Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

குறியீடுகளின் புனிதம் முன்வைக்கும் அரசியலும் புலிக்கொடியும் : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
06/20/2011
in தேசியம் குறித்து, பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
40
Home அரசியல் தேசியம் குறித்து

“தேசியம் அடையாளம் குறித்த புனினதமான விம்பங்களைக் கட்டமைத்து அவற்றை தங்கள் நலனுக்கான மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்” – லண்டனில் அருந்ததி ராய்.

21 ம் நூற்றாண்டின் அழிவு அரசியல் என்பது இவ்வாறான “புனிதமான” அடையாளங்களை அடிப்படையாக முன்வைத்து உருவாகியிருக்கின்றது. அடையாளங்களை உருவாக்கும் செயன்முறை என்பது அனேகமாக அனைத்துத் தளத்திலும் சில படிமுறைகளைக் கடந்து செல்கின்றது. குறிப்பாக இனக் குழுக்களும், மக்கள் பிரிவுகளும், மதப் பிரிவுகளும் அழிவுக்குரிய அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைத்து இந்த அடையாளங்களை உருவகப்படுத்திக் கொள்கின்றனர்.

தாம் ஏனையோரிலும் மேலானவர்கள் இதனால் தனித்துவமானவர்கள் இதனால் புனிதமானவர்கள் என்ற தொடர்ச்சியான படிநிலைகளூடாக வளர்க்கப்படும் சிந்தனை இறுதியில் ஒரு அடையளத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த அடையளம் என்பது பின்னதக விமர்சிக்கப்பட முடியாததாகவும், வழிபாட்டிற்குரிய புனிதத்தன்மை வாய்ந்ததாகவும் கடமைக்கப்படுகின்றது. இறுதியில் இந்தப் அடையாளம் குறித்த புனிதத்தை சந்தர்ப்ப வாதிகளும், அரசியல் வியாபாரிகளும், மிக இலகுவில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அடையாளம் என்பது பல சந்தர்ப்பங்களில் சின்னங்கள், தனிமனிதர்கள் அவை கட்டமைக்க முனையும் விம்பங்கள் ஆகியவற்றோடு தொடர்புடயது.

இந்த அடையாளம் குறித்த புனிதம் ஹிட்லர் காலத்தில் பல அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஜேர்மனிய மக்களின் மிகப் பெரும்பான்மையினர் ஹிட்லரின் கொடி, சின்னம், வணக்கம் செலுத்தும் முறைமை ஆகிய “புனித்தை” வழிபடும் நிலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இந்த அடையாளத்தின் பின்னணியில் தாம் மேலானவர்கள், உயரிய ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் போன்ற மக்கள் விரோத அரசியல் சிந்தனை உருவாக்கப்பட்டிருந்தது. ஹிட்லர் தலைமையில் புனையப்பட்ட இந்தச் சிந்தனையை மூலதனமாக்கி மக்களை அழித்தொழித்த வரலாற்றை உலகம் இன்னமும் முற்றாக மறக்கவில்லை.

இந்து தத்துவா என்ற அடையாளமும் இதே பண்புகளைக் கொண்டிருந்தது, இந்துக்கள் புனிதமானவர்கள். ஏனையோர் குறிப்பாக இஸ்லாமியர்கள் தமது எதிரிகள் என்பது இவர்களின் மக்கள் விரோதக் கருத்தாக அமைந்தது. இந்து அடையாளம் குஜராத்தில் 2000 அப்பாவி முஸ்லீம்களைச் சாகடித்திருக்கிறது. இந்தியா முழுவதும் பார்பனீய அதிகாரத்தின் காவலனாக அமைந்திருக்கிறது. இவர்கள் காவியுடை, இந்துத்துச் சின்னம், இராமரின் புனித பூமி போன்ற பல்வேறு அடையாளங்களை முன்வைக்கின்றனர்.

இதன் இன்னொரு அடையாள உருவாக்கம் தான் இலங்கைத் தீவை பிணக் காடாக மாற்றிய சிங்கள பௌத்தம் குறித்த புனித அடையாளம். பௌத்த மதத்தின் நவீன காலக் காவலராக இன்றுவரை போற்றப்படும் அனகாரிக தர்மபால என்பவர் கூறுகிறர் “இலங்கை என்ற அழகான தீவு பௌத்தர்களின் புனிதம் நிறைந்த நிலம். இங்கு வாழும் ஏனைய இனங்கள் சிங்கள பௌத்தர்களின் புனிதப்பணிக்கு ஆதரவு நல்க வேண்டும். ஏனைய இனங்களைப் போலன்றி சிங்கள பௌத்தர்கள் ஆரிய இன அடையாளத்தைக் கொண்டவர்கள்” என்று ஆரம்பித்த அனகாரிக்க தர்மபாலவின் கருத்தாக்கம் சிங்கள பௌத்தக் கொடி, புனிதம் நிறைந்த பௌத்த விகாரைகள் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டது. இந்த அடையாளங்களை தமது மூலதனமாக்கிக் கொண்ட அரசியல் வியாபாரிகள் நடத்துகின்ற அருவருப்பான வியாபாரம் தான் 60 ஆண்டுகள் இடைவெளியின்றி நிகழ்த்தப்படுகின்ற இனபடுகொலைகளின் சித்தாந்தப் பின்னணி.

