இந்தியாவில்தான் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதாக, ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. 2009-ம் ஆண்டுக்கான உலக குழந்தைகைள் நிலை குறித்த அறிக்கையை யுனிசெப் வெளியிட்டுள்ளது.
அதில் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக குழந்தை திருமணம் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .
இந்தியாவில் 45% பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனர் என புள்ளி விபரத் தகவல் தெரிவிப்பதாக செய்திகள் தெரவிக்கின்றன. இவ்வாறு குழந்தை திருமணம் நடப்பது தான் முன்னேறும் நாடுகளில், முன்னேறிய நாடுகளை விட பிரசவத்தின் போது அதிக அளவில் பெண்கள் உயிரிழப்பதற்கு காரணமாக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது . (டிஎன்எஸ்)