Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

குமுதம் இதழின் சாதி வெறி : நாடோடி.

இனியொரு... by இனியொரு...
10/15/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
21
Home பிரதான பதிவுகள் | Principle posts

வாரவாரம் ஆபாசக் குப்பைகளை விற்று வாசகர்களின் பாக்கெட்டுகளில் இருந்து பணம் பிடுங்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கும் குமுதம் வார இதழ் இந்த வாரம் வழக்கம் போல தன் பார்ப்பன இந்து வெறியை அரசு பதில்கள் மூலம் வெளிக்காட்டியிருக்கிறது. கேள்வி பதில் பாணியில் வெளியாகும் அரசு பதில்களில் இந்த வாரம் சமீபத்தில் பார்த்த வெளிநாட்டுப்படம் என்றொரு கேள்வி? அந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ள அரசு ’’சோக்–டி-த-கிக் பாக்ஸர்” என்ற 40 தாய்லாந்து படங்களின் தொகுப்பை அதிக விலை கொடுத்து வாங்கியதாகவும் அதில் மேலே குறிப்பிட்டுள்ள படம் ப்ரூஸ்லி வகை படம் என்றும். அந்தப் படத்தில் வருகிற இந்திய இளைஞர் ஒருவரைப் பார்த்து தாய்லாந்து இளைஞர் ’’நீ இந்தியா போகவில்லையா? என்று கேட்க அந்த இளைஞனோ ‘’என் நாட்டில் தீண்டாமைக் கொடுமை அதிகமாக நடக்கிறது என்னை எல்லாம் ஒரு நாய் போல மதிக்கிறார்கள். இந்தியா போவதற்கு பேசாமல் கக்கூஸ் கழுவலாம்” என்கிறாராம்.

அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசு ஏனைய 39 டி.வி.டிகளையும் போட்டு உடைத்து விட்டாரம். மேலும் எழுதுகிறார் ‘’நாட்டில் எங்கோ ஒன்று இரண்டு அப்படி நடக்கலாம். அதற்காக தாய்நாட்டை இழவு செய்யலாமா? என்றெல்லாம் கேட்டுச் செல்கிறார் அரசு.

சரி இந்தியாவில் சாதிக்கொடுமையே இல்லையா? சுதந்திர இந்தியாவில் காலம் தோறும் சாதிக் கொடுமையும் சாதீய அடக்குமுறைகளும் நவீன வடிவமெடுத்து உருமாற்றம் அடைந்து வருகிறதே தவிற ஒரு போதும் குறைந்ததில்லை. ‘’இப்ப வெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறாங்க” என்கிற மேட்டுக்குடி திமிரும் இந்து பழமைவாத மனமும் ஒன்று கலந்த குமுதத்தின் பார்ப்பன மனமும் இதுதான். அரசு குறிப்பிட்ட தய்லாந்து திரைப்படத்தில் வருகிற இளைஞர் சொன்னது எத்தனை யதார்த்தமான உண்மை. இந்திய இந்துச் சமூகத்தின் கொடூரமான சாதி வெறித் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்ல முடியாமல் எத்தனையோ ஆயிரமாயிரம் தலித்துக்கள் உள்ளுக்குள் வதைபட்டுக் கொண்டிருக்க தன் மீது சாதி வெறி ஆண்டைகள் திணித்த கொடுமைகளிலிருந்து தப்பித்து தயாலாந்தில் வாழும் ஒருவனுக்கு அது சுதந்திரமல்லாமல் வேறென்ன?

மேலும் தாய்லாந்தை பாலியலில் தொழிலின் கூடாரம் என்று வர்ணிக்கிற அரசு. தனது அலுவலக ஊழியர்கள் ஒருவர் மீது ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு புகரோடு போலீசில் அலைந்ததும். குமுதம் கூடாரத்திற்குள் நடக்கும் பாலியல் ஓரினச் சேர்க்கை வன்முறைகள் பற்றி குமுதல் ஊழியர்களே இணையதளங்களில் எழுதவில்லையா? ஆக அமெரிக்காவின் பாலியல் சொர்க்கமாக தாய்லாந்து முழுமையாக மாற்றப்பட்டு விட்டது. இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது இதுதான் உண்மை. ஆனால் சாதிக் கொடுமையிலும், தீண்டாமைக் கொடுமைகளிலும் இந்தியாவை விட , குமுதத்தை விட தாய்லாந்து எவளவோ மேல். என்பது எல்லோருக்கும் தெரியுமே?

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் சரி, தேசிய இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களிலும் சரி தலித்துக்கள் பங்கெடுத்ததே இல்லை. காரணம் சமூக இயக்கங்கள் என்று சொல்லப்படும் எல்லா இயக்கங்களுமே இடதுசாரி இயக்கங்களைத் தவிர்த்து தலித்துக்களை புறந்தள்ளியே வளர்ந்தன அல்லது அவர்களை பார்வையாளர்களாக வைத்து போராட்டத்தை கட்டு எழுப்பின. பேச்சளவில் தீண்டாமை, சமூக நீதி என்று பேசியவர்கள் ஒப்புக்குக் கூட தலித்துக்களை அதில் சேர்த்துக் கொள்ளவும் இல்லை அதிகாரம் அவர்களை சென்றடையவும் விட்டதில்லை. இன்றைய தமிழ் கலாசாரத்தில் ஒரு தலித்தின் பங்கு என்ன என்ற கேள்வி எழுமானால் மலக்குழிக்குள் இறங்கி ஏறுவதைத் தவிற தலித்துக்களை தமிழர்களின் வீர விளையாட்டு என்று சொல்லும் ஜல்லிக்கட்டிலோ, அல்லது கோவில் திருவிழா நிகழ்வுகளிலோ அவர்களை ஏற்றுக் கொண்டதா தமிழ் சமூகம்.

தேசிய இயக்கங்களுக்கு மாற்றாக உருவான திராவிட இயக்கம் என்று சொல்லப்படும் முற்போக்கு வலது சாரி இயக்கம் அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அது தமிழ் மக்களிடம் பெற்றுக் கொண்ட அதிகாரத்தையும் இன்று அனுபவிக்கிறவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள மேல் தட்டு வர்க்கம்தான் என்னும் போது இன்றைய திராவிட இயக்கத்தில் தலித்துக்களின் பங்கு ஏது என்ற கேள்வியும் எழுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி 20 -க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதி தலைவர்களை அழைத்துச் சென்று கருணாநிதியைச் சந்தித்து ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மனுக் கொடுக்கிறார். கருணாநிதியோ பார்ப்பனக் கலைகளை நிறுவன மயப்படுத்த பரதமுனிவர் என்னும் கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி அதை வைத்து தமிழ் மக்களின் நாட்டிய இசை மரபை மறுக்கும் பார்ப்பன சாதி வெறி நாட்டிய பெண்மணியுமான பத்மா சுப்ரமணியத்துடன் சேர்ந்து பரத முனிவருக்கு இசைக் கோவில் எழுப்ப தீவீரம் காட்டுகிறார். எம்.ஆர்.ராதா வழிவந்த திராவிட இயக்கம் எஸ்,வீ. சேகரிடம் தஞ்சமடைந்த கதை இதுதான். ஆக நிலப்பிரவுத்துவ பண்ணை மனோபாவத்தை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாத பிற்படுத்த ஆதிக்கசாதி வெறியர்கள் பார்ப்பனர்களோடு தற்காலிக கூட்டு வைத்துக் கொண்டார்கள். கேட்பதற்கு நாதியற்ற தலித்துகளோ காயர்லாஞ்சியிலும், மீனாட்சிபுரத்திலும், திண்ணியத்திலும், குண்டூரிலும், மண்டைக்காட்டிலும், கொடியங்குளத்திலும், தாமிரபரணியும் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் குறித்துப் பேச ஒரு தலைமை இல்லாத நிலையில் முற்போக்கு காட்டி மேலெழுந்து வந்த திராவிட இயக்கம் என்று சொல்லப்படும் திமுகவோ மாவட்டம் தோறும் சாதி வெறியர்களின் கட்சியாக மாறி தேர்தல் தோறும் பெரும்பான்மை சாதி எதுவோ அந்தச் சாதியில் உள்ள பணக்காரர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறது.

திராவிட இயக்கம், பார்ப்பனக் கூட்டு, இந்தியாவில் நிறுவனமயப்பட்டு வரும் பார்ப்பன இந்துப் பண்பாடு, அதை தூக்கி நிறுத்தும் நீதித்துறை, கலாசார ரீதியில் நிறுவப்படும் மன்னர் கால மதிப்பீடுகள் என எல்லாம் சேர்ந்துதான் பார்ப்பன குமுதம் ஆசிரியருக்கு இப்படியான ஒரு பதிலை எழுதத் தூண்டுகிறது. நாடெங்கிலும் குடும்ப கௌரவம், மத கௌரவம், சாதி கௌரவம் என்னும் பெயரில் கொல்லப்படுகிறவர்களில் பெரும்பலானவர்கள் தலித்துக்களே, ஒரு ஜெயேந்திரன் கைது செய்யப்பட்ட போது எழுத்தாளர் அசோகமித்திரன் ‘’பார்ப்பனர்கள் யூதர்களைப் போல நடத்தப்படுவதாக” பார்ப்பனத் திமிரில் பேசினார். ஆனால் ஊர் ஊருக்கு நடக்கும் சாதிக் கொலைகளை மறைத்து குமுதம் எங்கோ நடைபெறுகிற நிகழ்வு என்கிறது. முற்போக்கு பேசும் மனித உரிமை ஆர்வலர்கள் இனியும் குமுதத்தில் எழுதுவார்களா? குறைந்த பட்சம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வார்களா?

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நடிகை அசினின் அகதி முகாம் சிகிச்சை 10 பேருக்கு பார்வை பறிபோனது : மே-17 இயக்கம்

Comments 21

  1. Garammasala says:
    15 years ago

    “முற்போக்கு பேசும் மனித உரிமை ஆர்வலர்கள் இனியும் குமுதத்தில் எழுதுவார்களா?”
    குமுதத்தில் எழுத மாட்டார்கள், தீராநதியில் விடாது எழுதுவார்கள்.

    • அன்பன் says:
      15 years ago

      சரியாகச் சொன்னீர்கள் கரம் மசாலா? நம்ம இலக்கிய மேதாவிகளும், பின் நவீனத்துவ மேதாவிகளுக்கும் குமுதம் தேவையில்லையே?

  2. அன்பன் says:
    15 years ago

    குமுதத்தின் பார்ப்பனத் திமிரை வன்மையாக கண்டிக்கிறேன். நிச்சயமாக பிற்படுத்தப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் திராவிட இயக்கம் இதைக் கண்டிக்காது. பெரும்பான்மை வாதத்திற்கு பலியானதே திராவிட இயக்கமும்.

    • THAMILMARAN says:
      15 years ago

      சிகண்டியின் பின்னால் நின்றூ போர் செய்த அர்ச்சுணன் போல இந்த அனபனும்,துரோணரைக் கொல்ல அசுவத்தாமன் இறந்ததாக போய் சொன்ன தருமனைப் போல் பலரும் குமுதத்தை வீழ்த்த கனவு காணலாம் ஆனால் வீழ்த்த முடியாது.

    • xxx says:
      15 years ago

      கருணாநிதிக்கும் சம்பந்தனுக்கும் ஆராத்தி எடுப்பவர் குமுதத்துக்கும் எடுப்பதில் என்ன அதிசயம்!

  3. sivakumar says:
    15 years ago

    ///‘’நாட்டில் எங்கோ ஒன்று இரண்டு அப்படி நடக்கலாம். அதற்காக தாய்நாட்டை இழவு செய்யலாமா?///

    தனக்கு நடக்கவில்லையெனில் போதும் உலகமே அப்படித்தான் என்று நினைப்பு. நாட்டு நடப்பைச் சொன்னால் எங்கோ ஒரிரு இடத்தில் நடக்கிறதாம். சரி கிரிக்கெட், காமன்வெல்த் போன்றவையும் கூடத்தான் எங்கோ நடக்கிறது. 50 கோடி பேர் பட்டினி கிடக்கும் நாட்டில் இவை நடப்பதும் பதக்கம், கோப்பை வெல்வதும் 110 கோடி இந்தியர்களுக்கும் பெருமை என்று பில்ட் அப் கொடுப்பதும் அரசுதான். உண்மையைச் சொன்னால் இவருக்கு இந்திய மானம் போய்விட்டதாம்.