இவர்களின் எதிரிகள் தமிழ்ப் பேசும் சிறுபான்மை மக்கள்.

இவை அனைத்தையும் போன்றே முப்பது வருட பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டத்தின் இன்னொரு விளைவாக நாம் எம்மைச் சுற்றிக் கட்டமைத்துக் கொள்கின்ற அடையாளம் குறித்த புனிதமும் அவற்றின் அரசியல் அழிவும். இன்று கிழக்கு லண்டனில் “தமிழ்ப் பேசும் மக்களின் சொத்தான புனித தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் பங்காற்றுமாறு” தமிழ் இளைஞர்கள் அமைப்ப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கான கட்டணம் £10 என்று வேறு குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்குறித்த அழிவுகளை ஏற்படுத்தும் அடையாளம் குறித்த புனித்தை உருவாக்கி அதனை மூலதனமாக்கும் செயற்பாட்டின் ஒரு குறியீடே இந்த நிகழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு புனிதத்தை முன்வைத்து உருவாக்கப்படும் அடையாளங்களை எந்த சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளும் பயன்படுத்திக்கொள்ளும் அபாயகரமான நிலையை நாம் காண்கின்றோம். குறிப்பாக புலிக் கொடி என்ற “புனித” குறியீட்டை கே.பி போன்ற அரச முகவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் அவரின் எதிர்த் தரப்பும் பயன்படுத்திக்கொள்ளாலாம். ஆக, அதன் பின்னணியிலுள்ள அரசியல் இங்கு முன்னிறுத்தப்படுவதில்லை.

புனித அடையாளங்களை உருவாக்கி, அதன் மாயைக்குள் அப்பாவி மக்களை அடிமைப்படுத்தி அவற்றை மூலதனமாக்கிக் கொள்கின்ற செயற்பாட்டை அடையாளம் காண்பதும் அதற்கு மாற்றன ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஒன்றிணைவும் இன்று அவசியமான அரசியற் செயற்பாடாக மாற்றமடைந்துள்ளது.

தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஜனநாயக முற்போக்கு சக்திகளின் பங்களிப்பைக் கோரிநிற்கின்றது. சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகளின் குறுகிய அரசியல் நலன்களுக்கு எதிரான போராட்டம் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கலைஞர்களுக்கான கலந்துரையாடலும் ....குறும்பட திரையிடலும்

Comments 40

  1. Pingback: Indli.com
  2. Mahendra says:
    14 years ago

    ஆணவம் அகங்காரம் ஆக்கிரமிப்பு இவற்றின் வடிவமான நாசிகளின் அடையாளங்களையும், உயிர் தப்பிவாழ தற்காப்புப் போர்புரிந்த ஈழத்தமிழரின் அடையாளங்களையும் புனிதம் என்ற போர்வைக்குள் ஒப்பிட்டுப் பார்க்க முயல்வது ஏற்புடையதல்ல. நாசிகளின் சின்னத்துடன் தமிழர் சின்னத்தையும் இணைத்து வெளியிட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. அறிவு கூர்மையடையலாம் ஆனால் குத்திக் குதறக்கூடாது.

  3. தாஸ் says:
    14 years ago

    கொடியும் குடியும்…….

    உழவுக்கும் தொழிலுக்கும்
    நெசவுக்கும்
    வந்தனம் செய்வோம்.
    சின்ன சின்ன இழைகளால்
    துணி நெய்து
    மானம் காத்தவன்
    மனிதன்.

    “அந்தணரை தொழுவார்
    அவலம் அறுப்பாரே ”
    என்று அந்தணனைத்
    துதி பாடி
    பெண்களின் முலை அறுத்து
    குழந்தைகளின்
    கருவறுத்து
    குடி மக்களின்
    நெல் களஞ்சியங்களை
    தீயிலிட்டு
    அடிமைகளாகிய மக்களின்
    தலை நசுக்கி
    பல்லவ ,பாண்டிய ,சேரரிடம்
    சகோதர யுத்தம் நடாத்தி,
    கொன்றொழித்து ….
    அவர் இடுப்பிலும் , இருப்பிலும்
    நகை பிடுங்கி ..
    “கொந்து அணவும் பொழில் சூழ்
    கொடிமாடம் “***
    கண்டவன் சோழன் !
    அவன் கொடியாம்
    புலிக்கொடி !
    அவன் காலம்

    பொற்காலமா ?
    கற்காலமா ?

    ஆள்பவர்களுக்கு பொற்காலம்!
    மக்களுக்கு …………….?!

    அவன் எழுப்பிய கோயில்கள்
    ஏராளம் ….!!!
    பாதி புடவை ,பாதி வேட்டி கட்டி
    மாதொருபாகனுக்கு
    சன்னதி கொடுத்தவன்
    தமிழன்.!

    ஆயிரம் ஆண்டுகள்
    கரைந்தோடின….!
    நம் முன்னோரின் ஆவிகள்
    மீண்டும்
    எழுப்பிய ஓலம் தான்
    வன்னியின் ஓலம்..!

    பகைவனைக் கொன்றொழிக்க
    மார் தட்டி
    களம் சென்ற புத்திரர்கள்
    வதை முகாமில் ..!
    பெற்றோர்கள்
    முட் சிறையில் …!
    ஏனென்று
    கேட்க ஒரு ஆளில்லை …
    நாடில்லை !

    கொடி பிடித்தால் தீருமா ?
    தேசியம் பேசிய
    சிங்கம் , புலி
    விலங்குக் கொடிகளால்
    விளைந்ததென்ன ….?!
    வஞ்சமும் , கொலை வெறியும்
    கொண்டு
    அன்னியர்க்கு
    வாலைக் குழைக்கும்
    சிறு நரிக் கூட்டம் தன்னை
    அடக்கும் புதுக் கொடி
    ஒன்றை
    நெய்வோம்.!

    தாஸ்

    *** “கொந்து அணவும் பொழில் சூழ்
    கொடிமாடம் …. என்று தொடங்கும் சம்பந்தர் தேவாரம்

    • Mahendra says:
      14 years ago

      ஆதங்கம் புரிகிறது. இருந்தும் நீர் கருத்துடையவரா, மாற்றுக் கருத்துடையவரா நானறியேன். ஒரு இனத்தின் அடையாளத்தை அதன் தோற்றுவாயை முன்னிறுத்தி அழித்துவிட எண்ணுவது அதிகம், மிக அதிகம்.

      தன் உடல் வளர்க்க வேறுடலை கொத்திக் குதறியுண்ட கற்காலத் தோற்றமொன்றின் அடையாளம் இன்று ‟மனிதன்ˮ அதை எறிந்துவிட்டு புதிதொன்றை தேடுவோமா…

      நான்பிறந்ததெப்படி ஆராய்ந்தால் அவமானம் என்னைப் ‟பெற்றவரும்ˮ காமத்தின் அடையாளம். புதிதாக ஒரு பெற்றோரை தேடுவோமா….

      பெண்ணுக்கு வேலியிட்டு ஆணுக்கு அடிமையாக்கி உடன்கட்டை ஏறவைத்த வஞ்சகத்தின் அடையாளம் ‟தாலிˮ அதை எறிந்துவிட்டு வேறொன்றை தேடுவோமா…

      சேற்றில் பூத்ததினால் செந்தாமரைப்பூவும் சாக்கடை என்றுசொல்லிக் கவிபாடி களிக்காது அதன் புனிதம் போற்றி நிற்போம்.

  4. manoharan says:
    14 years ago

    கடந்தகாலங்களில் புலம்பெயர்நாடுகளில் வெறுமனே தலைமை வழிபாடும், வெறும் தேசியத் தேவாரமும் பாடிய சக்திகள் ,இன்னும்
    புலம்பெயர்நாடுகளில் உள்ள கோவில் ,மற்றும் தமிழ்பாடசாலைகளிலும் ஏதோ விதத்தில் அதிகாரம் செலுத்திக்கொண்டுதான்
    இருக்கின்றது.வெறும் நப்பிக்கையை மட்டும் ஊட்டி கலர்,கொடி,சின்னம்.தேசியஅடையாளஅட்டை என்று புலம்பெயர்மக்களை முட்டாள் ஆக்க
    முற்படுகின்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்ட,அழிக்கப்பட, அரசியலை பார்க்கதகுதிஇல்லாத இவர்கள் தேசியத்தின் பெயரில் புலம்
    பெயர்மக்களுக்கு மதவாதிகளைப்போல, பொய்யான நப்பிக்கையை மட்டும் கொடுக்க முற்படுகின்றார்கள். புலம்பெயர் மக்கள் ஒவ்வொருவரும் கடந்தகாலங்களில் நடந்துகொண்ட பொறுப்பற்ற தன்மையே இவ்வழிவுக்கு காரணமாக இருந்தது.
    இனியாவது இந்த அரசியலற்ற அதிகாரத்தனமான கூட்டத்தை புலம்பெயர் அரசியலில் இருந்து அகற்ற முற்படவேண்டும்.

  5. Mahendra says:
    14 years ago

    புலத்திலும் நிலத்திலும் வெறுமனே தலைமை வழிபாடும், வெறும் தேசியத் தேவாரமும் பாடிய சக்திகளையும், இன்னும் புலம்பெயர்நாடுகளில் உள்ள கோவில் ,மற்றும் தமிழ்பாடசாலைகளிலும் ஏதோ விதத்தில் அதிகாரம் செலுத்திக்கொண்டு இருப்பவர்களையும் அகற்ற முற்படும் முயற்சிகளுக்கு தமிழ்மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். அது இன்றைய அவசிய தேவையும்கூட. ஆனால் புலிகளால் மறுக்கப்பட்ட, அழிக்கப்பட, அரசியலென்று உண்மைக்குப் புறம்பாக பரப்புரை செய்ய முற்படுவது கையாலாகாத்தனம். சிங்களப் புத்திஜீவிகள் பலர் புலிகளின் போராட்டத்தை வெளிப்படையாகவே புகழ்ந்துபேசியும், எழுதியும் உள்ளதை ஏற்பதற்கு காழ்ப்புணர்ச்சி தடுக்கிறதா… புலிகளின் போராட்டம்பற்றி ஐ.நா சபையின் ஆய்வாளர்களே நற்சான்றுகளையும் தெரிவித்துள்ளதையும் நோக்கவேண்டும். போராட்ட வழிமுறைகளை மாற்ற முற்படுவதில் தவறில்லை. போராளிகளை இழிவுபடுத்தாதீர்கள்.

    • manoharan says:
      14 years ago

      போராளிகளை இழிவுபடுத்தியது புலிகளின் தலைமையும் அது கொண்ட அரசியலும் தான். என்பதை இன்று வரை உணரமறுக்கின்றோம் .. மகேந்திரா

      • Mahendra says:
        14 years ago

        உலகப் பயங்கரவாதிகளை உலகம் போற்றும் உத்தமர்களாக்கியது உணர்வல்ல உண்மை. உண்மை வெளிவர தலைமுறைகளும் ஆகலாம்

        • manoharan says:
          14 years ago

          மகேந்திரா…
          உண்மை என்பது நிகழ்வில்தான் உள்ளது , நாங்கள் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.ஆனால்
          நாங்கள் அப்படி நடக்கவில்லை ,அதற்கு மாறாக தலைவர், கட்டமைப்பு ,கலர்துணி (தேசியக்கொடி) ,போன்றவற்றில்
          தான் எம் முக்கியத்துவம் உள்ளது . உண்மை என்பது எம் மக்களின் பிரச்சனை மட்டும் தான் ,அதை விட உண்மை
          ஒன்றும்மில்லை , அது இப்பதே எம் முன் உள்ளது . இதை வரும் காலங்களில் பார்க்கமுடியாது

  6. நிர்மலன் says:
    14 years ago

    மறந்தும் சிங்கள இந்திய சீனா கியூபா ….. கொடிகளை போடமாட்டார்கள். இவர்களின் புனிதம்(பொழப்பு) என்னாவது. !

  7. mamani says:
    14 years ago

    புலிக்கொடி தமிழரின் தேசிய சின்னமா? தமிழ் பேசும் மக்களின் சின்னமா? உலக தமிழரின்
    சின்னமா? புலம் பெயர் தமிழர் சின்னமா? இலங்கை தமிழர் சின்னமா? வட கிழக்கு தமிழர் சின்னமா?

  8. அரிச்சந்திரன் says:
    14 years ago

    புறநடைகளால் புனிதமான புலிக்கொடியை இப்பூர்வஜென்மத்தில் புடுங்கவும் முடியாது புஸ்வானமும் ஆக்கமுடியாது, முடிந்தால் எவனும் முயன்று பார்க்கலாம்,

    • thurai says:
      14 years ago

      வன்னியில் பறந்த புலிக்கொடியை லண்டன் மத்தியில்கண்டேனே.

      போரில் புலிகள் புரிந்த் போரின் வீரத்தை சன்ல் 4 பார்த்தேனே.
      தனிதாடு கேட்ட புலியின் கொடியை இலங்கையெங்கும் தேடுகின்றேனே.-துரை

      • THAMIL MARAN says:
        14 years ago

        மறவர் படைதான் புலிப்படை தமிழ் மானம் ஒன்றே அடிப்படை என எழுத ஒரு கவிஞர் கிடைத்துவிட்டார்.

        • thurai says:
          14 years ago

          தமிழர் மான்ம் உலகெங்கும் ஈழ்த்தமிழரால்
          அடமான்ம்.-துரை

          • Mahendra says:
            14 years ago

            ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து………. என்பதுபோல்
            புலியைக்கடித்து, புலம்பெயர் தமிழரைக்கடித்து, இப்போ ஈழத்தமிழரையும் கடிக்கத்தொடங்கி……என்றுதான் அடங்கும் இது.

      • நிர்மலன் says:
        14 years ago

        ஏன்! காட்டிக்கொடுக்கவா!

