கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வரும் போராட்டக் குழுவினர் மீது இந்து அடிப்படை வாதிகள் கோரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அமைதியாகச் சென்றவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட இந்து மத வெறியர்கள் இந்திய வன்முறையின் வியாபாரக் குறியீடு.
இன்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற விருந்த நிலையில் அப்பேச்சுவார்த்தைக்கு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்றனர். அவர்கள் நுழையும் நிலையில் பிஜேபி, காங்கிரச், இந்து முன்னணி போன்ற மதவாதக் குழுக்களைச் சார்ந்தவர்கள் திரண்டு போராட்டக் குழுவினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் பல பெண்கள் காயமடைந்தனர். இதனால் போராட்டக் குழுவினர் தப்பியோட அவர்களை சூழ்ந்த கும்பல் தொடர் தாக்குதலை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவைச் சீரழிக்கும் பார்ப்பனக் கும்பல்கள் கூடங்குளத்தில் வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் மனிதகுலத்தின் வாழ்வதற்கான உரிமைகளுக்கு முரணாக உருவாக்கப்பட்ட அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட மனிதப் பேரவலத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதும் அணு மின் நிலையங்கள் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப் படுகின்றன. இந்தியாவில் சொந்த மக்கள் இரத்ததில் வியாபாரம் செய்யும் அவலம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
தெற்காசிய இனப்படுகொலை அரசின் வக்கீலாக இலங்கை சென்ற அப்துல் கலாம் அணு மின்நிலையத்தால் பாதிப்பில்லை என்று அப்பட்டமாக மக்களை ஏமாற்றும் பிரதான அரசியல் மொத்த வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது.