன்றாக புரிந்துதான் இத்தனை வருடங்களாக போராடுகிறார்கள். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் அக்கறை காட்டும் கனவான்கள், இந்த மக்களின் உறுதியான போராட்டத்தின் நியாயத்தை விளங்கிக்கொள்ளவேண்டும். இப்போராட்டத்தின் தலைமை அமரிக்க சார்பு கொண்டதென்னும் பனிப்போர் கால பிரிவினை பேசி, இப்போராட்டத்தை காயடிக்கமுனைவது மக்கள் விரோதச்செயல்.
இன்று இடிந்தகரை மக்கள் நடத்தும் போராட்டம் இலங்கை மக்களையும் காப்பற்றுவதற்கான போராட்டம் என்பதை எம்மில் எத்தனைபேர் உண்ர்ந்துள்ளோம் என்பது ஒரு கேள்விக்குரிய விடயந்தான். கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கும் கூடங்குளத்திற்கும் மிககிட்டியதூரத்தில் இலங்கையின் வடக்கு மற்றும் மேற்கு மக்கள் வாழ்கிறார்கள். இரு மின்நிலையங்களில் ஏற்படும் எந்த விபத்தும் எம்மையும் எமது கடலையும் பாதிக்கக் கூடியவை. தனது சொந்த எல்லைக்குள்ளேயே சிறுபான்மை தேசிய இனங்களையும், தனது சொந்த மக்களையும் ஒடுக்கியழிக்கும் இலங்கை அரசிற்கு இது ஒரு பொருட்டான விடயமல்ல. இதற்கெதிரான போராட்டத்தை நாம் எடுக்காவிட்டாலும் போராடும் தமிழக மக்களுடன் எம்மை இணைத்துக்கொள்வோம்.
இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் இலங்கை தமிழரின் உரிமை பற்றி பேசும் அமைப்புகள், இலங்கை தமிழருக்காக தமிழ் நாட்டு தமிழர் உயிர் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் அமைப்புகள், இக்கால கட்டத்தில் வாய்மூடி மவுனமாக இருப்பது பச்சைசந்தர்பவாதமாகும்.
தமிழகத்தின் ஆளும் கும்பல்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஒத்துழைப்பு டனேயே இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மாற்று தலைமை என்று தங்களை கூறிக்கொள்ளும், வைகோ, திருமாவளவன்,சீமான்,ராமதாஸ்,பாண்டியன் போன்றோர், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை உள்வாங்கி, தமது கட்சிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதுடன் அவற்றை நீறுபூர்க்க செய்வதும், இதைவிட மிகமோசமாக இம்மக்கள் போராட்டங்களை திருப்பிச்சென்று இந்திய அரசிடமோ அல்லது மாநில அரசிடமோ சரணடயவைக்கும் நயவஞ்சக அரசியலையும் செய்கின்றனர். இவ்வகை அரசியல்வாதிகள் தவிர வேறு தெரிவின்றி தவிக்கும் தமிழக மக்கள் மத்தியில் மக்கள் நலனில் அக்கறையுள்ள தலைமைகள் உருவாக வேண்டும். இதை நோக்கிய தமிழக மக்களின் போராட்ட கரங்களை இலங்கை தமிழர்களாகிய நாம் வலுப்படுத்தவேண்டும்.








Bhopal is indeed the biggest industrial disaster in history. Chernobyl in Ukraine. Look like the reactors here are nearing completion.
இந்த யுகத்தில் அணுசக்திக்கு எதிராக யாரும் போராட முடியாது. எதோ இது ஒருவகையில் பிரதான பாத்திரம் வகிக்கிறது.
அணுசக்தியின் ஆற்றலை பெற்று அதை மனித குலத்து வாழ்வு முறைக்கு இலகுவாக்குவதும் ஒன்று. அணுசக்தியின் ஆற்றலை பெற்று மனிதகுலத்தின் ஒரு பகுதியை அழிப்பது ஒன்று. அணுசக்திக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் முதலில் நாகசாக்கி குரோசிமா மக்களின் தலையில் அணுக்குண்டை பாவித்து நிர்மூலமாக்கிய நினைவுசின்னத்திற்கான போராட்டத்தை நடத்தட்டும்.
அப்புறம் கூடங்குளத்திற்கு பின்னால் உலகமக்கள் அணிதிரள்வார்கள்.
கூடங்குலம் போராட்டம் ஒரு கேலிக்கூத்து என்பது மட்டுமல்லாமல் இந்த அணுமின்னுலை எதிர்ப்பு தலைமைகள் கூடாங்குலம் மக்களின் அறிவுகளிலும் நச்சுவிதைகளை தூவி ஏகாதியபத்திய ஆதரவுக்கு தொழிலாளி வர்கத்தை அணி திரட்டுகிறார்கள்.