  9. mamani says:
    14 years ago

    புலிக்கொடி தமிழரின் தேசிய சின்னமா?
    தமிழ் பேசும் மக்களின் சின்னமா?
    உலக தமிழரின்
    சின்னமா?
    புலம் பெயர் தமிழர் சின்னமா?
    இலங்கை தமிழர் சின்னமா?
    வட கிழக்கு தமிழர் சின்னமா?

    • thurai says:
      14 years ago

      தமிழரை  ஏமாற்ரி முள்ளிவாய்க்காலிற்கு அழைத்து அழித்தவ்ர்களின் சின்னம்.-துரை

      • நிர்மலன் says:
        14 years ago

        பாதுகாப்பான பிரதேசமாக அதை அறிவித்தது சிங்கள அரசபயங்கரவாதம்தான். அவர்கள்தான் தமிழர்களை ஏமாற்றி அவ்விடத்தில் குழுமச்செய்தபின் அழித்துதென சனல் 4 தொலைக்காட்சியும் ஐநாநிபுணர் குழு அறிக்கையும் சொல்லுது. துரை உங்களை தாரளமாக லங்காபுவத்துரையென அழைக்கலாம்.

        • thurai says:
          14 years ago

          தமிழர்களைப் புலிக்ழும் தப்பி ஓடவிடாமல் தடுத்தும் கொலைகள் செய்துமுள்ளார்களென்றும் கூட சொல்லப் பட்டிருக்கின்றது. இனியும் புலியும்
          புலிக்கொடியும் தமிழர்கழுக்கு வேண்டுமா.
          புலிகளின் கருத்துக்கள் இரண்டு மட்டுமே. புலி செய்வதை ஏற்காதவ்ர்கள் தமிழரின் துரோகிகள்
          அல்லது சிங்களவ்ரின் அடிவருடிகள் காட்டிக் கொடுப்போர். இதனை விட வேறு விளக்கம் தலையினுள் உண்டோ?-துரை

  10. Mahendra says:
    14 years ago

    தமிழ்மக்கள் தங்கள் உரிமை கிடைக்கும்வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. நிலவைக்கண்டு நாய்கள் குலைப்பதையும் நிறுத்தப்போவதில்லை.

  11. நிர்மலன் says:
    14 years ago

    ஐரோப்பாவில் யாரும் யாரையும் புலிக்கொடி ஏந்தச்சொல்லி நிர்பந்திக்கவில்லை. அவரவர் தாம் விரும்பும் கொடியை ஏந்துகிறார்கள்.அக்கொடியின் கீழ் அணிதிரள்கிறார்கள்.! ஐரோப்பிய நாடுகளே அனுமதிக்கும் போது சிலருக்கு ஏன்தான் குத்துதோ குடையுதோ தெரியவில்லை.என்ன சிங்கள எசமான் கோபப்படுகிறரா? முதலில் அடுத்தவரின் உரிமையை மதிக்கப்பழகுங்கள் பின்பு புனிதம்/அசிங்கம் பற்றி பேசலாம். சுத்தியலும் அரிவாளும் நட்சத்திரமும் செங்கொடியும் ஈழத்தமிழருக்கு சிங்கள அரசபயங்கரவாதத்திற்கு வக்காலத்து வாங்கும் அசிங்களாகத்தான் தெரிகிறது.பிடல் கஸ்ரோ சர்வாதிகாரியாக ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு துணை போகும் ஈனாகத்தான் தெரிகிறார் வெனிசூலா ஹூகோ சாவேஸ்ம் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு துணை போகும் ஈனாகத்தான் தெரிகிறார் நீங்கள் ஏற்கத் தயாரா! அந்நாட்டு புனித தலைவர்களை சின்னங்களை அரசுகளை எதிர்த்து ஊர்வலம் போவீர்களா! அதெப்படி ? பொழப்பு என்னவாது!

    • thurai says:
      14 years ago

      //முதலில் அடுத்தவரின் உரிமையை மதிக்கப்பழகுங்க//

      இவ்வாறு சொல்லும்போதே புலிக்கொடியைநீங்களே அவமதிக்கின்றீர்களே.புலிகொடி
      பிடித்தவ்ர்கள் அடுத்தவரின் உருமைகளை பறித்த பரப்பரையல்லவா-துரை

    • manoharan says:
      14 years ago

      இந்த புலிச்சின்னம் இப்போது எங்கள் மத்தியில் திரும்பவும் முன்னிறுத்தப்படுவது
      ஒரு புதிய மாற்றத்தை, புதிய தளத்தை நோக்கிப் போவதற்கு ஒரு பெரும் தடையாகத்தான் இருக்கும்.
      ஏனெனில் ஒரு இனம், ஒரு பிரச்சனை என்பன அடையாளப்படுத்திவிட்டால் பொதுவாக அந்த அடையாளத்தின் ஊடாகத்தான் பார்ப்பார்கள். சின்னம் என்று சொல்கின்ற சிறு கலர் துணியில் எங்கள் நம்பிக்கையை அல்லது நாங்கள் வேண்டிய ஒன்றை எம் சுய நலத்திற்காக பாதுகாக்க விரும்பினால் அந்த பாதுகாப்பு இயக்கமே எம்மை பொதுவான மக்களின் உரிமைப் போராட்டத்திலிருந்து வெளியேதான் கொண்டுபோகும்.

