கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் இன்று ஆய்வை தொடங்குகிறார்கள்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்கரையோர கிராம மக்கள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். பல்வேறு இடங்களிலும் இது போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையிலான மத்திய குழுவினர் பின்னர் கூடங்குளம் சென்று அணு உலையை ஆய்வு செய்தனர்.
மத்திய குழுவினர் மீண்டும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்கிறார்கள். அவர்கள், வருகிற 17-ந் தேதி வரை, அதாவது 3 நாட்கள் ஆய்வு செய்கிறார்கள். போராட்ட குழுவினர் கேட்ட 50 கேள்விகளுக்கு விஞ்ஞானிகளிடம் அப்போது மத்திய குழுவினர் பதில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு இத்தனை காலமும் இக் கேள்விகளுக்கு விடையின்றியே நகர்ந்துள்ளது என்பது வியப்புக்குரியது.
தவிர போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் ஜெயலலிதா அரசு போராட்டக் காரர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது