2005 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை எல்பிரட் ஜெலினிக் என்னும் ஆஸ்திரிய நாட்டு துணிச்சலான பெண்ணிய எழுத்தாளரும் பெண்ணியல் சிந்தனைகளை வெறுமனே அரசியலில் இருந்து வேறுபடுத்தி தனித்துத் திரியாமல் தனது அரசியல் கருத்துக்களோடு இணைத்து இலக்கியம் படைத்தவராவார். இவர் விருதுகளைத் தேடி போனவர் அல்ல விருது அவரைத் தேடி வந்தது.
அண்மைக்கால படைப்புகளை நோக்குமிடத்து எழுத்தாளர்கள் பலர் பிரதேச தமிழ் சாகித்திய விழாவிலே விருது பெறுவதற்காக மாத்திரமே நூல்களை வெளியிட்டு வருகின்றனர்.
மற்றும் சிலர் இலக்கியத்தினை வியாபாரமாக்கி அதனூடாக பல லட்ச ரூபாய்களை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நூல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் தமிழ் நாட்டு அரசியல் தலைமைகளை கவர்வதற்காகவும் அவர்களிடமிருந்து பணத்தையோ அல்லது கல்விக்கான புலமைப்பரிசில்களைப் பெற்று இலங்கையில் வாழும் சில பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு விற்பனை செய்யலாம் என்ற எண்ணத்துடனும் இலக்கியம் படைத்து வருகின்றனர்.
மற்றும் சிலர் பேராசிரியர்களின் இதயங்களில் இடம் பிடித்து தங்களின் பட்டப் படிப்புக்களையும் பட்டப் பின் படிப்புக்களையும் இலகுவாக சித்திப் பெறுவதற்கான வழிவகையாகவும் இலக்கியத்தினை படைத்து வருகின்றனர்.இவற்றிலே மிகவும் கவலைக்குரிய விடயம் யாதெனில் ஆட்சியில்; இருக்கும் அரசாங்கத்தினை திருப்தி படுத்துவதற்கான இலக்கியங்களாகவும் ஒரு சில அரசியல் தலைமைகளை கவர்வதற்காகவும் இலக்கியம் படைத்து வருகின்றனர்.
இத்தகைய இலக்கிய படைப்பாக்கங்களுடன் ஒப்பிடும் போது மனிதன் முகங் கொடுக்கும் அன்றாட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக படைக்கப்படும் இலக்கியங்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் போய்விடுகின்றது.சங்க இலக்கியங்களிலும் அரசரைப் புகழ்ந்து பாடிய புலவர்கள் மாத்திரமே பொன்னும் பொருளும் பெற்றனர் இன்றும் இலக்கியத்தினை தங்கள் பரம்பரை சொத்தாக வைத்திருக்கும் ஒரு சிலர். அவர்கள் சார்பானவர்களும் அந்த அந்த கால கட்டங்களிள் குறிப்பிட்ட இலக்கிய வியாபாரிகள் எந்த அரசியல் தலைமைக்கு சார்பாக இருக்கின்றாரோ அவர் சார்பானவர்ளை இலக்கிய வாதிகளாக அடையாளம் காட்டுவதுடன் விருதுகளுக்காகவும் பரிந்துரைசெய்கின்றனர்.
எந்த வித சுய லாபங்களையும் கருதாது, தங்களின் சொந்த உழைப்பிலும் சொந்த செலவிலும் மலையகத்தின் சப்ரகமுவ மாகாணத்தின் காவத்தை பிரதேசத்தின்சமூக விடுதலையினை நோக்காக கொண்ட இளைஞாகள் மலையகத்தின் பல பிரதேசங்களிலும் இருந்து காத்திரமான கவிதைகளை படைத்து வரும் கவிஞர்களை இணைத்துக் கொண்டு குயில் தோப்பு கலை இலக்கிய வட்டத்தினை உருவாக்கி அதனூடாக வடம் என்னும் சஞ்சிகையினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த சஞ்சிகை கவிதைகளுக்காகவும் கவிஞர்கள் தொடர்பாகவும் கவிதை விமர்சனங்களையும் தாங்கி வெளி வருகின்றது. மலையகத்தை சேர்ந்த போராட்ட குணம்கொண்ட கவிதை படைக்கும் கவிஞர்களின் எழுத்துக்கள் இவ்வாறு படைக்கப்படுகின்றன.