      ஒரு சிறு கலர் துணி. இதை முன்னிறுத்த வேண்டாம் என்றால் ஏன் கோபப்படுகிறோம்? தினந்தினம் அங்கே எம்மக்களின் உரிமைகள், நிலங்கள் எல்லாம் குறுகிக்கொண்டு போகின்றது. இங்கே நாங்கள் புலிக்கொடி பிடித்து உணர்ச்சி வசப்படுவதில் என்ன அடங்கியுள்ளது.

      இன்று இந்தப் புலிக்கொடி எதை முன்னிறுத்திக் காட்டுகின்றது. இக்கொடி எம் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் முன்னேற்றத்தைக் காட்டி நிற்கவில்லை. மாறாக உலகப்புதியஒழுங்கில் அது பயங்கரவாதத்தையே அதிகம் சுட்டிக்காட்டி நிற்கின்றது. ஆகவே இந்த புலிச்சின்னம் இலங்கையிலுள்ள எம்மக்களுக்கு எந்தவித விடுதலைக்கான அடையாளமாக இப்போது இல்லை என்பதை நாங்கள் உணரவேண்டும்.

      புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் எம்மக்களின் பிரச்சனைகளின் உண்மையான இப்போதைய தளம் புரியாமல் உள்ளார்கள். புரிவதற்கு முற்படவுமில்லை. இவர்கள் தங்களின் பெருமைக்காக, தங்களின் திருப்திக்காக புலிக்கொடியைப் பிடிக்கின்றார்கள். எம்மக்களின் நலனில், எம்மக்களின் உரிமையில் அக்கறை கொண்டவர்கள் இந்தப் புலிக்கொடியின் பின்னுள்ள தோல்வியினையும், எங்களது பிழையான அதிகாரத்தனமான அரசியலையும் பார்ப்பார்கள். எம்மத்தியிலும் உள்ளேயும், வெளியேயும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டதின் அடையாளத்தையும் உலக நாடுகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் அச்சுறுத்தலைக் கொடுத்த ஒரு பயங்கரவாத சின்னமாகத்தான் இந்தப் புலிக்கொடி இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். அதே நேரத்தில் சரியோ பிழையோ எம் பிரச்சனையை உலகம் அறிய வைத்ததும் இந்த புலிக்கொடிதான் என்பதை மறுப்பதுக்கும் இல்லை.
      ஆனாலும் இன்றைய நிலையிலிருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்

  12. VISWA says:
    14 years ago

    பகைவனைக் கொன்றொழிக்க
    மார் தட்டி
    களம் சென்ற புத்திரர்கள்
    வதை முகாமில் ..!
    பெற்றோர்கள்
    முட் சிறையில் …!
    ஏனென்று
    கேட்க ஒரு ஆளில்லை …
    நாடில்லை !

    கொடி பிடித்தால் தீருமா ?
    தேசியம் பேசிய
    சிங்கம் , புலி
    விலங்குக் கொடிகளால்
    விளைந்ததென்ன ….?!

    நிர்மலனே !
    உமது பதிலை தரவும்.

    • thurai says:
      14 years ago

      //பகைவனைக் கொன்றொழிக்க
      மார் தட்டி
      களம் சென்ற புத்திரர்கள்
      வதை முகாமில் ..!
      பெற்றோர்கள்
      முட் சிறையில் …!
      ஏனென்று
      கேட்க ஒரு ஆளில்லை …
      நாடில்லை//
      இந்த புனிதமானவர்களை காட்டி உலகில் வியாபரம்செய்வோரும், அந்த வியாபாரிகளைக்காக்க குரல் கொடுப்போரையும் விட தமிழினத்திற்கு துரோகிகள்
      வேறு யாருமுண்டா?-துரை

  13. thurai says:
    14 years ago

    சனல் 4 பதிவுகள் நல்ல லாபம் ஈட்டிடயுள்ளது போலுள்ளது.-துரை

  14. நிர்மலன் says:
    14 years ago

    //தமிழர்களைப் புலிக்ழும் தப்பி ஓடவிடாமல் தடுத்தும் கொலைகள் செய்துமுள்ளார்களென்றும் கூட சொல்லப் பட்டிருக்கின்றது. இனியும் புலியும்
    புலிக்கொடியும் தமிழர்கழுக்கு வேண்டுமா.
    புலிகளின் கருத்துக்கள் இரண்டு மட்டுமே. புலி செய்வதை ஏற்காதவ்ர்கள் தமிழரின் துரோகிகள்
    அல்லது சிங்களவ்ரின் அடிவருடிகள் காட்டிக் கொடுப்போர். இதனை விட வேறு விளக்கம் தலையினுள் உண்டோ?-துரை