  4. kantha says:
    15 years ago

    கேவலமாக இருக்கிறது. புலம் பெயர் நாடுகளின் இலக்கியக் குப்பைகளில் குமுதத்தைப் புறக்கணியுங்கள்.

  5. abcd says:
    15 years ago

    பார்ப்பான் அப்படித்தான் இருப்பான்….ம்த்தான் விழிப்புனர்வுடன் இருக்கவேண்டும்

  6. யோகன் says:
    15 years ago

    தலித்தியத்தின் பிதா மகன்மார் கவலைப்பட் போகிறார்கள்.

    • xxx says:
      15 years ago

      பிதாமகன்மார் மட்டுமா?
      அவர்களை இலங்கைக்குக் கொண்டு வந்து முச்சந்தி வழிய தேரிழுக்கிறவையும் தான்.

  7. muthuvel says:
    15 years ago

    இதே சாதி வெறி எதைச் செய்திருக்கிறது என்றும் வன்னியில் மாணவர்கள் எப்படிப் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதையும் பற்றி இனியொருவில் இன்றைக்கு வந்துள்ள செய்தியும் கவனத்திற்குரியது.

  8. பிடுங்கி says:
    15 years ago

    இதுல கருத்துச் சொல்கிறவனும் சரி திருமாவளவனும் சரி நீங்க சொன்ன எம் ஆர் ராதாவும் சரி எல்லாப் பயலுகளுமே மீனுக்கு வாலும் பாம்பிற்கு தலையும் காட்டுற பக்காத் திருடனுங்க….சும்மா இதுல கருத்தெழுதி பிறகு இதே திருடனுகள் குமுதமெல்லாம் எழுதி,பிறகு தலித்துக்காக எழுதி, எல்லாப்பக்கமும் நழுவிக் கதையெழுதி விற்றுப் பிழைத்துப் பெரியார்களாய்ப் போனகதைகள் நிறைய இருக்கு. அடக்கிவாசியுங்கோ???

    • xxx says:
      15 years ago

      “இதுல கருத்துச் சொல்கிறவனும் சரி திருமாவளவனும் சரி நீங்க சொன்ன எம் ஆர் ராதாவும் சரி ”
      “இதுல கருத்துச் சொல்கிறவன்” என்று உங்களையும் சேர்த்துத் தான் சொல்லுகிறீர்களா?
      எம். ஆர். ராதா எப்போது “மீனுக்கு வாலும் பாம்பிற்கு தலையும் காட்டினார்?”
      சினிமாக்காரர்களைக் “கூத்தாடிப் பசங்க” என்று ஏளனமாகக் குறிப்பிட்ட பெரியார் மெச்சிய ஒரே நடிகர் ராதா என்று நினைக்கிறேன்.

  9. VeluSritharan says:
    15 years ago

    ஒரு எழுத்தாளனாக சமூகத்தைநேசிக்கின்றெ மனிதனாக சமூககொடுமைகள்

    ஒழிக்க படவேண்டும் இதைதான் விரும்புவான் ஒரு எழுத்தளன்/எழுத்தாளி ஆனால் பழைமைவாதம் காப்பாற்றபடுகிறது என்றால்நவீன உலகில் அதன் போக்கும்
    மாற்றமும் உலகமயமாக்கலும் அதன் ஒழுங்கமைப்பும் நிறவெறி/சாதி அமைப்பு
    முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் அதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டுவிட்டெனெ ஆனாலும் முற்போக்குடன் பத்திரையாளர்கள்/சமூக ஆர்வலர்கள் இணையவேண்டும் காலம்மாறும் சமூக அமைப்புகள் மாற்றம்மடையும். ஒன்றெ குலமென்று பாடுவோமே ஒருவனேதேவன் என்று போற்றுவோமே………..