2006 ஜீலை செப்டம்பர் வடம் சஞ்சிகையிலே இராகலை மோகன் எழுதிய சிலை என்னும் கவிதை ‘சிவராசண்ணனின் வெட்டுண்ட மேனிக்கு பின்னால்-சிலைகள் காரணமாயுள்ளதை –சிலர் தான் அறிவார்’; என்று கோவில் சிலை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தினை சாடி எழுதியிருக்கும் கவிதை மனிதன் சமயங்களின் பெயரால் பிரிந்து வாழ கூடாது என்பதனை எடுத்தியம்புகிறது.
மூத்த கவிஞன் எலியாசன் கூடிக் களிப்பதற்கு – குறை நம்மில் இல்லையடா-நாடோ திருடருக்கு-நாம் நடுவில் என் செய்வோம்? ஏன்று 2007 ஜீலை செப்டம்பர் வடம் சஞ்சிகையிலே கேட்டிருக்கின்றார். மலையகத்தின் அடையாளப்படுத்தக் கூடிய கவிஞராக காணப்பட்ட கவிஞர் சு.முரளிதரனுடனான செவ்வியினை வடம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில்; ஒருவரான முற்போக்கு கவிஞர் பத்தனையுர் தினகரன் நேர்கண்டு பிரசுரித்திருந்தது. 2006 ஜீலை செப்டம்பர் வடம் சஞசிகையிலே; இளம் கவிஞர்களுக்கு அனுபவமாகவும் எடுத்துகாட்டாகவும் காணப்படுகின்றது.
மு.காசிம் எழுதிய வாழ்க்கை என்னும் கவிதை இது நதி பிறந்த நந்தவனம் எமக்கு அடி பணிந்த வாழ்க்கை என்று சிறுபான்மையினரின் வேதனையினை எடுத்தியம்புவதாக காணப்படுகின்றது.
வடம் சஞ்சிகைக்கான வாசகர் கடிதங்களிலே மூத்த எழுத்தாளர் மொழிவரதன் கவிதைகளுக்கு களம் அமைக்கும் வடம் தொடர்ந்தும் வெளி வரல் வேண்டும். தரமான புதிய கவிதைகள்தடம் பதிக்க வாழ்த்துகிறேன் என்றும் மலையகத்தில் வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. மாணவர் மத்தியில் மாத்திரம் அல்ல ஆசிரியர்களையும் வாசிக்க வைக்க வடம் தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும் என்று எழுத்தாளர் அந்தனி ஜீவாவும் மலையக இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது எங்கள் கடமையாகும் என்று அ.யேசுராசாவும் தங்களின் பதிவுகளை வடம் சஞ்சிகைக்குள் பதித்திருந்தனர்
வடம் அமிழ்த்தப்பட்டவர்க்காக உழைக்கும் என்னும் மனித நேய வாசகங்களுடன் ஆசிரியர் குழுவின் முகவுரையினை வாசிக்கும் போது இந்த சஞ்சிகையின் தேவையினை அனைவரும் உணரக்கூடியதாக இருக்கின்றது. 2006 ஜீலை செப்டம்பர் வடம் சஞ்சிகையிலே; உழைக்கும் மக்களிடையே வர்க்க உணர்வையுட்டுவதற்கும் சிந்திக்க தூண்டுவதற்கும், வெகு ஜனங்களுக்கான ஊடகங்கள் கடுமையாக உழைக்கவேண்டியுருக்கிறது.
இந்த நிலையில் தான் எதிரே விஸ்வரூபம் எடுக்கும் ஏகாதிபத்திய பல்தேசிய கம்பனிகளின் சக்தி மிக்க செய்தி சாதனங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்றும், இங்கு ஊடகம் என்பது அச்சு இலத்திரனியல் ஊடகங்கள் மட்டுமல்ல கலை கலாச்சார நிகழ்வுகள் நாடகங்கள் பட்டி மன்றங்கள் வீதி நாடகங்கள் போன்ற கள ஆற்றுகைகளும் மக்களிடம் கருத்து பகிர்வதற்கான ஊடகங்களே.