எதிர்ப்பு தலைமைகள் நச்சுவிதைகளை தூவி ஏகாதியபத்திய ஆதரவுக்கு ///// மக்கள் போராட்டங்களுடன் இணைந்து இந்த ஏகாதிபத்திய சார்பு என்.ஜி.ஓ க்கள் ,அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகளை ,அம்பலப்படுத்தி , மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள் போன்றவற்றை முன்னிறுத்தி,
இன்று இருக்கும் முதலாளித்துவ அல்லது அதற்கு முந்தைய உற்பத்தி உறவுகளைக் கொண்டுள்ள சமூக அமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த போராடுவதே சரியான வழிமுறையாகும்.
ஏகாதியபத்திய ஆதரவுக்கு தொழிலாளி வர்கத்தை அணி திரட்டுகிறார்கள்.////அமெரிக்கா ஏகாதியபத்திய அரசு தவறு தான், மக்களிட்கானதல்ல தான் ,ஆகவே இந்திய அரசு சரியானது ,மக்களிட்கானது ,முற்போக்கானது ,ஜனநாயகமானது என்று நிறுவ முற்படுவது என்ன நியாயம்?
ஒஹ்,மன்னிக்கவும் .அடிவருடிகளின் வேலையே இது தானோ.
போததற்கு இந்த மக்கள் நலனை முன்னிறுத்தும் நல்ல இந்திய அரசை கெடுக்கத்தான் இந்த அணுமின்னுலை எதிர்ப்பு தலைமைகள் கூடாங்குலம் மக்களின் அறிவுகளிலும் நச்சுவிதைகளை தூவி ஏகாதியபத்திய ஆதரவுக்கு தொழிலாளி வர்கத்தை அணி திரட்டுகிறார்கள் என்ற கருத்து,பூச்சாண்டி வித்தை வேறு.
மக்கள் நலன் தான் முக்கியம்.அது ஏகாதியபத்திய அரசு என்றால் என்ன மக்கள் விரோத இந்திய அரசானால் என்ன. இரண்டுமே மக்கள் எதிரிகள் தான்.
வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு தேவையானால் அணு மின்சாரம் தேவை இல்லாமால் இருக்கலாம். ஆனால் இந்தியாவைப் போல வளர்கின்ற , மக்கள் தொகை அதிகமான நாட்டுக்கு அணு மூலமான தேவைகள் , பயன் கள் அவசியமான தேவையே. ஏற்கனவே வளர்ச்சியடைந்த நாடுகள் என்று சொல்லப்படுகின்ற அமேரிக்கா, யப்பான் , ஜேர்மனி , பிரான்ஸ் போன்றநாடுகள் இன்றுநவீன தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி மின்சாரத்தையும் , பிற தேவைகளையும் அணு இல்லாமல்பூரித்தி செய்யும் நிலையில் வள்ர்ச்சி அடந்துள்ளன. இந்தியாவும் அப்படி ஒரு வளர்ச்சியை அடையும் வரை அணுப் பயன் பாடு இந்தியாவிற்கு தவிர்க்க முடியாதது. ” மக்கள் விரும்பியதை அல்ல , மக்களுக்கு எது தேவை , அவசியமோ , அதைக் கொடுப்பதுதான் , அரசு அல்லது அரசாங்கம் “.
https://inioru.com/?p=30329
thamizhan:
Posted on 09/13/2012 at 2:32 pm:கூடங்குளததைச் சுற்றி உள்ள மக்கள் அணு உலைக்காக போராடுவதை விட , தங்கள் நிலம் வீடு வாசல் போய்விட்டதே என்றுதான் போராடுகிறார்கள் /// THEVAN:உண்மை. மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள் போன்றவற்றை முன்னிறுத்திய கூடங்குளததைச் சுற்றி உள்ள மக்கள் போராட்டத்திற்கு தங்கள் நிலம் வீடு வாசல் இனம் சனத்தை தொலைத்த ஒரு சமூகத்திடமிருந்து இப்படி ஒரு கருத்து, அதுவும் தமிழன் என்ற பெயரில் . பாவம் தமிழன்.
தமிழ்நாட்டை என்ன பாகிஸ்த்தானா அடிமையாய் வைத்திருக்கிறது . அதற்கு எதிராகவா நீங்கள் உயிர் துறந்து உடமை இழந்து போராடிக்கொன்று இருக்கின்றீர்கள்:அல்லது நீங்கள் இன்று போராடும் போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் எத்தனை ஆயிரம் அல்லது லட்சம் , அல்லது கோடிப் பேர் உங்களின் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்:வாக்கு வங்கி இல்லாத அரசியல் கட்சிகளும், அரசை எதிர்க்கும் எதிர்ப்பு வாதிகழுமே இந்தப் போராட்டத்தை ஊதிப் பெரிதாக்குறார்கள்.நீங்கள் வருடம் முழுக்க அரிசி , மா சீனி விலை ஏற்றத்திற்காகப் போராடுவீர்கள்: பெற்றோல் , டீசல் , காஸ் விலை ஏற்றத்திற்க்காவும் போராடுவீர்கள். சாதிச்சண்டை வீதிச் சண்டைக் காகவும்( வீதிக்கு யார் பெயர் வைப்பது) போராடுவீர்கள். இதற்கு எல்லாமா ஈழத்தமிழர்நாம் உங்களுடன் சேர்ந்து வந்து போராடுவது. எதற்கெல்லாம் போரட வேண்டுமோ( கச்ச தீவை மீட்பது, கர்னாடகத்தில் இருந்து தண்ணீர் வரவைப்பது, மீனவர்களை இலங்கைக் கடல்படை சுடாமல் விட மத்திய அரசை வற்புறுத்து வது ) எதற்கு எல்லாம் போராட வேண்டுமோ அதற்கு எல்லாம் போராடமாட்டீர்கள் . தமிழ்நாட்டிற்கு அவசியமானதொண்ரை எதிர்த்து எங்களை போராச் சொல்ல்கிறீர்களா….?
