குழந்தையை தொடர்ந்து துன்புறுத்திய வழக்கில் நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதியினருக்கு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தந்தை சந்திரசேகருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் தாயார் அனுபமாவிற்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்; நார்வே நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு வயது மகன்,
சிறுவனிடம் இயற்கைக்கு மீறிய அதீத சுறுசுறுப்பு இருந்தது. இதனை தொல்லையாகக் கருதிய தாய் தந்தையர் மகனை இந்திய முறைப்படி துன்புறுத்தியுள்ளனர். பொதுவாக ஆசிய நாட்டவரிடம் இவ்வாறான போக்குகள் அதிகமாகக் காணப்படுகின்றது. பெற்றோருக்கு அடங்கிப்போவதற்காகவும், பெற்றோரின் கனவுகளின் உறைவிடமாக குழந்தைகளை மாற்றுவதற்காகவும், ‘கலாச்சாரம்’ என்று அவர்கள் கருதுவதைத் திணிப்பதற்காகவும் உடல் உளரீதியாகக் குழந்தைகள் துன்புறுத்தப்படுகின்றனர்.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து நிலப்பிரபுத்துவ கலாச்சார விழுமியங்களோடு புலம் பெயர்ந்தவர்கள், தமக்காகத் தயார்படுத்திக்கொள்ளும் மனித இயந்திரங்களே அவர்களின் குழந்தைகள்.
பள்ளிப் படிப்பை தொடர்ந்து வரும் சாய் ஸ்ரீராம் ஆஸ்லோவில் உள்ள ஒரு சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் போது அவரது ஆசிரியரிடம் ஸ்ரீராம் தனது பெற்றோர்கள் அவரை இந்தியா அனுப்ப போவதாகவும். இதனால் மிகுந்த கவலையுடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு காரணம் கேட்ட ஆசிரியையிடம் அவர், கால்சட்டையில் சிறுநீர் கழித்து விட்டதாகவும், இதற்காக பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இந்தியாவுக்கு அனுப்பி விடப்போவதாக மிரட்டுவதாகவும் கூறினார்.
இதனையடுத்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் படி சந்திரசேகர், அனுபமா கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் சிறுவனின் உடம்பில் தீக்காயங்களும், தழும்புகளும் இருந்தது தெரியவந்தது. பெல்டாலும் சிறுவன் அடிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நார்வே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.