இவ்வாறான முயற்சிகளின் போது அறியாமையில் உழழும் உழைக்கும் மக்களுக்காக கறைபடியா கரங்களுடன் சேவையாற்றுபவர்களுக்கு சேற்றை அள்ளி வீசுவது சமூகவிரோத வேடதாரிகளின் பிரதான பணியாகிவிடுகிறது என்றும் 2007 ஜீலை செப்டம்பர் வடம் சஞசிகையிலே மலையக பாடசாலைகள் வெறும் தொழிற் களங்களா? ஏன்னும் தலைப்பிலும் எழுதப்பட்டிருக்கின்றது. பா.மகேந்திரன்,இரா.நெல்சன், வே.தினகரன் ஆகியோரை ஆசிரியர் குழுவாக கொண்டு இன்னும் பலரின் கூட்டு உழைப்பால் வெளிவரும் வடம் சஞ்சிகையில் கவிஞர் முருகையன்,கவிஞர் சிவசேகரம் போன்ற புகழ்மிக்க மக்கள் கவிஞர்களின் கவிதைகளுடன் பல மொழிபெயர்ப்பு கவிதைகளையும் கவிதை வரலாற்றில் சில தடயங்கள்,கவிஞனின் கேள்வி பதில்கள் என கவியுலகின் முழு ஆளுமையினையும் தாங்கி வரும் வடம் சஞ்சிகையினை வாழ வைக்க கவிதையை நேசிப்பவர்கள் தோள் கொடுக்க வேண்டும் என்பதுடன் கட்டாயம் வாசிக்க வேண்டிய சஞ்சிகையாக வடம் காணப்படுகின்றது.
சை.கிங்ஸ்லி கோமஸ் – மலையகம் – இலங்கை
இன்றூ சாப்பிடும் சோறூ ருசியாக இருக்க வேண்டும் என நினைக்கும் தோட்டத் தொழிலாளீ களப்பு ஆறீயதும் குடிக்க நினைக்காமல் வாசிக்க நினைத்தால் வடம் போன்ற இலக்கிய இதழால் நன்மை நிகழும்.இங்கிலாந்தில் கூட வீடியோவுக்கும்,ஆடியோவுக்கும் காசு தரும் தமிழர் வாசிப்பதற்கு தருவதில்லை.படிச்சு………….என்றூதான் கேட் கிறார்கள்………..இன்றூவரை நாழிகை….தேசம்………கொட்ஸீபிறீங்……வடலி…..கலசம்…..என நின்றூ போன பத்திரிகைகளே அதிகம்.இந்தியாவில் இருந்து நடிகர் சரத்குமாரின் மீடியா வொய்ஸ் கிடைக்கிறது………
தமிழ்மாறன்
நன்றி ;மலையக தொழிலாளி சோறு குடி என்று மட்டும் வாழ வில்லை
உழைப்பை யாகமாக எண்ணி உழைப்பை லாபம் இல்லா விதைப்பாக செய்பவர்கள் குடிக்கின்றார்கள் என்று மலையக மக்களை ஏளனஞ் செய்பவர்கள் தங்களின் முதல் கல்லை தங்களின் தலைகளில் வீசிக்கொள்ளட்டும்
நான் கற்றனில் இருந்த காலத்தில் கண்டதையும்,லண்டனில் நான் பார்த்து வேதனைப்படுவதையும் மட்டுமே குறீப்பிட்டேன் யார் மனதையும் நோகடிக்கும் நோக்கம் இல்லை……………வாசிப்பதற்கும் நமக்கும் மிக வெகு தூரம்,வாசிகசாலைப் பழக்கமோ தெரியாது?
கற்றனில் எந்த நூற்றாண்டு நினைவுகள் வருகிறது? லண்டனில் எங்கே மலயகத்தமிழர்கள் குடித்துக் கொண்டு திரிகிறார்கள்?
லணடனில் இருப்போர் மலையகத்தமிழர் அல்ல அவகள் கான்சில் தமிழ்ர்,ரெட்பிரிட்ஜ்,டூட்டுங் என வகைப்படுவ்ர்.நாம் எங்கு வாழ்ந்தாலும் எங்கள் இயல்பான குணம் என்றூம் மாறாதது.
தமிழ்மாறனின் இடுகைகளைத் தொடர்ந்து வாசித்தால் அவருக்கு இன, மத அடிப்படையில் யார் மனதையும் நோகடிக்கும் நோக்கம் இல்லை என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்று விளங்கும்.
இலவசமாக மற்ஸ்ஸூம்,சயன்ஸ்ஸூம் வசதி குறந்த பிள்ளகளூக்கு கற்றூத் தந்த காலங்களீல் யாழ்ப்பாணத்தில் நாங்கள் போன இடங்களூக்கு நீங்கள் போயிருப்பீர்களோ தெரியாது?ஒரு பக்கம் குளமும் மறூபக்கம் மக்கள் வாழ்விடங்களூம்,எப்போதும் கட்டிப் பிடித்து சண்டை பிடிக்கும் இன்னொரு சமூகம்.நாங்களூம் கனவு கண்டோம் எமக்கும் ராஜகரன் போன்ற அனுபவங்கள் உண்டு.விடியும் எனும் நம்பிக்கை இன்னும் இருக்கிறது.