மக்கள் விரும்பியதை அல்ல , மக்களுக்கு எது தேவை , அவசியமோ , அதைக் கொடுப்பதுதான் , அரசு அல்லது அரசாங்கம் “./// மிக சரியே. இந்திய அரசு அல்லது அரசாங்கம் மக்களிட்கானதல்ல என்பதுவே முக்கிய பிரச்சனை. மக்களின் பெயரில் அதிகார வர்க்கத்திற்கு மட்டும் சேவை செய்யும், மக்களை பற்றி ஒரு துளி கரிசனை அற்ற சொத்து குவிக்கும்,வாரிசுகளை நிர்வாகிகளாக உடைய ஒரு நிறுவனம். ஜனநாயக விரோத அரசு. ஆகவே மக்கள் விரும்பியதை மட்டும் அல்ல , மக்களுக்கு எது தேவை , அவசியமோ , அதைக் கூட கொடுக்காதது தான் இந்த இந்திய அரசு அல்லது அரசாங்கம்.
உற்பத்தி சக்தி தேவை ,மாற்றுக்கருத்து இருக்கமுடியாயது , மக்களின் பாதுகாப்பு ,அடிப்படை ஜனநாயக உரிமைகள்,அடிப்படை சமூக வாழ்வாதரங்கள், மனித குலத்து வாழ்வு போன்றவற்றை முன்னிறுத்திய அரசின் உற்பத்தி சக்தி முறையை வரவேற்போம்.
ஒருநாட்டில் எல்லா மக்களையும் எந்த ஒரு அரசாலும் திருப்திப்படுத்தவே முடியாது. இன்று முழு இந்தியாவினதும் தமிழ்நாட்டினதும் முக்கிய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமே சனத்தொகைப் பெருக்கமே. சனத்திகையைக் கட்டுப்படுத்திவிட்டாலேயே தமிழ் னாட்டின் முக்கால் வாசிப் பிரச்சனை தீர்ந்துவிடும். சீனாவைப் போல் , தமிழ்னாட்டு அரசும் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தையே என்று ஒரு வேளை சட்டம்கொன்று வந்தால் , என்னநடக்கும். உங்களது முதல் வேலையே அந்த அரசைக் கவிழ்ப்பதுதான்.நாட்டு மக்களுக்கு ஆட்சியில் இருக்கும் ஒரு அரசுநல்ல திட்டம் கொன்று வந்தால், எதிர்க்கட்சிகள் , அல்லது சமூகநலன் கொண்டவர்கள் அதை ஆதரித்து மக்களிடம் எடுத்திச் சொல்ல வேண்டும். ஆனால் காலம் காலமாய் தமிழ்நாட்டில் என்னநடக்கின்றது. உண்மையிலேயே தமிழ்னாடானாது , இலங்கையை விட சிறப்பானதாக இருந்திருத்தல் வேண்டும். இத்தனை போர்களுக்கு மத்தியிலும் இலங்கை தமிழ் நாட்டை விட சிறப்பாக வளற்சி அடைந்து இருக்கிறது. கூடங்குளம் அனல் மின்நிலையம் தமிழ்நாட்டிற்கு வளற்சிக்கே ஒழிய , தடை அல்ல.ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு தண்ணி வரத்தும் இல்லை, மின்சாரமும் இல்லை என்றால்..தமிழ்நாடு சுடுகாடு தான்.கூடங்குளம் அனல் மின்நிலையத்திற்கு எதிராகக் காட்டும் இந்த எதிர்ப்பை, கர்நாடகம் தண்ணி தராததற்க்காகவும், கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீடபதற்க்காகவும் காட்டினால் எவ்வளவோ பயன் உள்ளதாகவும், தூரநோக்குடையதாகவும் இருக்கும்.ஆனால் இவை எல்லாம் எப்பொழுதான்நடக்கப் போகிறது. உங்களுக்கு தான் சீரியலும் சினிமாவும் இரு கண்கள் ஆச்சே.
These are the first reactors in the State of Tamil Nadu.
என்ன கொடுமைடா! வளர்ந்த நாடு என்றால் மின்தேவை குறைந்து விடுமாம். நல்ல சிந்தனை.
I think the Northern Provincial Council should draw contingency plans in case of a disaster at Koddankulam. That is all to it.