    // அக்குற்றச்சாட்டை மறுத்துள்ள புலிகள் தமது நியாயத்தை எடுத்துச்சொல்லவும். தம் மீது அபாண்டமாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் எதிர் கொள்ளத்தயாரெனவும் தாங்கள் இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உடனேயே ரெஜி என்பவருடாக அறிவித்துவிட்டனர்.அதாவது புலிகள் மடியில் கனமுமில்லை வழியில் பயமுமில்லை.மறுதலையாக ஏன் சிங்களம் நீதிவிசாரணைக்கு மறுக்குது.? உண்மைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டான இலண்டன்வாழ் தமிழ் உண்ணாவிரதி தம்மீது சுமத்தப்பட்ட அபாண்ட குற்றச்சாட்டை தனித்து எதிர்த்து நீதிமன்று ஊடாக புழுகு ஊடகங்களை பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்தது போல். ஏன் சிங்கள அரசபயங்கரவாதத்தால் முடியவில்லை? குற்றச்சாட்டும் அதற்கான ஆதாரமும் உண்மை என்பதுதானே காரணம்.
    ஈழத்தமிழருக்கு எக்கொடி வேணுமென்பது பெரும்பான்மை ஈழத்தமிழரின் முடிவே தவிர தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களின் வருமானம் சம்ந்தப்பட்ட முடிவல்ல.

    • thurai says:
      14 years ago

      யாரந்த ரெஜி அவரின் கட்டுப்பாடிலா உலகில் புலிகள் உள்ளார்கள்?
      புலிகள் மாபியா ரீதியிலான பணத்திரட்டலில் ஈடுபட்டதாகவும், வர்த்தகங்களில்
      முதலிட்டுள்ளதாக்வும் யூஎன் ஓ அறிவித்துள்ளது. இந்த் சொத்துக்களை
      பறிமுதல்செய்து தமிழரின நல்வாழ்விற்காக பயன்படுத்துபடுத்தும்படியும் அறிவித்துள்ளது. ரெஜி என்பவர் இந்த விடயத்தில் எங்குநிற்கின்றார்.
      இலங்கை அரசுடன் புலிகள் சேர்ந்து முதலீடுகள்செய்கின்றதென்பதை இவர் மறுக்கின்றாரா?

      அவ்ர்கள் யாரென் இவ்ரால் அறிந்து கண்டன குரலெழுப்ப முடியாதா?
      அல்ல்து
      இவரும் சேர்ந்து செய்ற்படுகின்றாரா? இவற்றிற்கு பதில் அழிக்க முடியாத எவரும்
      புலிகள் எந்தக் குற்ரமும் போர்க்காலத்தில் செய்யவில்லை என்பதை
      எவ்வாறு
      உறுதியாகக் கூறமுடியும்.-துரை

      • நிர்மலன் says:
        14 years ago

        //யாரந்த ரெஜி அவரின் கட்டுப்பாடிலா உலகில் புலிகள் உள்ளார்கள்?//
        ரெஜி யார் புலிகள் அமைப்பில் அவரின் பதவி நிலையென்ன என்பதும் சர்வதேச விசாரணையில் புலிகள் போர்க்குற்றவாளிகளென்பது நிரூபணமானால் சிறை செல்லப்போதும் ரெஜியும் அவர்சார்ந்த அமைப்பும் தான்.
        அது புலிகள் அமைப்பின்விடயம். ஐநா நிபுணர்குழு புலிகள் மீது 6 குற்றச்சாட்டு சாட்டியுள்ளது. அதை சர்வதேச விசாரணையில் சட்டரீதியில் எதிர்கொள்ளத் தயார் என்கின்றனர் புலிகள். இந்நிலையில் புலிகளின் நிதி மோசடி(?) பற்றிய ஆதாரத்தகவல்கள் நிறைய வைத்துள்ளீர்கள் பிறகுமேன் தாமதம்? ஐநாவிடம் ஒப்படைத்து அல்லது நீங்களிருக்கும் நாட்டின் நீதிமன்றிடம் ஒப்படைத்து புலிகளை மாத்திரமல்ல புலிக்கொடியையும் தடை செய்யுங்களேன்! அது உங்களால் முடியாது நீங்கள் சொல்வதெல்லாம் லங்காபுவத் செய்திகள்தான் என்பதை நீங்களும் மற்றவர்களும் அறிவார்கள்.

