கூடங்குளம் அணு மின் நிலயத்தை மூடக் கோரி மக்கள் ஆரம்பித்த உணாவிரதப் போராட்டம் இப்போது முற்றுகைப் போராட்டமாக விரிவடைந்துள்ளது. இதே வேளை இது குறித்து தனக்குக் கருத்து எதுவும் இப்போதைகு இல்லை என ஜெயலலிதா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
போராடும் மக்களால் அணு மின் நிலையம் முற்றுகைக்குயிடப்பட்டுள்ளது. நாளாந்தப் பணிகள் மின் நிலையத்தில் தடைப்பட்டுள்ளன.
ஒரு பக்கம் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், போராட்டக் குழுவின் மற்றொரு பிரிவினர், அணுமின் நிலையம் செல்லும் ஒப்பந்த தொழிலாளர் மற்றும் தினக்கூலி தொழிலார்களை கூடங்குளம் எஸ்எஸ்.புரத்தில் வழி மறித்து தடுத்து நிறுத்தினர்.
அதோடு, மூன்றாவது பிரிவினர் செட்டிக்குளம் கூடங்குளம் கடற்கரை சாலை வழியாக வரும் ஒப்பந்தப் பணியாளர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கூடங்குளம் இதுபோன்ற கடுமையான முற்றுகைக்கு உட்பட்டதால், அரசு இயந்திரங்கள் அங்கே குவிந்தது.
ஆர்டிஓ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வள்ளியூர் ஏஎஸ்பி விஜயகுமா ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதட்டம் பதவியிருக்க அணுமின் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள எஸ்எஸ்புரம் விளக்கில் சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கன்னியாகுமரி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை போக்குவரத்து முடக்கப்பட்டு திணறியது.
இதையறிந்த அதிகாரிகள் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். பிரதமரை சந்தித்துவிட்டு வந்தபிறகு, கூடங்குளம் அணுஉலை எதிர்பாளர்களின் எதிர்ப்பு பல்வேறு முறைகளிலும் தீவிரமாக நடத்தப்பட்டதால், அரசு அதிகாரிகள் அதிர்ந்துபோய் உள்ளனர்.
வழிக்குக் கொண்டு வர இது ஒன்றே வழி!வாழ்க மக்கள் பொராட்டம்!பார்க்கலாம்!தமிழ் நாடே ஒன்று திரளக் கூடும்!
மக்கள் போராட்டம் தொடர வாழ்த்துக்கள்!இதை விட்டால் வேறு வழியில்லை!
Even after looking at the adverse results at Japan a developed country, developing country such as India does not get educated rather focus on developing the danger at Koodankulam, Tamizhnadu at the local people’s cost. If at the governement wants to have a power plant there, let it be converted to Thermal Power station. On behalf of my people, I strongly dis agree with the Governement’s approach.