யாழ். நகர்ப் பகுதியில் கூடங்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தினை உடனடியாக நிறுத்துமாறு கோரி, துண்டுப் பிரசுரங்கள் இன்று விநியோகிக்கப்படுகின்றன.
அணுமின் நிலையத்தில் வெடிப்புக்களோ, கசிவோ ஏற்பட்டால் அதன் கதிர் வீச்சினால் இலங்கைக்கும் பாரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதனால் அதை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
குறித்த துண்டுப் பிரசுரங்களில், இந்தியாவின் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் வடமாகாணம் முழுமையாகவும், புத்தளம், திருகோணமலை போன்ற மாவட்டங்களுடன் வேறு சில மாவட்டங்களும் பாதிப்படையும்.
அத்துடன், திடீர் மரணங்கள் உட்பட புற்றுநோய் மற்றும் உயிர்க்கொல்லி நோய்களையும் உருவாக்குவதுடன் எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளும் அங்கவீனர்களாக பிறக்கும் சாத்தியங்கள் அதிகமாக உருவாகும்.
எனவே, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இந்திய மக்கள் போராடி வரும் இச்சந்தர்ப்பத்தில் இலங்கையர் ஆகிய நாமும் போராட வேண்டும்.
எமது சூழலை பாதுகாத்துக் கொள்ளவும், மீன்பிடித் தொழிலை பாதுகாத்துக் கொள்ளவும், உயிர்களை பாதுகாத்துக் கொள்ளவும், ஒன்று சேருவோம். எதிர்காலத்தில் ஏற்படும் அழிவை நிறுத்துமாறு இந்திய, இலங்கை அரசாங்கத்தினை வற்புறுத்துவோம். ஒன்றிணைந்து போராடுவோம் என அத்துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்கள் பிரச்சனையானவர்களா….? அல்லது தமிழர்களுக்காக பிரச்சனைகளா….?