        • thurai says:
          14 years ago

          குற்ரவாளிகளை காக்க சட்டத்தரணிகள். இதில்
          திறமையானவர்களை அமர்த்துவதற்கு தொகையான் பணம் தேவை. இது புலிகளிற்கு
          கட்லாகவுள்ளது. வருடம் 300நமில்லிய்ன் டொலர்,30 வருடங்களாக. செய்துள்ள முதலீடுகள்.
          அதனால் வரும் வருமானம். இதெல்லாம் யாருக்காக? முள்ளிவாய்க்காலில் சிங்களவர்களால் கொல்லப்பட்ட ஏழைகளிற்காக

          சேர்த்துவைக்கப்பட்ட சொத்தல்லவா. இனியென்ன யாருமில்லை. செலவு காட்டநாடுகடந்த அரசு.
          சன்ல் 4, அடி தடி சண்டைகள் வழக்குகள் இன்னும் பல. இலங்கையில் ஒருவாறு முடிவுக்கு வதுவிட்டது. சிங்களவ்ரின் புண்ணியத்தால் இலங்கையில் புலியின் பல்லும் போய் தோலும் உருச்சாச்சு. இப்ப யாராப்பயப்படுத்த இந்த புலிக்கொடி? புலம் பெயர்தமிழரைதானே? காரணம் வருமான்ம்
          இல்லாமல்போய்விட்டபடியால்தானே? எப்படியாவ்து திரும்பவும் வாரித்தந்த புலிகொடி திருப்ப கிள்ளியாவது தரமாட்டுதா என்றநப்பாசைதானே.-துரை

  15. mamani says:
    14 years ago

    ஊர்வலங்களின்போது சரி , பொதுநிகழ்வுகளில் சரி கருத்து வரட்சி காரணமாகவே புலிக்கொடி ஏந்தி மக்கள் வ்ருகிறார்கள். நிகழ்வின் நோக்கம் சரியாக புரியவைக்க படுவதில்லை. தான் தாங்கி வரும் கொடியின் கீழ் படிந்திருக்கும் வன்ம கறையை யாரும் கண்டு கொள்வதில்லை. பெரும்பாலான அமைப்புகள் பி. த. பே உட்பட துரோகி பட்டம் கிடைத்துவிடுமோ என்ற பயத்தில் மெளனிக்கிறார்கள்.
    நிகழ்வுகளின்போது கருதிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் சொல்லவரும் விடயத்தை உலகுக்கு கூற முனையுங்கள் அதை விடுத்து தமிழ் ஊடகத்தில் எண்ணிக்கை போடுவதற்காக கூடாதீர், கொடி பிடிக்காதீர்.

    • நிர்மலன் says:
      14 years ago

      உங்களிற்குத்தான் கருத்து வரட்சியே தவிர அவர்களிற்கில்லை. அவர்கள் தமது பாதையில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று கூடும் விடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். மிகப்பெரும்பாலானவர்களின் அவா விருப்பம் ஒன்றாக இருப்பதால் ஒரு கொடியின் கீழ் அணிதிரள்கிறார்கள். உங்களிற்கு அவர்களின் உளவிருப்பு அவா என்ன என்பதை அறிந்துகொள்வதை காட்டிலும் அவர்கள் தாங்கியிருக்கும் அடையாளத்தை அழிப்பதுதான் குறி. அது உங்களிடம் தரப்பட்ட சேவகம். நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் பிழைப்பு அப்படிபட்டதொன்றே!
      ஆம் அடுத்தவர்களின் பாவத்தை மன்னித்துக்கொள்ளும் நீங்கள் புனிதர்கள் .

      • mahen masil says:
        14 years ago

        உங்களுக்கு தரப்பட்ட உண்டியல் குலுக்கும் சேவகம் இப்பொழுது மந்தம் போல் தெரிகிறது அதற்கு புலிக்கொடி நிழல் தேவைபடுகிறது. இதிலும் காசியில் போய் பிச்சை எடுக்கலாம்.

  16. mamani says:
    14 years ago

    இந்த புனிதமானவர்களை காட்டி உலகில் வியாபரம்செய்வோரும், அந்த வியாபாரிகளைக்காக்க குரல் கொடுப்போரையும் விட தமிழினத்திற்கு துரோகிகள்
    வேறு யாருமுண்டா?-துரை

    இவர்கள் அறியாமல் செய்யும் பாவத்தை மன்னித்துக்கொள்ளும்.

  17. செவ்வியன் says:
    14 years ago

    சிங்கக் கொடியை கைகளில் ஏந்திக்கொண்டு புலிக்கொடி கூடாது என்றால் எப்படி?

    • mahen masil says:
      14 years ago

      சிங்கமும் , புலியும் வன்முறையில் ஒன்றுகொன்று சளைத்தவையல்லவே!

      • செவ்வியன் says:
        14 years ago

        முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முட்டாள்தனமான வீண்வாதம்

  18. Pingback: தீபத்தில்: கேள்வி – நேரம்! « பேரிகை
  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...