அணு உலையை மூடவேண்டும், அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசாரைத் திரும்பப் பெற வேண்டும், போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யவேண்டும், அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும், என்ற நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அணு மின்நிலையத்திற்கு 500 மீட்டர் தொலைவில் கடலில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் இருந்தவாறு, போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர் .
போலீசாரால் தேடப்பட்டுவரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மற்றும் மூத்த தலைவர்கள் முகிலன் மற்றும் புஷ்பராயன் ஆகியோரும் இன்றைய ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக நெல்லை மற்றம் குமரி மாவட்ட மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய படகு அணிவகுப்பு போராட்டம் 4 மணியுடன் நிறைவடைந்தது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து 11ம் தேதி முடிவு செய்யப்படும் என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.









எரிபொருள் நிரப்பப்பட்டாயிற்று இனி யந்திரங்கள் சுற்றுவதும் சுற்றாததும் உச்சநீதிமன்றத்தின் இற்றுப்போன தீர்ப்பில்தான் தங்கியிருக்கின்றது…?
It is good to limit that demands to four. It will be easier to focus and design strategy.