கிங்ஸ்லி கோமஸ்
இப்படி ஒரு இதழ் இருப்பதை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
வடம் பிடிக்க ஆசைபோல வடம் படிக்க ஆசை.கட்டுரை ஆசிரியர் ஆவண செய்வாரா?
அட்டன் நகர சபை வாசிக சாலை இரவு 7 மணிவரை திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது
புதிய பூமி தாயகம் என ஏராளமான புத்தகங்கள் அட்டன் ராகலை பிரதேசங்களில் விற்பனையாகின்ரது தேசிய கலை இலக்கிய பேரவை மலையகத்தில் மனை நுhலகங்களை ஆரம்பிக்கும் பணியை தீவிரமாக மேற் கொண்டு வருகின்றது எனது தகப்பனாரின் 10 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு சைமன் பீட்டர் ஞாபகார்த்த வாசிக சாலையை கட’நத வருடம் தேசிய கலை இலக்கிளய பேரவையின் அனுசரனையுடன் கொட்டகலையில் ஆரம்பித்துள்ளோம் அட்டன. நகரில் வாரம் ஒரு புத்தக வெளியீடும் இலக்கிய சந்திப்பும் நடைப் பெறுகின்றது தேசிய கலை இலக்கிய பேரவை புதிய மலையகம் செம்மலர்கள் வீதி நாடக குழு களம் நிகழ்வு நந்தலாலா அட்டன் தமிழ் சங்கம் முச்சந்தி கலை வட்டம் புதிய சிந்தனை கலை பேரலைவ என இலக்கிய சேவை செய்யும் அமைப்பகள் மற்றும் பல அமைப்பகள் தங் களால் இயன்றளவு பங்களிப்புகளை செய்து வருவது அட்டனில் வாழ்ந்த தமிழ்மாறன் அறியாமல் போனது கவலையே.
காட்சிகள மட்டும் மனதோரம் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.பார்வையாளனாய் கடந்த காலங்கள்,திரு கோமஸீற்கு மனதார்ந்த நன்றீகள்.தொடர்புகளூக்கு ஏற்றதாய் தகவல் இடுங்கள்.உத்விக்கரம் தர நினைப்போர்க்கு உதவும்.நன்றீ.
கட்டுரையாளருக்கு,
வடம் சஞ்சிகையை எங்கு பெற்றுக்கொள்ளலாம்?
இலங்கைக்கு வெளியே பல மலையகத்தவர்கள் கூட வாழ்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல தமிழ்ப் பேசும் உலகம் பயனடையும் வகையில் சஞ்சிகையின் பகுதிகளை இனியொருவிலும் வெளியிடலாமே?
உங்கள் இலக்கிய வட்டத்திற்கு இணையத் தளம் ஒன்றை ஏற்படுத்தி தொடர்புகளை பரந்துபட்டு ஏற்படுத்திக் கொள்ளலாமே? இனியொரு போன்ற இணையங்கள் இதற்காக ஒரு பகுதியையே ஏற்படுத்தலாமே? இன்னும் அடிமைகளாகவே நடத்தப்படும் மலைய மக்கள் போராடினால் இலங்கை அசைய முடியாது. உங்களைப் போன்ற முன்னோடிகள் தான் அதற்கு அடித்தளமிட வேண்டும்..
யாழ் மையவாதம் மலையக மக்களை எப்படி அடக்கி வைத்திருந்தது என்பதெல்லாம் அறிந்தவைதான். ஆனால் அவர்களின் நாளந்த துயரத்தை உலகிற்கு சொல்ல வேண்டும் என்பது ஒவ்வொருவரதும் கடமை.
S.Kingsley Gomezz
தமிழோவியன் என்றொரு மூத்த மலையக கவிஞரின் கவிதை தொகுப்புக்கு (தமிழோவியன் கவிதைகள் ) அட்டைப்படம் ஒன்றை நான் சில வருடங்களுக்கு முன் வரைந்திருக்கிறேன்.உங்களுக்கும் ஏதும் தேவை எனின் செய்ய தயாராய் உள்ளேன்.
Yogan xxx Thmil maran Muththuvel T.Saundar Thank you for yours Great comments we will try our best to do lot and will try to make the changes through the class struggles
VADAM NO 04 MAIN STREET KAHAWATTA 0724248129 O716070644 0724971351 0714786190 thinagara@yahoo.com
வடம் பற்றிய அறிமுகத்தை தந்தமைக்கு கிங்ஸிலி அவர்களுக்கு நன்றிகள்.
வாசகர்களின் விமர்சகர்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கிறோம்.
வே.தினகரன்- ஆசிரியர் குழு