  10. தறுதலை says:
    15 years ago

     “நாங்கள் ஆதி திராவிடர்கள் இனத்தை சேர்ந்தவர்கள், இந்த திராவிடத்தினால் எங்களுக்கு என்ன பயன்?” இதற்கு இந்த தீரா-விட மூட்டை பூச்சிகளின் மூத்த மூட்டை பூச்சி சொன்னது “உங்களின் பெயர் முன்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆதி ஓடி விடும்” 
    மிகவும் தெளிவான பதில் நீயும் திராவிடனாகி விடுவாய் அவ்வளவே அதனால் உனக்கு எந்த பயனும் இல்லை 

    • THAMILMARAN says:
      15 years ago

      உனக்கு எதனாலும் பயனில்லை உன்னை அறீந்து உனக்காக ஓடும்வரை இதையே உன்னை அறீந்தால் நீ உன்னை அறீந்தால் உலகத்தில் போராடலாம்,தலைவணங்காது போராடலாம் என கண்ணதாசன் பாடினார்.நீ பாதியாய் இருக்கும்வரை உன் க்கு ஆதியும் இல்லை இந்த அகிலமும் இல்லை.முழுமையாகு அப்போதுதான் முடிசூடுவாய்.டீக் கடையில் நின்றூ வெட்டிப் பேச்சு பேசாமல் வேலையைப் பாரப்பா உலக்ம் உன்னைப் பார்க்கும்.

      • தறுதலை says:
        15 years ago

        நாங்க டீக்கடையில் நின்று தாங்கள் தெருமுக்கில் நின்று பகுத்தறிவை வளர்க்கிறோம் என்று வந்தேறிக்கு மகுடி வாசிக்கிறீர்கள். நீங்கள் வாசித்தால் மகுடி நாங்கள் வாசித்தால் வெட்டி பேச்சா…

        • THAMILMARAN says:
          15 years ago

          நிமிர்ந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி.சொன்னதை செய்……செய்வதைச் சொல்

          • தறுதலை says:
            15 years ago

            நன்றி, செய்வோம் இந்த மன உறுதி எங்களிடம் உள்ளது…

  11. பிடுங்கி says:
    15 years ago

    எம் ஆர் ராதா அவர்களைப்பற்றிக் குறைப்பட ஒன்றும் இல்லை. அதனைபோல பெருமை பேசவும் ஒன்றும் இல்லை.Madras Rajagopala Naidu Radhakrishnan அல்லது மெட்ராஸ் ராஜகோபால நாயுடு ராதாகிருஷ்ணன் எனப்படும் M.R. ராதா.அவர்கள் போனவிடங்களிலெல்லாம் தமிழகத்தினை நையாண்டி செய்தும் தமிழர்களை நையாண்டி செய்தும் தனக்குப் புகழ் சேர்க்க முனைந்தாரே தவிர நாட்டுக்காகவும் தேச பக்திக்காகவும் பெசியவரல்ல.அமெரிக்காவிலும் லண்டனிலும் என்னுடைய பிள்ளைகள் பெருமையாக இருக்கிறார்கள் என்று மலேசியாவில் பேசிப் பெருமைப்படுகிறார். இந்தியாவைவிட வேற்று நாட்டில் இருப்பது தான் நல்லது என்று உபதேசம் வேறு செய்கிறார்.. ராதா.எம்ஜிஆர் அவ்ர்களைச் சுட்ட போது சொல்கிறார்.துவக்கிருந்ததால சுட்டுகிட்டோம் என்று பொறுப்பில்லாமல் பதிலளிக்கிறார் ராதா . 1967 என்று நினைக்கின்றேன் மலேசியாவிற்கு திரவிடதோழர் பெரியச்சாமியின் அழைப்பில் போன ராதா அவர்கள் தமிழ்நாட்டுசிறார்களைக் கேலியாக்கி நகைசுவைப் பொருளாக்குகிறார். என்றாலும் நல்ல நடிகன் இடத்துக்குத் தகுந்தாற் போல பேசவல்லவர்.

    • THAMILMARAN says:
      15 years ago

      என்ன தவறூ செய்தேன் அதுதான் எனக்கும் தெரியவில்லை என ராதாவை மீண்டும் பேச வைப்பீர்கள் போலும் எம்.ஆர்.ராதா தெலுங்கராய் இருந்தாலும் தமிழராய் வாழ்ந்தவர், எமஜி.ஆர் எனும் மலையாளீ வில்லனை சுட முடியுமா, ஆனாலும் சுட்டார், தன் கருத்தில்,தான் கொண்ட பகுத்தறீவுப் பற்றீல் உறூதியாய் நின்றார் அவரயா பிடுங்கி எடுக்கிறீர்கள்?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...